Pages

பதிவு செய்யுங்கள் உங்கள் உரிமையை.......

சமுதாயச் சாதனை ...
ஜனநாயகக் கடமை

வாக்காள பெருமக்களே...
பதிவு செய்யுங்கள் உங்கள் உரிமையை.......
நாட்டின் முத்திரையாய்....

சும்மா கிடைக்கவில்லை சுதந்திரம் என்பது போல்
வாக்குரிமையும் ...
சாதாரணமாய் பாமரன் வசப்படவில்லை

சுதந்திரம் பெற்றதில் இருந்து, இதுவரை மொத்த ஊழல் மதிப்பு : ரூ.910,603,234,300000 /- அதாவது 20.23 ட்ரில்லியன் அமெரிக்க டாலர்கள்!

இது அரசியல் சார்பற்ற 'ரோட்ராக்ட் க்ளப் ஆப் பிஈஎஸ் யூனிவர்சிட்டி' நண்பர்கள் செய்த வீடியோ, உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன், அதில் உள்ள தகவல்களை கீழே தொகுத்து கொடுத்துள்ளேன் :

----------------------------------------------------------------------------

சுதந்திரம் பெற்றதில் இருந்து,

இதுவரை மொத்த ஊழல் மதிப்பு : ரூ.910,603,234,300000 /- அதாவது 20.23 ட்ரில்லியன் அமெரிக்க டாலர்கள்.

இந்த ரூ.910,603,234,300000 /- கொண்டு ஒரே இரவில் இந்தியாவால் வறுமையில்லாத நாடாக மாற முடியும்,இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு திட்டங்களை ஏற்படுத்த முடியும்.

கல்விக் கடன் - தேவைப்படும் ஆவணங்கள்

மாணவர்களுக்கு கல்விக் கடன் வழங்குவதற்கு ஒவ்வொரு வங்கியும் ஒவ்வொரு விதமான ஆவணங்களை கோருகின்றன. ஆனால் பொதுவாக எல்லா வங்கிகளும் கோரும் ஆவணங்களின் விவரங்கள் இங்கே தரப்பட்டுள்ளன.

சித்திரைத் திருவிழா

இந்தியாவின் தமிழ்நாட்டில் தமிழ்வருடபிறப்பான சித்திரை மாதத்தில் பௌர்ணமிக்குமுன்னதாக பத்து நாட்கள் கொண்டாடப்படும் விழாவாகும்.

அடிக்கடி ரத்ததானம் செய்வது உடலுக்கு நல்லது

தானத்தில் சிறந்ததென அன்னதானம், கல்வி தானம், கண் தானம்... என ஆயிரம் தானங்களைச் சொல்வோம்.
ஒவ்வொரு தானமும் உயர்ந்தது தான், சந்தேகமில்லை.

ஆண், பெண் இருபாலருக்கும் சில மருத்துவ அழகுக் குறிப்புகள்

கோடையில் சருமம் எளிதில் வறண்டுபோய் விடும். அதை தடுக்க தினமும் 2 டம்ளர் மோர் குடித்து வாருங்கள். வறண்ட சருமம் நீங்கி தோல் பொலிவு பெறும்.
* தோல் நீக்கிய ஆப்பிள் பழத்தை நன்றாக மசித்து, அதனுடன் சிறிது தேன், ஓட்ஸ் பவுடர் ஆகியவற்றை கலந்து, அந்த கலவையை முகத்தில் பூசி சுமார் 1/2 மணி நேரம் ஊறவிட்டு, முகத்தை கழுவவும். உங்கள் வறண்ட சருமம் காணாமல் போய் விடும்.
* தோல் நீக்கிய சிறிது ஆப்பிள் பழத்துண்டுகளை ஒரு கப் பாலில் போட்டு நன்றாக கொதிக்க வைத்திடுங்கள். அது தயிர் போன்று மாறும். அதை நன்றாக ஆற விட்டு, அதில் தேவையான அளவு எடுத்து முகத்தில் பூசி 20 நிமிடங்கள் ஊறவிட்டு பின் கழுவிவிடுங்கள். இப்படி தினமும் செய்து வாருங்கள். உங்கள் வறண்ட சருமம் மாறி, முகம் பிரகாசிக்கவும் ஆரம்பித்து விடும்.

கோடைத்தாக்குதலை சமாளிக்க…

கோடை ஆரம்பித்து விட்டாலே உடலின் ஆரோக்கியமும் பாதிப்புக்கு ஆளாகிறது. கிளீனிக்குகளில் கூட்டம் அலைமோதுவதால் கோடை காலத்துக்கு டாக்டர்களின் சீசன் என்ற பெயரும் உண்டு.
வெப்பநிலை மாற்றமே இதற்கு முக்கிய காரணம். சில நகரங்களில் 107 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும். அப்போது வெளியில் சென்றால் தலைசுற்றல், மயக்கம், வாந்தி, வயிற்று வலி போன்ற “சன் ஸ்ட்ரோக்” பாதிப்புகள் ஏற்படும்.

பற்கள்: இறுதிவரை உறுதி பெற…

- வைட்டமின் `சி’ சத்து குறைபாடு!
- மது அதிகமாக அருந்துதல்!
- சத்துள்ள உணவுகளை சாப்பிடாமல் இருத்தல்…
போன்றவைகளால் பல் ஈறு நோய்கள் ஏற்பட அதிக
வாய்ப்புண்டு .
சிகரெட், `பான்’, புகையிலை,
பல்குச்சி உபயோகம் இவைகளும்
ஈறு நோயை உண்டுபண்ணும் .

பழங்களும் அதன் மருத்துவ குணங்களும் !


இதயத்தை பலப்படுத்தும் அன்னமுன்னா பழம் (சீதாப்பழம்)
கஸ்டர்டு ஆப்பிள் என்றும் பட்டர் ஆப்பிள் என்றும் ஆங்கிலத்தில் அழைக்கப்படும் சீதாப்பழம் சுவை மிக்க இனிய பழமாகும். குளூகோஸ் வடிவில் நிறைந்த அளவு சர்க்கரைச் சத்தைக் கொண்டிருக்கும் இப்பழம் குழந்தைகள் முதல், பெரியவர்கள் வரை அனைவராலும் விரும்பப்படுகிறது. வெப்பம் மிகுந்த பகுதிகளில் எளிதாக வளரும் சீதா சிறு மர வகையைச் சார்ந்தது.

சீத்தாப்பழம் தனிப்பட்ட மணமும், சுவையும் கொண்டது. சீத்தாப்பழத்தின் தோல், விதை, இலை, மரப்பட்டை அனைத்துமே அரிய மருத்துவ பண்புகளை கொண்டது.

மூல வியாதிக்கு மோர் சிறந்த மருந்து!

ஜூலை 23- மூல நோயால் அவதிப்படுபவர் என்ன உணவைச் சாப்பிடலாம் என்பது குறித்து டாக்டர் பி.எல்.டி.கிரிஜா விளக்குகிறார். மூல நோய் தீவிரமடைந்தால் மனிதரைக் கடுமையாக வாட்டும் வாய்வின் சீற்றத்தால் மூலம் ஏற்பட்டால் வயிறு உப்புசம், உடல் வலி அல்லது குத்து வலி, இருதயத்தில் படபடப்பு, மலச்சிக்கல், சிறுநீர் தடைபடுதல், வாய் சரியாக பிரியாமல் இருப்பது, தொடை, இடுப்பு, முதுகு, வயிறு, விலாப் பக்கங்கள், சிறுநீர்ப்பை ஆகியவற்றில் வலி, மூக்கில் சளி, தும்மல், ஏப்பம், தலைவலி, இருமல் வாய்வு மேல் நோக்கி செல்வது, நாக்கில் ருசியின்மை போன்ற தொல்லைகளும் சேர்ந்து காணப்படும்.

90 நாடுகளுக்கு இலவசமாக அழைப்பினை மேற்கொள்ள ஒரு app

நீங்கள் android அல்லது iOS பயனாளரா?? ஆம் எனில் உங்களுக்கு மகிழ்ச்சி தரக்கூடிய ஒரு விடயம் தான் இந்த Libon app.
Libon App இன் சிறப்பம்சங்கள் :-


  • 90 நாடுகளுக்கு இலவச அழைப்பு - Make call more then 90 countries.
  • இரைச்சலற்ற ஒலி - Voice quality is also Good.
  • Caller see/receive your genuine number. (No fake or advertising calls, or caller id spoofing).
  • அழைப்புடன் குறுஞ்செய்தி வசதியும் இருக்கிறது - More over you can also send the instant text message to any of the phone number. 

ஹெல்மெட் அணிவோம்… உயிரிழப்பை தடுப்போம்…“எண்சாண் உடம்புக்கு சிரசே பிரதானம் என்பார்’ என்பது பழமொழி. நம் உடல் உறுப்புகளை செயல்படுத்தும் ஒட்டு மொத்த கன்ட்ரோல் நம் தலையில் இருக்கக்கூடிய மூளையாகும்...

வெயில் தாக்கம் தணிய சில டிப்ஸ்..
  • உச்சி முதல் உள்ள கால் வரை இந்த தாக்கம் இருக்கும் அதனை தணிக்க சின்ன டிப்ஸ்..
    வாரத்துக்கு இரண்டு முறை நன்றாக தலைக்கு, மற்றும் உடல் முழுவதும் தேங்காய் எண்ணெய் ஊற்றி நன்றாக ஊற வைத்து பின்பு குளிக்கவும்.
    இதன் மூலம் உடல் சூடு குறையும்.

இழந்த இளமையை மீட்டு அழகாக மாற்றும் ஊசி: ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் இலவசம்

திரைப்பட நடிகர், நடிகைகள் எப்போதும் அழகாகவும், இளமை யாகவும் இருக்க போட்டுக் கொள்ளும் போடாக்ஸ் என்ற ஊசி மருந்து சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் இலவசமாக போடப்படுகிறது. இதன் மூலம் இழந்த பொலிவை மீண்டும் கொண்டுவர முடியும்.
இந்தியாவில் அரசு மருத்துவ மனைகளில் முதல்முறையாக, சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவ மனையில் கடந்த ஜூன் மாதம் அழகியல் துறை (Cosmetology) தொடங்கப்பட்டது. இந்த துறையில் இழந்த இளமையை மீண்டும் கொண்டு வந்து அழகாகவும், இளமை யாகவும் மாற்றுவதற்கு போடாக்ஸ் (BOTOX) என்ற ஊசி இலவசமாக போடப்படுகிறது.

இந்து திருமணத்தில் தாலி கட்டும்போது மூன்று முடிச்சு இடுவதன் அர்த்தம்!

இந்து திருமணங்களில், மணமகன், மணமகளுக்கு மாங்கல்யம் அதாவது (தாலி) கட்டும்போது மூன்று முடிச்சு எதற்கு போடச் சொல்கிறார்கள். அது ஏன்? அந்த மூன்று முடிச்சுகளுக்கும் ஆறு பொருளிருக்கு...

சிவப்பு தக்காளியை விட, தக்காளிக்காயில் சத்துக்கள் அதிகம் உள்ளதாக, விஞ்ஞானிகள் தெரிவிப்பு!

நாம் அன்றாடம் சமையலில் பயன்படுத்தும், சிவப்பு தக்காளியை விட, தக்காளிக்காயில் சத்துக்கள் அதிகம் உள்ளதாக, விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

சித்திரை மாத எண் கணித பலன்கள்...

1, 10, 19, 28 தேதிகளில் பிறந்தவர்களுக்கு...

அதிகார தோரணையும் எடுத்த முடிவை மாற்றிக் கொள்ளாத  குணமுமுடையவர்களே, இந்த மாதம் சின்ன விஷயத்துக்குக் கூட கோபம் வரலாம், நிதானமாக இருப்பது நன்மை தரும். ஆனால், புத்தி சாதுரியத்தால்  எதையும் சமாளிப்பீர்கள். வீண் அலைச்சல் ஏற்படும். நீங்கள் நினைப்பது போல மற்றவர்கள் நடந்து கொள்ளாததால் டென்ஷன் ஏற்படலாம். தொழில், வியாபாரப் பயணங்களால் அலைச்சல் ஏற்படலாம். வியாபார  விரிவாக்கப் பணிகளில் சில இடையூறுகள் ஏற்படலாம். உத்தியோகஸ்தர்களுக்கு வேலை சுமை அதிகரிப்பது, அலைச்சல், சோர்வு என உண்டாகும். குடும்பத்தின் இறுக்கமான சூழ்நிலை நீங்கும். குடும்ப உறுப்பினர் களால் வருமானம் வரும். சொன்ன சொல்லை எப்படியும் காப்பாற்றுவீர்கள்.

திருமண தோஷத்துக்கு என்ன பரிகாரம்?

திருமணம் என்பது ஒவ்வொருவருடைய வாழ்விலும் மிகவும் இன்றியமையாதது. குறிப்பிட்ட பருவ வயதை அடைந்தவுடன் ஆண், பெண் இருவருக்கும் திருமணத்திற்கான ஏற்பாடுகள் செய்யப்படுவது கடமை மட்டும் அல்லாமல் இயற்கை நியதியும்கூட. மண வாழ்க்கை சிலருக்கு எளிதாக கூடி வந்துவிடும். சிலருக்கு அதிக முயற்சிக்கு பிறகு கூடிவரும். ஒரு சிலருக்கு கிரக தோஷ அமைப்பின் காரணமாக தடைகள், இடையூறுகள் ஏற்பட்டுக் கொண்டே இருக்கும்.

மக்களவை தேர்தலில் வெற்றி பெறும் எம்.பி.க்களுக்கு கிடைக்கும் சலுகைகள்...

மக்களவை தேர்தலில் வெற்றி பெறும் எம்.பி.க்களுக்கு என்னென்ன சலுகைகள் கிடைக்கும்?

இந்திய மக்களவை உறுப்பினர்களுக்கு டெல்லியின் மையப் பகுதியில் ஒரு பங்களா உள்பட மாதந்தோறும் ரூ.2 லட்சம் வரை பல்வேறு வகையான சலுகைகளை அரசு வழங்குகிறது.

வாக்காளர் அடையாள அட்டை பெறாதவர்கள் கீழ்கண்ட 12 ஆவணங்களை அடையாள அட்டையாகப் பயன்படுத்திக் கொள்ளலாம்

வரும் மக்களவைத் தேர்தலில், வாக்காளர்கள், தங்களது வாக்காளர் அடையாள அட்டை தவிர 12 இதர ஆவணங்களில் ஒன்றியை பயன்படுத்தி வாக்களிக்கலாம் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

வாக்காளர்கள், தங்களது வாக்காளர் அடையாள அட்டை மற்றும் பூத் ஸ்லிப் பயன்படுத்தி வாக்களிக்க முடியும், வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்து, வாக்காளர் அடையாள அட்டை பெறாதவர்கள் கீழ்கண்ட 12 ஆவணங்களை அடையாள அட்டையாகப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

சிந்தனை அறிவே மனித வாழ்வை உயர்த்தும்

பகுத்தறிவு என்பது மனிதனுக்கு ஜீவநாடி - உயிர் நாடி ஆகும். ஜீவராசிகளில் மனிதனுக்குத்தான் பகுத்தறிவு உண்டு. இதில் மனிதன் எவ்வளவுக்கு எவ்வளவு தாழ்ந்த நிலையில் இருக்கின்றானோ, அவ்வளவுக்கு அவ்வளவு காட்டுமிராண்டி என்பது பொருள்.

மனிதன் எவ்வளவுக்கு எவ்வளவு பகுத்தறிவில் தெளிவு பெறுகின்றானோ, அவ்வளவுக்கு அவ்வளவு பக்குவமானவன் என்பது பொருள். பகுத்தறிவு பெறும்படியான சாதனம் நமக்கு நீண்ட நாளாகவே தடைபடுத்தப்பட்டு வந்துள்ளது, நம்மை அடிமைப்படுத்தி ஆதிக்கம் செலுத்திய பார்ப்பனர்கள் நாம் பகுத்தறிவு வளர்ச்சி அடைய ஒட்டாமல் தடை செய்து கொண்டே வந்துள்ளார்கள்.