Pages

உயிரின் கதை - 3(ஆதி மனிதனின் நாட்குறிப்பிலிருந்து)

ஆதி மனிதனின் நாட்குறிப்பிலிருந்து
“இப்பிரபஞ்சம் என்பதுதான் என்ன?” -என்ற கேள்விக்கு நாம் வைத்திருக்கும் பதிலை அடிப்படையாகக் கொண்டு நம்மைச் சுற்றியுள்ள எந்த விஷயத்தையும் நாம் இரண்டு விதமாகப் புரிந்து கொள்ள முடியும். வரலாற்றுக் காலந்தொட்டு ஒன்றுக்கொன்று எதிரான முற்றிலும் வேறான இரு பதில்கள் இக்கேள்விக்கு விடையாக வைக்கப் பட்டுள்ளன. நம் புலன்களால் அறிய முடிகிற பொருள்களால் ஆகியது என்பது ஒரு பதில். நம் புலன்களால் அறிய முடியாதவற்றால் ஆகியது என்பது இரண்டாவது பதில்.

உயிரின் கதை - 2(உடலில் உயிர் எங்கே இருக்கிறது?)

உடலில் உயிர் எங்கே இருக்கிறது?
பன்னிரண்டு ’உயிர்’ எழுத்துக்களை வைத்துத்தான் தமிழில் எழுதிக்கொண்டிருக்கிறோம். வீட்டில் தொந்தரவு செய்யும் குழந்தையை ’உயிரை வாங்காதே’ என்று திட்டுகிறோம்.
’உயிரே, உயிரே, வந்து என்னோடு கலந்து விடு’ – என்று ஹரிஹரன் பாடாத ஊரே ஒரு காலத்தில் தமிழ் நாட்டில் இல்லை. பாட்டைக் கேட்ட நம்மில் நூத்துக்கு ஒருத்தராவது மனீஷாவை அன்றி ”உயிர்” என்றால் என்ன, என்று ஒருவேளை யோசிக்க ஆரம்பித்திருந்தால்?… தமிழ்நாட்டில் பெரும் அறிவியல் புரட்சியே நடந்திருக்கும்… என்ன செய்வது.

யாவருக்கும் அருள்புரியும் பகவான்!


பல அவதாரங்கள் எடுத்து, பக்தர்களை காத்தார் பகவான்; அதில், ஸ்ரீ கிருஷ்ணாவதாரமும் ஒன்று. இந்த அவதாரத்தில், அவரது அருள் பெற்றவர்கள் ஏராளம். பகவானுக்கு இப்படி அருள் செய்வதிலேயே ஒரு தனி ஆனந்தம். இது தான் பகவத் குணம். ஒரு சமயம், தீட்சித பத்தினிகளுக்கு உபதேசம் செய்து, அருள் செய்ய வேண்டும் என்று எண்ணினார்; அதற்கு, சந்தர்ப்பமும் ஏற்பட்டது. யமுனா நதிக்கரையில் கோபர்களுடன் தங்கி இருந்தார். அவர்களுக்கு பசி உண்டாயிற்று; கண்ணனிடம் கூறினர். அதைக் கேட்ட கிருஷ்ணன், "இங்கே அருகாமையில் தீட்சிதர்கள் யாகம் செய்கின்றனர். அங்கே நிறைய போஜன பதார்த்தங்கள் இருக்கும்.

உயிரின் கதை: உயிர் என்றால் என்ன?

life1
உயிரோடு உட்கார்ந்து இந்தக்கட்டுரையை நீங்கள் படித்துக் கொண்டிருக்கிறீர்கள். நானும் உயிரோடு இருப்பதால்தான் காப்பியைக் குடித்து விட்டு கண்விழித்து இதை எழுத முடிந்தது.
மீன், தவளை, பல்லி, காகம், நாய், மற்றும் பூச்சிகள், தாவரங்கள் எல்லாம் நம்மைப் போலவே உணவை எடுத்துக்கொண்டு கழிவை வெளிவிடுகின்றன; மூச்சு விடுகின்றன; வளர்கின்றன. இவற்றுக்கும் உயிர் இருக்கிறது.

உங்கள் குழந்தைக்கு ஜீரணக் கோளாறா? -காரணமும்... நிவாரணமும்...!


ள்ளிக் குழந்தைகள் பெரும்பாலும் ஜீரணக் கோளாறுகளால் பாதிக்கப்படுகிறார்கள். அதற்கான காரணத்தையும் நிவாரணத்தையும் இங்கே தருகிறோம்.
காலை உணவு கட்டாயம்
பள்ளி செல்லும் நிறைய குழந்தைகள் காலை உணவு சாப்பிடுவதைத் தவிர்க்கிறார்கள். அல்லது அவசர அவசரமாக அள்ளி விழுங்கிவிட்டு ஓட்டம் பிடிக்கிறார்கள். இந்த இரண்டுமே அஜீரணத்திற்கு வழிவகுக்கும்.
காலை உணவுதான் அந்த நாள் முழுவதும் உடல் இயக்கத்துக்கு தேவையான சக்தியை வழங்குகிறது. மூளையும், உடலும் சிறப்பாக இயங்க உதவுகிறது. எனவே காலை உணவைத் தவிர்க்கக்கூடாது. காலை உணவு சாப்பிடாவிட்டால் வயிற்றில் எரிச்சல் ஏற்படும்.

பக்குவம்-கவியரசு கண்ணதாசன்


`பக்குவம்' என்பது என்ன?
ஒரு மனிதன் பக்குவம் அடைவதற்கு முன் உள்ள நிலை என்ன?
அடைந்த பின் காணும் நிலை என்ன?
பகவான் ஸ்ரீராமகிருஷ்ணர், சில அற்புதமான உவமைகளைக் கூறுகிறார்.
ஒன்று...
குடத்தில் தண்ணீர் மொள்ளும் போது `பக்பக்' கென்று சத்தம் உண்டாகிறது.
குடம் நிரம்பியதும் அச்சத்தம் நின்று விடுகிறது.
இரண்டு....

குறைமாத குழந்தைகள் பிறப்பது ஏன்?முழு கர்ப்ப காலம், அதாவது, 37 முதல் 41 வாரங்கள் முடிந்த பிறகு பிறக்கும் குழந்தைகளே, நிறைமாத குழந்தைகள். 37 வாரங்களுக்கு (259 நாட்கள்) குறைவாக பிறக்கும் குழந்தைகள், குறைமாத குழந்தைகள் என, அழைக்கப்படுகின்றன.
பிறந்த குழந்தையின் எடை, 2.5 கிலோ கிராம் இருந்தால், எடை குறைவான குழந்தை. பெண்களுக்கு குறைந்த வயதில் திருமணம் செய்தாலும், தாய்க்கு நீண்ட கால நோய்களான இதய பாதிப்பு, சிறுநீரக பாதிப்பு மற்றும் நீரிழிவு நோய் இருந்தாலும், பொருளாதார ரீதியாக பின்தங்கிய நிலையில் இருந்தாலும், உடலில் எடை மற்றும் உயரம் குறைவாக இருந்தாலும், கர்ப்ப காலங்களில் அதிகமான ரத்தப்போக்கு ஏற்பட்டாலும், அதிக வேலை மற்றும் மன உளைச்சல் உள்ளிட்ட காரணங்களாலும், குறைமாத குழந்தைகள் பிறக்கின்றன.

இதயம் துடிப்பதற்கு உதவும் இயற்கை "பேஸ் மேக்கர்!'இதயத்தில் நான்கு அறைகள் உள்ளன. இரண்டு மேலறைகள்; இரண்டு கீழறைகள். வலது மேலறைக்கு வரும் அசுத்த ரத்தம், "டிரைகைடு' என்ற மூவிதழ் வால்வு திறந்ததும், வலது கீழறைக்கு வருகிறது. வலது கீழறையிலிருந்து பல்மனி தமனி வழியாக, நுரையீரலுக்குச் சென்று சுத்தம் செய்யப்பட்டு, இடது மேலறைக்கு வருகிறது. "மைட்ரல்' என்ற ஈரிதழ் வால்வு வழியாக, இடது கீழறை வந்து, மகாதமனி வழியாக, உடல் உறுப்புகளுக்கு, சுத்த ரத்தமாக எடுத்து செல்லப்படுகிறது. இப்படி ஒவ்வொரு துடிப்பு மூலம், 70 சிசி ரத்தம், இதயத்திலிருந்து மகா தமனிக்கு சென்று, உடல் உறுப்புகளுக்கு செல்கிறது. ஒரு நிமிடத்திற்கு, 5 லிட்டர் ரத்தம் வெளியேற்றப்படுகிறது. ஒரு நிமிடத்திற்கு, இதயம், 72 தடவை துடிக்கிறது.
இந்த இதயத் துடிப்பை உண்டாக்குவது, "பேஸ் மேக்கர்' என்ற இயற்கையான இதய துடிப்பு.

பள்ளியும் கல்வியும் சுமையா, அல்லது சுகமா?


பள்ளியும் கல்வியும் சுமையா, அல்லது சுகமா?
இக்கேள்வியை பள்ளிக் குழந்தையைக் கேட்டால் "சுமை' என்ற பதில் நெத்தியடியாக வரும்.
பள்ளிக்குச் செல்வதும் படிப்பதும் சுகமானதாக இருக்க வேண்டும் என்பதுதான் பெற்றோர், கல்வியாளர்கள், குழந்தை மருத்துவர்கள், மனநல ஆலோசகர்கள் போன்ற பலதரப்பட்டவர்களின் எதிர்பார்ப்பு. இதில் பள்ளியில் பாடத் திட்டம், ஆசிரியர்கள், தேர்வு முறை, குழந்தையின் ஒட்டு மொத்த அறிவு வளர்ச்சிக்கான வாய்ப்புகள், தனித்தன்மையை வெளிக் கொணர்தல், தேவைப்படும் காலகட்டத்தில் ஒரு சில குழந்தைகளுக்கு தனிக் கவனம் ஆகிய எல்லாமும் அடங்கும். இவை ஒவ்வொன்றும் முக்கியம்!

பசியைத் தூண்டும் புடலங்காய்...நம் முன்னோர்கள் ஆரோக்கியம் அளிக்கும் செடி, கொடி, மர வகைகளை வீட்டைச் சுற்றியும், தோட்டங்களிலும் வளர்த்து பயன்பெற்று வந்தனர்.  இன்னும் கூட கிராமங்களில் கொல்லைப் புறத்தில் கீரைகள், கறிவேப்பிலை, முருங்கை, அகத்தி, அவரை, புடலை, கத்தரி, வெண்டை, எலுமிச்சை, தென்னை என பலவற்றை வளர்த்து அதன் பயன்களை முழுமையாகப் பெற்று வந்தனர். அதனால் அவர்கள் நீண்ட ஆரோக்கியத்துடன்  வாழ்ந்தனர். 

ஆரோக்கியத்தை அள்ளித்தரும் மாமரம்...

மரங்கள், செடிகள், கொடிகள், புல், பூண்டு அனைத்தும் ஏதோ ஒரு வகையில் மனிதர்களுக்கு பயன்படுகிறது.  சில வகை உணவுகளைக் கொடுத்தும், சிலவகை மருந்தாகவும், சில வகை இருப்பிடங்களை உருவாக்கவும், என இவற்றின் பயன்பாடுகளை அளவிட முடியாது.
நாம் ஒவ்வொரு இதழிலும் ஒவ்வொரு மரத்தின் மருத்துவப் பயன்கள் பற்றி அறிந்து வருகிறோம்.  இந்த இதழில் மாமரத்தைப் பற்றியும், அதன் மருத்துவக் குணங்கள் பற்றியும் தெரிந்து கொள்வோம்.

தங்கமே தங்கம்

தங்கம், பல நூறு ஆண்டுகளாகவே, பல நாடுகளில் சூரியனின் அம்சமாக மதிக்கப்பட்டும் பூஜிக்கப்பட்டும் வருகிற ஒன்று. வேதங்கள் இதற்குக் கொடுத்த தனிப்பெயர் - ஸுவர்ணம் (நன் நிறம்). தங்கம் ஒரு ஆபரணப் பொருளாக மட்டுமில்லாமல் பலவகையிலும் நமது அன்றாட வாழ்க்கையில் பயன்பட்டுவருகிறது.

மனம் வேண்டும்!நல்ல காரியம் செய்ய வேண்டுமானாலும் கூட, அதற்கு புண்ணியம் செய்திருக்க வேண்டும்.
கோவிலுக்குப் போய், சுவாமி தரிசனம் செய்து விட்டு வருவதற்குக் கூட, புண்ணியம் செய்திருக்க வேண்டும்; அதற்கு மனமும் வேண்டும்.
ஒருவர், கோவிலுக்கு எதிரில் உள்ள கடைக்குப் போய் மூக்குப் பொடி வாங்குகிறார். அப்படியே கோவில் உள்ளே போய், சுவாமி தரிசனம் செய்துவிட்டு வந்தால் புண்ணியம் கிடைக்கும்; ஆனால், அவரோ, கோவில் வாசல் வரை போய், மூக்குப் பொடியை மட்டும் வாங்கி, வீட்டுக்கு வந்து விடுகின்றார்.

உடலை ஆரோக்யமாக வைத்திருக்க சில வழிமுறைகள்

 உடலை வளமாக வைத்திருக்க வேண்டும் எனும் ஆர்வம் எல்லோரிடமும் காணப்படுவது இயல்பு. அப்படிப்பட்டவர்கள் இந்த பத்து வழிமுறைகளை கடைபிடிப்பது பயனளிக்கும்.
தினமும் உடற்பயிற்சி செய்யுங்கள். உடற்பயிற்சி என்பது ஒரு குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் செய்வதல்ல, தினசரி அலுவல்களுக்கிடையே வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் உடற்பயிற்சி செய்யலாம். படிகளில் ஏறி இறங்குவது, அடிக்கடி நடப்பது, கண்களுக்கு பயிற்சி கொடுப்பது, கைகால்களை நீட்டி மடக்குவது, மூச்சுப் பயிற்சி என எவ்வளவோ செய்யலாம்.

கர்ப்பப்பை புற்றுநோய், கவனம்!

உடலில் உள்ள அபரிமிதமான செல்கள் தமக்குள் கட்டுப்பாடின்றி பிரிந்து, மீண்டும் வளர்ந்து அருகில் உள்ள திசுக்களில் பரவி, மீண்டும் பிரிந்து வளரும். இச் செயல் புற்று வளருவது போல இருப்பதால், இதை புற்றுநோய் என்பர். இதில் பல வகை உள்ளன. தோல் மற்றும் திசுக்களில் ஏற்படுவது “கார்சினோமா’ கேன்சர். எலும்பு, அதன் மஜ்ஜை, கொழுப்பு, தசை, ரத்தக் குழாய்களில் ஏற்படுவது, “சர்கோமா’. ரத்த அணுக்களை உற்பத்தி செய்து பரப்புவது “லூகேமியா’.

உங்களுக்கு புகழ் தேவையா?

 புகழ்வது என்பது அடுத்தவரைப் பற்றி உயர்வாகப் பேசுவதுதான். ஒருவருடைய உன்னதமான செயலைப் பாராட்டும்போது தான் அவருக்கு புகழ் உண்டாகிறது.
புகழ்வது என்றால் முகஸ்துதி செய்வதல்ல. உண்மையற்ற, இனிமையான பேச்சு தான் முகஸ்துதி. உண்மையானதும், இனிமையானதுமே புகழ்ச்சி. புகழும்போது வரும் ஒருசில வார்த்தைகள் மிகவும் சக்தி வாய்ந்தவை. புகழ்வது சக்தி வாய்ந்தது என்பதால் நாம் அதில் கஞ்சத்தனம் காட்டக் கூடாது.
ஒருவர் உயிரோடு இருக்கும்போது அவரை புகழ மறுப்பவர்கள், அவரது பிரிவிற்கு பின் புகழ்ந்து பேசுகிறார்கள். அதனால் தான் உயிரோடு இருக்கும்போது பலருடைய அருமை தெரியாமலேயே போய்விடுகிறது. பாரதியார், எம்.கே.தியாகராஜபாகவதரின் இறுதி ஊர்வலத்தின் போது அவர்களை மதிக்க மறந்தவர்கள் நிறைய பேர்.
`நிழலின் அருமை வெயிலில் தான் தெரியும்’ என்ற கருத்தை ஆழமாக சிந்தித்துப் பாருங்கள். உங்கள் அருகில் கூட சாதனையாளர்கள் இருக்கலாம். அவரை இனம் கண்டு கொண்டு பாராட்டுங்கள். பாராட்டுவதற்கு ஒருபோதும் தயங்காதீர்கள்.

எதிர்பாராமல் நடப்பவை விபத்துகள்


திர்பாராமல் நடப்பவை விபத்துகள். விலை மதிப்பற்ற உயிர்களை விபத்தில் பறிகொடுக்காமல் காக்க உதவுவது மருத்துவம் மட்டுமல்ல. காலம் தவறாமல் செய்யும் முதலுதவியும் தான். முதலுதவி என்பது மருத்துவர்களால் அளிக்கப்படுவதல்ல. ஆபத்துக் காலத்தில் சம்பவ இடத்தில் இருக்கும் யாரும் முதலுதவி அளிக்கலாம். பிறகு மருத்துவர் அவசியமான சிகிச்சை அளித்து உயிரை காப்பாற்றுவார். ஒரு மனிதருக்குச் செய்யும் முதல்உதவி என்பது மிக முக்கிய உதவி.

இதயம் காக்கும் காளான்காளான் மழைக்காலங்களில் மட்கிப்போன பொருட்களின் மீது வளரும் ஒருவகை பூஞ்சையினமாகும். இயற்கையாக வளரும் இவற்றை சிலர் பிடுங்கி எறிந்திடுவர். ஆனால், இந்தியா முதற்கொண்டு பல நாட்டவரால் விரும்பி உண்ணப்படும் உணவாக உள்ளது. இயற்கையாய் வளரும் காளான்களில் சில விஷமுள்ளதாகவும், சில விஷமற்றதாகவும் வளரும். விஷக் காளான்கள் துர்நாற்றம் வீசக்கூடியதாகவும், அதிக வண்ண முடையதாகவும் இருக்கும்.

ஆரோக்கியம் தரும் மூலிகைக் குடிநீர்...நோயில்லாத வாழ்வே சிறப்பான வாழ்க்கையாகும். இத்தகைய வாழ்வு வாழ நாம் கடைப்பிடிக்க வேண்டியது சுகாதாரமே.. சுகாதாரம் என்பது உண்ணும் உணவு முதல் உடுத்தும் உடை வரை எல்லாமே அடங்கும். அதுபோல், உடலும், மனமும் நன்றாக இருந்தால் அதுவே ஆரோக்கியமாகும்.
இன்றைய சூழலில் குடிநீர், உணவு, இருப்பிடம், காற்று என அனைத்தும் மாசுபட்டுக் கிடக்கின்றன. இந்தியா போன்ற வளரும் நாடுகளில் குடிநீரினால் உண்டாகும் நோய்களே மக்களை அதிகம் பாதிப்பதாக ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன. பிளாஸ்டிக் பாட்டில்களில் அடைத்து விற்கும் நீர் கூட சுத்தமானது என்பதை உறுதி செய்ய முடியாது.

நலம் காக்கும் காய கற்பம் எலுமிச்சைஉலகத்தில் மனிதன் தோன்றிய காலகட்டத்திலேயே எலுமிச்சம் பழத்தின் சிறப்பும் பயனும் மனிதனால் உணரப்பட்டிருக்கிறது.
தோன்றிய கால கட்டத்தில் மனிதன் தன் முன் செழித்து வளர்ந்து காட்சி தந்த செடி கொடி இலை தழைகளையே தனக்குத் தெரிந்த அளவுக்குப் பக்குவம் செய்து உணவாக உட்கொண்டு பசியகற்றி வாழத் தொடங்கினான். அந்த சந்தர்ப்பங்களில் உணவுக்குச் சுவை சேர்க்க எலுமிச்சம் பழத்தைப் பயன்படுத்தினான். நாளடைவில் உணவாக மட்டுமின்றி உடல் காக்கும் சத்துப் பொருளாகவும், நோய் நீக்கும் அருமருந்தாகவும் எலுமிச்சம் பழம் விளங்குவதை மனிதன் புரிந்து கொண்டான். எலுமிச்சையை அதிக அளவில் பயன்படுத்த தொடங்கினான்.

மின்சாரம் தயாரிக்கப்படுவது எப்படி?மின்சாரத்தின் அருமை, மின்வெட்டு நேரமான இந்தக் கோடைகாலத்தில் நமக்கு நன்கு தெரியும். மின்சாரம் எப்படி உற்பத்தி செய்யப்படுகிறது தெரியுமா?
அதிகளவிலான மின்சாரத்தைப் பெற நாம் `ஜெனரேட்டர்' எனப்படும் மின்னாக்கிகளைப் பயன்படுத்துகிறோம். மின்கலங்களில் இருந்து நம்மால் மிகக் குறைவான மின்சக்தியைத்தான் பெற முடியும்.
மின்னாக்கிகளில் எந்திர ஆற்றல் மின்னாற்றலாக மாற்றப்படுகிறது. பெரும் மின்னாக்கிகளை இயக்க `டர்பைன்கள்' பயன்படுகின்றன. உலகில் மூன்றில் இரண்டு பங்கு மின்நிலையங் களின் மின்னாக்கி களில் நீராவி டர்பைன்கள் பயன்படுத்தப்படுகின்றன. மற்றவற்றில், டர்பைன்களைச் சுழலச் செய்ய நீர் பயன்படுகிறது. இவற்றை நீர்மின் நிலையங்கள் என்கிறோம்.

ஆயுளை அதிகரிக்கும் ஆலிவ்..!

சின்ன சின்ன உணவுப் பொருட்கள் மூலம் நாம் சிறப்பான பலன்களை பெறமுடியும். நமது வீட்டில் உள்ள உணவுப் பொருட்களின் மகத்துவத்தை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
* வெண்டைக்காய் விதையைக் கொஞ்சம் பார்லி கஞ்சியில் போட்டு காய்ச்சி மூன்று நாள் வரை சாப்பிட்டு வந்தால் சிறுநீர் கழிக்கும்போது ஏற்படும் எரிச்சல் இல்லாமல் போகும்.

வெங்காயம்!

வெங்காயத்தின் காரத்தன்மைக்குக் காரணம்... அதில் உள்ள 'அலைல் புரோப்பைல் டை சல்பைடு' என்ற எண்ணெய். இதுவே வெங்காயத்தின் நெடிக்கும், நமது கண்களில் கண்ணீர் வருவதற்கும் காரணமாக அமைகிறது. வெங்காயத்தில் புரதச்சத்துக்கள், தாது உப்புக்கள், வைட்டமின்கள் ஆகியவை உள்ளன. அதன் பலன்களை இங்கே பார்ப்போம்,

வாழ்வுக்கும், மரணத்துக்கும் உள்ள இடைவெளி!

உயிரூட்டும் சிகிச்சைத் துறையில் ஏற்பட்டுள்ள வெற்றிகளின் காரணமாக, மரணத்தின் விளிம்புக்கே சென்ற ஆயிரக் கணக்கானோர் மீண்டும் வாழ்வு பெற்று பல்லாண்டுகள் உயிருடன் இருந்திருக்கின்றனர்.

ரத்த சோகையை தடுக்கும் கீரைகள்

கீரைகள் சத்துமிக்கவை என்பது அனைவரும் அறிந்ததுதான். ஆனால் கீரை வாங்கி சமைத்து சாப்பிட்டால் மட்டும் நமக்கு முழு பலன் கிடைத்துவிடாது. கீரையின் சத்துக்கள் அப்படியே உடலுக்கு கிடைக்க என்ன செய்ய வேண்டும்?
இந்தியாவில் பல வகை கீரைகள் உணவாக உட்கொள்ளப்படுகிறது. அரைக் கீரை, பாலக் கீரை, தண்டுக் கீரை, புளிச்சக் கீரை, வெந்தயக் கீரை, முருங்கைக் கீரை மற்றும் புதினா ஆகியவை அதிக மக்களின் விருப்பப் பட்டியலில் இடம் பிடித்தவை..
கீரையில் அப்படி என்ன இருக்கிறது...
* கீரைகளை தினமும் உணவில் சேர்த்துக் கொள்வதின் மூலம் ரத்தசோகை வருவதை தடுத்து, நல்ல உடல்நலனைப் பெறலாம்.
* கீரைகள் சுண்ணாம்புச் சத்து, பீட்டா கரோடின், வைட்டமின் `சி' போன்றவற்றை அதிகம் கொண்ட முக்கிய மூலப்பொருளாகும்.
* இந்தியாவில் ஒவ்வொரு வருடமும் 5 வயதிற்குட்பட்ட சுமார் 30 ஆயிரம் சிறு பிள்ளைகள், வைட்டமின் , குறைபாட்டினால் கண்பார்வை இழக்கும் நிலை ஏற்படுகிறது. கீரைகளில் உள்ள கரோடின் என்னும் பொருளானது உடலில் வைட்டமின் `' ஆக மாறுவதால் பார்வை இழக்கும் நிலை தடுக்கப்படுகிறது.
* கீரைகள் `பி காம்ப்ளக்ஸ்' வைட்டமின்களையும் கொண்டுள்ளது.
சாப்பிட வேண்டிய அளவு
இவ்வளவு சத்துக்கள் நிறைந்த கீரையை மனிதர்கள் தினமும் உட்கொள்வது நல்லது. ஒவ்வொருவரும் தினமும் சாப்பிட வேண்டிய கீரையின் பரிந்துரைக்கப்பட்ட அளவு இதுதான்...
* பெண்களுக்கு 100 கிராம், ஆண்களுக்கு 40 கிராம்.
* பள்ளி செல்லும் (4-6 வயது) சிறுவர்களுக்கு 50 கிராம்.
* 10 வயதிற்கு மேற்பட்ட ஆண்கள், பெண்கள் இருபாலருக்கும் 50 கிராம்.
* கீரைகளை நன்கு சமைத்து, மசித்து கீரையிலுள்ள நார் பொருட்களை நீக்கிய பின்னரே சிறு குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும்.
* பாக்டீரியா கிருமிகள், சிறு பூச்சிகள் மற்றும் மாசுப்பொருட்கள், தண்ணீர் அல்லது மண்ணின் மூலம் கீரைகள் மாசுபட வாய்ப்பிருக்கிறது. எனவே நன்கு கழுவி சுத்தம் செய்யாமல் கீரையை உபயோகிக்கக் கூடாது. இல்லாவிட்டால் வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சினைகள் வரலாம்.
சத்துக்கள் முழுவதும் கிடைக்க...
* கீரையில் உள்ள சத்துக்கள் முழுமையாக கிடைக்க, முதலில் கீரைகளை நீண்ட நேரம் சமைப்பதை தவிர்க்க வேண்டும். அதிக நேரம் சமைப்பதினால் கீரையிலுள்ள முக்கிய சத்துப்பொருளான கரோட்டின் சிதைந்து விடும். கரோட்டின் பார்வைத்திறனுக்கு உதவும் சத்துப்பொருளாகும்.
* கீரைகளை சமைக்க பயன்படுத்தும் தண்ணீரை கொட்டிவிடக் கூடாது. கீரைகளை சமைக்கும் பாத்திரங்களை சமைக்கும்போது மூடி வைக்க வேண்டும்.
* கீரைகளை வெயிலில் உலர்த்தக் கூடாது. அப்படி செய்தால் அவற்றிலுள்ள கரோட்டீன்கள் வீணாகி விடும்.
* கீரைகளை பொரிப்பதையும் தவிர்க்க வேண்டும்.
* கோடையில் குளிர்ச்சி தரும் கீரைகளை சமைத்துச் சாப்பிடுங்கள்.
* நாள்தோறும் நம் உடலுக்கு அவசியமான சத்தாக சேர்க்கப்பட வேண்டிய கீரையை நாமும் வீட்டுத் தோட்டத்தில் வளர்த்தால் நலமே!

எம்.ஜி.ஆர். அவர்களின் வாழ்க்கைக் குறிப்பு

ம. கோ. இராமச்சந்திரன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(எம்.ஜி.ராமச்சந்திரன் இலிருந்து மீள் வழிப்படுத்தப்பட்டது)
மருதூர் கோபாலமேனன் இராமச்சந்திரன்
MGR345676aa11 cropped.jpg
மருதூர் கோபாலமேனன் இராமச்சந்திரன்

எலுமிச்சம் பழத்தின் சிறப்பும் பயனும்

உலகத்தில்
மனிதன்
தோன்றிய
காலகட்டத்திலேயே எலுமிச்சம்
பழத்தின்
சிறப்பும்
பயனும்
மனிதனால்
உணரப்பட்டிருக்கிறது.

சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்த சூப்பர் மீல் மாடல்

திட்டமிட்ட சமவிகிதமான உணவு சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்துவது மட்டுமின்றி சர்க்கரை நோயை முற்றிலும் அகற்றி நோயாளியினுடைய உடல் நலத்தை மீண்டும் சகஜ நிலைக்குக் கொண்டு வரும். சரியில்லாத உணவை சாப்பிடும் பொழுது உடம்பில் நச்சுத் தன்மை மிகுந்த கழிவுகள் நிறைய சேர்ந்து விடுகிறது.

நம்மைப் பிறர் நன்றாக அறிவார்கள்!

நாம் சர்வ சாதாரணமாகப் பயன்படுத்தும் வாக்கியம், ``என்னைப் பத்தி எனக்குத் தெரியாதா?''. பொதுவாகவே நம்மைப் பற்றி நமக்கு நன்றாகத் தெரியும் என்றுதான் எண்ணிக் கொண்டிருக்கிறோம். ஆனால், வேறுவிதமாகக் கூறுகிறார்கள், மனோவியல் நிபுணர்கள்.

நல்ல காற்று... நலமான வாழ்க்கை..!

லகில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 400 மில்லியன் மெட்ரிக் டன் அளவில் காற்றை அசுத்தப்படுத்தக் கூடிய, உடலுக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய கழிவுகள் உற்பத்தியாகின்றன. இதில் அமெரிக்கா தான் முதலிடத்தில் இருக்கிறது. இந்தியாவில் ஆண்டுக்கு 51/2 லட்சம் பேர் காற்று அசுத்தமாவதால் ஏற்படும் நோய்களால் இறந்துபோகின்றனர் என்று ஒரு ஆய்வு கூறுகிறது. ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்காவில் சுமார் 3.35 லட்சம் பேர் நுரையீரல் புற்றுநோயினால் இறக்கிறார்கள். இதற்கு முக்கிய காரணம் காற்று மாசுபடுவதுதான்.

புற்றுநோய்க்கு புதிய சிகிச்சைகள்

புற்றுநோய் எதனால் ஏற்படுகிறது? அதன் அறிகுறிகள் என்னென்ன என்பதை எல்லாம் கடந்த வாரம் பார்த்தோம். இந்த வாரம் அதற்கான மூன்றுவித சிகிச்சை முறைகளைப் பார்ப்போம்.
ஒன்று: ஆபரேஷன்
இரண்டு: கீமோதெரபி (மெடிக்கல் ட்ரீட்மென்ட்). கீமோ என்றால் மருந்து, ரசாயனம் போன்ற அர்த்தங்கள் உண்டு. தெரபி என்றால் சிகிச்சை. மருந்து கொடுத்து சிகிச்சை அளிப்பதால் இந்தப் பெயர்.

சுகப்பிரசவம் அருளும் தாயுமானவர்

திருச்சி என்று சொன்னதும் சட்டென்று நம் நினைவுக்கு வருவது மலைக்கோட்டை. இந்த மலைக்கோட்டையில் 258 படிக்கட்டுகள் ஏறினால், தாயாகி பக்தை ஒருவருக்கு பிரசவம் பார்த்த இறைவன் தாயுமானவர் கோவிலை சென்றடையலாம். இங்குள்ள இறைவன் தாயுமானேஸ்வரர், மாத்ரு பூதேஸ்வரர் என்றும் அழைக்கப்படுகிறார். இறைவியின் திருநாமங்கள் மட்டுவார் குழலி, சுகந்த குந்தளாம்பிகை.
தாயுமானவர் மீது மிகுந்த பக்தி கொண்ட பெண் ஒருவர் காவிரியின் வடகரையில் வாழ்ந்து வந்தாள். இவளுடைய பிரசவ காலத்தில் காவிரியில் வெள்ளம் பெருகியதால் தாய், தந்தையரால் உதவி செய்ய முடியவில்லை. அந்த சமயத்தில் தன் இஷ்ட தெய்வமான தாயுமானவரை மனம் உருக வேண்டினாள். அந்த பக்தையின் கூப்பிட்ட குரலுக்கு, அவளது தாய் உருவத்திலேயே ஓடோடி வந்தார் இறைவன். பரசவ வலியில் துடித்த பெண்ணுக்கு சுகப்பிரசவம் பார்த்தார்.
இதன் காரணமாக, இத்தலத்து இறைவனை கர்ப்பிணிப் பெண்கள் வழிபட்டால் சுகப்பிரசவம் ஆகும் என்பது நம்பிக்கை.
கர்ப்பிணிப் பெண்கள் இத்தலத்து இறைவனை வழிபட்டு, திருஞான சம்பந்தரால் பாடப்பெற்ற ``நன்றுடையானை'' எனத் தொடங்கும் பதிகத்தை ஓதினால் பிரசவம் இனிதே நடைபெறும். அந்த பதிகம் உங்கள் பார்வைக்கும்...
``நன்றுடையானைத் தீயதிலானை நரை வெள்ளேறு
ஒன்றுடையானை உமையொரு பாகம் உடையானைச்
சென்றடையாத திருவுடையானைச் சிராப்பள்ளி
குன்றுடையானைக் கூற என்னுள்ளம் குளிருமே.''

தேங்காயும், விநாயகரும்...

மகோற்கடர் என்கிற முனிவராக அவதாரம் செய்த விநாயகர், காசிப முனிவரின் ஆசிரமத்தில் தங்கியிருந்தார். ஒருமுறை அவர்கள் ஒரு யாகத்திற்கு புறப்பட்டபோது அசுரன் ஒருவன் அவர்களைத் தடுத்து நிறுத்தினான்.