Pages

எடையை குறைக்கணுமா…?

உங்களுக்கு எதை உண்ணப் பிடிக்குமோ, அதைத்
தவிருங்கள். இது கொஞ்சம் கஷ்டம்தான். முதல்
நான்கு நாட்கள் மிக கடினம் போல தோன்றும்.
முழுமையாகத் தவிர்க்க முடியாவிடினும்,
சிறிது சிறிதாகத் தவிர்க்கப் பாருங்கள்.

மன அமைதி… நிம்மதி!

இன்றைய அவசர உலகில் பெருகிவரும் பரபரப்பு,
பதட்டம் அதனால் ஏற்படும் மனக்கவலைகள்,
ஏமாற்றங்கள், எதிர்பார்ப்புகள் போன்றவை எல்லாம்
அதிகமான மனபாரத்தை ஏற்படுத்தி ரத்த
அழுத்தத்தை அதிகரிக்க செய்கின்றன .

கண்களை கண்காணித்தல் அவசியம்!

கோடையில்
சூடு காரணமாக பாதிக்கப்படும் உறுப்புகளில்
முக்கியமானது கண் ! கண்வலி, கருவளையம்
என்று கண் பாதிப்பின்
வெளிப்பாடு நமக்கு தெரியும்போது,
உடனே அதற்கான சிகிச்சையை எடுப்பது நல்லது.

வலிகளைப் போக்கும் வர மிளகாய்

காரசாரமான உணவிற்கு முக்கிய காரணமாய்
இருப்பது மிளகாய் . நம் இந்திய சமையலில்
மிளகாய்க்கு சிறப்பான இடம் உண்டு.
இது ஊசி மிளகாய், குண்டு மிளகாய்,
குடமிளகாய் என மூன்று வகைகளைக் கொண்டது.
இவை காரத்தன்மையால் வேறுபடுகின்றன.

மூச்சில் முன்னூறு விஷயம்

- மூச்சு வாங்குது.

- மூச்சு திணறுது.

- மூச்சுவிட கஷ்டமா இருக்கு.

- மூச்சு நின்னுடுச்சு.

இப்படி மூச்சு, மூச்சு என்று அடிக்கடி எல்லோரும் சொல்வதை, நீங்களும் கேட்டிருப்பீர்கள். மூக்கு வழியாக காற்றை உள்ளிழுத்து, வெளியே விடுவதைத்தான் `மூச்சு' என்று சொல்லிப் பழகிவிட்டோம். இதையே `சுவாசித்தல்' என்றும் நாம் சொல்வதுண்டு.

நம்மை அறியாமலே, இயற்கையாக, தன்னிச்சையாக, சுவாசித்தல் நடைபெற்றுக் கொண்டிருப்பதால், அதைப் பற்றி நாம் யாரும் கண்டுகொள்வதில்லை. கணக்கில் எடுத்துக் கொள்வதும் இல்லை.

சுவாசித்தல், நுரையீரல் என்கிற உறுப்பு மூலமாகத்தான் நடைபெறுகிறது. நுரையீரல் நமது உடலில் மார்பின் இரண்டு பக்கமும் நிறைந்திருக்கிறது. நமது மார்பிலுள்ள இரண்டு நுரையீரல்களிலும், கண்ணுக்குத் தெரியாத அளவில் மிகமிகச் சிறிய பலூன் போன்ற காற்றுப்பைகள் சுமார் முப்பது கோடி எண்ணிக்கையில் இருக்கின்றன. வெளியிலிருந்து உள்ளே இழுக்கப்படும் காற்று, இந்த முப்பது கோடி காற்றுப் பைகளுக்குள்ளும் சென்றுதான், மாற்றமாகி, மறுபடியும் வெளியே வருகிறது.

உலகமெங்கும் பரவியிருக்கும் காற்றைத்தான், நாம் பிறந்த நாளிலிருந்து இறக்கும் நாள் வரை சுவாசித்துக் கொண்டிருக்கிறோம். காற்று, கண்ணுக்குத் தெரியாதது. ஆனால் எங்கும் நிறைந்து இருப்பது. செடி, கொடிகள் அசையும்போது நாம் காற்று அடிக்கிறது என்று சொல்கிறோம். காற்றை நம்மால் உணர மட்டும் தான் முடியும்.

காற்றை நாம் சுவாசிப்பதனால்தான் உயிர் வாழ்கிறோம். சுவாசித்தல் நின்று விட்டால், உயிரும் நின்று விட்டதாக அர்த்தம். `தூங்கையிலே வாங்குகிற மூச்சு, சொல்லாமல் நின்னாலும் போச்சு' ``ராத்திரி படுத்து, காலையில் எழுந்தால்தான் உயிர் நிச்சயம்'' என்று சுவாசித்தலைப் பற்றி கிராமத்திலுள்ள பெரியவர்கள் கூறுவதுண்டு.

காற்றில் கலந்திருக்கும் `பிராணவாயு' என்ற `ஆக்ஸிஜன்' வாயு தான், நாம் உயிர்வாழ பெரிதும் உதவுகிறது. இந்த கண்ணுக்குத் தெரியாத காற்றில், ஆக்ஸிஜன் தவிர, இன்னும் நிறைய வாயுக்கள் இயற்கையாகக் கலந்துள்ளன. அதாவது, காற்றில் சுமார் 78 சதவீதம் நைட்ரஜன் வாயுவும், 21 சதவீதம் ஆக்ஸிஜன் வாயுவும் இருக்கின்றன. மீதமுள்ள ஒரு சதவீதத்தில் 0.93 சதவீதம் ஆர்கான், 0.039 சதவீதம் கார்பன் டை ஆக்ஸைடு மற்றும் நியான், ஹீலியம், மீதேன், கிரிப்டான், ஹைட்ரஜன், நைட்ரஸ் ஆக்ஸைடு, கார்பன் மோனாக்ஸைடு, நைட்ரஜன் டை ஆக்ஸைடு, ஓஸோன், அயோடின், அம்மோனியா போன்ற சுமார் பதினாறு விதமான வாயுக்கள் கலந்திருக்கின்றன.

காற்றில் 21 சதவீதம் இருக்கும் ஆக்ஸிஜன் வாயுதான், நம்மை உயிர்வாழ வைத்துக் கொண்டிருக்கிறது. இந்த 21 சதவீத ஆக்ஸிஜன் வாயு, 1 சதவீதம் குறைந்தால் கூட, உடலில் நிறைய பாதிப்பை ஏற்படுத்தும். சுமார் ஐந்து சதவீதம் குறைந்தால் எல்லோர் உயிருக்கும் ஆபத்துதான்.

இந்த 21 சதவீத ஆக்ஸிஜனே உலகிலுள்ள அனைவரும் உயிர்வாழ போதுமானது. இதைக் கெடுக்காமல், இது இன்னும் குறையாமல் பார்த்துக் கொண்டால் சரிதான். காற்றின் அழுத்தமும், காற்றின் அடர்த்தியும் உயரம் போகப் போக குறைந்துகொண்டே போகும். சுமார் பத்தாயிரம் மீட்டருக்கு மேலே போகும்போது, காற்றில் உள்ள வாயுக்களின் சதவீதம் மாறும்.

நீருக்குள் காற்று இருக்கிறது, நீருக்குள்ளேயே வாழும் உயிரினங்கள் அனைத்துமே, தனக்குள்ள `கில்ஸ்` என்று சொல்லக்கூடிய விசேஷ நுரையீரலைப் பயன்படுத்தி, தண்ணீரிலுள்ள காற்றிலிருந்து, ஆக்ஸிஜன் என்கிற பிராணவாயுவை மட்டும் பிரித்தெடுத்து சுவாசிக்கின்றன.

விண்வெளியில் ஆக்ஸிஜன் வாயு கிடையாது. ஆகவே விண்வெளி வீரர்கள், ஆக்ஸிஜன் சிலிண்டர்களை உடன் எடுத்துச் சொல்கிறார்கள். வானத்தில் `ஓஸோன் திரை' என்று சொல்லக்கூடிய இடம் வரைக்கும் தான் ஆக்ஸிஜன் வாயு உண்டு. அதற்கு மேல் சில கிலோ மீட்டர் தூரத்திற்கு காற்று இருக்கும். ஆனால் ஆக்ஸிஜன் வாயு இருக்காது.

பூமிக்கடியில் அதிக ஆழத்திலுள்ள சுரங்கத்தில் வேலை செய்பவர்களுக்கு, `வென்டிலேடிஸ் ஷாப்ட்' என்று சொல்லக்கூடிய மிகப்பெரிய ராட்சத குழாய், பூமியிலிருந்து சுரங்கத்திற்குள் நுழைக்கப்பட்டு, தரையிலுள்ள இயற்கைக்காற்று உள்ளே அனுப்பப்படுகிறது. இதன் மூலம்தான் சுரங்கத் தொழிலாளர்கள் சுவாசிக்கிறார்கள்.

தண்ணீரில் மூழ்கி இறப்பவர்களுக்கு, நுரையீரலில் காற்று இருப்பதற்குப் பதிலாக தண்ணீர் நிரம்பி விடுகிறது. இதனால்தான் இறக்கிறார்கள்.

`சூரிய ஒளிச்சேர்க்கை' அதாவது `போட்டோ சிந்தெஸிஸ்(Photo Synthesis) என்று சொல்லக்கூடிய செயல்முறையில், தாவரங்கள் அனைத்தும், சூரிய ஒளிசக்தியை பயன்படுத்தி, ஆக்ஸிஜன் வாயுவை உண்டாக்குகிறது. இந்த ஆக்ஸிஜனை உயிரினங்கள் எடுத்துக் கொள்கின்றன. உயிரினங்கள் தான் உண்ணும் உணவை எரித்து, அதன் மூலம் கிடைக்கும் சக்தியை உடலுக்கு கொடுக்க, ஆக்ஸிஜன் வாயு மிகவும் உபயோகப்படுகிறது.

மனிதன் ஆக்ஸிஜன் வாயுவை சுவாசித்து, (அதாவது உள்ளே இழுத்து) கார்பன் டை ஆக்சைடு என்கிற வாயுவை வெளியே விடுகிறான். இதற்கு நேர்மாறாக, எல்லா செடி, கொடிகளும் கார்பன் டை ஆக்ஸைடு வாயுவை உள்ளே இழுத்து, ஆக்ஸிஜன் வாயுவை வெளியே விடுகிறது. சூரிய வெளிச்சம் இருந்தால்தான் இப்படி நடக்கும். சூரிய வெளிச்சம் இல்லாத நேரத்தில் அதாவது இரவில், மனிதனைப் போல தாவரங்களும் ஆக்ஸிஜன் வாயுவை உள்ளே இழுத்து, கார்பன் டை ஆக்ஸைடு வாயுவை வெளியே விடுகிறது.

ஆக்ஸிஜன் வாயு நமக்கு தேவை. கார்பன் டை ஆக்ஸைடு வாயு நமக்குத் தேவையில்லை. பகலில் ஆக்ஸிஜன் மரத்தடியில் கிடைக்கும். அதனால் பகலில் மரத்தடியில் படுக்கலாம். இரவில் ஆக்ஸிஜன் மரத்தடியில் கிடையாது. கார்பன் டை ஆக்ஸைடு தான் கிடைக்கும். இரவில் மரத்தடியில் படுக்கக்கூடாது என்று சொல்வதன் காரணம் இதுதான்.

என் நண்பர் ஒருவர் வாக்கிங் போகும்போதும், சும்மா இருக்கும்போதும், வழியிலிருக்கும் செடி, கொடிகளின் அருகில் போய் இலைகளுக்கு பக்கத்தில் மூக்கைக் கொண்டு போய், நன்றாக மூச்சை உள்ளே இழுத்துவிட்டு வருவார். ``என்ன சார் இது, வழியெல்லாம் செடி, கொடிகளை மோப்பம் பிடித்துக்கொண்டே வருகிறீர்கள்'' என்றேன்.

``எல்லாச் செடி கொடிகளும் பகலில் ஆக்ஸிஜனை வெளியே விடும். இவைகளிலிருந்து வெளியே வரும் இந்த சுத்தமான ஆக்ஸிஜன் நமக்குத் தேவை. அதனால்தான் இலைகளின் கிட்டே போய் அந்த சுத்தமான ஆக்ஸிஜனை, கலப்படமில்லாத ஆக்ஸிஜனை உள்ளே இழுத்து, உடம்பை தெம்பாக்கிக் கொள்கிறேன் டாக்டர்'' என்றார் அந்த நண்பர். அவர் செய்வது சரிதான்.

அதிக மக்கள் கூட்டத்தில் நாம் இருக்கும்போது, ஆக்ஸிஜன் நமக்கு கிடைப்பது குறைந்து விடுகிறது. அதாவது பத்து பேர் இருக்க வேண்டிய இடத்தில் நூறு பேர் இருந்தால் நமக்கு ஆக்சிஜன் குறைவாக கிடைக்கும். அதே நேரத்தில், எல்லோரும் சுவாசித்து விட்டு, காற்றை வெளியே விடும்போது அந்த இடத்தில் கார்பன் டை ஆக்ஸைடு வாயு அதிகமாகி விடுகிறது. கூட்ட நெரிசலில் மூச்சுத் திணறல் ஏற்பட்டது என்று சொல்வது இதனால் தான்.

உடல் வெப்பம் தணிக்கும் மருதாணி

பில்லி, சூனியம் போக்கும் மருதாணிப் பூக்கள்
கைகளிலும், கால்களிலும் செந்நிறத்தில்
மின்னும் மருதாணியை வெறும் அழகுக்காக
பெண்கள் கைககளில் வைக்கிறார்கள்
என்று கருதினால் அது மிகப்பெரிய தவறாகும்.
மருதாணி இலையை கைகளில் வைப்பதால்
பல்வேறு பயன்கள்
பெண்களுக்கு கிடைகின்றன .மருதாணியின்
முழுத்தாவரமும் மருத்துவ பயன்
உடையவையாகும் .. இலைகள், பட்டை, மலர், கனிகள்
போன்றவை பயனுள்ளவை.
செயல்திறன்மிக்க வேதிப்பொருட்கள்
மருதாணியில் கௌமாரின்கள்,
நாப்தாகுயினோன்கள், லாசோன்,
ஃபிளேவனாய்டுகள், ஸ்டிரால்கள், டேனின்கள்,
ஆகியன உள்ளன.
தேமல் போக்கும் மருதாணி
இலைகள் தசை இறுக்கும் தன்மை கொண்டது. அதிக
இரத்தப்போக்கினை தடுக்கும். மாதவிடாய்
சுலபமாய் இருக்க உதவும். பெண்களின்
வெள்ளைப்படுதல் மற்றும் மாதவிடாயில்
அதிகப்படியான
இரத்தப்போக்கு ஆகியவற்றை தீர்க்கும் .
கால் எரிச்சலைத் தடுக்க
இலைகளை அரைத்து பசையாக போடலாம்.
தொண்டை கரகரப்புக்கு கொப்பளிப்பு நீராகும்.
இலைகளின் வடிசாறு, அல்லது கசாயம்
வயிற்றுப்போக்கு மற்றும்
சீதபேதியினை கட்டுப்படுத்தும். கால்
எரிச்சலைத் தடுக்க பசையாக உதவும்.
மருதாணி இலையுடன் சிறிது குளியல்
சோப்பைச் சேர்த்து அரைத்து பூசி வர விரைவில்
கருந்தேமல் மறையும் .
உள்ளங்காலில் ஆணி ஏற்பட்டிருந்தால்
மருதாணி இலையுடன் சிறிது வசம்பு, மஞ்சள்
கற்பூரம் சேர்த்து அரைத்து, ஆணி உள்ள இடத்தில்
தொடர்ந்து கட்டி வர ஒரு வாரத்தில்
குணமாகும் .
உடல் வெப்பம் தணியும்
மருதாணி வைத்துக் கொள்ளும் வழக்கம் சங்க
காலத்திலேயே இருந்துள்ளது .
மருதாணி இலை கிருமி நாசினி, கண்ணுக்குப்
புலப்படாத கிருமிகளை அழிக்க வல்லது.
நகசுத்தி வராமல் தடுக்கும்.புண்ணை ஆற்றவும்
நல்ல மருந்து.
மருதாணி இலையை அரைத்து கைககளுக்கு வைத்து வர,
உடல் வெப்பம் தணியும்.
கைகளுக்கு அடிக்கடி மருதாணி போட்டு வர
மனநோய் ஏற்படுவது குறையும் .
மருதாணி இட்டுக் கொள்வதால்
நகங்களுக்கு எந்த நோயும் வராமல்
பாதுகாக்கலாம் . ஆனால் இந்த பயன்கள் எல்லாம்
தற்போது கடைகளில் கிடைக்கும்
மருதாணி கோன்களில் கிடைக்க
வாய்ப்பே இல்லை .
மருதாணி இலையை அரைக்கும்
போது சிறிதளவு களிப்பாக்கை சேர்த்து அரைப்பது சாயம்
நன்கு ஏற உதவும் . விரல்களை நன்கு சுத்தம்
செய்த பின்னரே அவற்றிற்கு அழகு செய்ய
ஆரம்பிக்க வேண்டும் . இது நகத்தில்
சிவப்பு நன்கு ஏற
உதவுவதோடு மருதாணி கலையாமல் இருக்க
பயன்படும் .
சிலருக்கு மருதாணி இட்டுக் கொண்டால்
சளி பிடித்து விடும் .
இதற்கு மருதாணி இலைகளை அரைக்கும்
போது கூடவே 7 அல்லது 8
நொச்சி இலைகளை சேர்த்து அரைத்து வைத்துக்
கொள்ளலாம் .
வாய்ப் புண், அம்மை நோய்
ஆறாத வாய்ப்புண் அம்மைப் புண்
ஆகியவற்றிற்கு இதன் இலையை அரைத்து நீரில்
கரைத்து வடித்து வாய் கொப்பளிக்கலாம் .
அரைத்து அம்மைப் புண்களுக்குப் பூசலாம். 3-5
நாளில் குணமாகும். கட்டிகளுக்கும்
அரைத்துப்பற்றிடலாம்.
இளநரையை அகற்றும் இன்றைய இளைய
தலைமுறையினருக்கு உள்ள ஒருசில
பிரச்னைகளில் இளநரையும் ஒன்று .
இதற்கு மருதாணியைக்
கொண்டு இயற்கை முறையில் எளிதாகத்
தீர்வு காணலாம் .
மருதாணி இலை அரைத்து அதன்
விழுதை ஒரு கப்பில் எடுத்து வைத்துக்
கொள்ளவும் . அத்துடன் எலுமிச்சம்பழச்சாறு, 2
ஸ்பூன் தேங்காய் எண்ணெய் மற்றும் 2 ஸ்பூன்
நெல்லி முல்லி பொடி ஆகியவற்றை, ஒரு கப்
தயிருடன் கலந்து கொள்ளுங்கள்.இந்த
கலவையை இரவு முழுவதும் ஒரு பாத்திரத்தில்
மூடி வைத்துவிட வேண்டும் .
பின்னர், இதனை காலையில்
எழுந்து தலை முடியில் தேய்த்துக் கொள்ள
வேண்டும் .
சுமார் ஒன்று முதல் ஒன்றரை மணி நேரம்
வரை காய வைத்துவிட்டு , பின்னர் சீயக்காய்
தேய்த்து குளிக்க வேண்டும்.
இப்படி வாரத்திற்கு ஒருமுறை செய்து வந்தால்,
தலையில் உள்ள இளநரை மறைந்துவிடும்.
தூக்கமின்மையை போக்கும்
மருதாணிப் பூவினை ஒரு துணியில் சுற்றி,
தலைமாட்டில் வைத்துப் படுத்தால் தூக்கம் வரும்.
பூவின் மணம் தூக்கத்தை வரவழைக்கும்.
ஒருசிலருக்கு இம்மணம்
தலைவலியை உண்டாக்கும்.
மாப்பில்லி சூனியம், விருத்தாண்ட பேய் பூதம்,
மேவும்" என்று அகத்தியர் கூறுகின்றார்.
இது சனி பகவான் மூலிகை என்பதால் பேய்,
பூதம், துஷ்ட தேவதை விலகிவிடும். இதன்
பூவையும், உலர்ந்த காயையும் தூள்
செய்துசாம்பராணியுடன் கலந்து புகைக்க பேய்,
பூதம் விலகி ஓடும். பில்லி, சூனியம்
நம்மை அண்டாது என்பது நம்பிக்கை.
அழகே ஆபத்தாகும்
இளம் பெண்கள் தங்கள் அழகை மேலும் மெருகூட்டிக்
கொள்ள மருதாணி , டாட்டூஸ்
வரைந்து கொள்வதை நவீன நாகரிகமாக
கொண்டிருக்கிறார்கள் .
இப்படி மருதாணி வரைந்து கொள்வது லுக்கேமியா என்னும்
ஒருவித புற்றுநோய்க்கு வழிவகுப்பதாக
ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது .
வெளிநாட்டில் வசிக்கும் பெண்களைவிட இங்குள்ள
பெண்கள் 63 சதவீதமும், இருபாலரும் 78
சதவீதம் அதிகமாக இந்த புற்றுநோயால்
பாதிக்கப்பட்டுள்ளனர் .
இதற்கு என்ன காரணம் என்று ஆராயப்பட்டதில்
கைகளில் அழகிற்காக வரைந்து கொள்ளும்
மருதாணி ஒரு வகையில் காரணமாக
இருப்பது கண்டறியப்பட்டது . மருதாணியில்
உள்ள ரசாயனங்கள் இந்த நோய் தாக்க வாய்ப்பாக
அமைகிறது . மேலும் அவர்களின் உடலில் சூரிய
ஒளி படுவது குறைவாக இருப்பதும் காரணம்
என்று தெரிகிறது .

அழகே வா... அருகே வா..!

அழகே வா... அருகே வா..!

ழகாக ஜொலிக்க விரும்புகிறீர்களா? உங்களுக்குத்தான் இந்த ஐடியாக்கள்...
* ஒரு நாளைக்கு குறைந்தது 3 லிட்டர் தண்ணீர் பருகுங்கள்.
* ஆறு, ஏழு மணி நேரம் தூக்கம் அவசியம். (செல்போனை நோண்டிக் கொண்டிருப்பது, சீரியல்களில் மூழ்கிவிடுவதை தவிர்த்தாலே தூங்க நேரம் கிடைக்கும். நன்றாக தூக்கமும் வரும்.)
* நார்ச்சத்து உணவுகள் அதிகமாக உட்கொள்ளுங்கள். பச்சைக் காய்கறிகளைச் சமைக்காமல் சாலட் செய்து சாப்பிடவும்.
* தினமும் இருமுறை குளிக்க வேண்டும். எத்தனை அசதியாக, சோம்பலாக இருந்தாலும் படுக்கைக்குச் செல்லும் முன் குளித்துவிட்டுப் படுக்கவும்.
* உடலுக்கும் தலைமுடிக்கும் தொடர்ந்து ஒழுங்காக எண்ணை தேய்க்கவும். அழகு சாதன பொருட்களை உபயோகித்தால் அவை மருத்துவத்தன்மையும், (ஹெர்பல்), இயற்கை தன்மையும் மிகுந்ததாக இருக்க வேண்டும்.

மருத்துவ குணங்கள் நிறைந்த கடுகு

*கடுகிற்கு ஏராளமான மருத்துவ குணங்கள்
உள்ளன.
*ஜீரணத்திற்கு மிகவும் உதவுகிறது கடுகு.
‌*தினமும் காலையில் வெறும் வயிற்றில்
கடுகு, ‌மிளகு, உப்பு மூன்றையும்
ஒரே அளவு சேர்த்து சாப்பிட்டுவிட்டு
அதன்பிறகு வெந்நீர் குடிக்க வேண்டும்.
இப்படி செய்வதால் ‌பித்தம், கபம் போன்றவற்றால்
ஏற்படும் உடல் உபாதைகள் ‌நீங்கும்.
‌*விஷம், பூச்சி மருந்து, தூக்க
மாத்திரை போன்றவற்றை சாப்பிட்டவர்களுக்கும்,
2 ‌கிராம் கடுகை ‌நீர்விட்டு அரைத்து ‌நீரில்
கலக்கி உட்கொள்ளக் கொடுத்தால் உடனடியாக
வாந்தி எடுத்து ‌விஷம் வெளியேறும்.
*தேனில் கடுகை அரைத்து உட்கொள்ளக்
கொடுக்க இருமல், கபம், ஆஸ்துமா குணமாகும்.

மனப்புயலை அடக்கிவிடு - பகவத் கீதை ஆன்மிக சிந்தனைகள்

* தீயில்புகுந்தால் சுடாமலும், தண்ணீரில் குளித்தால் குளிராமலும், இரண்டிலும் ஒரே நிலை தோன்றுவதே சமநிலையாகும். இந்த சமநிலையில் தன்னைத்தானே ஈடுபடுத்தி அமைதியாக வாழ்பவன், ஜீவாத்மா வடிவில் உள்ள பரமாத்மாவாகும்.

 

* சர்வ கலை ஞானத்தாலும், அனுபவ ஞானத்தாலும் மனநிம்மதி அடையப் பெற்றவனும், எதற்குமே ஈடுகொடுத்து ஐம்புலன்களையும் வென்றவனும், பொன், கல், மண் ஆகிய மூன்றையும் ஒன்றாக மதிப்பவனுமே யோகியருக்கெல்லாம் தலைசிறந்த யோகியாகிறான்.

 

* எந்தவிதமான பிரதிபலனும் எதிர்பாராமல் அன்பு கொண்டவர்கள், நண்பர்கள், தன்னை எப்போதும் அலட்சியப் படுத்துபவர்கள், நடுநிலையாளர்கள், தன்னையே வெறுப்பவர்கள், சுற்றத்தார், நல்லோர், தீயோர் எல்லாரிடமும் ஒரே நிலையில் நடந்து கொள்பவர்கள்தான் உத்தமமானவர்கள்.

 

* ஆசையே இல்லாதவன் யோகி. தன் சொத்து, சுகங்களை துறந்தவன் யோகி. பசித்திருந்து, தனித்திருந்து, விழித்திருந்து அதிலே இனிமை காண்பவன் யோகி. இத்தகையானது ஆத்மாவே யோகாத்மா ஆகிறது. இந்த நிலையை அடைய உன் மனப்புயலை அடக்க வேண்டும்.

 

* வயிறுமுட்ட சாப்பிடுகிறவனுக்கு யோகம் கிட்டாது. அதுபோல, எப்பொழுதும் உண்ணாமல் இருப்பவனுக்கும், கால நேரமின்றி தூங்குகிறவனுக்கும், விடிய, விடிய விழித்துக் கொண்டிருப்பவனுக்கும் யோகம் கிட்டுவதில்லை.

 

* சாப்பிடுவதிலும், நடமாடுவதிலும், தூங்குவதிலும், விழித்திருப்பதிலும் அளவாக இருப்பவன் துன்பம் இல்லாமல் இருப்பான்

 

குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா!

 

குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா!


எம். எஸ். பாடின இந்தப் பாட்ட கேட்டுருக்கீங்களா? ரொம்ப உருக்கமான பாட்டு.


குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா
குறை ஒன்றும் இல்லை கண்ணா
குறை ஒன்றும் இல்லை கோவிந்தா (குறை)

கண்ணுக்குத் தெரியாமல் நிற்கின்றாய் கண்ணா
கண்ணுக்குத் தெரியாமல் நின்றாலும் எனக்கு
குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா
வேண்டியதை தந்திட வேங்கடேசன் என்றிருக்க
வேண்டியது வேறில்லை மறைமூர்த்தி கண்ணா
மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா

திரையின் பின் நிற்கின்றாய் கண்ணா -
உன்னை மறை ஓதும் ஞானியர் மட்டுமே காண்பார்
என்றாலும் குறை ஒன்றும் எனக்கில்லை கண்ணா
குன்றின் மேல் கல்லாகி நிற்கின்ற வரதா
குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா
மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா

கலிநாளுக்கிரங்கி கல்லிலே இறங்கி
நிலையாக கோவிலில் நிற்கின்றாய் கேசவா
யாதும் மறுக்காத மலையப்பா உன் மார்பில்
ஏதும் தர நிற்கும் கருணைக் கடல் அன்னை
என்றும் இருந்திட ஏது குறை எனக்கு
ஒன்றும் குறை இல்லை மறைமூர்த்தி கண்ணா
மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா
 ================================
கண்ணன் குந்தி தேவிக்கிட்ட என்ன வரம் வேணும்ன்னு கேட்டப்ப, 'எனக்கு எப்பவும் ஏதாவது கஷ்டம் இருக்கணும்'ன்னு வரம் கேட்டாங்களாம். கண்ணன் ஆச்சரியமாய் 'ஏம்மாஎல்லாரும் கஷ்டமே வரக்கூடாதுன்னுதான் வரம் கேப்பாங்கநீங்க கஷ்டம் வேணும்ன்னு கேக்கறீங்களே'ன்னு கேட்டதுக்கு, 'கண்ணா. கஷ்டம் வர்ரப்பதான் மக்களுக்கு உன் நினைப்பே வரும். நான் எப்பவும் உன் நினைப்பாவே இருக்கணும்ன்னு நினைக்கறேன். அதான் அந்த வரம் கேட்டேன்'னு சொன்னாங்களாம்.

இந்தப் பாட்டுல 'நீயிருக்கிறப்ப எனக்கு எந்த குறையும் இல்ல' அப்படின்னு இராஜாஜி எழுதியிருக்கார்==========================
M .S 
அம்மா  பாடுன ஒரு 84 பாடல்கள் - track லிங்க் இங்கே கீழே இருக்கு.  மனசு கொஞ்சம் உற்சாகமாகணும்நெனைச்சா கேட்டுப் பாருங்க..

Click the following link to hear M .S . Songs :
M.S. Subbulakshmi songs

 

 

எல்லா உயிரும் நம் உயிரே!

தீபாவளியன்று தான்மகான் மகாவீரர் மகாநிர்வாணம் (முக்தி) அடைந்தார். இந்த இனியநாளில் அவரது பொன்மொழிகளைக் கேட்போமே! 
*
எல்லா உயிர்களையும் தன்னுயிராக நேசிக்கப் பழகுங்கள். கொல்லாமை என்னும் நெறி பல வகையான சுகங்களையும் அளிக்க வல்லது. அச்சத்திலிருந்தும் பகையுணர்விலிருந்தும் விடுபட்டவன் எந்த உயிருக்கும் துன்பம் தர விரும்ப மாட்டான்.
*
வாய்மை சந்திர மண்டலத்தை விட மிகவும் தூய்மையானது. சூரிய மண்டலத்தைக் காட்டிலும் ஒளி மிக்கதாகும்.
*
பிறருக்கு கொடுக்காமல் எந்தப் பொருளையும் உண்ணாதீர்கள். ஒருவருடைய அனுமதி இல்லாமல் அவரருக்குரி யதை எடுப்பதும் கூடாது. 
*
எந்தப் பேச்சானது கடினமானதோ, மற்றவருக்கு துன்பம் தருவதோ அப்பேச்சைத் தவிர்ப்பதே நல்லவர்களின் குணமாகும்.
*
மனம் விரும்பியதை அடையாவிட்டால் தளர்ந்து போய் விடுதல் கூடாது. வேண்டாத ஆசைகளை மனதில் இருந்து அகற்றிவிடுங்கள்.
*
நல்ல விரதம் பூண்ட சாதனையாளர்கள் குறைவாகப் புசிப்பதோடு, அளவாகவே பேசவும் செய்வர்.
*
சந்தேக மனப்பான்மை கொண்ட மனிதன் எப்போதும் உயர்வு நிலை பெறுவதில்லை.
*
பணத்தை அமிர்தம் என்று நினைத்து தேட முற்படுபவர்கள் பாவச் செயல் மூலம் அதைப் பெறுகிறார்கள். இத்தேடலே அவர்களை மரணவாசலுக்கு அழைத்துச் சென்று விடும்.
*
கோபம், பொறாமை, நன்றியின்மை, வீண்பிடிவாதம் ஆகிய குணங்களில் ஒரு குணம் நம்மிடம் இருந்தாலும் நற்குணங்கள் அனைத்தும் அழிந்துவிடும்.
*
நீங்கள் இல்லறத்தில் இருந்தாலும், துறவறத்தில் இருந்தாலும் ஒழுக்கமில்லாவிட்டால் ஒரு பயனும் இல்லை. நற்கதியை அடைய ஒழுக்கமே ஆதாரமாகத் திகழ்கிறது.
*
அறவழியில் நடப்பவரைக் கண்டால் அங்கேயே அவரை வணங்குங்கள். நோயாளிக்குச் சேவை செய்வதில் ஆர்வம் கொள்ளுங்கள். பிறரின் நலனுக்காகவும், சுகத்திற்காகவும் பாடுபடுபவன் இறுதியில் தனக்குத் தானே சுகத்தைத் தேடிக் கொண்டவனாவான்.
*
ஆறுவகையான பேச்சுக்களைப் பேசக் கூடாது. பொய், கடினத்தன்மை, யோசிக்காத தன்மை, எரிச்சல், திரித்துக்கூறல், சண்டையைத் தூண்டுவது ஆகிய ஆறுவகையான குற்றங்களைக் களைந்து நாம் பேச வேண்டும்.