Pages

சித்தரை நேரில் பார்த்த அனுபவம் உண்டா? | உஜிலாதேவி

சூலக்கல் மாரியம்மன்-தொட்டில் கட்டி பிரார்த்தனை செய்தால் குழந்தைப்பேறு!

அற்புதங்கள் பல நிகழ்த்தி, அரிய வரங்கள் தரும் அன்னையாகத் திகழ்கிறாள். சூலக்கல் மாரியம்மன்.
அது என்ன சூலக்கல்?
கொங்குநாடு 24 நாடுகளாகப் பிரிக்கப்பட்டிருந்த காலம். அப்போது காவடிக்கா நாடு என்ற பகுதி கண்ணப்பநாயனார் வம்சாவளியில் வந்தவர்களின் ஆளுகைக்கு உட்பட்டிருந்தது. இங்கு புரவிப்பாளையம் பகுதியில் உள்ள கிராமம்தான் "சூலக்கல்'
இங்கு கோயில் அமைந்ததற்குக் காரணம் என்ன?
அக்காலத்தில் பசுமையான மரங்களும் செடி கொடிகளும் நிறைந்த இக்கிராமத்திற்கு. சுற்றுப்புற கிராமங்களில் இருக்கும் கால்நடைகளை மேய்ச்சலுக்காக ஓட்டி வருவர்.
வேலாயுதம்பாளையம் எனும் கிராமத்தில் இருந்த ஒருவரது பசுக்களை மேய்ச்சலுக்கா வேலைக்காரச் சிறுவன் இப்பகுதிக்கு ஓட்டி வருவது வழக்கம்.

ஆயுர்வேத மருத்துவம்: கல்லை கரைக்கும் மூலிகைகள் (விரைவாக -மூன்றே நாளில் )-படங்களுடன்

வாழை‌த் த‌ண்டி‌ன் மக‌த்துவம்!

வாழை‌த் த‌ண்டி‌ன் சாறு பல நோ‌ய்களு‌க்கு மக‌த்தான மரு‌ந்தாக இரு‌ப்பது நா‌ம் பலரு‌க்கு‌ம் தெ‌ரியு‌ம். ஆனா‌ல் நம‌க்கு‌த் தெ‌ரியாத பல மக‌த்துவ‌‌ங்களை‌க் கொ‌ண்டிரு‌க்‌கிறது வாழை‌த் த‌ண்டு.
பொதுவாக நா‌ம் வாழைத் தண்டை பொரியல், கூட்டு, சாம்பாராகச் செய்து சாப்பிடுவது வழ‌க்க‌ம். ‌சிறு‌நீரக‌க் க‌ற்க‌ளை‌க் கறை‌க்க வாழை‌த் த‌ண்டு சாறெடு‌த்து அரு‌ந்துவா‌ர்க‌ள்.
வாழை‌த் த‌ண்டு நா‌ர்‌ச‌த்து ‌மி‌க்கது. வாழைத் தண்டு குடலில் சிக்கிய மணல் கற்களை விடுவிக்கும் ஆ‌ற்ற‌ல் கொ‌ண்டது.
ச‌ரியாக ‌சிறு‌நீ‌ர் வராதவ‌ர்க‌ள் வாழை‌த் த‌ண்டை சா‌ப்‌பி‌ட்டா‌ல் சிறுநீர் தாராளமாகப் பிரியும். மலச் சிக்கலைப் போக்கும். நரம்புச் சோர்வையும் நீக்கும்.
வாழைத் தண்டுச் சாற்றை இரண்டு அல்லது மூன்று அவுன்‌ஸ் வீதம் தினமும் கு‌டி‌த்து வந்தால், அடிக்கடி வரும் வறட்டு இருமல் நீங்கும். கோழைக் கட்டையும் இளகு‌ம்.
நல்ல பாம்பு கடிக்கு வாழைத் தண்டுச் சாற்றை ஒரு டம்ளர் வீதம் உள்ளுக்குள் கொடுத்தால் விஷம் தானாக இறங்கிவிடும்

முதுமையில் சுறுசுறுப்புக்கு உதவும் பீட்ரூட் ஜூஸ்: ஆய்வில் தகவல்


பீட்ரூட் ஜூஸ் பருகினால், முதுமையிலும் சுறுசுறுப்புடன் வாழ முடியும் என, சமீபத்திய ஆய்வு தெரிவிக்கிறது. மனிதர்களுக்குத் தேவையான ஆக்சிஜன் அளவை, நைட்ரேட் சத்து வெகுவாக குறைப்பதாக, ஏற்கனவே நடத்தப்பட்ட ஆய்வு முடிவுகளில் தெரிந்தது. இதை அடிப்படையாகக் கொண்டு, நைட்ரேட் சத்து நிறைந்த பீட்ரூட் ஜூசை முதியவர்களுக்குக் கொடுத்து, பிரிட்டன் எக்ஸ்டர் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் ஆய்வு நடத்தினர். இதில், வாரத்திற்கு ஆறு நாட்கள் பீட்ரூட் ஜூஸ் அருந்தியவர்கள் மிகவும் சுறுசுறுப்பாக இருப்பது தெரிந்தது.

அன்னாசி பழத்தின் மருத்துவ குணங்கள்


அன்னாசி பழத்தில் வைட்டமின் B உயிர்சத்து அதிக அளவில் உள்ளது. அது உடலில் ரத்தத்தை விருத்தி செய்வதாகவும், உடலுக்கு பலத்தை தருவதாகவும் இருப்பதோடு பல வியாதிகளை குணப்படுத்தும் அரிய மருந்தாகவும் இருக்கிறதது. தேகத்தில் போதுமான ரத்தமில்லாமல் இருப்பவர்களுக்கு அன்னாசிப்பழம் ஒரு சிறந்த டானிக்.
நன்றாக பழுத்த அன்னாசி பழத்தை சிறு சிறு துண்டுகளாக செய்து வெய்யிலில் தூசிப்படாமல் உலர்த்தி வற்றல்களாக செய்து வைத்து கொண்டு தினமும் படுக்க செல்வதற்கு 1/2 மணி நேரத்திற்கு முன்னதாக ஒரு டம்ளர் பாலில் 5 அன்னாசி வற்றல்களை ஊற வைத்து, பின் படுக்கச் செல்லும் போது ஊறிய வற்றல்களை 48 நாட்கள் சாப்பிட்டு வரவேண்டும்.
இதனால் பித்தம் சம்மந்தமான அனைத்து கோளாறுகளும் நீங்கும். அன்னாசி பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வர பெண்களுக்கு ஏற்படும் வெள்ளை நோய் குணமாகும். அன்னாசி பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வர அனைத்து விதமான உடல் உபாதைகளும் தீரும். இதை தொடர்ந்து ஜூஸ்சாகவும் குடித்து வர முக அழகு பொலிவு பெரும்

திராட்சைப் பழத்தின் மருத்துவ குணம்


திராட்சை என்றதும் நம் நினைவில் வருவது சிகப்பு, கருப்பு, பச்சை, பன்னீர் திராட்சை தான். ஆனால் திராட்சையில் பல வகைகள் உள்ளன. அதில் நிறைய சத்துக்கள் உள்ளது. திராட்சை சாறிலிருந்து ஒயின் தயாரிக்கபடுகிறது.
திராட்சைச் சாறுடன் சர்க்கரை சேர்த்து காலையில் வெறும் வயிற்றில் மட்டும் தொடர்ந்து 48 நாட்கள் சாப்பிட்டு வர மாதவிடாய்க் கோளாறுகள் சரியாகும் வயிற்றுப்புண், வாய்ப்புண் ஆற திராட்சை சிறந்த மருந்தாகும். குளிர்ச்சியான தேகமுள்ளவர்கள் அதிக அளவில் சப்பிட கூடாது.

ஸ்ரீவில்லிபுத்தூர்-ஆண்டாள் திருத்தேர்

அரை ஸ்பூன் சர்க்கரை போதும் டென்ஷன் பஞ்சாய் பறக்கும்

தலையை பிய்த்து கொள்ள வைக்கும் டென்ஷனான நேரங்களில் கொஞ்சம் சர்க்கரை சாப்பிட்டால் டென்ஷன் பஞ்சாய் பறந்து விடும் என்கிறார்கள் அமெரிக்காவின் ஒஹியோ மாநில ஆராய்ச்சியாளர்கள்.மன உளைச்சல் அதிகம் ஏற்படும் போது உடல், மனம் மட்டுமின்றி மூளையும் களைப்படைகிறது. இதனால் வேறு எந்த வேலையைப் பற்றியும் சிந்திக்க முடியாத நிலை ஏற்படுகிறது. இதிலிருந்து உடனடியாக வெளிவர உடனடி மருந்து சர்க்கரை தானாம். இந்த ஆராய்ச்சிக்காக அதிகப்படியான டென்ஷன் பாதிப்புக்குள்ளான சுமார் 2000 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களின் மூளை செயல்பாடுகளை கண்காணித்தனர்.

வீடு வாங்க எளிய பரிகாரம் | உஜிலாதேவி

உயிர் பறிக்கும் வீடுகள் | உஜிலாதேவி

குருவாயூரப்பன் காட்டிய கருணை!

கோயிலில் கடவுளைத் தேடுவதல்ல ஆன்மிகம். நமக்குள்ளேயே ஆண்டவன் இருப்பதை புரிந்து கொள்வதே ஆன்மிகம்.எதற்கு இறைவனின் சந்நிதானத்திற்குப் போகிறோம்?
நிறையபேர் அங்கே போகிறபோது அந்த தெய்வீக அதிர்வுகள் நமக்கு ஒரு பரவசத்தையும், நம்பிக்கையும் கொடுக்கும். அதற்குத்தான் கூட்டுப் பிரார்த்தனை பற்றி சிறப்பாக பேசுகிறோம்.
பக்தியின் முதல்படி நெற்றியில் குறி இட்டுக்கொள்வது, இரண்டாவது படி கோயிலுக்குப் போவது,மூன்றாவது தன்னையறிவது. நான்காவது இறைமையை அறிவது. இதில் ஒரு முக்கியமான விஷயம். படிப்படியாக ஏறினால்தான் நான்காவது படியை அடைய முடியும். இந்த நான்காம்படிதான் இறுதி நிலை. சிலர் முதல் படியிலும், சிலர் இரண்டாவது படியிலும் நின்று விடுவார்கள். தன்னை அறிவதே உண்மையான முயற்சி. தான் யார், தான் செய்வது என்ன என்று ஆராய வேண்டியது அவசியம். நான்காவது நிலையான கடவுளை அறிந்து கொண்டால் கோயிலுக்கே போகவேண்டாம். இதற்கு சிறந்த உதாரண புருஷர் ரமணமகரிஷி!

மருந்தாகும் திராட்சை

எனது புகைப்படம்
நிதர்சனன்
ஈழ மண்ணில் இருந்து
தமிழாரன் ஊடாக விறு விறுப்பான உலகின் பரபரப்பான செய்திகள்

வாழ்வில் ஒரு முறையேனும் கண்டிப்பாக செல்ல வேண்டிய ஸ்தலம் - நவபிருந்தாவனம்

2 வேளை பல் தேய்ச்சா மாரடைப்பு வாய்ப்பு கம்மி


காலை, மாலை இரு வேளையும் பல் தேய்த்தால் மாரடைப்பு வரும் வாய்ப்பு குறையும் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.
இதயத்தில் ரத்தம் உறையும் நோய் ‘த்ராம்போசிஸ்’ எனப்படுகிறது. இதுபற்றி ஆய்வு செய்யும் நிறுவனம் லண்டனில் உள்ளது. மாரடைப்பு, ஸ்டிரோக் வருவதற்கான வாய்ப்புகள் குறித்து இந்நிறுவனம் ஒரு ஆராய்ச்சி நடத்தியது. அதில் தெரியவந்த தகவல் பற்றி இதய சிகிச்சை நிபுணர் விஜய் காக்கர் கூறியதாவது:
உடலில் தேவையற்ற கொழுப்பு,

பதிவர்களின் சங்கமம் மற்றும் புத்தக வெளியீடுகள்!

"பம்ப்ளிமாஸ்'

காலையில் எழும்போது தேநீருக்கு பதில் தேனும், சுடுநீரும், காலை உணவாக பாலில் ஊறிய அவல், காரட் மற்றும் துளசி, மதிய உணவாக இஞ்சி சூப்புடன், ஆவியில் வெந்த பச்சை காய்கறிகளுடன் சுட்ட சப்பாத்தி மற்றும் பருப்புக்கூட்டு, மாலையில் பாகற்காய் சூப் அல்லது எலுமிச்சை சர்பத், இரவில் முளைவிட்ட தானியங்களுடன் ஆப்பிள்,

தோல் நோய்கள் ஓர் அறிமுகம்


மனித உடல் உறுப்புகளிலேயே மிகப் பெரிய உறுப்பு தோல் தான். கிட்டத்தட்ட இரண்டு சதுர மீட்டர் பரப்பளவு கொண்டது. உடலின் மொத்த எடையில் 16 முதல் 20 சதவீதம் தோலின் எடை இருக்கும். கண், காது, மூக்கு, இதயம், சிறுநீரகம், மூளை போன்றவற்றைப் போன்றே, தோலும் மிக முக்கியமான உறுப்பாகும்.
தோல் என்பது, ஒரு மனிதனுடைய தலை முதல் கால் வரை இருக்கிறது. அதாவது, முழுவதுமாகத் தோலால் மூடப்பட்ட உரவம்தான் மனித உடல். ஒரு மனிதனைப் பார்க்கும் போது, கண்ணுக்கு முதலில் தெரிவது அந்த நபரின் தோல்தான். அந்த வகையில், ஒரு மனிதனைப் பொறுத்தவரை தோல் ஒரு முக்கியமான உறுப்பு என்பதில் சந்தேகம் இல்லை.

பாக்கை மென்று பெறும் வாய் புற்றுநோய்

அன்பின் மறு உருவம் அன்னை தெரசா - வானம் வசப்படுமே வரலாற்று மாந்தர்-8

சுண்டைக்காய்...

காய்களும் கனிகளும் இயற்கையின் அருட் கொடைகள்.  மனிதனின் அன்றாட தேவையில் இதன் பயன்பாடு மிக அதிகம்.  மனித உடலுக்குத் தேவையான சத்துக்கள் அனைத்தும் காய்களில் நிறைந்துள்ளன.  காய்களும் கனிகளும் மனித உடலுக்கு எளிதில் சேரக்கூடியவை.  நம் முன்னோர்கள் காய்கனிகளுக்கு முதலிடம் கொடுத்தனர்.
நாம் பலவகையான காய்களை அன்றாடம் உணவில் சேர்க்கிறோம்.  இக்காய்கள் சுவைக்கும் பசிக்கும் மட்டும்தான் என பலர் நினைக்கின்றனர்.

இயேசு பிறந்த பூமி - அரிதான தகவல்கள்

இஸ்ரேல் - முத்திரை பதித்தவர்களாக பழைய ஏற்பாட்டில் சொல்லப்பட்டிருக்கும் ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு முதலிய முதுபெரும் தந்தையர்களும் மோயீசன், ஆரோன் போன்ற பேரரசர்களும், இசையாஸ், எமிரேயாஸ் போன்ற இறைவாக்கினர்களும், கிறிஸ்துவர்கள் தெய்வமாக வழிபடும் இயேசு கிறிஸ்துவும், பிறந்து, வாழ்ந்து, மறைந்த அன்றைய பகுதிகள் தான் 8018 சதுர மைல்கள் பரப்பளவு கொண்ட இன்றைய இஸ்ரேல் நாடு.

இளமை தரும் ஆரஞ்சு பழச்சாறு


என்றும் இளமையுடன் வாழ எவருக்குத்தான் ஆசை இருக்காது. தற்போது 20 வயது இளைஞன் கூட நாற்பது வயது அடைந்தவன் போல் காட்சி அளிக்கிறார்கள். தலைமுடி நரைக்கிறது. தோலில் சுருக்கம் ஏற்படுகிறது. கண்கள் குழிவிழுந்து காணப்படுகின்றன. நல்ல திடகாத்திரமான இளைஞர்களை இன்று காணமுடியவில்லை. இதற்குக் காரணம் இராசயனம் கலந்த உணவுகள், அரைவேக்காட்டு உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள், குளிரூட்டப்பட்ட உணவுகள், சத்தற்ற உணவுகள், உடலுக்குத்தேவையான உடற்பயிற்சி இல்லாமை போன்றவையே.
இன்றைய மாணவ சமுதாயத்திற்கு கல்விச் சாலைகள் சிறைச்சாலைகளாக உள்ளன. பாடத்திட்டம் அனைத்தும் மூளை சம்பந்தப்பட்டதாக இருக்கிறது. உடலுக்குத் தேவையான உடற்பயிற்சி, விளையாட்டு என்பதே இல்லை. மேலும் வீட்டிற்கு வரும் குழந்தைகளை கட்டாயப்படுத்தி சிறப்பு வகுப்புக்கு அனுப்புகிறார்கள். இதுபோல் விடுமுறை நாட்கள் பெரும்பாலும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலேயே கழிந்துவிடுகின்றன. அடுத்த தெருவிற்கு செல்லவேண்டும் என்றாலும் வாகனத்தில்தான் செல்கிறோம். நடை என்பது பலருக்கு நோயின் தாக்கத்திற்குப் பிறகுதான் தெரியவரும்.

விஷத்தை வெளியேற்றும் குணம் படைத்த வசம்பு

இயற்கையில் கிடைக்கும் ஒவ்வொரு மூலிகையிலும் ஒவ்வொரு மருத்துவ குணம் உள்ளது. அதை முறையாக பயன்படுத்தினால் நல்ல பலன் கிடைக்கும். அதற்கு அதில் உள்ள மருத்துவ குணங்களை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்.
வேப்பிலை, வில்வம், அத்தி, துளசி, குப்பைமேனி, கண்டங்கத்தரி, கீழாநெல்லி, வசம்பு என சொல்லிக் கொண்டே போகலாம். இதில் பிள்ளை வளர்ப்பான் என்று அழைக்க கூடிய வசம்பின் மருத்துவ குணத்தைப் பார்க்கலாம்.
அகோரஸ் காலமஸ் (Acorus Calamus) என்ற அறிவியல் பெயர் கொண்ட இது ஆங்கிலத்தில் ஸ்வீட் ஃப்ளாக் (Sweet Flag) என்று அழைக்கப்படுகிறது. பாட்டி வைத்தியம் என்று நம் முதியோர்கள் அடிக்கடி வீட்டு வைத்தியத்தில் சேர்ப்பது இந்த வசம்பைத் தான். கிராமத்தில் உள்ளவர்கள் இன்றளவிலும் சரி காய்ந்த வசம்பை சூடுபடுத்தி பாலில் கலந்து குழந்தைகளுக்கு கொடுப்பார்கள். இதனால் குழந்தைகளுக்கு பசியின்மையோ, சின்ன சின்ன தொற்றுநோய்களோ வராமல் தடுக்கப்படுகிறது. இதனாலேயே இது பிள்ளை வளர்ப்பான் என்று கூறப்படுகிறது.
* சுடு தண்ணீர், கருவேப்பிலை, மஞ்சள் தூள் ஆகியவற்றுடன் வசம்பை கலந்து கிருமிநாசினியாக பயன்படுத்தலாம்.
* வசம்பை தூள் செய்து இரண்டு டீஸ்பூன் அளவு எடுத்து தேனில் கலந்து சாப்பிட்டால் எல்லா வகையான தொற்று நோய்களும் நீங்கி விடும். இது எல்லா நாட்டு மருந்து கடைகளிலும் கிடைக்கும்.
* இதில் முக்கிய விஷயமாக சொல்ல வேண்டுமென்றால் வசம்பை விஷம் அருந்தியவர்களுக்கு உடனேயே இரண்டுய, மூன்று டீஸ்பூன் கொடுத்தால் விஷம் வெளியே வந்து விடும்.
* கால்நடைகளுக்கு தொற்று நோய்கள் பரவாமல் இருக்கவும் பயன்படுகிறது.
* பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவருக்கும் பசியைக் கொடுக்கவும், சோம்பலை நீக்கவும் வசம்பு பயன்படுகிறது.

ஹோட்டல்களில் சாப்பிடுவோர் கவனிக்க..!!!

பெற்றோர் கவனத்திற்கு...

பருக்கள் மறைய

இயற்கை அழகே அழகு.  சிலர் முகப் பொலிவு பெற வேண்டும் என்று ரசாயனம் கலந்த அழகு சாதன பொருட்களை  பயன் படுத்துவதால் இயற்கையான அழகு மாறி பல இன்னல்களை சந்திக்க நேரிடுகிறது. இக்கால கட்டத்தில் இயற்கை மூலிகை களால் ஆன அழகு சாதனப் பொருட்களைப் பயன் படுத்தி முகப் பொலிவினைப் பெறலாம்.

வழுக்கை தலை பிரச்னைக்கு ஸ்டெம்செல் சிகிச்சை : விஞ்ஞானிகள் அறிவிப்பு

வழுக்கை தலை பிரச்னையை ஸ்டெம்செல் சிகிச்சை மூலம் சரி செய்யலாம் என, ஜெர்மன் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். உலகின் 80 சதவீத ஆண்கள் வழுக்கை தலை பிரச்னையால் பாதிக்கப்படுவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. வழுக்கை தலை பிரச்னைக்கு, சந்தையில் நாள்தோறும் புதிய மருந்துகள் அறிமுகமாகி வருகின்றன.

குறட்டையை தவிர்க்க சில வழிமுறைகள்

மனிதர்களின் வாழ்நாளில் மூன்றில் ஒரு பங்கு நேரத்தை தூங்குவதில் செலவிடுகின்றனர், சராசரியாக ஒரு மனிதர் 60 ஆண்டுகள் இவ்வுலகில் வாழ்கிறார் என வைத்துக்கொண்டால் 20 வருடங்கள் உறக்கத்தில் கழிகிறது.

குறட்டை என்பது நாம் தூங்கும் போது, நம் சுவாசக்குழாயில் உள்ள தசைகள் சற்று ஓய்வுக்கு உள்ளாகும் வகையில் தளர்ந்து விடும். மூச்சுக் குழாயில் தற்காலிக அடைப்பு ஏற்படுகிறது. மூச்சு வெளியேறும் போது இந்த அடைப்பை மீறி காற்று வெளியேறுவதால், விதவிதமான ஒலிகளை எழுப்புகிறது. இது தான் குறட்டைச் சத்தமாக நமக்கு கேட்கிறது. உடல் பருமன், அலர்ஜியால் சுவாச குழாயில் ஏற்படும் சளி இவற்றால் குறட்டை வரும் வாய்ப்பு உள்ளது தூங்குவதில் பல ரகம் உண்டு. சிலர் அடித்து போட்டது போல் தூங்குவர். சிலர் மலர்களை போல் உறங்குவர். சிலர் கும்பகர்ணன் போல் தூங்குவர்.

குறட்டை விட்டு தூங்குவோர் இதில் ஒரு ரகம். பொதுவாக குறட்டை விடுவோர் பார்ப்பதற்கு நிம்மதியாக உலகை மறந்து உறங்குவது போல் காணப்படுவார்கள். ஆனால் உண்மையில் குறட்டை அவர்களை ஒரு வழி செய்துவிடும். மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படும். அருகில் படுத்திருப்பவர்களுக்கு தொல்லை தரும். இதனால் வெளிநாடுகளில் பல தம்பதியர்கள் விவாகரத்து வரை கூட சென்ற சம்பவங்களும் நடந்ததுண்டு. இந்த குறட்டையை தவிர்ப்பது எவ்வாறு என பார்ப்போம்.

1. குறட்டையை தவிர்ப்பதற்கு என ஒரு கருவி வந்துள்ளது. இது சி.பி.ஏ.பி. என அழைக்கப்படுகிறது. இந்த கருவி தொடர்ச்சியாக காற்றினை சுவாசத்தில் பங்கு பெற செய்கிறது. காற்று எளிதாகவும், தொடர்ந்தும் உட்செல்வதற்கு ஏற்ற வகையில் செயல்படுகிறது. அதனால் தூக்கம் தடைபடுவதில்லை. எனினும் இத்தகைய கருவிகள் சற்று விலை அதிகம் கொண்டவை.


2. சிலர் தூங்கும் போது வாய் திறந்த நிலையில் இருக்கும். இது ஏனெனில் அவர்கள் காற்றினை வாய் வழியாகவும் சுவாசத்திற்கு எடுத்து கொள்வதால் நடைபெறும் ஒன்று. இதற்கென கவசம் போன்ற கருவி ஒன்று உள்ளது. இதனை பொருத்தி கொள்வதால் தூங்கும் போதும் வாயானது திறந்த நிலையில் இருக்கும். இதனால் சுவாசம் நன்கு நடைபெறும்.


3. உங்களது கழுத்தின் தசைகள் பலப்படுத்தப்பட்டு இருந்தால் பெரும்பாலும் மூச்சு விடுவதில் உள்ள சிரமம் குறையும்.


காற்று மூச்சு குழல் வழியே சிரமம் இன்றி பயணிக்கும். எனவே தூங்கும்போது கைகளை முகத்திற்கு எதிராக வைத்து கொள்ளவும். பின்னர் தலையினை கையின் உதவியால் எதிர்புறம் திருப்பவும். இந்த முறையை தலையின் இருபுறமும் செய்யவும். சிறிது நேர இடைவெளி விட்டு இதனை தொடரவும். இதேபோல் தலையை மேல் மற்றும் கீழ் திசைகளில் திருப்பவும். இதற்கும் சற்று இடைவெளி விடுதல் அவசியம்.

இவ்வாறு தூங்கும் முன் படுக்கையறையில் சிறிது நேரம் தொடர்ந்து செய்து வரவும்.


4. நீங்கள் அதிக உடல் எடை கொண்டவர் என்றால் அதற்கும் குறட்டைக்கும் தொடர்பு உள்ளது. எனவே உங்கள் உடல் எடையை சிறிது குறைத்தால் அது குறட்டையை தவிர்ப்பதற்கு வழிவகுக்கும்.


5. சிலர் மூக்கின் வழியாக குறட்டை விடுவதும் உண்டு. இவர்கள் தூங்கும்போது வாய் வழியாக காற்றை சுவாசிக்க கற்றுகொண்டால் குறட்டையானது தவிர்க்கப்படும். அதற்கு உதவியாக மூக்கை கெட்டியாக பிடித்து கொள்ளும் கிளிப் போன்றவற்றை உபயோகிப்பதால் எளிதாக தூங்க இயலும்.


6. இந்த குறட்டையினை தவிர்ப்பதற்கு உகந்ததாக தற்போது பல சுவாச தைலங்கள் (வேப்பரப்) சந்தையில் வந்துள்ளன. இவற்றை பாதிக்கப்பட்டோர் தங்களது மார்பு பகுதியில் நன்றாக தடவி கொள்ளவும். இவ்வாறு செய்வதால் சுவாசம் மேற்கொள்ளும்போது காற்றானது எளிதில் மூக்கினுள் சென்று வரும். மேலும் இது மூக்கில் தடையேற்படுத்தும் கோழை போன்றவற்றை இளகச்செய்து விடும். இதனால் சுவாசம் அமைதியாகவும், எளிதாகவும் நடைபெறும்.


7. குறட்டை விடுவதில் மூக்கின் உட்புறம் அமைந்துள்ள எலும்பு பகுதியும், சதை பகுதியும் ஒழுங்காக அது அமைய வேண்டிய இடத்தில் இல்லாமல் சிலருக்கு இடம் மாறி அமைந்திருக்கும். இதனை சிறிய அறுவை சிகிச்சையின் உதவியால் எளிதில் சரி செய்து விடலாம். குறட்டையையும் தவிர்த்து விடலாம். இவ்வாறு குறட்டையை தடுப்பதற்கு பல வழிகள் உள்ள போதிலும் அவரவர்களுக்கு எது சரியாக அமையும் என்பதை மருத்துவர்களின் தகுந்த ஆலோசனையின் பேரில் கடைபிடித்து வருவது மிக்க நன்மை பயக்கும்.

மருந்துபோல் குணப்படுத்தும் உருளைக்கிழங்கு!

சாப்பிட்டதும் உடனடியாக உடலுக்குச் சக்தி தரக்கூடிய முக்கியமான கிழங்கு காய்கறி உணவுப்பொருள் உருளைக்கிழங்கு ஆகும். அதே நேரத்தில் எளிதில் ஜீரணிக்கக்கூடிய தன்மையையும் உருளைக்கிழங்கு பெற்றுள்ளது.
மேலும் பல்வேறு வழிகளில் சமைத்து உண்ணத்தக்க வகையில் அமைந்துள்ளது இந்தக் கிழங்கு மட்டுமே! இதை அவித்தோ, சுட்டோ, வேகவைத்தோ, வறுத்தோ பயன்படுத்தினாலும் கிழங்கின் மருத்துவக் குணமும் மாறாமல் இருப்பது இக்கிழங்கின் சிறப்பம்சமாகும்.
100 கிராம் உருளைக் கிழங்கில் கிடைக்கும் கலோரி 97 ஆகும். இதில் ஈரப்பதம் 75%ம், புரதம் 2%ம், கொழுப்பு 0.1%ம், தாது உப்புகள் 0.61%ம், நார்ச்சத்து 0.41%ம் மீதி கார்போஹைடிரேட்டும் ஆகும். இவை தவிர வைட்டமின் சி 17 மில்லிகிராமமும்,

பித்தக் கற்கள் ஏன், யாருக்கு ஏற்படுகின்றன தெரியுமா?


பித்தக் கற்களின் பெரும்பகுதி பல கற்துகள்களால் ஆனவைதான். கொலஸ்ட்ரால், கால்ஷியம், கார்பனேட், பிலிருபினேட் போன்ற கலவையின் கலவையாகத்தான் இருக்கின்றன. 

பித்தக் கற்கள் ஏன், யாருக்கு ஏற்படுகின்றன தெரியுமா?

உடல் பருமனாக இருப்பவர்களுக்கு...
பரம்பரை காரணமாக..
கி‌ட்‌னி, க‌ல்‌லீர‌ல் பா‌தி‌க்க‌ப்ப‌ட்டவ‌ர்களு‌க்கு... 
கருத்தடை மாத்திரைகள் அதிகமாகச் சாப்பிடுபவர்களுக்கு..
ரத்தசோகை நோய் இருப்பவர்களுக்கு..
செக்ஸ் ஹார்மோன் மாற்றங்களால்..

ஏல‌க்கா‌யி‌ன் மரு‌த்துவ குண‌‌ங்க‌ள்


ஏல‌க்கா‌ய் எ‌ன்பது இ‌ஞ்‌சி செடி வகை‌யை‌ச் சே‌ர்‌ந்தது. ப‌ச்சை ‌நிற‌க் கா‌ய்களை‌க் கொ‌ண்டது. ஏல‌க்கா‌ய் ப‌ச்சை ‌நிற‌த்‌திலு‌ம், அட‌‌ர் பழு‌ப்பு ‌நிற‌த்‌திலு‌ம் இரு‌க்கு‌ம். 

ஏல‌க்கா‌ய் நறுமண‌ப் பொருளாக ம‌ட்டு‌ம் இ‌ல்லாம‌ல், பல மரு‌த்துவ‌க் குண‌ங்களை‌க் கொ‌ண்டதாகு‌ம். 

மன இறு‌க்க‌த்தை‌க் குறை‌த்து உட‌ல் பு‌த்துண‌ர்‌ச்‌சி பெற ஏல‌க்கா‌ய் பய‌ன்படு‌கிறது. 

உங்கள் மூளையை ஆரோக்கியமாக வைத்திருக்க செய்ய வேண்டியவை

ஸ்ரீவில்லிபுத்தூர் - வரலாறு

2011 - ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள்

Career Related Yagnas
12 ராசிகளுக்கும் உரிய ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் ( 01 .01 .2011 to 31 -12 -2011 ) பிரசுரிக்க இயலுமா ? பரிகாரங்கள் , இறை வழிபாடு செய்வதன் மூலம் பலன்களை அதிகமாக்கலாமே என்று எமக்கு மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளும் வாசகர்கள் கேட்கிறார்கள்.

நமது இணைய தளத்தில் - குருப் பெயர்ச்சி, சனி பெயர்ச்சி, ராகு கேது பெயர்ச்சிக்குரிய பலன்கள் கண்டிப்பாக பிரசுரிக்கப்படும். புத்தாண்டு பலன்கள் - தமிழ் புத்தாண்டை கருத்தில் கொண்டு, சித்திரை முதல் பங்குனி வரை பிரசுரிக்கப்படும்.

எனவே வாசகர்கள் - நாம் ஏற்கனவே பிரசுரித்த குருப் பெயர்ச்சி பலன்களையும், மேலும் மிகவும் உபயோகமுள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள கட்டுரைகளையும் - மீண்டும் ஒரு முறை படித்து அதற்கு தகுந்த படி இறை வழிபாட்டை மேற்கொள்ளுதல் உங்களுக்கு நன்மை பயக்கும்.

முக்கியமான கட்டுரைகளின் இணைப்பு

புத்திரதோஷங்கள் எப்படி எதனால் ஏற்படுகின்றன? எப்படி மீள்வது?

http://www.babble.com/CS/blogs/strollerderby/babynames.jpg

12 ராசிகளுக்கும், 27 நட்சத்திரங்களுக்கும் உரிய பரிகார ஸ்தலங்கள்

Thirumanancheri Temple - Pariharam for Early Marriage

திருமலை-திருப்பதியில் சேவை செய்ய விருப்பமா?

tirupati,lord venkateswara,basara saraswati,kondagattu,hanuman,
நீங்கள் கடக ராசியில் பிறந்தவராக இருந்தாலோ, அல்லது உங்களுக்கு சந்திர தசை நடந்து கொண்டிருந்தாலோ, நீங்கள் ரோஹிணி, ஹஸ்தம், திருவோணம் - நட்சத்திரத்தில் பிறந்தவராக இருந்தாலோ  - நீங்கள் ஒரு முறை திருப்பதி சென்று Volunteer சேவை செய்து வந்தால் உங்களுக்கு - மிக அற்புதமான பலன்கள் கிடைக்கும். சேவை செய்யும் போது - இடையில் பௌர்ணமி தினம் வந்தால் , இன்னும் விசேஷம்.

" சிக்கன்-65 " - கேன்சர் ஆபத்து!

அண்ணாச்சி ஹோட்டல் லெ " சிக்கன்-65 " சாப்பிடுற ஆளா நீங்க? - ஒரு நிமிஷம் கவனிங்க...

சமீபத்திலே நம்ம நண்பர் ஒருத்தர் இத்தாலி க்கு - வேலை சம்பந்தமா ஒரு 6 மாசம் போயிட்டு வந்தார். சாப்பாடு எல்லாம் எப்படி னு கேட்டேன்? பாஸு, வாயிலே வைக்க முடியாது. எத்தனை நாளு தான் பீட்சா சாப்பிடுறது..   நொந்துட்டேன். நல்ல வேளை.. பக்கத்துலே ஒரு பாகிஸ்தானி ரெஸ்டாரன்ட் இருந்தது.. அவர் கிட்டே சொல்லி நம்ம ஊரு சாப்பாடு , சிக்கன்

பொங்கல் உழவர்களின் திருநாள்

இன்னொரு பாடலில் 'போர் வேந்தர் நடத்து பெருஞ் செங்கோலை நடத்துங்கோல் ஏரடிக்குஞ் சிறு கோலே'என்று மன்னர்களின் செருக்கிற்கு ஒரு இடி கொடுக்கிறார்.

'ஞான மறையவர் வேள்வி நலம் பெறுவதெவராலே...' என்று கேள்வி எழுப்பும் கம்பர் உழும் எருதின் சிறப்பாலே என்று மேலும் மறையோதும் ஞானியருக்கும் ஒரு அடி கொடுக்கிறார்.உழும் எருதின் சிறப்பை வர்ணிக்கும் கம்பர் மற்றொரு பாடலில் "கண்ணுதலோன் தனது திருக்கண்டத்திற் படிந்த கறை விண்ணவரையமுதூட்டி விளங்குகின்ற கறையென்பர்", அதாவது சிவபெருமான் கண்டத்தில் உள்ள விஷத்தை "கறை" என்று எள்ளும் புலவர், அது வானுலகத்தோருக்கு அமுதூட்டி விளங்கும் கறை என்று கூறுவார்கள் என்று கூறி, பிறகு 'மண்ணவரை அமுதூட்டி வானுலகங்கங் காப்பதுவும், எண்ணருஞ்சீர்ப் பெருக்காளர் எருது சுவலிடுங்கறையே' என்று முடிக்கிறார்.

மிள‌கி‌ன் மரு‌த்துவ‌ப் பய‌ன்பாடு எ‌ன்ன?மிளகு ப‌ல்வேறு மரு‌த்துவ‌ குண‌ங்களை‌க் கொ‌ண்டது. அத‌ன் மரு‌த்துவ‌ப் பய‌ன்பாடுக‌ள் எ‌ன்ன எ‌ன்பது ப‌ற்‌றி பா‌ர்‌க்கலா‌ம். ‌மிளகு, வெ‌ல்ல‌ம், பசுநெ‌‌ய் ஆ‌கிய மூ‌ன்றையு‌ம் சே‌ர்‌த்து லே‌‌கியமாக ‌கிள‌றி நெ‌ல்‌லி‌க்கா‌ய் அளவு சா‌ப்‌பி‌ட்டுவர தொ‌ண்டை‌ப் பு‌ண் குணமாகு‌ம்
.
‌சி‌றிது ‌சீரக‌ம், 5 ‌மிளகு, ‌கொ‌த்தும‌ல்‌லி ‌சி‌றிது, க‌றிவே‌ப்‌பிலை ஆ‌கியவ‌ற்றை அரை‌த்து ‌சி‌றிய உருணடைகளா‌க்‌கி உல‌ர்‌த்‌தி‌க் கொ‌ள்ளவு‌ம்.

இறைச்சிக்கறியில் ஒளிந்திருக்கும் ஆபத்து

mutton_leg

பிராணிகளிலிருந்து தருவிக்கப்பட்ட உணவுகளில் உயர்தர புரதங்களும் இன்னும் சில சத்துக்களும் இருந்தாலும் கூட அவை சில சமயங்களில் மரணத்திற்கு இட்டுச் சல்லும் அளவுக்கு அபாயகரமானவையும் கூட.

சிவப்பு இறைச்சி புற்றுநோய்க்கு வித்திடும் என்பதற்கு நிறைய ஆதாரங்கள் இருக்கின்றன.  சிவப்பு இறைச்சி, பெருங்குடல் ஆசன புற்றுநோய்க்கு இட்டுச் செல்லும் என்பதற்கு தக்க ஆதாரங்கள் உள்ளன. ஆகையால் சிவப்பு இறைச்சியைத் தவிர்க்குமாறும் பதனிடப்பட்ட இறைச்சிகளை முற்றிலும் தவிர்க்குமாறும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

முருங்கை மரம்


மரங்கள், செடிகள், கொடிகள், புல், பூண்டு என இயற்கை படைத்த தாவர இனங்கள் அனைத்தும் மனித இனத்திற்கு ஏதோ ஒரு வகையில் பயன்படுகிறது.  பிராண வாயுவை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளும் இவைகளே.  மழையை கொடுக்கும் வருண பகவானும் இவைகளே.
இவற்றில் மரங்கள் அனைத்தும் மக்களுக்கு பயன் தருபவை.  இம் மரங்கள்தான் மக்களின் உயிர்நாடிகள்.  இந்த மரங்களுக்கு உள்ள மருத்துவத் தன்மைகள் பற்றி ஒவ்வொரு இதழிலும் அறிந்து வருகிறோம்.  இந்த இதழில் அனைத்து வீடுகளிலும் வளர்க்கப்படும் முருங்கை மரம் பற்றி தெரிந்து கொள்வோம்.
முருங்கையை கற்பகத் தரு என்றே சித்தர்கள் அழைக்கின்றனர்.  முருங்கையின் பயனை நம் முன்னோர்கள் ஆண்டாண்டு காலமாக அனுபவித்து வந்துள்ளனர்.  வீட்டிற்கு ஒரு முருங்கை வளர்த்து வந்தால் குடும்பத்தில் அனைவரும் ஆரோக்கியமாக வாழ்வார்கள்.
பழங்காலத்தில் அரசர்கள் வீரர்களுக்கு முருங்கை கீரையை உணவாகக் கொடுத்து வந்துள்ளனர்.  அதனால் அவர்கள் பலமுடன் போர் புரிந்தனர் என வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
பொதுவாக முருங்கை அதிக வலுவில்லாத மரவகையாகும்.  எளிதில் உடையும் தன்மை கொண்டது.  இதனால் மரத்தில் யாரும் ஏறி கீழே விழுந்து விடக்கூடாது என்பதற்காகவே, முருங்கை மரத்தில் பேய் உள்ளது என்று முன்னோர்கள் கூறுவார்கள்.
இது இந்தியா முழுமைக்கும் எல்லா இடங்களிலும் வளரும் தன்மை கொண்டவை.
முருங்கையின் அனைத்து பாகங்களுமே அதிக மருத்துவக் குணம் கொண்டது.
முருங்கை இலை
செரிமந்தம் வெப்பந் தெறிகுந் தலைநோய்
வெறிமூர்ச்சை கண்ணோய் விலகும்-மறமே
நெருங்கையிலை யொத்தவிழி நேரிழையே-நல்ல
முருங்கை யிலையை மொழி
- அகத்தியர் குணபாடம்
பொருள் -
முருங்கை இலையால் மந்தம், உட்சூடு, தலைநோய், வெறிநோய், மூர்ச்சை, கண்ணோய் ஆகியவை நீங்கும்.
முருங்கைக் கீரையை சமைத்து உண்டுவந்தால் உடல் வலுப்பெறும்.  இரத்தம் சுத்தமடையும்.  இதில் அதிகளவு இரும்புச்சத்து நிறைந்துள்ளதால் இரத்த சோகை நீங்கும்.  மெலிந்த உடல் உள்ளவர்கள் வாரம் இருமுறை முருங்கைக் கீரை உண்டு வந்தால் உடல் தேறும்.
வயிற்றுப்புண்ணை ஆற்றும்.  அஜீரணக் கோளாறுகளை நீக்கி மலச்சிக்கலைப் போக்கும்.
இரத்தத்தில் கலந்துள்ள தேவையற்ற நீர்களை பிரித்து வெளியேற்றும்.  நீர்ச்சுருக்கு, நீர்க்கடுப்பு போன்ற வற்றைப் போக்கும்.
உடல்சூட்டைத் தணிக்கும் இதனால் கண்சூடு குறைந்து, பார்வை நரம்புகள் வலுப் பெறும்.  பித்தத்தைக் குறைக்கும்.
இளநரையைப் போக்கும்.  சருமத்தைப் பளபளக்கச் செய்யும்.
பெண்களுக்கு உண்டாகும் உதிர இழப்பைப் போக்க முருங்கைக்கீரை சிறந்த நிவாரணி.  தாய்ப்பாலை ஊறவைக்கும்.  வாரம் இரு முறையாவது பெண்கள் கண்டிப்பாக முருங்கைக் கீரையை உணவில் சேர்த்து வர வேண்டும்.
முருங்கைக் கீரை சிறியவர் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்றதாகும்.
முருங்கைப் பூ
நாவின் சுவை யின்மையை மாற்றும் தன்மை கொண்டது.   முருங்கைப் பூவை பாலில் வேகவைத்து அந்த பாலை வடிகட்டி அருந்தி வந்தால் கண்கள் குளிர்ச்சி பெறும்.  பித்த நீர் குறையும்.  வாத, பித்த, கபத்தின் செயல்பாடு சீராக இருக்கும்.
முருங்கைப் பூவை நிழலில் உலர்த்திப் பொடி செய்து காலையில் கஷாயம் செய்து அதனுடன் பனைவெல்லம் கலந்து அருந்தி வந்தால் உடல் வலுவடைவதுடன், நரம்புகள் புத்துணர்வு பெறும்.  அதுபோல் பொடியை தேனில் கலந்து ஒரு மண்டலம் சாப்பிட்டு வந்தால் ஆண்மை பெருகும்.  இல்லற உறவில் நாட்டம் கொள்ளச் செய்யும்.  நீர்த்துப்போன விந்து கெட்டிப்படும்.  பெண்களுக்கு வெள்ளைப் படுதல் குணமாகி கர்ப்பப் பை வலுப் பெறும்.
முருங்கைப் பிஞ்சு
முருங்கைப் பிஞ்சை எடுத்து சிறிதாக நறுக்கி நெய்யில் வதக்கி அதனை உண்டு வந்தால் இரத்தம் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களும் நீங்கும்.  இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.
இதில் அதிக கால்சியம் சத்து இருப்பதால் எலும்பு களுக்கு ஊட்டம் கிடைக்கும்.  எலும்பு மஞ்ஜைகளை பலப் படுத்தி இரத்தத்தைஅதிகம் உற்பத்தி செய்யும். ஆண்மை சக்தியைத் தூண்டும்.
முருங்கைக் காய்
அதிக சத்துக்களைத் தன்னகத்தே கொண்டது.  உணவில் சுவையை அதிகரிக்கக் கூடியது.  அனைவரும் விரும்பிச் சாப்பிடும் காய்தான்“ முருங்கைக் காய்.
மலச்சிக்கலைப் போக்கும். வயிற்றுப் புண்ணை ஆற்றும்.  மூல நோய்க்கு சிறந்த மருந்தாகும்.  சளியைப் போக்கும்.
விதை
முற்றிய முருங்கை விதைகளை எடுத்து காய வைத்து லேசாக நெய்யில்  வதக்கி பொடியாக்கி பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால், ஆண்மை பெருகும்.  விந்தணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.  நரம்புகள் பலப்படும், உடல் வலுப்பெறும்.  உடல் சூடு தணியும்.
இலைக்காம்பு
சிலர் முருங்கைக்கீரை சமைக்கும் போது அதன் காம்புகளை குப்பையில் போட்டு விடுவார்கள்.  ஆனால் இந்த காம்பிலும் அதிக மருத்துவக் குணம் உள்ளது.
முருங்கை இலைக்காம்புகளை சிறிதாக நறுக்கி அவற்றுடன் கறிவேப்பிலை, சீரகம், சின்ன வெங்காயம், பூண்டு, சோம்பு, மிளகு இவற்றை சேர்த்து சூப் செய்து அருந்தினால், நரம்புகள் வலுப் பெறும்.  தலையில் கோர்த்துள்ள நீர்கள் வெளியேறும்.  வறட்டு இருமல் நீங்கும்.    இரு பாலாருக்கும் நல்ல உடல் வன்மையைத் தரக்கூடியது.
முருங்கைப் பட்டை
முருங்கைப் பட்டையைச் சிதைத்து சிறிது உப்பு சேர்த்து வீக்கங்களின் மீது வைத்து கட்டினால் வீக்கம் குறையும்.
முருங்கைப் பிசின் விந்துவைப் பெருக்கும்.  சிறுநீரைத் தெளிய வைக்கும்.
முருங்கை வேர்
வேரின் சாற்றுடன் பால் சேர்த்து கொதிக்க வைத்து அளவாக அருந்தினால் விக்கல்,  இரைப்பு, முதுகுவலி நீங்கும்.
நன்றி-ஹெல்த் சாய்ஸ்

எடையைக் குறைக்கும் `படிகங்கள்'!

புதிதாக உருவாக்கப்பட்டுள்ள ஒரு வகை `படிகங்கள்', எடையைக் குறைக்க உதவும் என்கிறார்கள், விஞ்ஞானிகள்.
இந்தச் சிறுபடிகங்கள், சுவை கூட்டப் பயன்படுபவையாக உணவில் தூவப்படும். உள்ளுக்குள் செல்லும் இந்தப் படிகங்கள் மூளையைத் தூண்டி, ஏற்கனவே நிறைய சாப்பிட்டுவிட்டதாக உணர வைக்கும். எனவே இந்தப் படிகங்களைச் சேர்த்துச் சாப்பிடும் ஒருவர், இயல்பாகவே உணவு அளவைக் குறைக்க, உடம்பு அளவும் குறைந்து
விடும்.
அமெரிக்காவில் ஏற்கனவே இந்தப் படிகங்கள் வெற்றிகரமாகப் பரிசோதிக்கப்பட்டுள்ளன. விரைவில் இவை இங்கிலாந்து சந்தையை எட்டவிருக்கின்றன. அமெரிக்காவில் ஆயிரத்து 400 பேருக்கு உணவுடன் இந்த சிறுபடிகங்களைத் தூவிக் கொடுத்தபோது அவர்களுக்கு அது பசியுணர்வைத் தணிப்பது உறுதி செய்யப்பட்டது.
இந்தப் படிகங்கள் எவ்வாறு தயாரிக்கப்படுகின்றன என்ற தகவல் இதுவரை வெளியிடப்படவில்லை. ஆனால் இதில் சேர்க்கப்படுபவற்றில் ஒன்று, `மால்டோடெக்ஸ்டரின்' என்று தெரியவந்துள்ளது. இந்த கார்போஹைட்ரேட், கார்ன் ஸ்டார்ச், சிலிக்கா, டிரைகால்சியம் பாஸ்பேட், சோயா மற்றும் பால் பொருட்களால் தயாரிக்கப்படுகிறது.
இந்தப் படிகங்களைத் தயாரித்திருப்போர் கூறுகையில், `இதில் சோடியம், சர்க்கரை, கலோரி, குளூட்டேன் இல்லை. வேறு எந்த ஊக்க வேதிப்பொருட்களும் இதில் அடங்கியிருக்கவில்லை' என்கின்றனர்.
சோதனையில், குண்டானவர்கள் இதைப் பயன்படுத்தும்போது, 6 மாத காலத்தில் 12 கிலோ எடையைக் குறைப்பது தெரியவந்தது. மற்ற வழிமுறைகளைப் பின்பற்றுபவர்களால் அதே காலத்தில் 1 கிலோ எடையை மட்டுமே குறைக்க முடிந்தது.
இதுதொடர்பான ஆய்வில் ஈடுபட்டவர் சிகாகோ மணம் மற்றும் சுவை சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் நரம்பியல் நிபுணர் ஆலன் ஹிர்ஷ். அவர் கூறும்போது, ``உடம்புக்கு எதிராகப் போகாமல் அதன் இயற்கையான தூண்டுதலுடன் இணைந்து செயல்படுவதுதான் இந்தப் படிகங்களின் சிறப்பு'' என்று புகழ்ந்து உரைக்கிறார்.

திட்டமிடல், முடிவு எடுத்தல் என 40 வயது வரை மூளை வளர்கிறது

குழந்தைகளும் விளையாட்டும்

குழந்தைகளும் விளையாட்டும் பிரிக்க முடியாதவை. அவர்களுக்கு எல்லாமே விளையாட்டுதான். அம்மா ஆயிரம் விஷயங்களை எண்ணி குழம்பித் திரிந்தாலும் குழந்தை அவளின் கால்களை கட்டிக்கொண்டு விளையாடத்தான் செய்யும்.
குழந்தைகளின் விளையாட்டில் பெற்றோருக்கும் மகிழ்ச்சி உண்டு. 6 மாதக் குழந்தை கை, கால்களை மட்டுமே ஆட்டி விளையாடும். ஆனாலும் பேசத்தெரியாத அந்தக் குழந்தையிடம் தன்னையே மறந்து பேசிக் கொண்டு மற்ற எல்லாக் கவலைகளையும் மணிக்கணக்கில் மறந்துவிடும் பெற்றோர்தானே எல்லோருமே!

கொய்யாப்பழத்தின் மருத்துவ குணங்கள்
நம் உடலுக்கு வேண்டிய நல்ல சத்துக்கள் தரும் பழங்களில் கொய்யாப்பழம் முக்கியமானது. கொய்யா பச்சை நிறத்திலும் ஒரு சில வகைகள் மஞ்சள் நிறத்திலும் நல்ல நறுமணத்துடன் கிடைக்கும். கொய்யா மரங்கள் சுமார் 33 அடி உயரம்
வரை வளரும்
. கொய்யாவின் பச்சைப் பசேலென்ற இலைகள் நறுமணத்துடன் காணப்படும். விதையில்லாத கொய்யாப் பழங்களும் உள்ளன.

வாக்களிப்போம் வாருங்கள் !டிச., 22 - ஆருத்ரா தரிசனம்!

திருவாதிரை நட்சத்திரம் சிவனுக்குரியது. "திருவாதிரைக்கு ஒரு வாய் களி...' என்பர். திருவாதிரையன்று, நடராஜருக்கு களி நிவேதனம் செய்து சாப்பிடுவது பாரம்பரியமான பழக்கம். களி, உடலுக்கு ஆரோக்கியம் தரும் ஒரு உணவு. திருவாதிரையில் சாப்பிடும் களி ரத்த விருத்திக்கு உதவுகிறது. அதனால் தான், பெண்கள் வயதுக்கு வந்துவிட்டால், வீடுகளில் களி சமைப்பது இன்றும் வழக்கமாக உள்ளது. ஆக, அறிவியல் ரீதியாகவும் நம் பண்டிகைகளுக்குரிய நைவேத்யங்களை முன்னோர் வகுத்துள்ளனர்.
சரி... வெறுமனே சுண்டல், களி சாப்பிடுவதற்கெல்லாம் ஒரு விழாவா என நினைக்கக்கூடாது. உண்மையில், "திருவாதிரைக்கு ஒரு வாய் களி...' இரு வேறு பொருட்களைத் தருகிறது.

கொழுப்பைக் கரைக்கும் கொள்ளு!

இளைத்தவனுக்கு எள்ளு... கொழுத்தவனுக்கு கொள்ளு...` என்பர் பெரியோர். நாம் கொள்ளுவை அன்றாடம் சரியான அளவில் உணவில் சேர்த்து வந்தால் தேவையற்ற கெட்ட கொழுப்பு நம் உடலில் சேரவிடாமல் தடுத்து விடும். கொழுப்பைக் கரைக்கும் கொள்ளு!
புரதச்சத்து, நார்ச்சத்து, மினரல்சத்து, இரும்புச்சத்து என்று சத்தின் சுரங்கமாக விளங்கும் கொள்ளு ஆங்கிலத்தில் `ஹார்ஸ்கிராம்' என்று அழைக்கப்படுகிறது.

குழந்தைகளின் உணவு

ஒரு வயதுக்கு மேல் குழந்தைகளின் உணவு முறையில் நிறைய மாற்றங்கள் தேவைப்படும்.  இதனால் குழந்தையின் வளர்ச்சி சீராக இருக்கும்.  சிலர் குழந்தைகள் சாப்பிடுவதில்லை என்று கவலைப்படுவார்கள்.  முதலில் அதற்கு என்ன காரணம் என்பதை அறிந்துகொள்ளுங்கள்.
பொதுவாக குழந்தைகள் அழுது கொண்டிருக்கும் போதோ, கோபத்தில் இருக்கும் போதோ அவர்களுக்கு உணவு கொடுப்பதை தவிர்க்க வேண்டும்.  பெரியவர்களாகிய நாமே கோபத்தில் உள்ளபோது உண்ண மாட்டோம்.  குழந்தைகளும் இதற்கு விதிவிலக்கல்ல.
குழந்தை சாப்பிடவில்லையென்றால் உடனே குழந்தையை சில தாய்மார்கள் மிரட்டுவார்கள்.  சிலர் பயம் காட்டுவார்கள்,  சிலர் அடித்து சாப்பாடு ஊட்டுவார்கள்.

எதிர்கால நவீன சிகிச்சைகள்


இன்று உலக மக்களை அதிகமாக அச்சுறுத்தி வரும் நோய்களில் முதலிடத்தில் இருப்பது எய்ட்ஸ். அடுத்து இதய நோய்கள். அதிலும் குறிப்பாக மாரடைப்பு. இவை தவிர, புற்றுநோய் உள்ளிட்ட எத்தனையோவிதமான நோய்களில் எய்ட்ஸ் தவிர மற்ற அனைத்துக்கும் ஏதோ ஒரு வகையில் பரிசோதனைகள், சிகிச்சைகள், மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு மக்களுக்குப் பயன்பட்டு வருகின்றன.

ஆனந்த பயணத்திற்கு ஆரோக்கிய வழிகாட்டி...சபரிமலை

ஆனந்த சபரிமலை பக்தி பயணம் மீண்டும் களை கட்டத் தொடங்கி விட்டது. அய்யப்ப பக்தர்கள் அணி அணியாய் மலையேறத் தயாராகி விட்டனர். அவர்களது ஆன்மிக பயணம் ஆனந்தமாய் அமைய, ஆரோக்கிய ஆலோசனைகளை தமிழ்நாடு மருத்துவர் சங்கத்தின் தலைவரான பேராசிரியர் சி.எம்.கே.ரெட்டி வழங்குகிறார்...!
சபரிமலை சன்னிதானம் எவ்வளவு உயரத்தில் இருக்கிறது? மலை ஏறும்போது பக்தர்கள் கவனத் தில் கொள்ள வேண்டிய விஷயங்கள் என்னென்ன?

அதிக நேரம் "டிவி' பார்க்கும் குழந்தைகள் முரடர்களாக மாறுவர்: ஆய்வில் தகவல்

வாரத்தில் 35 மணி நேரத்திற்கு அதிகமாக, "டிவி' பார்க்கும் குழந்தைகளின் மனதில் முரட்டுத்தனமும், உடலில் பருமனும் கூடும் என, ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. குழந்தைகள் அதிக நேரம், "டிவி'  பார்ப்பதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து, அசோசம் சமூக மேம்பாட்டு அமைப்பு ஆய்வு நடத்தியது.  சென்னை, மும்பை, டில்லி, பாட்னா, சண்டிகார் உள்ளிட்ட நகரங்களைச் சேர்ந்த ஆறு முதல் 17 வயது வரையிலான 2,000  பிள்ளைகளிடமும், 3,000 பெற்றோரிடமும் ஆய்வு நடத்தப்பட்டது.

ஞாபகசக்தியைக் கூட்டும் புதிய உத்தி!

ஞாபகமறதி என்பது இன்று பலருக்கும் உள்ள பிரச்சினை. அவர்களுக்கு ஓர் ஆறுதல். ஞாபக சக்தியைச் செயற்கையாகக் கூட்டும் உத்தியை விஞ் ஞானிகள் கண்டுபிடித்திருக்கிறார்கள். அதன்மூலம், தலைக்குள் நேரடியாக ஊடுருவாமலே ஞாபகசக்தியைத் தூண்டலாம் என்று தெரிவிக்கப்பட் டுள்ளது.
இதற்கு விஞ்ஞானிகள் பயன்படுத்தும் தொழில்ட்பத் தின் பெயர், `டிரான்ஸ்கிரேனியல் டைரக்ட் கரன்ட் ஸ்டிமுலேஷன்'. அதாவது, `எலக்ட்ரோடுகளை' பயன்படுத்தி, மயிர்க்கால்களில் மிகக் குறைந்த அளவு மின்சாரத்தைச் செலுத்துவது.
இதன் மூலம், மூளையின் ஒரு பகுதியின் செயல் பாட்டை தற்காலிகமாக கூட்டவோ, குறைக்கவோ முடியும். இது தொடர்பான ஞாபகசக்தி பரிசோதனை யில், மேற்கண்ட மின்தூண்டலுக்கு உள்ளானவர்கள், மற்றவர்களைவிட இரு மடங்கு `ஸ்கோர்' பெற்றனர். பார்வையால் காண்பவற்றை அவர்கள் நினைவில் வைத்துக்கொள்வதில் 110 சதவீத முன்னேற்றம் காணப்பட்டது.
WordPress.com