குழந்தைகளிடம் ஆற்றலை வளர்க்கலாம் ஆனந்தமாய்...


12 வயதான அந்த சிறுமி மிகுந்த மன அழுத்தத்திற்கு உள்ளாகியிருந்தாள். பள்ளிக்கு செல்வதற்கும், சாப்பிடுவதற்கும் அடம் பிடித்தாள். தோழிகளிடம் பேசு வதையும் குறைத்து தன்னை தனிமைப்படுத்திக்கொள்ளத் தயாரானாள். ஒரு கட்டத்தில் அவள் வாயில் இருந்து, `எனக்கு இந்த வீட்டில் இருக்கவே பிடிக்க வில்லை. எங்கேயாவது போயிடலாமான்னு தோன்றுகிறது' என்ற வார்த்தை வர, பெற்றோர் அடுத்து ஏதோ விபரீதம் நடக்கப்போகிறது என்று பயந்து விட்டார்கள்.

அந்த சிறுமியிடம் பேசியபோதுதான் விபரீதம் புரிந்தது. போருக்கு தயார் செய்வதுபோல் பெற்றோர் கடுமையாக அவளை பரீட்சைக்கு தயார் செய்திருக்கிறார்கள். எதிரி படையைக் காட்டி `அதோ அவன் உன் எதிரி. அவனை நீ எப்படியாவது வீழ்த்தியாக வேண்டும். அதற்காக நீ என்ன ஆயுதம் எடுத்தாலும் சரி, என்ன செய்தாலும் சரி, எப்பாடுபட்டாவது அவனை நீ வீழ்த்து..' என்று பெற்றோர் அருகில் இருந்து, அல்லும், பகலும் பேசிப் பேசி `போர் பதட்டத்தை' உருவாக்கியதுபோல் அவளுக்குள் பரீட்சை பதட்டத்தை உருவாக்கி வைத்திருக்கிறார்கள். அவளிடம் இருந்த ஓவியத் திறனை அலட்சியப்படுத்தி, அவளை மனதளவில் காயப்படுத்தி இருக்கிறார்கள்.
அவளிடம் நான், `உன் வாழ்க்கைக்கு, உன் முன்னேற்றத்துக்கு, உன் மகிழ்ச்சிக்கு காரணமாக இருக்கும் ஒரு தோழியிடம் நீ எப்படி பழகுவாய்?' என்று கேட்டேன். `மிகுந்த மகிழ்ச்சியோடு அவளை கட்டிப்பிடித்து வரவேற்று பேசுவேன்' என்றாள்.
`உன் வாழ்க்கைக்கு கல்வி தேவை. உன் முன்னேற்றத்துக்கு கல்வி தேவை. உன் வளர்ச்சிக்கு கல்வி தேவை. இவை அனைத்தையும் அடக்கிய உன் மகிழ்ச்சிக்கும் கல்வி தேவை. அந்த கல்விக்கு அடையாளம் பரீட்சைதானே. உன்னை முன்னேற்றும் அதனை நல்ல தோழிபோல் இயல்பாகப் பார்க்காமல், ஏன் எதிரிபோல் பயத்துடன் பார்க்கிறாய்? புரிந்து, மகிழ்ச்சியோடு பாடத்தைப் படிக்காமல் ஏன் போருக்கு செல்வதுபோல் பதட்டத் தோடு அதனை கையாளுகிறாய்?'- என்றேன்.
எடுத்து அவளிடம் விளக்கியதும், அவள் உண்மையை புரிந்து கொண்டாள். குழந்தைகள் எல்.கே.ஜி.யில் சேரும்போதே கல்வியை ஒரு எதிரிபோல் உருவாக்கி குழந்தைகளை பயப்பட வைத்துவிடுகிறார்கள். நண்பன்போல், தோழிபோல் கல்வியை அத்தியாவசியமான சுகமான அனுபவமாக மாற்ற பலருக்கும் தெரிவதில்லை. அதை செய்வதுதான் நமது இப்போதைய தலையாய பணி...''- என்கிறார், ஆளுமைத் திறன் வளர்ப்பு பயிற்சியாளர் எம்.ஹசீனா சையத்.
"ஒவ்வொரு குழந்தைக்குள்ளும் திறமை என்னும் ஒரு விதை இருக்கிறது. அது ஒரு பெரிய விருட்சமாகும் என்பதை பெற்றோர் உணரவேண்டும். அவர்களுக்குள் விதையாக இருக்கும் கலையை, திறமையை நாமே கண்டறிந்து அதை விருட்சமாக வளரச் செய்ய வேண்டும். பொது இடங்களில் பயனுள்ள வகையில் இருக்கும் மரங்களை வெட்டுவது மட்டும் தவறில்லை. குழந்தைகளின் மனதுக்குள் விருட்சமாக வளரும் திறமையை, வளரவிடாமல் நசுக்கி விடுவதும் தவறுதான்''-என்று கூறும் இவர், "மாணவ- மாணவி களின் மனதில் மறைந்து கிடக்கும் ஆற்றலைக் கண்டறிந்து அதனை வளர்த்து, எதிர் காலத்தில் அவர்களை சிறந்த மனிதர்களாக்கி, இந்த நாட்டை வளப்படுத்துவது எங்கள் திட்டம். சிறந்த சமூகத்தை உருவாக்கும் நோக்கத்தில் அமைத்துள்ள இந்த செயல் திட்டத்தை மகாத்மா பவுண்ட்டேஷன் மூலம் நிறைவேற்றுகிறோம்"- என்கிறார்.
ஒரு குழந்தையின் அறிவு வளர்ச்சியை பரீட்சையில் அது பெறும் மதிப்பெண்ணை மட்டும் அளவுகோலாகக்கொண்டு பார்க்கக்கூடாது. ஒன்றாம் ரேங்க் வாங்கும் பல குழந்தைகள் விளையாட்டிலோ, ஓவியத்திலோ, பேச்சிலோ, கற்பனை கலந்த எழுத்திலோ தங்கள் திறமையைக் காட்டுவதில்லை.
சில பெற்றோர் தாங்கள் புதிய செல்போன் வாங்கினால் தங்கள் குழந்தைகள் அதற்கான விளக்க புத்தகத்தைக்கூட பார்க்காமல் எளிதாக கையாளுகிறார்கள். கம்ப்ட்டரில் கூட நாங்கள் கற்றுக்கொடுக்காததை எல்லாம் அவர்களே தெரிந்துகொண்டு செய்கிறார்கள் என்கிறார்கள். ஆனால் கடைசியில், `அதெல்லாம் இருந்தாலும் பரீட்சையில் அதிகம் மதிப் பெண் பெறுவதில்லை. படிப்பில் அறிவிலியாக இருக்கிறான்' என்று மட்டமாக பேசிவிடு கிறார்கள். அப்போது அந்த குழந்தை தன்னிடம் இருக்கும் திறமைக்கு அங்கீகாரம் கிடைக்காமல் தடுமாறி, தவித்து, மன உளைச்சலுக்கு உள்ளாகி விடுகிறது. விதைக்குள் இருக்கும் விருட்சங்களை வளர அனுமதித்தால் மட்டுமே இந்தியாவின் வல்லரசுத்தன்மை லட்சியம் முழுமை அடையும் என்று கூறும் எம்.ஹசீனாசையத், விமான பணிப்பெண் பயிற்சியாளராகவும் இருக்கிறார்.
இந்தியா இளைய தலைமுறையினரால் நிறைந்திருக்கிறது. அவர்களது திறமையை யும் கண்டறிந்து வளர்ப்பது எப்படி?
"அதற்கு இரண்டு விதமான செயல்திட்டங்கள் தேவை. முதலில் அவர்களிடம் இருக்கும் திற மையைக் கண்டறிவோம். பின்பு அவர்களுக்கு தகுந்த பயிற்சிகளை பரிந்துரைப்போம். பெண் களுக்கு இப்போது ஏராளமான தொழில் வாய்ப்பு கள் உள்ளன. அழகுக்கலைத் துறை, ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் ப்ரண்ட் ஆபீஸ் பணி, வெளிநாட்டு மொழிகளை கற்றுக்கொள்ளல், கலை மற்றும் குறிப்பிட்ட கம்ப்ட்டர் கல்வி போன்றவைகளில் பயிற்சி பெற்றால் பெண்க ளால் வளமான எதிர்காலத்தை அமைத்துக் கொள்ள முடியும்"
நீங்கள் குழந்தைகள் மற்றும் பெண்களிடம் இருக்கும் ஆற்றலை எப்படி கண்டு பிடிக்கிறீர்கள்?
"நமது மூளையில் அறிவுக்கட்டுப்பாட்டு அமைப்பு முக்கியமாக இரண்டு பாகங்களாக உள்ளன. எழுத்து, படிப்பு, வாசிக்கும் விஷயங்களை மன தில் பதிய வைத்தல், கணக் கிடுதல், மொழி களை பயன்படுத்தி பரீட்சை எழுதுதல் போன்ற வை பெரும்பாலும் இடது பக்க மூளையின் செயல்பாட்டு இயல்பாகும். இசை, நடனம், அழகுப்படுத்துதல், தொழில் ட்ப ஆர்வம், நிர்வாகத் திறன், சமையல், விளையாட்டு, கலை போன்றவை பெரும்பாலும் வலது பக்க மூளை யின் செயல்பாட்டு இயல்பாகும்.
இடது- வலது இரண்டு பகுதி மூளையும் சிறப்பாக இயங்கும் என்று எதிர்பார்க்காமல், எந்த பகுதி சிறப்பாக இருக்கிறதோ அதை கண்டறிந்து மேம்படுத்த வேண்டும். அவர்களை ஊன்றிக் கவனிப்பது, பேசுவது, கேள்வி- பதில் முறை போன்றவைகளால் அவர்களிடம் இருக்கும் திறமையை காணலாம். இம்முறையில் குழந்தைகளிடம் இருக்கும் ஆற்றலை பெற்றோரால் மிக எளிதாக கண்டறிந்துவிட முடியும். அது தொடர்பான ஆலோசனைகளை இந்தியன் இன்ஸ்டிட்ஷன் ஆப் பிட்டி தெரபி அமைப்பில் வழங்குகிறோம்"
குழந்தைகளிடம் சிறந்த மாற்றங்களை உருவாக்குவதில் முன்னணியில் இருப்பவர்கள் பெற்றோரா? அல்லது குழந்தைகளின் ஆசிரியர்களா?
"இதில் நாங்கள் கண்டறிந்திருக்கும் விஷயம் புதுமையானது. ஆசிரியர் ஒரு குழந்தை யிடம் அதிக பாசத்தோடு பழகினால், அந்த குழந்தை தனக்கு பிடிக்காத சப்ஜெக்ட்டைக் கூட ஆர்வமாக படித்து, அந்த ஆசிரியரிடம் மேலும் அதிக அன்பைப் பெற விரும்புகிறது. கணக்கே வரவில்லை என்ற சிறுவன் கணக்கு டீச்சர் அவனிடம் அன்போடு பழகியதும் அதில் அதிக மதிப்பெண் எடுக்கத் தொடங்கிவிட்டான். ஒரு மாணவனிடம், `நீ கலெக்டர் ஆவாய்..' என்று ஆசிரியர் சொன்னால் அவன் சிந்தனையில் அது ஆழப்பதிந்து அவனை வேகமாக செயல்பட வைக்கிறது. அதை உணர்ந்து ஆசிரியர்கள் குழந்தைகளிடம் எதிர் மறையாகப் பேசக்கூடாது. நீ படிக்கத் தெரியாதவன், சோம்பேறி போன்ற வார்த்தைகள் ஆசிரியர்களிடம் இருந்து வந்தால் குழந்தைகள் மிகுந்த கவலைக்கு உள்ளாகி விடு கிறார்கள். அதனால் ஆசிரியர்களின் தாக்கமே குழந்தைகளிடம் மிக அதிகமாக உள்ளது. பெற்றோரின் பங்களிப்பும் முக்கியமானது. தன்னிடம் கல்வி கற்கும் அனைத்து குழந்தை களிடமும் அன்பு செலுத்துபவரே சிறந்த நல்லாசிரியர். `என் பெற்றோர் மிகச்சிறந்தவர்கள்' என்று தங்கள் குழந்தைகளிடம் பட்டம் வாங்குகிறவர்களே சிறந்த பெற்றோர்.''

No comments: