கீதாச்சாரம்!

எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது
எது நடக்கிறதோ, அது நன்றாகவே
நடக்கிறது
எது நடக்க இருக்கிறதோ,அதுவும்
நன்றாகவே நடக்கும்.
உன்னுடையதை எதை இழந்தாய்,
எதற்காக நீ அழுகிறாய்?
எதை நீ கொண்டு வந்தாய் அதை நீ
இழப்பதற்கு?
எதை நீ படைத்திருந்தாய், அது
வீணாவதற்கு?
எதை நீ எடுத்துக் கொண்டாயோ,
அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது.
எதை கொடுத்தாயோ,
அது இங்கேயே கொடுக்கப்பட்டது.
எது இன்று உன்னுடையதோ
அது நாளை மற்றோருவருடையதாகிறது
மற்றொருநாள், அது
வேறொருவருடையதாகும்.
இதுவே உலக நியதியும் எனது படைப்பின்
சாராம்சமாகும்.

- பகவான் கிருஷ்ணர

மே 1 - உழைக்கும் வர்க்கத்தின் உரிமைகளை வென்றெடுத்த தினம்

ஒருவர் எதற்காக உழைக்கிறார்? மகிழ்ச்சியாக வாழ்வதற்காக! ஆனால், நாள் முழுக்க உழைத்துக் கொண்டே இருப்பவர்களுக்கு மகிழ்ச்சி எப்படி கிடைக்கும்?
அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளி, கல்லூரிகளில் பணிபுரிபவர் களுக்கும், பெரும்பாலான தொழில் நிறுவனங்களிலும் 8 மணி நேரம்தான் வேலை நிர்ணயிக்கப்பட் டிருக்கிறது. அதற்கேற்ப ஊதிய மும் தரப்படுகிறது. இந்த 8 மணி நேர வேலை என்பதும், அதற்கேற்ற ஊதியம் என்பதும் எங்கே, எப்போது, எதற்காக, எப்படி நிர்ணயிக்கப்பட்டது?