Pages

எதிர்காலத்தில் எலிகள்தான் உணவா?

சைவ உணவைத் தாண்டி அசைவம்
சாப்பிடுபவர்களுக்கு உள்ள எதிர்காலச் சாத்தியங்கள்
பல ஆண்டுகளுக்கு முன் இந்தியாவில் கடும்
உணவு தானியப் பற்றாக்குறை ஏற்பட்டது.
"எல்லோரும்
ஒருவேளை சாப்பிடுவதை நிறுத்தினால்
பற்றாக்குறையைத் தவிர்க்கலாம்"
என்று அப்போதிருந்த மத்திய உணவுத்
துறை அமைச்சர் கூறினார். "மக்களைப்
பட்டினி கிடக்கச் சொல்வதா?" என்று எதிர்க்
கட்சித் தலைவர்களும்
பத்திரிகைகளும் மத்திய
அமைச்சரைக் கண்டித்தார்கள்.

இந்துக் கடவுள் அய்யப்பனுக்கு கேரளத்தில் ஆறு கோவில்கள் உள்ளன.

சபரிமலைக்கு புனித யாத்திரை மேற்கொள்ளும் பக்தர்கள், அய்யப்பன் எழுந்தருளி அருள்பாலிக்கும் இந்த 6 கோவில்களுக்கும்
சென்று வழிபட்டால் சிறப்பு பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

1.ஆரியங்காவு

ஆரியங்காவு ஐயப்பன் கோவில்
நெல்லை மாவட்டம்
செங்கோட்டையில்
இருந்து சுமார் 20 கிலோமீட்டர்
தொலைவில், கேரள மாநிலத்தில்
இந்த ஊர் அமைந்துள்ளது.
இங்குள்ள கோவிலில்
சௌராஷ்ட்ர
குலதேவி புஷ்கலையுடன்
அரசராக காட்சித் தருகிறார்
அய்யப்பன்.

மழை காலங்களில் எதை சாப்பிடலாம், எதை சாப்பிடக் கூடாது?

'மழை காலங்களில் சிறந்த
உணவு எது?'னு பலருக்கு சந்தேகம்
இருக்கும். எதை சாப்பிடலாம்,
எதை சாப்பிடக்
கூடாதுனு குழப்பமா இருக்கும்.
சிலருக்கு ஒத்துக்கொள்ளும்;
சிலருக்கு ஒவ்வாமை ஏற்ப்படுத்தும்.
இதை தீர்க்க சில உணவு குறிப்புகள் இதோ...

* மழை நேர வைரஸ் காய்ச்சலுக்கு,
உடனடியாக கொடுக்க,
நிலவேம்பு கஷாயம் பெஸ்ட். நம்
வீட்டிலேயே நிலவேம்பு பொடியை வாங்கி வைத்துக்
கொண்டால் நல்லது. இந்த
நிலவேம்பு பொடியுடன் தண்ணீ­
ர் சேர்த்து காய்ச்சி,
பனங்கற்கண்டு சேர்த்து,
கொதிக்க வைத்து, வடிகட்டி,
வைரஸ் காய்ச்சல்
உள்ளவர்களுக்கு கொடுக்கலாம்.
உடனடியாக காய்ச்சல்
பறந்தோடி விடும்.

* மழைக் காலத்தில் நாம் சாப்பிடும்
உணவில், இனிப்பு அதிகம் சேர்த்துக்
கொள்ளாமல்
இருப்பது நல்லது.

* பால் மற்றும் பால் சார்ந்த தயிர்,
வெண்ணெய், நெய்
போன்றவற்றையும் அதிகம் சாப்பிடக்
கூடாது. ஆனால், மோர் சாப்பிடலாம்.
உடலுக்கு நல்லது.

* நம் உணவில் காரம், கசப்பு,
துவர்ப்பு சுவையுள்ள
உணவுகளை மழைக்காலத்தில் அதிகம்
சேர்த்துக் கொள்ளலாம்.

* மதிய உணவின் போது தூதுவளை ரசம்
வைத்து சாப்பிடலாம்.

* இரவு தூங்குவதற்கு முன், பாலில்
மஞ்சள் தூள், மிளகுத்தூள்,
பனங்கற்கண்டு சேர்த்து சாப்பிடுவது நல்லது.

* நீர்ச் சத்துக்கள் நிறைந்த சுரைக்காய்,
பூசணி, புடலை, பீர்க்கன்,
வெள்ளரி போன்ற காய்கறிகளை,
மழை சீசனில் உணவில் சேர்த்துக்
கொள்வதை தவிருங்கள்.

* கண்டிப்பாக மழைக் காலத்தில், நம்
உணவுப் பதார்த்தங்களில்,
மிளகு பொடியைச் சேர்த்துச்
சமைத்துச் சாப்பிடுவது நல்லது.
இரவு உணவில் பச்சைப் பயறு, கேழ்வரகு,
கீரை ஆகியவற்றைச் சேர்க்காதிருத்தல்
நல்லது.

* மழை சீசனில் பிஸ்கட் சீக்கிரம் நமத்துப்
போகாமல் இருக்க, பிஸ்கட் வைக்கும்
டப்பாவில் சிறிது சர்க்கரைத்
துகள்களை போட்டு வைக்கவும்.

* மழைக் காலங்களில் பழங்களைச்
சாப்பிடும் எண்ணம் அவ்வளவாக
ஏற்படாது. ஆனாலும்,
பழத்தை அப்படியே துண்டுகளாக
வெட்டிச் சாப்பிட
விருப்பமுள்ளவர்கள் சாப்பிடலாம்.
எல்லா சீசனுக்கும்
பொருத்தமானது வாழைப்பழம்.
அதற்காக வாழைப்
பழத்தை மட்டுமே சாப்பிடுவதற்கு பதிலாக,
மற்ற பழங்களையும்
சேர்த்து சாப்பிடலாம்.

* சிலருக்கு சளி, இருமல் இருந்தாலும்,
விட்டமின் 'சி' சத்து ஒத்துப் போகும்.
சிலருக்கு மழைக்காலம்
வந்து விட்டாலே ஒத்துக்
கொள்ளாது. எலுமிச்சம்,
ஆரஞ்சு ஜூஸ் சாப்பிட்டாலும் ஒன்றும்
செய்யாது. ஆனால், ஒத்துக்
கொள்ளாதவர்கள்
கண்டிப்பாக சாப்பிடாமல்
இருப்பது நல்லது.

* சாப்பிடும் உணவுகள், லேசான
சூட்டில் இருக்கும் படி பார்த்துக்
கொண்டால் நல்லது.

* மழை சீசனில், கீரைகள் அதிகம்
சாப்பிடா விட்டாலும்
பரவாயில்லை என்றே சொல்லலாம்.
ஏனென்றால், கீரைகளை நன்றாக
தண்ணீரில் கழுவி பயன்படுத்த
வேண்டும். இல்லாவிட்டால்
கீரைகளால் புதுசாக நோய் ஏற்படும்
வாய்ப்புகள் அதிகம்.
* மழை சீசனில்,
எல்லா காய்கறிகளையும் உணவில்
சேர்த்துக் கொள்ளலாம்.
சிலருக்கு, தண்ணீர் சத்து அதிகமுள்ள
காய்கறிகள் ஒத்துக்
கொள்ளாது. அத்தகையவர்கள்
அவர்களுக்கு ஏற்ற
காய்கறிகளை சமைத்துச் சாப்பிடலாம்.

* அசைவ உணவாக, மீன், முட்டை, கறி,
சிக்கன் என்று சாப்பிடலாம்
ஆனால், அவை பிரஷ்ஷாக
இருக்கும்படி பார்த்துக்
கொள்ள வேண்டும்.
ஏனென்றால், மழைக்
காலங்களில் கடைகளுக்குப் போய்
வாங்குபவர்கள் குறைவு. அதனால்,
மீன் போன்றவை பழைய ஸ்டாக் இருக்க
வாய்ப்பு உண்டு.

* மழை சீசனில், எண்ணெயில்
பொரித்த உணவுகளையும்
அதிகம் சாப்பிடக் கூடாது. சூடாகச்
சாப்பிட வேண்டும் என்று தோன்றும் போது,
பஜ்ஜி, போண்டா என சாப்பிடாமல்,
அதற்கு பதிலாக உப்புமா உருண்டை,
இட்லி சாம்பார், பிரட் டோஸ்ட் என
சாப்பிடலாம். நாம் தினமும்
சாப்பிடும் உணவையே, சற்று சூடாகச்
சாப்பிட்டால் போதும்.

பெற்றோரைக் கொல்லும் பிள்ளைகள்!

தமிழ்நாட்டில் தற்போது முதியோர் பராமரிப்பு என்பது மிகப்பெரிய
சமூக சிக்கலாக மாறியதற்கான முதன்மைக்காரணிகளில்
முக்கியமானது தமிழ்ச்சமூகத்தில்
உடைந்து சிதறிய கூட்டுக்குடும்ப
வாழ்க்கை முறையும், பெருகிவிட்ட சிறுகுடும்ப வாழ்வும்
என்கிறார்கள் சமூகவியலாளர்கள்.
ஒரு சமூகத்தின்
அடிப்படை அலகு என்பது குடும்பம் என்கிற அமைப்பு. பல
தலைமுறைகளாக தமிழ்ச்சமூகம் என்பது கிராமப்புற விவசாய
சமூகமாக இருந்தது. அதில்
பெரும்பாலானவை கூட்டுக்குடும்பங்களாக இருந்தன.
இத்தகைய கூட்டுக்குடும்ப முறையில்
ஒரே குடும்பத்தில் திருமணமான பல பெண்கள்
சேர்ந்து வாழ்ந்த நிலையில் முதியோர்
பராமரிப்பு என்பது இயல்பாக, எளிதாக இருந்தது என்கிறார்
கோவையில் இருக்கும் பி எஸ் ஜி ஆர் கிருஷ்ணம்மாள் கல்லூரியின் முதியோர்
பராமரிப்புத்துறையின் ஒருங்கிணைப்பாளர் ச அருள்மொழி.
குடும்பநலத்திட்டம் கூட்டுக்குடும்ப
சிதைவை வேகப்படுத்தியது
இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில்
இருந்தே தமிழ்நாட்டில் சிறுகுடும்பம் என்கிற
கருத்தாக்கமும்,
இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றுக்கொள்ள
வேண்டாம் என்கிற வலுவான பிரச்சாரமும் மிகப்பெரும்
தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
அதன் விளைவாக தமிழ்ச்சமூகத்தில்
இருபத்திஓராம் நூற்றாண்டில் கூட்டுக்குடும்பம் என்கிற
அமைப்பு காணாமல் போய்விட்டது. ஒட்டுமொத்த
இந்தியாவில் மிகவும் குறைவான பிறப்பு விகிதம் கொண்ட பெரிய மாநிலம்
தமிழ்நாடு என்கிற நிலையும் உருவாகியுள்ளது.
இதன் காரணமாக தமிழ்நாட்டில் தற்போதைய நிலையில்
பராமரிப்பு தேவைப்படும் முதியோரின்
எண்ணிக்கை அதிகமாகவும், அவர்களை பராமரிக்க
வேண்டிய இளையோரின்
எண்ணிக்கை குறைவாகவும் இருப்பதாகவும்
தெரிவிக்கும் சென்னை வளர்ச்சி நிறுவனத்தின்
துணைப்பேராசிரியர் விஜயபாஸ்கர், இது முதியோர் பராமரிப்பில்
நேரடி தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதா
கூறினார்.
முதியோர் பராமரிப்பிலிருந்து விலகிய பெண்கள்
ஒரு பக்கம், கூட்டுக்குடும்பம்
சிறுத்து தனிக்குடும்பமானது மட்டுமல்ல, குடும்பம்
என்கிற
அமைப்பிற்குள்ளேயே தலைமுறை தலைமுற
எந்த எதிர்க்கேள்வியும் கேட்காமல்
முதியோரை முழுநேரமும் பராமரித்துவந்த பெண்கள்,
அதிலிருந்து விலகவேண்டிய பரிணாம வளர்ச்சி ஏற்பட்டிருப்பதாக
சுட்டிக்காட்டுகிறார் பெண்ணியவாதி ஓவியா.
நன்கு கல்விகற்ற, வேலைக்குப்போய் சம்பாதிக்கக்கூடிய,
சுயமரியாதை மிக்க பெண்கள் இனியும் குடும்பத்தில்
இருக்கும் குழந்தைகளையும் முதியோரையும்
முழுநேரமும் பராமரிக்கும் தாதிகளாக மட்டும்
தொடர்ந்து இருக்கவும் முடியாது; இயங்கவும்
முடியாது என்கிறார் ஓவியா.
சமூகத்தின் அடிப்படை அலகான குடும்பம், அந்த
குடும்பத்தில் முதியோரை பராமரிப்பதை முழுநேர
வேலையாக செய்துகொண்டிருந்த
பெண்களிடம் ஏற்பட்டிருக்கும் மாற்றம் ஆகிய காரணங்கள் தவிர,
ஒட்டுமொத்த இந்தியாவில் வேகமாக நகர்மயமாகும் முதல்
மாநிலமாக தமிழ்நாடு இருப்பதும் முதியோரின் இன்றைய
நிலைமைக்கு முக்கிய காரணம் என்கிறார் விஜயபாஸ்கர்.
அதிகபட்ச நகர்மயமான மாநிலம் தமிழ்நாடு
இருபதாம் நூற்றாண்டில் தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த
வருமானத்தில் பெருமளவு கிராமப்புறம் சார்ந்த விவசாய வருமானமாக
இருந்தது. ஆனால் இன்றைய தமிழ்நாட்டின் மொத்த
வருமானத்தில் விவசாயத்தின் பங்கு வெறும் 8
சதவீதமாக சுருங்கிவிட்டது என்கிறார் விஜயபாஸ்கர்.
இதன் விளைவாக படித்த கிராமப்புற இளம்
தலைமுறையினர் விவாசயத்தை விட்டும்
கிராமங்களைவிட்டும் நகரங்களை நோக்கி வரவேண்டிய நிர்ப்பந்தம்
நேர்ந்திருப்பதாக கூறுகிறார் பாஸ்கர். இந்த வரலாற்றுப்போக்கின்
விளைவாக கிராமங்களில் விடுபட்டுப்போகும் எச்சமாக
தொக்கி நிற்கும் முதியவர் நிலைமை மோசமாவதாக
கூறுகிறார் முதியவர்களுக்கான தேசிய கூட்டமைப்பின்
துணை இயக்குநர் ஆர் சுப்பராஜ்.
ஆயுட்காலத்தை அதிகரித்திருக்கும்
மருத்துவ முன்னேற்றம்.
கூட்டுக்குடும்ப அமைப்பின் சிதைவு,
குடும்பத்து முதியவர்களை பராமரிப்பதில்
குறைந்துவரும் பெண்களின் பங்களிப்பு, வேகமான நகர்மயமாதல்
ஆகியவற்றுக்கு அடுத்தபடியாக, மருத்துவ விஞ்ஞான
முன்னேற்றங்கள் தமிழர்களின் வாழ்நாளை மிகப்பெரிய
அளவுக்கு அதிகப்படுத்தியிருப்பதும் முதியோர்
எண்ணிக்கை அதிகரிக்க முக்கிய காரணம் என்கிறார்
இந்தியாவின் முன்னணி முதியோர் மருத்துவர்களில் ஒருவரான வி எஸ் நடராஜன்.
இந்தியா சுதந்திரம்
அடைந்தபோது தமிழர்களின் சராசரி ஆயுட்காலம் சுமார் 40
ஆண்டுகள் என்றிருந்த நிலைமை மாறி, இன்று தமிழர்களின்
சராசரி ஆயுட்காலம் 70
ஆண்டுகளைத்தாண்டி வேகமாக
உயர்ந்து கொண்டிருப்பதாக சுட்டிக்காட்டுகிறார் நடராஜன்.
இப்படி அதிக ஆயுட்காலம் வாழநேரும்
முதியவர்களை கையாள்வதற்குத்
தேவைப்படும் பக்குவம் இளம்தலைமுறையினரிடம்
போதுமான அளவு இல்லை என்று கூறும் ஹெல்ப் ஏஜ்
இந்தியா என்கிற முதியவர்களுக்கான
தொண்டு நிறுவனத்தின் துணை இயக்குநர்
சத்தியபாபு, இவர்களில் சிலர் பெற்றோரைக் கொல்லும்
பிள்ளைகளாக மாறிவிடுகிற அவலமும் தமிழ்நாட்டில் பரவலாகநடக்கிறது என்கிறார்.

Thanks...
http://www.bbc.co.uk/tamil/india/2014/11/141116_oldageseriespart2

குழந்தைகள் உங்கள் சொல்படி நடக்கவேண்டுமா ?

இக்கால
குழந்தைகளுக்கு அவர்களின்
பெற்றோர்களை விட திறமையும்,
புத்திசாலித்தனமும் அதிகம்.
பள்ளியில் கல்வி தரம்
நாளுக்கு நாள் உயர்ந்து வரும்
வேளையில், குழந்தைகள்
தங்கள் வயதிற்கு மீறிய
அறிவுக்கூர்மையை வெளிபடுத்த
தொடங்குகிறார்கள்.
அறிவுகூர்மை, அதீத
புத்திசாலித்தனம்,
வியப்பூட்டும் செயல்திறன் என
குழந்தைகளிடம் என்னதான்
பாராட்டுக்குரிய நற்பண்புகள்
இருந்தாலும் அவர்கள் நல்ல
குணமுடைய மனிதர்களாக
வளர்வது பெற்றோரின் கையில்
தான் இருக்கிறது.
உங்கள் செல்ல
குழந்தை பணிவான,
நற்குணமுடைய குழந்தை என
அனைவரிடமும் பேர் வாங்க
வேண்டுமென்றால் நீங்கள் சில
குறிப்புகளை பின்பற்ற
வேண்டியிருக்கும்
திடமாக இருங்கள் -
குழந்தை தவறு செய்துவிட்டால்,
நீங்கள் கண்டிக்கும்
போது உங்களின்
நோக்கத்தை அவர்களுக்கு புரிய
வையுங்கள்.
இன்னொரு முறை அதே தவறை செய்யாத
விதத்தில்
உங்களது நடவடிக்கை இருக்க
வேண்டும்.
நிதானமாக இருங்கள் -
குழந்தையை திருத்தும்
போது வன்மையான
சொற்களை பயன்படுத்தாதீர்கள்.
எது சரி எது தவறு என்பதை பொறுமையாக
எடுத்து கூறுங்கள்.
எடுத்துகாட்டாக இருங்கள் -
பெற்றோர் ஒழுக்கத்துடனும்,
நற்பண்புகளுடனும்
இருந்தாலே பிள்ளைகள்
அவர்களை எடுத்துகாட்டாக
நினைத்து பின்பற்றி வருவார்கள்.
பரிசளியுங்கள் - உங்கள்
குழந்தைகள் உங்கள்
சொல்படி நடக்கும்போது,
அவர்களை பாராட்டும் விதத்தில்
பரிசளியுங்கள். இது அவர்கள்
தொடர்ந்து நல்ல
வழக்கங்களை பின்பற்ற உதவும்.
" எந்த குழந்தையும் நல்ல
குழந்தைதான் மண்ணில்
பிறக்கையிலே, அவன் நல்லவன்
ஆவதும் தீயவன் ஆவதும்
அன்னை வளர்கையிலே",
என்பதை போல
குழந்தைகளுக்கு நற்பண்புகளை சிறு வயதிலிருந்தே கற்றுகொடுத்
பிற்காலத்தில் அவர்களின்
வாழ்க்கைக்கு அது புது அர்த்தத்தை அளிக்கும்
என்பதில் எந்த ஐயமுமில்லை.

Thanks...
http://tamil.webdunia.com/article/child-rearing-feature/குழந்தைகள்-உங்கள்-சொல்படி-நடக்கவேண்டுமா-113011100039_1.htm

136 அடியைத் தாண்டியுள்ள முல்லை பெரியாறு அணை, விவசாயிகள் மட்டற்ற மகிழ்ச்சி!

35 ஆண்டுகளுக்குப் பிறகு முல்லை பெரியாறு அணையில் நீர்மட்டம் 136 அடியைத் தாண்டியுள்ளதால் விவசாயிகள் மட்டற்ற மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
முல்லை பெரியாறு அணை தண்ணீரால் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்கள் பாசன வசதி பெறுகின்றன.
இந்த அணையின் முழுக் கொள்ளளவு 152 அடி. இதில், 136 அடிக்கு மேல் தண்ணீரைத் தேக்கிவைக்க கேரளம் கடும் எதிர்ப்பு தெரிவித்தது.
இதையடுத்து, அதிகளவில் மழை பெய்தாலும் வேறு வழியின்றி கடந்த 35 ஆண்டுகளாக அணையில் 136 அடி வரை மட்டுமே தண்ணீர் தேக்கப்பட்டு வந்தது.

உடல்பருமனால் உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், மூட்டு வாதம், மன அழுத்தம் போன்றவை ஏற்படும்!

கொழுப்புகள் கல்லீரலில் உற்பத்தி செய்யப்படுகின்றன. அளவுக்கு அதிகமான கொழுப்பு உடலில் சேர்வதால் உடல்பருமன் ஏற்படுகிறது. கூடுதல் உடல் பருமனுக்கான காரணங்கள் - அதிக அளவு உணவு எடுத்துக்கொள்ளல், குறைவான சக்தியைச் செலவிடல், அதிக சக்தி தரும் உணவுகளை உட்கொள்ளல் (இனிப்புகள்/ ஐஸ்-கீரிம்/ குளிர்பானங்கள்), மதுப் பழக்கம் போன்றவற்றால் கூடுதல் பருமன் ஏற்படுகிறது. வயது மற்றும் பரம்பரைக் காரணிகளும் கூட உடல்பருமனுக்குக் காரணங்களாகும். தைராய்டு சுரப்புக் குறைவதாலும், அட்ரீனல் சுரப்பு அதிகரிப்பதாலும் உடல் பருமன் அதிகரிக்கும். கூடுதல் உடல்பருமனால் உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், மூட்டு வாதம், மன அழுத்தம் போன்றவை ஏற்படுகின்றன.
  
உடல்பருமனுக்கு எளிய சித்த மருத்துவம்:
இஞ்சியைத் தோல் சீவி அரைத்து, ஒரு டேபிள் ஸ்பூன் சாறு எடுத்து, அதனுடன் சம அளவு தேன் சேர்த்து ஒரு டம்ளர் இளம் சூடான நீரில் கலந்து, காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இஞ்சியில் உள்ள ஜின்ஜெரால் (Gingerol), ஜின்ஜிபெரின் (Zingiberine) மற்றும் தேன் ஆகியவை செரிமானத்தைத் தூண்டுவதுடன் தேவையற்ற கொழுப்பையும் எரிக்கும்.
கீழாநெல்லி, வெந்தயம், மஞ்சள், கறிவேப்பிலை, நெல்லிக்காய் சம அளவு எடுத்துப் பொடித்து, காலை, மாலை அரை ஸ்பூன் நீரில் கலந்து உண்ண, உடலின் கொழுப்பு குறைந்து, எடையும் சீராகும்.
சிறுகுறிஞ்சான், நெருஞ்சில், மூக்கிரட்டை, சீரகம், திப்பிலி, மிளகு, ஓரெடை எடுத்துப் பொடித்து, காலை, மாலை அரை ஸ்பூன் தேனில் உண்ண உடல் எடை குறையும்.
பெருஞ்சீரகத்தைப் பொடித்து, காலை, மாலை அரை ஸ்பூன் தண்ணீர் சேர்த்து அருந்த, உடல் எடை குறையும். எலுமிச்சைச் சாறு ஒரு டேபிள் ஸ்பூனுடன் சம அளவு தேன் சேர்த்து ஒரு டம்ளர் நீரில் கலந்து பருக வேண்டும். இதில் உள்ள வைட்டமின் சி ரத்தத்தைச் சுத்திகரிப்பதுடன் கொழுப்பைக் குறைத்து உடலின் எடையையும் குறைக்கிறது.
சேர்க்க வேண்டிய உணவுப் பொருட்கள்:
தக்காளி, கோஸ், பப்பாளி, வெள்ளரி, தர்பூசணி, புரூகோலி, ஆப்பிள், ஓட்ஸ், வால்நட், பாதாம், பருப்பு வகைகள், மோர்.
நீக்க வேண்டிய உணவுப் பொருட்கள்:
இனிப்புகள், வெள்ளை ரொட்டி, பட்டை தீட்டப்பட்ட தானியங்கள், துரித வகை உணவுகள், எண்ணெய் மற்றும் கொழுப்பு மிகுந்த உணவு வகைகள். தினமும் இரண்டு லிட்டர் தண்ணீர் அருந்த வேண்டும். நடைப்பயிற்சி, நீச்சல் பயிற்சி, சைக்கிள் ஒட்டுதல், யோகா, தியானம், முதலியவற்றை மேற்கொண்டால் உடல்பருமன் நிச்சயம் குறையும்.


சர்க்கரை வியாதி உள்ளவர்கள அதிகமாக துணையை நாடவேண்டுமாம்!

அதிக ஆயுளுக்கு என்ன செய்யலாம்?. இதற்கு அந்தக் காலத்தில் நிறைய யோசனைகளை சொல்லி வைத்திருக்கிறார்கள். அதே சமயம், அதிகளவில் செக்ஸ் உறவு களில் ஈடுபடுவோருக்கு நீடித்த ஆயுள் கிடைக்கும் என்கிறது புதிய ஆய்வு. ஒருவர் தொடர்ந்து ஆக்டிவான செக்ஸ் வாழ்க்கையில் ஈடுபட்டு வந்தால் அவருக்கு ஆயுள் நீடிக்கும் என்கிறது இந்த புதிய ஆய்வு. மேலும் நம்பிக்கைக்குரிய ஒருவருடன் தொடர்ந்து செக்ஸ் உறவில் ஈடு பட்டு வருவோருக்கே இது பொருந்துமாம். பல்வேறு பெண்களுடன்சகட்டு மேனிக்கு உறவு கொள்வோருக்கு இது சற்றும் பொருந்தாதாம்.
  

நீர்ச்சத்து, புரதம், சுண்ணாம்புச் சத்து நிறைந்த சுரைக்காய் - ஆண்மைச் சக்தியை ஊக்குவிக்கும்!

உடல் சூட்டைத் தணிக்கும் வல்லமை கொண்டது சுரைக்காய். இதன் சுபாவம் எப்பவுமே குளிர்ச்சியாக இருப்பது. இது சிறுநீரைப் பெருக்கும். உடலை உரமாக்கும். மலச் சுத்தியாகும். தாகத்தை அடக்க வல்லது...

சர்க்கரை நோயாலியின் புண்களும் எளிதில் ஆறும்: மூக்குத்தி பூ செடியின் மகத்துவம்!

பெறிய அல்லது நீண்ட நாட்கள் ஆறாமல் இருக்கும் புண்கள் மீது மூக்குத்தி பூ செடியின் இலையை தேவையான அளவு பிடிங்கி சிறிது தண்ணீர் விட்டு அறைத்து உடம்பில் உள்ள. வெளி காயங்களுக்கு போட்டு வந்தால் எப்படி பட்ட புண்களாக இருந்தாலும் எளிதில் ஆறி விடும்.
இந்த அறிய வகை மூக்குத்தி பூ செடி சாதாரணமாக எல்லா இடங்களிலும் கிடைக்கக் கூடியது. இதனுடைய பூ மூக்குத்தியை போன்று இருக்கும்.
சர்க்கரை நோயாலிகளின் புண்களை கூட இது எளிதாக குணப்படுத்தும் தன்மை கொண்டது.
*இது ஒரு அனுபவ பதிவு

ரத்தத்தை சுத்திகரிக்கும் சிறியாநங்கை

கசப்பு மருந்து எனப்படும்
சிறியாநங்கை,
பெரியாநங்கை தாவரங்கள்
மருத்துவகுணம் நிறைந்தவை.
இவை செம்மண், கரிசல்
மண்களில் நன்றாக வளரும்.
இது ஒரு குறுஞ்செடி.
வேப்பிலை போன்று எதிர் அடுக்கில்
வெட்டு இல்லாத இலைகளைக்
கொண்டது.

எபோலா தீநுண்ம நோய் - இது ஓர் உயிருக்கு கேடு விளைவிக்கும் கடுமையான நோயாகும்

எபோலா தீநுண்ம நோய் (Ebola virus disease) (EVD) அல்லது எபோலா குருதி ஒழுக்கு காய்ச்சல் (Ebola hemorrhagic fever) (EHF) என்று எபோலா தீ நுண்மத்தின் நான்கு வகைகளால் மனிதரில் ஏற்படும் நோய் பெயரிடப்பட்டுள்ளது. இது ஓர் உயிருக்கு கேடு விளைவிக்கும் கடுமையான நோயாகும். கடுமையான குருதி இழப்பு ஏற்பட்டு நோய்வாய்ப்பட்ட பத்து பேரில் சராசரியாக ஐந்து முதல் ஒன்பது பேர் உயிரிழக்கின்றனர்.

பராசக்தி: நீதி மன்ற காட்சி வசனம்


நீதிமன்றம் விசித்திரம் நிறைந்த பல வழக்குகளை சந்தித்திருகின்றது.

புதுமையான பல மனிதர்களை கண்டிருகின்றது.
ஆனால் இந்த வழக்கு விசித்திரமும் அல்ல.
வழக்காடும் நானும் புதுமையான மனிதன் அல்ல.
வாழ்க்கை பாதையிலே சர்வ சாதாரணமாக தென்படும் ஜீவன்தான் நான்.
கோவிலிலே குழப்பம் விழைவித்தேன்.
பூசாரியை தாக்கினேன்.

சாப்பிடாமல் மெலிந்திருக்கும் குழந்தைகளின் பெற்றோருக்கு…

1. அன்பு, அரவணைப்பு, பாராட்டு, அக்கறை,   உணவில் அழகூட்டுதல் போன்றவற்றை நீங்கள் சமையலுக்கு முன்னும் பின்னும் சேர்க்காமல் இருப்பதும் பசியின்மைக்குக் காரணங்களாகும். அதில் முதலில் கவனம் செலுத்துங்கள்.

2. ‘ஸ்வீட் எடு.. கொண்டாடு!’ என இருக்க வேண்டாம். கொண்டாட்டம் என்றால், ‘பழம் எடு… பரவசமாகு’ என கற்றுக்கொடுப்போம். அத்தனை இனிப்புப் பண்டங்களும் பசியடக்கி கபம் வளர்க்கும். குறிப்பாக ‘மில்க் ஸ்வீட்’!

கல்லீரலில் கவனம் தேவை!

மலேரியா, சர்க்கரை நோய், எய்ட்ஸ், புற்றுநோய் பற்றி நமக்கு ஓரளவுக்குத் தெரியும். ஆனால், சத்தமில்லாமல் கொல்லக்கூடிய, எய்ட்ஸைவிட 100 மடங்கு வேகமாகத் தொற்றக்கூடிய ஹெபடைட்டிஸ் பி உள்ளிட்ட வைரஸ் கிருமிகளைப் பற்றி அதிகம் தெரியாது. ஆண்டுதோறும் 14 லட்சம் பேருக்கு, ஹெபடைட்டிஸ் ஏ தொற்று ஏற்படுகிறது. 2.4 கோடி பேர், ஹெபடைட்டிஸ் பி (எச்.பி.வி) கிருமித் தொற்றுடன் வாழ்கின்றனர். 7.8 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர். ஹெபடைட்டிஸ் ஏ, பி, சி, டி மற்றும் இ வைரஸ் கிருமியால் லட்சக்கணக்காணோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

குழந்தைகளை சாப்பிட வைப்பது எப்படி?

சாப்பிடாமல் அடம் பிடிப்பது குழந்தைகளின் சுபாவம். அதை மாற்ற முடியாமல் திண்டாடுவது அம்மாக்களின் சுபாவம் என்றாகிவிட்டது. அடம் பிடிக்கும் குழந்தைகளை ஊட்டச்சத்து மிக்க உணவு வகைகளை சாப்பிட வைப்பது சுலபமானதல்ல. 

குழந்தைகள் காப்பகம்-மகளிர் விடுதிகளுக்கு 37 வழிகாட்டு நெறிமுறைகள்

தமிழகத்தில் பெண் குழந்தைகள், வளர் இளம் பெண்கள், பணிபுரியும் மகளிர் ஆகியோர்களின் பராமரிப்பு, பாதுகாப்பு மற்றும் நலனை உறுதி செய்யும் வகையில் விடுதிகள் மறறும் காப்பகங்களுக்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகளை அரசு உருவாக்கியுள்ளது. 
இதுதொடர்பாக முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
பொள்ளாச்சியில் சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்திற்குப் பிறகு உடனடியாக சம்பந்தப்பட்ட அமைச்சர்களுடனும், அரசு உயர் அதிகாரிகளுடனும் ஆலோசனை நடத்தினேன்.

இந்திய அரசியலமைப்பு மற்றும் ஆட்சியியல் சட்டங்கள்...

குற்றவியல் சட்டம்
ஓப்பந்தச்சட்டம்
தொழிலாளர் சட்டம்
பொல்லாங்கு குற்றவியல் சட்டம்
குடும்பச் சட்டம்
இந்துச் சட்டம்
இசுலாமியச் சட்டம்
கிருத்துவச் சட்டம்
பொதுச்சட்டம்
தேசியச்சட்டம்
அமலாக்கச் சட்டம்
இந்திய தண்டனைச் சட்டம்

தமிழ்த் திரையுலகின் அம்புலி மாமா ராம நாராயணன்

குறைந்த காலத்தில் குறைந்த முதலீட்டில் நிறைய லாபத்தை ஈட்டும் சாதுர்யம் மிக்க இயக்குநர் ராம நாராயணன். உங்களின் மனம்கவர்ந்த இயக்குநர் யார்? என்று இன்றைய இளைய சமுதாயத்திடம் கேட்டால் ஷங்கர், மணி ரத்னம், பாலச்சந்தர், பாலு மகேந்திரா, வெற்றி மாறன், குமார ராஜா, வசந்த பாலன் என்று அப்பட்டியல் நீண்டுகொண்டே போகும். அதே சமுதாயத்திடம் சற்று காலங்கள் பின்னோக்கி, இதே கேள்வியை கேட்டுப் பார்த்தால், கண்டிப்பாக ராம நாராயணன் அவர்கள் அப்பட்டியலில் முக்கிய அங்கம் வகித்திருப்பார்.

ராம நாராயணன்... இவர் குழந்தைகளின் இயக்குநர். இன்றையச் சூழலில் மார்வெல், டி.சீ.காமிக்ஸ் போன்ற காமிக்ஸ் புத்தகங்கள் எல்லாம் மிகுந்த பிரபலமாகிவிட்டது. சிறுவர்கள் அயர்ன் மேன், ஸ்பைடேர் மேன் போன்ற சூப்பர் ஹீரோ படங்களை எல்லாம் பார்த்து திளைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் 1980களில் இருந்து 2000களின் தொடக்கம் வரை சென்று பார்த்தோமானால், அன்றைய சூழலில் குழந்தைகளின் சூப்பர் ஹீரோ ராமசாமி'யாக வரும் யானை நாகேஸ்வரியாக வரும் பாம்பு. நண்பனாக வரும் ராமு எனும் குரங்கு. மிருகங்களை படத்தின் மையக் கதாப்பாத்திரமாக வைத்து 'தேவர் பிலிம்ஸ்' விட்டுச் சென்ற தலையாய கடமையை முன்னின்று நடத்திய இயக்குநர் ராம நாராயணன்.

சிகப்பு மல்லி படத்தில் கம்யூனிசத்தை பற்றி ஆணித்தரமாக உரைத்த ராம நாராயணன், தன்னை ஒரு வகையான சினிமாவுக்கென வரையரைத்துக் கொள்ளவில்லை. ஆனால், ஒரே கதையம்சத்துடன் வகை வகையான படங்களை அளித்திருக்கிறார். இவரின் நிறைய படங்கள் எல்லாம் குழந்தைகளுக்கு ஒரு நன்னெறி கதை கூறுவது போல் அமைந்திருப்பதை காணலாம்.

ராஜ காளியம்மன், அன்னை காளிகாம்பாள், பாளையத்தம்மன், மாயா போன்ற படங்கள் எல்லாம் பார்த்தால் கிட்டத்தட்ட ஒரே கதை. உண்மையான பக்தைக்கு ஒரு அநீதி இழைக்கப்படும்போது கடவுள் அவதரிப்பார் என்பதே இவ்வனைத்து படங்களின் நாட். ஆனால் இந்த ஒரே முடிச்சினை வைத்துக் கொண்டு அதை விதவிதமாக பரிமாறிய விதத்தில்தான் ராம நாராயணன் நிற்கிறார். உலகிலே அதிக பட்சமாக 125 படங்களை இயக்கி கின்னஸ் சாதனை படைத்த இயக்குநர் என்றால் சும்மாவா?

பால்ய காலத்தில் இரண்டாயிரத்து இரண்டாம் ஆண்டு தீபாவளிபோது சென்னை முழுவதும் அலைபாயுதே, வல்லரசு பார்க்க அலைந்து கொண்டிருந்தது. அப்போது அப்பாவிடம் அடம்பிடித்து ராஜகாளியம்மன் படம் பார்க்க அழைத்துச் செல்ல வைத்திருக்கிறேன். நன்றாக ஞாபகம் இருக்கிறது, இவரின் அம்மன் படங்களை தொடர்ந்து வெளியிடும் திரையரங்கங்களில் அம்மன் சிலை கூட வைக்கப்பட்டிருந்தது. ஆடி வெள்ளி பார்க்கச் சென்றபோது, அப்போது சாமி வந்த மக்கள் ஆடிய கதையையும் கேட்டிருக்கிறேன்.

கே.கே.நகர் விஜயா திரையரங்கில் (இப்போது இருக்கும் விஜயா திரையரங்கம் அல்ல; அப்போது சூழல் வேறு) ராஜகாளியம்மன் படம் பார்த்தபோது 'அய்யோ என் தலை வலிக்குது, அப்படியே கழட்டி வெக்கணும் போல இருக்கே' என்று ஒய்.விஜயா பேசும்போது, அவ்வளவு தானே கழட்டி வெச்சிட்டா போச்சு என்று கூறி வடிவேலு வை.விஜயாவின் தலையை உடலிலிருந்து எடுத்து பந்தாக்கி, அரை முழுதும் சுற்ற விட்டு திருப்பி, கீழுக்கும் மேலுக்குமாக உதைத்து பின் தலையிலே இணைக்கும் காட்சியெல்லாம் விழுந்து விழுந்து சிரித்து ரசித்ததுண்டு. இந்த பலூன்'ல வெறும் மூச்சுக்காற்று இல்லம்மா உங்க அண்ணன் மூச்சு இருக்கு என்று வடிவேலு பேசுவார். பின் அதே பலூன் உடைந்து போகும்போது அப்போது அதைக்கண்டு அடுத்து வடிவேலுக்கு என்ன ஆகுமோ! என்று வெடவெடுத்து போனதும் உண்டு. அப்போது சரண் ராஜ், கரன் எல்லோரையும் பார்த்தாலே பாட்டியுடன் சேர்ந்து நானும் திட்டியிருக்கிறேன்.

இப்போது நாகேஷை கோச்சடையானில் மீட்டுக் கொணர்ந்ததை பற்றி நாம் பேசிக்கொண்டிருக்கிறோம். இந்த முயற்சியை தமிழ் சினிமாவில் முதல்முறை செய்தது ராமநாராயணன் என்று ஞாபகம் இருக்கிறதா? 'கந்தா கடம்பா கதிர்வேலா' படத்தில் ஒரு பாடலுக்கு பிரபு, எஸ்.வீ.சேகர், வடிவேலு, விவேக்குடன் எம்.ஜீ.ஆரையும் இணைத்து ஆட வைத்திருப்பார் ராம நாராயணன்.

இரண்டாயிரத்தின் தொடக்கத்தில் விவேக், வடிவேலுவின் வளர்ச்சிக்கு பெரிதாக வித்திட்டவர் ராம நாராயணன் என்பது மறுத்தற்குரியதா? திருப்பதி எழுமல வெங்கடேசா, கந்தா கடம்பா கதிர்வேலா, விஸ்வநாதன் ராமமூர்த்தி, பாளையத்தம்மன் படத்தில் இவர் அமைத்திருந்த நகைச்சுவை காட்சிகள் எல்லாவற்றையும் எப்படி மறக்க முடியும்?

நடிகர்கள், தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், பார்வையாளர்கள் முக்கியமாக திரையரங்க உரிமையாளர்கள் இப்படிப் பலரின் முகத்தில் புன்னகை பிறக்கச் செய்த இயக்குநர் இவர். கிருஷ்ணவேனி, கோபி கிருஷ்ணா, விஜயா போன்ற திரையரங்கங்கள் இவரின் படங்களிலாலே வாழ்ந்த கதைகளும் உண்டு.

தொலைக்காட்சியில் 'பாப்பா பாடும் பாட்டு, கேட்டு தலையை ஆட்டு' என்று ஷாமிலி பாட, அதை கேட்டு தலையாட்டி நானும் பாடிய காலகட்டங்கங்களும் இருக்கின்றது. இன்று கூட 'கனே கனே கனே கணேஷா தொப்ப கணேஷா', 'பாபா ஓர் கருணாலயம் படம் அவர் பாதங்கள் சரணாலயம்', 'பாளையத்து அம்மா நீ பாச விளக்கு' போன்ற பாடல்களை கேட்டால் அப்படியே ரீ-வைன்ட் எடுத்து குழந்தைப் பருவத்திற்கு திரும்புகிறேன். யானைக்கு பேன்ட்-சட்டை போட்டு கிரிக்கெட் பேட்டுடன் ஆட வைத்த ராம நாராயணன், என்றும் தமிழ்த் திரையுலகின் அம்புலி மாமா.

மிக்க நன்றி
தமிழ் தி ஹிந்து