Pages

பாவங்களை குறைக்க என்ன வழி? தானங்களும் அவற்றின் பலன்களும்..

http://lh6.ggpht.com/_dWvY9THb98I/StC-posTInI/AAAAAAAAAi0/TlmaEPCh_7g/DSCF1720.JPG

நீரிழிவு நோய் யாருக்கெல்லாம் வரும்?


இனம், மொழி, பாலினம், ஏழை, பணக்காரன் என்ற வித்தியாசமும் இன்றி எவருக்கு வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் நீரிழிவு நோய் வரலாம். ஆயினும் பல ஆய்வுகளின் முடிவாக யார் யாருக்கு நீரிழிவு நோய் வரும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது எந கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
வயது – ஒரு குழந்தைக்கு அல்லது இலவயதினருக்கு வருவதைவிட முதிர்ந்த வயதினருக்கு வரும் வாய்ப்புகள் அதிகம்.
அமெரிக்க நீரிழிவு நோய் கழக ஆய்வுகளில் ஒவ்வொரு வயதிலும் நீரிழிவு நோய் உள்ளவர்களின் சதவிகிதம் கீழ்கண்டவாறு தெரிகிறது.

கொழுப்பை குறைக்கும் சாக்லெட்


சாக்லெட் பிரியர்களுக்கு ஒரு இனிப்பான செய்தி. ஆம். சாக்லெட் சாப்பிட்டால் கொழுப்புச் சத்து குறையும் என்கிறது ஒரு ஆய்வு முடிவு.
சாக்லெட் உடல் நலனுக்கு நல்லது என ஏற்கனவே பல்வேறு ஆய்வு முடிவுகள் கூறியுள்ளன. இதயத்துக்கு நல்லது என சில ஆய்வாளர்களும்,மன அழுத்த்த்தைக் குறைக்கும் என மற்றும் சில ஆய்வாளர்களும் ஆய்வு முடிவுகளை மேற்கோள் காட்டி தெரிவித்துள்ளனர்.

உயர் ரத்த அழுத்தத்தை குறைக்கும் மீன் எண்ணெய்


உடல் பருமனாக உள்ளவர்கள் உயர் ரத்த அழுத்த்தைக் குறைப்பதில் மீன் எண்ணெயின் பங்கு குறித்து ஒரு ஆய்வு நடைபெற்றது. உடல் பருமனாக உள்ள 13 முதல் 15 வயதுக்குட்பட்ட 78 இளைஞர்கள் இரண்டு பிரிவாக பிரக்கப்பட்டனர்.
ஒரு பிரிவினருக்கு தினமும் பிரெட் உடன் 13 கிராம் மீன் எண்ணெய் சேர்த்து வழங்கப்பட்டது. இதுபோல் மற்றொரு பிரிவினருக்கு பிரெட் உடன் வெஜிடபிள் ஆயில் வழங்கப்பட்டது. பின்னர் 18 வாரங்கள் கழித்து அவர்களின் ரத்த அழுத்தம் மற்றும் கொழுப்பின் அளவு பரிசோதிக்கப்பட்டது.

பச்சரிசி சாப்பிட்டால் டயபடீஸ் வரலாம் – ஆய்வில் தகவல்


முற்றிலும் இயற்கையாக தோல் நீக்கிய கைக்குத்தல் அரிசியைத் தவிர்த்து பச்சரிசி உணவை சாப்பிடுவதால் டயபடீஸ் ஆபத்து அதிகரிக்கும் என்று அமெரிக்க ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பச்சரிசி உணவு குறித்து ஹாரவேர்ட் பல்கலைக்கழக பொது சுகாதாரத் துறை ஆய்வு நடத்தியது அதில் கூறியதாவது...
பச்சரிசி உணவை சாப்பிடுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஆசியர்கள் மட்டும் அதிகளவில் பயன்படுத்திய நிலை மாறி அமெரிக்காவிலும் பச்சரிசி உணவை ஏராளமானோர் பயன்படுத்துகின்றனர்.

மூட்டு வலியை போக்கும் நாவல் பழம்!


மூட்டு வலி, சிறுநீரக கல் உட்பட பல பிரச்சனைகளை நாவல் பழச்சாறு குணப்படுத்தும் என்று நியூசிலாந்து ஆராய்ச்சி விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
நியூசிலாந்தில் உள்ள ப்ளான்ட் அண்ட ரிசர்ச் இன்ஸ்டிடியூட்டை சேர்ந்த விஞ்ஞானி ரோஜர் ஹர்ஸ்ட் தலைமையிலான குழுவினர், மனித உடலுக்கு நாவல் பழம் அளிக்கும் நன்மைகள் பற்றி விரிவான ஆராய்ச்சி செய்தனர். நாவல் பழச்சாறை தொடர்ந்து 10 பேருக்கு அளித்து வந்து பல்வேறு பரிசோதனைகளை செய்தனர்.

குழந்தைகளுக்கும் அவசியம் உடற்பயிற்சி !


கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு, எல்லா துறைகளும் சிறப்பாக அமைய வாய்ப்பு உள்ளது. வேலைவாய்ப்பு, சம்பளம், சந்தர்ப்பங்கள், பொருளாதாரம் என, எதிலும் ஏற்றம் காணப்படுகிறது. எனவே, ஆரோக்கியத்தில் மக்கள் கவனம் செலுத்தும் நேரம் வந்து விட்டது. உடற்பயிற்சி செய்வது ஒன்றே, ஆரோக்கியத்திற்கான சிறந்த வழி. "உடற்பயிற்சியை எப்படி துவங்குவது. 100 மீட்டர் எல்லாம் என்னால் நடக்க முடியாது' என, மக்கள் சொல்வது தெரிகிறது. சிறு வயது முதலே, நடைபயிற்சியை துவங்க வேண்டும்.

மாரடைப்பு நோயை தடுக்கும் வெங்காயம்


வெங்காயத்தை அப்படியே சாப்பிட்டால் உடம்புக்கு நல்லது என்று ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது. வெங்காயத்தை சாப்பிட்டால் ரத்தத்தில் உள்ள கொழுப்புகளை கரைத்து, நோய் எதிர்பபு சக்தி அதிகமாக வாய்ப்பு உள்ளதாக கூறுகிறது தகவல்.
வெங்காயத்தின் தன்மை மற்றும் பயன்கள் குறித்த ஆய்வு ஒன்றை பார்சிலோனா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் சமீபத்தில் நடத்தினர். இந்த ஆய்வில் பச்சையாக உட்கொள்ளப்படும் வெங்காயம் மனித உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை விரைவாக அதிக அளவில் தூண்டுகிறது என்ற உண்மை உறுதி செய்யப்பட்டுள்ளது.

வேதங்களின் தாய்


சந்தியா, சாவித்திரி, காயத்ரி, சரஸ்வதி - இவர்கள் நான்கு பேரும் சந்தியாவந்தன வழிபாட்டில் சிறப்பிடம் பெறும் தெய்வங்கள். வைதீக வழிபாட்டில் காயத்ரி தேவிக்கு அதிக முக்கியத்துவம் உண்டு.
சூரியனுக்கு ஒளி தருமாறும், உலகுக்கெல்லாம் ஞான ஒளி கொடுக்குமாறும் வேண்டும் மந்திரமே காயத்ரி மந்திரம். காயத்ரி என்றால் எவரெல்லாம் தன்னை ஜெபிக்கிறார்களோ அவர்களைக் காப்பாற்றுவது என்று பொருள்.    `காயத்ரீம் சந்தஸாம் மர்தா' என்பது ஒரு வாக்கியம். இந்த தொடரில் உள்ள `சந்தஸ்' என்பது வேதத்தைக் குறிக்கிறது. வேத மந்திரங்களின் தாய் காயத்ரி மந்திரம் என்பது இந்தத் தொடரின் பொருள்.
காயத்ரி மந்திரம் 24 எழுத்துக்களையும், மூன்று பாதங்களையும் கொண்டது. அதனால் இந்த மந்திரத்தைத் `திரிபதா' என்பார்கள்.

கற்பூர தீப ஆராதனை சொல்வது என்ன?


கோவில்களில் தெய்வங்களுக்கு கற்பூர தீப ஆராதனை செய்வதைப் பார்த்து இருப்பீர்கள். இது ஏன் தெரியுமா?
கோவில் மூலஸ்தானத்தின் கருவறையானது காற்று, ஒளி எளிதில் உட்புக முடியாதபடி அமைக்கப்பட்டிருக்கும். அதனால் அங்கு ஒருவிதமான இருள் சூழ்ந்த நிலை காணப்படும்.
நடை திறந்து திரை விலகி மணி ஓசையுடன் தீபாராதனை நடைபெறும்போது இருள் நிறைந்த மூலஸ்தானத்தின் இருளானது நீங்கி தூய ஒளிப்பிளம்பான இறைவனை நாம் காணலாம்.
இதேபோல் அலைபாயும் நம் உள் மனதிலும் இறைவன் உறைந்திருப்பான். அப்படி இருக்கும் இறைவனை உலக இன்பங்கள் என்ற எண்ணங்களான இருள் மூடி இருக்கும். அந்த இருள் அகன்றால்தான் நம் உள் மனதில் உள்ள இறைவனைக் காண முடியும். இதையே கற்பூர தீப ஆராதனை உணர்த்துகிறது.

தமிழர் சமையல் உலகின் சிறந்த சமையல் கலைகளில் ஒன்றாகும்


உலகம் முழுவதும் பலவிதமான உணவு முறைகளை மனிதர்கள் கடைபிடிக்கிறார்கள். தமிழர்களும் தங்களுக்கென தனிப்பாணி சமையல் முறையைக் கொண்டிருந்தனர். கலாசாரம், மொழி எல்லாவற்றிலும் கலப்பு ஏற்பட்டுவிட்டன. இதற்கு உணவுப் பழக்க வழக்கமும் விதிவிலக்கல்ல. இருந்தாலும் சமையல் மற்றும் உணவு, உணவுப் பழக்க வழக்கத்தில் தமிழருக்கான தனிச்சிறப்புகள் நிறையவே இருக்கின்றன.
தமிழர் சமையல், உலகின் சிறந்த சமையல் கலைகளில் ஒன்றாகும்.

புற்றுநோயின் பத்து பகைவர்கள்


புகையிலை, மிதமிஞ்சிய சூரிய ஒளி, பணிபுரியும் இடங்களில் வெளிப்படும் வேதிப்பொருட்கள், நச்சுவாயுக்கள் இவற்றையெல்லாம் புற்றுநோய் தோன்றுவதற்குரிய காரணங்களாக கூறமுடியும். இவற்றையெல்லாம் தவிர்த்து வாழ்வதே புற்றுநோயில் இருந்து நம்மை காப்பாற்றிக் கொள்வதற்குரிய எளிய வழியாகும். இவற்றையன்றி நாம் உட்கொள்ளும் சில உணவு வகைகளும் புற்றுநோய் எதிர்ப்புத்தன்மை கொண்டுள்ளன. இந்தக்கட்டுரையில் பத்துவிதமான உணவுப்பொருட்கள் புற்றுநோயில் இருந்து நம்மை காக்கக்கூடியவை என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
strawberry1. மாதுளம்பழம், ராஸ்பெர்ரி, ஸ்ட்ராபெர்ரி போன்ற கனிகள் ellagic acid மற்றும் polyphenol antioxidants ஆகிய வேதிப்பொருட்களைக் கொண்டுள்ளன. இந்த வேதிப்பொருட்கள் உடல் பாகங்களில் கட்டிகள் வளருவதை தடுக்கும் ஆற்றல் உடையவை. உச்சரிக்க இயலாத கனிகளின் பெயர்களை எண்ணி குழப்பமடையத்தேவையில்லை. அந்தந்த பருவங்களில் கிடைக்கக்கூடிய கனிகளை சீராக உண்டு வருவதால் புற்றுநோய் எதிர்ப்பு சக்தியை நமது உடல் பெறும் என்கிறார்கள் வல்லுநர்கள்.

தோஷம் போக்கும் பிரதோஷம்


இரவும் பகலும் சந்திக்கின்ற நேரத்திற்கு `உஷத் காலம்' என்று பெயர். உஷத் காலத்தை பகற்பொழுதின் முகம் என்று சொல்வார்கள். இந்த வேளையின் அதிதேவதை சூரியனின் மனைவியாகிய உஷா. அவளது பெயரிலேயே இது உஷத்காலம் என அழைக்கப்படுகிறது.
இதற்கு நேர் எதிராக பகலும் இரவும் சந்திக்கும் நேரம் `பிரத்யுஷத் காலம்' எனப்படும். சூரியனின் இன்னொரு மனைவியாகிய பிரத்யுஷா இக்காலத்திற்கு அதி
தேவதை என்பதால் அவள் பெயரால் இது அழைக்கப்பட்டு, இப்போது பேச்சு வழக்கில் "பிரதோஷ காலம்" என அழைக்கப்படுகிறது என்பார்கள்.
பிரதோஷ வேளையை "ரஜ்னிமுகவேளை''

அளவுக்கு மீறினால் காபியும் நஞ்சு


மெட்ராஸ் ஃபில்டர் காபி, கும்பகோணம் டிகிரி காபி, டிக்காக்ஷன் காபி, வடிகட்டாத எஸ்ப்ரஸ்ஸோ காபி, இன்ஸ்டன்ட் காபி, மைசூர்  மங்களூர் காபி, பிளாட்பாரக் காபி என்று காபிகள் பல ரகம்.
இந்தக் காபியைக் கண்டுபிடித்தது நோபல் விஞ்ஞானிகள் அல்ல. காபி நிறத்தில் ஓர் இடையர். முன்னொரு காலத்தில் அபிசீனியா நாட்டில் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த கால்தி என்பவர். அவர் மேய்த்துச் சென்ற ஆட்டு மந்தை காட்டில் எதையோ தின்றுவிட்டு அதிக உற்சாகத்துடன் துள்ளி ஓடி ஆடி நடந்தன. "இது என்னடா, ஆட்டுக் கூட்டம் துள்ளாட்டம் போடுதே"!

சர்க்கரை நோயாளிகளுக்கு நல்ல உணவு வேர்க்கடலை!


மகாத்மா காந்திக்கு மிகவும் பிடித்தமான உணவு ஆட்டுப் பாலும் வேர்க்கடலையும். வேர்க்கடலையில் அப்படியென்ன இருக்கிறது? என்று கேட்கிறீர்களா? உங்களுடைய கேள்விகளுக்கான பதிலை பிரபல ஊட்டச்சத்து நிபுணர் அனிதா அவர்கள், "சர்க்கரை வியாதி, இரத்த அழுத்தம், புற்றுநோய், நரம்புமண்டல நோய்கள், ஞாபக மறதி நோய் போன்ற பல நோய்களைத் தடுக்கும் சக்தி வேர்க்கடலைக்கு உள்ளது" என்றார்.
தஞ்சை "பாரத் காலேஜ் ஆஃப் சயின்ஸ்

இதய நோய்களிலிருந்து தப்பிக்க வேண்டுமா?


எடையை குறையுங்கள், உடற்பயிற்ச்சி செய்யுங்கள், புகைக்காதீர்கள், கொழுப்பு சத்துள்ள உணவுகளை அதிகம் உண்ணாதீர்கள், நார்ச் சத்துள்ள காய்கறிகளை அதிகம் உண்ணுங்கள், டென்ஷன் அடையாதீர்கள்! என்று தான் எல்லா டாக்டர்களும் அட்வைஸ் பண்ணுகின்றனர்.
தற்போது நீங்கள் உணவு உண்ணும் பழக்கத்தை மாற்றிக் கொள்வதன் மூலம் இதய நோய்க்குரிய சூழலிருந்து தப்பிக்கலாம் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

பக்தி இருந்தால் மோட்சம் கிடைக்கும் !ஈஸ்வரனிடம் பக்தி செய்வதில் பல விதங்களைச் சொல்லி இருக்கின்றனர். தன் புருஷனிடம் எவ்வளவு பக்தியும், பிரேமையும் ஒரு பதிவிரதை வைத்திருக்கிறாளோ, அதேபோல், ஈசனிடத்திலும் ஒரு பதி விரதை போல், பக்தியோடு இருப்பான் பக்தன் என்றனர். இங்கு புருஷன் என்று சொல்லக் கூடியவர், விஷ்ணு அல்லது நாராயணன் எனப்படும் ஒருவரே. மற்ற எல்லாரும் புருஷர்கள் போலிருந்தாலும், ஸ்த்ரீகள் தாம் என்று சொல்லப்பட்டுள்ளது. பகவானை, புருஷனாக எண்ணி பக்தியும், வழிபாடும் செய்யச் சொல்லி இருக்கிறது.

நமக்கு ரத்தக் கொதிப்பு உள்ளது என்பதை அறிய எளிய வழிகள்

 பொதுவாக நமது ரத்த அழுத்தம் 120/80 என்ற அளவில் இருந்தாக வேண்டும். இந்த அளவு கூடும்போது, அதாவது 140/90 என்பதை தாண்டும்போது அதை ரத்தக் கொதிப்பு Hyper tension என்பர். இந்த வியாதி உள்ள பலருக்கு அறிகுறியே இல்லாமல் இருக்கலாம். எனவே அதை சைலன்ட் கில்லர் என்றும் குறிப்பிடுவர். மற்றும் சிலருக்கு ரத்த அழுத்தம் சிறிதளவு கூடினாலே தலைவலி, தலைச்சுற்றல், தலைபாரமாக இருத்தல், மயக்கம் ஏற்படலாம்.

ஏனோதானோவென்று தியானம் செய்தால் போதுமா ?ஒருவர் ஜெபம், தியானம் என்று நெடு நேரம் செய்கிறார். இதில், முக்கியமானது மந்திரத்தின் எண்ணிக்கை மட்டும் தானா அல்லது வேறு ஏதாவது உள்ளதா என்பதை பொருத்தே நேரம் கூடும் அல்லது குறையும். ஜெபம் செய்யும் போது, அந்த ஜெப மந்திரத்துக்கு அதிபதியான தேவதை எதுவோ, அதையும் மனதில் நிறுத்தி, ஜெபம் செய்ய வேண்டும். சாதாரணமாக காயத்ரி ஜெபம் செய்கின்றனர். அதையே திருப்பித் திருப்பி ஜெபம் செய்து விட்டு, "நான் ஆயிரத்தெட்டு காயத்ரி ஜெபம் செய்கிறேன்; ஒரு லட்சம் காயத்ரி ஜெபம் செய்கிறேன்...' என்றால் மட்டும் போதாது.
ஜெபம் செய்ததற்கு பலன் உண்டு. ஆனாலும், இந்த காயத்ரி தேவியின் உருவம், நிலை, ஆடை, ஆபரணம், ஆயுதங்கள் இவைகளைப் பற்றியும் சொல்லப்பட்டுள்ளது. அந்த மாதிரி உருவத்தை மனதில் பதிய வைத்து, ஜெபம் செய்வது நல்லது. அடுத்து,

தினமும் முடிந்தளவு நிறைய தண்ணீர் குடிப்பது அவசியம்


சிலருக்கு அடிக்கடி தலைவலி வரும். அப்படி தலைவலியால் அவதிப்படுபவர்களை டாக்டர் அடிக்கடி நிறைய தண்ணீர் குடிக்குமாறு ஆலோசனை கூறுவார். ஏன் தெரியுமா? நமது உடலில் உள்ள தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டால் உடனே ஏற்படுவது தலைவலிதான்! தினமும் முடிந்தளவு நிறைய தண்ணீர் குடிப்பது அவசியம் என்கிறார்கள் உணவு ஆராய்ச்சியாளர்கள்.
`மனித இனத்தை ஆரோக்கியமாக வைத்திருப்பது சூரிய ஒளி பட்ட தண்ணீர்தான்' என்று கூறியுள்ளார் ஹிப்போக்ரேடிஸ். இவர் மருத்துவ உலகின் தந்தையாக போற்றப்படுபவர்.
இங்கிலாந்தில் சில மருத்துவமனைகளில் தண்ணீர் சிகிச்சைகள் செய்யப்படுவது தற்போது பிரபலமாகி வருகிறது.
`சூரிய ஒளி பட்ட நீரைக் குடிக்கும்போது அதன் ஒவ்வொரு சொட்டிலும் சூரியசக்தி பரவி 30 சதவீதம் கூடுதலான ஆக்ஸிஜனும்,

அவசியமான காய்கறிகள்..!

பனிக்காலத்தில் இயல்பாகவே நமது உடல் மிகவும் சூடாக இருக்கும். அப்போது நமது உடம்பின் உஷ்ணத்தை சமன்படுத்த, குளிர்ச்சியான காய்கறிகளை சாப்பிடுவது அவசியம். பனிக்கால பிரச்சினைகளான இருமல், காய்ச்சல், ஜலதோஷம் ஆகியவை ஏற்படாமல் கீழ்கண்ட காய்கறிகள் நம்மை பாதுகாக்கும்.
வெண்டைக்காய் : குளிர்ச்சியான தன்மை கொண்டது வெண்டைக்காய். இதனுடன் சீரகம் சேர்த்து சமைப்பது நல்லது. இது வறண்ட குடலைப் பதப்படுத்தும். இதில்

சிறு நீராக செயலிழப்புகள்

தெய்வ தரிசனம்: சிவ புராணம் --திருவாசகம்

மகிழ்ச்சி (அழகு) தரும் இனிய டிப்ஸ்

பயத்தம்பருப்பு ஃபேஸ் பேக்கைப் போட்டுப் பாருங்கள்...
"அஹா.... இது என் முகம் தானா?" என்று ஆனந்த அதிர்ச்சியில் சிலையாகி நிற்பீர்கள்.
தோலுடன் முழு பச்சை பயறு  2 டேபிள் ஸ்பூன். எலுமிச்சை இலை  1 (நடு நரம்பை அகற்றிவிடவும்), வேப்பிலை  1. துளசி  4. பூலான் கிழங்கு  1. ரோஜா மொட்டு  2. கசகசா  அரை சிட்டிகை. இவற்றை முந்தைய நாள் இரவே தயிரில் ஊறவைத்து. மறுநாள் அரைத்து பேஸ்டாக்கிக் கொள்ளுங்கள். இதனுடன்.

புற்றுநோயை தூண்டுகிறது - சிகரெட் பிடித்த 15 நிமிடத்தில் மரபணு பாதிக்கும்

சிகரெட் பிடிப்பது உடல் நலத்துக்கு தீங்கானது. புற்றுநோய் ஏற்படும் என பிரசாரங்கள் செய்யப் படுகின்றன. அதே நேரத்தில் சிகரெட் பிடித்த 15 நிமிடத்திற்குள் புற்றுநோய் தூண்டப்படுகின்றது என்ற புதிய தகவல் வெளியாகி உள்ளது.  சிகரெட் புகைத்தவுடன் புகையிலையில் உள்ள பாலிசைக்ளிக் அரோமேடிக் நைட்ரோ கார்பன் என்ற நச்சுப் பொருள் ரத்தத்தில் கலக்கிறது. அது மரபணுவில் பாதிப்பை ஏற்படுத்துகிறது.   இதை தொடர்ந்து சிகரெட் பிடித்த 15 முதல் 30 நிமிடங்களில் புற்றுநோய் தூண்டப்படுகிறது.
 
இதன்மூலம் நுரையீரலில் புற்றுநோய் உண்டாகிறது. நுரையீரல் புற்று நோயி னால் உலகம் முழுவதும் நாள் ஒன்றுக்கு 3 ஆயிரம் பேர் உயிரிழக்கின்றனர். இதுதவிர 18 வகையான புற்றுநோய் ஏற்படவும் சிகரெட் காரணமாக உள்ளது. எனவே சிகரெட் பிடிப்பவர்கள் அந்த பழக்கத்தை கைவிட வேண்டும் என ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன

முருகன் அவதாரம் ஏன்?

தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் இடையே ஏற்பட்ட போரில் தேவர்களால் அசுரர்களை அழிக்க முடியவில்லை. அவர்களை அழிக்க வேண்டி சிவபெருமானிடம் முறையிட்டனர். தங்களுக்கு தலைமை தாங்கிச் செல்லக்கூடிய ஆற்றல் வாய்ந்த, சக்திமிக்க ஒரு தலைவனை உருவாக்க வேண்டும் என்று அவர்கள் சிவபெருமானிடம் வேண்டினர்.
தேவர்களின் முறையீட்டை ஏற்ற சிவபெருமான், தனது தனிப்பட்ட சக்தியால் உருவாக்கிய அவதாரமே முருகப்பெருமான். சிவனின் நெற்றிக்கண்ணில் இருந்து வெளியான 6 தீப்பொறிகள் 6 அழகான ஆண் குழந்தைகளாயின. கார்த்திகைப் பெண்களால் அந்த குழந்தைகள் வளர்க்கப்பட்டு, பின்னர் ஆறு முகங்களுடன் கூடிய முருகப்பெருமான் உருவானார்.
அப்படிப்பட்ட முருகப்பெருமானுக்கு,

அல்சரை போக்கும் பச்சை வாழைப்பழம்

வயிற்றில் உள்ள குடல்களில் சுரக்கும் அமிலங்களும் நச்சுப் பொருட்களும் அரிப்பதன் காரணமாக குடல் புண் என்கிற அல்சர் ஏற்படுகிறது. பச்சை வாழைப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இந்த பாதிப்பில் இருந்து விடுபடலாம். குடல்களில் பழுதுபட்ட மெல்லிய சவ்வுத் தோல்களைச் விரைவில் வளரச் செய்து புண்ணை ஆற்றிவிடும் சக்தி பச்சை வாழைப்பழத்திற்கு உண்டு.
* வெண்டைக்காய் விதையைக் கொஞ்சம் பார்லி கஞ்சியில் போட்டு

மாணவர்களுக்கு நினைவாற்றல் மேம்பட

"பரீட்சைக்கு நல்லாத்தான் படிச்சேன். ஆனா தேர்வு அறைக்குள்ள நுழைஞ்சு வினாத்தாளை வாங்கிய உடனே எதுவுமே ஞாபகத்துக்கு வர மாட்டேங்குது. படிச்சது எல்லாம் மறந்து போகுது" என்று புலம்பும் மாணவச் செல்வங்கள் ஏராளம்.
"நினைவாற்றல் என்பது எல்லோருக்கும் பொதுவானதே. எல்லோருடைய மூளைக்குள்ளும் ஒரு நூலகம் போன்ற நினைவு அடுக்குகள் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் நீங்கள் தகவல்களை சேமிக்கும் முறையை வைத்து, உங்கள் நினைவுத்திறன் அமைகிறது" என்று விஞ்ஞானம் சொல்கிறது.

ஆஞ்சநேயரின் இரட்டைக் காட்சி

எந்த கோவிலிலும் ஒரே சன்னதியில் ஒரு தெய்வம் இரட்டையராக காட்சியளிப்பது இல்லை. ஆனால், ஒரு ஊரில் ஆஞ்சநேயர் இரட்டை ஆஞ்சநேயராக காட்சியளிக்கிறார்.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் மயிலாடுதுறை-பூம்புகார் சாலையில் காவிரி நதிக் கரையோரம் அமைந்துள்ள மேல்பாதிதான் அந்த ஊர்.
சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பு இங்கு ஓடும் காவிரி ஆற்றின் அக்கரைக்கு செல்ல இரு மனித குரங்குகள் மனிதர்களுக்கு உதவின. அங்கே பாலம் கட்டி முடித்ததும், அந்த இரண்டு குரங்குகளும் அங்கிருந்த இழுப்பை காட்டு திடலில் ஓய்வெடுத்தன. அப்போது, அந்த இடத்திலேயே ஐக்கிய மாகிவிட்டன. அந்த இடத்தில் எழுப்பப்பட்டதுதான் இந்த இரட்டை ஆஞ்சநேயர் கோவில்.

நெஞ்சுக்கு நிம்மதி, ஆண்டவன் சந்நிதி! (அர்த்தமுள்ள இந்துமதம் -கவியரசு கண்ணதாசன் )

பேச்சு மூச்சற்ற பேரின்ப வெள்ள முற்று
நீச்சுநிலை காணாமல் நிற்கும்நாள் எந்நாளோ!
இப்படி, சாவை அழைக்கவில்லை தாயுமானவர்;
எல்லாம் கடந்த பேரின்ப நிலையை அழைக்கிறார்.
சர்வாங்கமும் ஒருமுகமாகி இன்ப துன்பங்களைக் கடந்து நிற்கும் நிலையே பேரின்ப நிலையாகும்.

மூல நோய் முற்றிலும் குணமாக....

மருத்துவர் மு. சங்கர்
பெரும்பாலான மக்களை தாக்கும் நோய்களில் மூல நோயும் ஒன்று. மூல நோய் என்றால் என்ன? அதில் எத்தனை வகைகள் உள்ளன? அது எந்தெந்த காரணங்களால் வருகிறது? இதைச் சரி செய்ய என்னென்ன மருத்துவ முறைகளை பின்பற்ற வேண்டும் என்பதை இக்கட்டுரையின் மூலம் காண்போம்.

குழந்தைகளிடம் ஆற்றலை வளர்க்கலாம் ஆனந்தமாய்...


12 வயதான அந்த சிறுமி மிகுந்த மன அழுத்தத்திற்கு உள்ளாகியிருந்தாள். பள்ளிக்கு செல்வதற்கும், சாப்பிடுவதற்கும் அடம் பிடித்தாள். தோழிகளிடம் பேசு வதையும் குறைத்து தன்னை தனிமைப்படுத்திக்கொள்ளத் தயாரானாள். ஒரு கட்டத்தில் அவள் வாயில் இருந்து, `எனக்கு இந்த வீட்டில் இருக்கவே பிடிக்க வில்லை. எங்கேயாவது போயிடலாமான்னு தோன்றுகிறது' என்ற வார்த்தை வர, பெற்றோர் அடுத்து ஏதோ விபரீதம் நடக்கப்போகிறது என்று பயந்து விட்டார்கள்.

விக்ருதி புத்தாண்டு பலன்கள்

தமிழ்ப் புத்தாண்டுப் பலன்கள்

தமிழ்ப் புத்தாண்டுப் பலன்கள்-மேஷம்
அசுவினி, பரணி, கார்த்திகை 1
75/100 ; +பணவரவு அதிகரிப்பு , – பிள்ளைகளால் பிரச்னை
அன்பும் பண்பும் நிறைந்த மேஷ ராசி அன்பர்களே!

சிவ நாம ஜெபம்

“ஓம் நம சிவாய, ஓம் நம சிவாய’ என்று சாதுக்கள் அடிக்கடி சொல்வதைக் கேட்டிருக்கிறோம். சிவ நாம ஜெபம் எம பயத்தைப் போக்கும் என்பர். பரமேஸ்வரனை ஆராதித்து வழிபட்டால், எம பயம் இராது. பிரதோஷ காலமும், சிவராத்திரி காலமும் சிவனுக்கு உகந்த காலங்கள். அந்த காலங்களில் சிவ வழிபாடு செய்பவர்
களுக்கு சகல பாக்கியங்களையும் அளித்து, மோட்சத்தையும் ஈசன் அளிக்கிறான்.
சிவனை வழிபடும் போது ஸ்ரீ ருத்ர ஜெபம் செய்வது வழக்கம். அதையடுத்து சமகம் என்பதையும் சொல்வர். ருத்ரத்தில் பரமேஸ் வரனுடைய குணாதிசயங்களை வர்ணித்துவிட்டு நமஸ்காரம் செய்ய வேண்டும். இதில், நமஸ்காரத்தை முதலில் சொல்லிக் கொண்டு, பிறகு பரமேஸ்வரனை பற்றிய வாக்கியங்கள் வருகின்றன.
எடுத்தவுடன் நமஸ்காரம் செய்துவிட்டால், பரமேஸ்வரன் மகிழ்ந்து போகிறார். அதன் பிறகு நாம் சொல்வதையெல்லாம் அன் புடன் கேட்டு அனுக்ரகம் செய்து மோட்சத்தையும் அளிக்கிறார்.

குழந்தைகளுக்கு பக்தி புகட்டுவோம்!


ஆண்டவன் தொண்டு என்றாலும், ஆன்மிக நூல்களை வாசிப்பதென்றாலும் அது வயதானவர் களுக்கு மட்டுமே என்று ஒதுக்கிவிடுகிறோம். ஆனால், குழந்தைப் பருவத்தில் ஏற்படும் பக்தி, ஒருவரை உயர்நிலைக்கு கொண்டு செல்லும் என்பதில் சந்தேகமில்லை.
குழந்தையாக திருஞானசம்பந்தர் இருந்தபோது செலுத்திய பக்தி, அவர் இறைவனின் குழந்தையாகவே மாறுவதற்குரிய சந்தர்ப்பத் தைத் தந்தது. இதனால் இவரை, “இளைய பிள்ளையார்’ என்று அடைமொழி கொடுத்து அழைக்கிறோம்.
சீர்காழியில் வசித்த சிவபாத இருதயர்- பகவதியம்மாள் தம்பதியரின் செல்வப்புதல்வராக அவதரித்தார் திருஞானசம்பந்தர். மூன்று வயதுக் குழந்தையான சம்பந்தரை, அவரது தந்தை தினமும் தோணியப்பர் கோவிலுக்கு அழைத்துச் செல் வார். அங்குள்ள பிரம்ம தீர்த்தத்தில் (குளம்) நீராடும் போது, குழந்தையை கரையில் அமர்த்தி விடுவார். குழந்தை சம்பந்தன் அங்குமிங்கும் வேடிக்கை பார்ப்பார். ஒரு தோணியில், சிவபார் வதி பவனி வருவது போன்ற சிற்பம் அங்கு இருக் கும். அதை ரசித்தபடியே இருப்பார்.

சரணாகதி – பொருள் தெரியுமா ?


சரணாகதி என்பது, தன்னையே ஒருவரிடம் ஒப்படைத்து விடுவது. “இனி, எனக்கு நீ தான் கதி. நீ என்னை என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம். எனக்கு என்று எதுவுமில்லை. எல்லாமே (உடல், பொருள், ஆவி) உன்னுடையது தான்!’ என்று ஒப்படைத்து விடுவதை சரணாகதி என்பர். இப்படி சரணாகதி செய்வதை, பகவானுடைய காலடியில் செய்து விடு; உன் ஷேமத்தை அவன் கவனித்துக் கொள்வான் என்பது மகான்களின் வாக்கு. “பகவானே… நீ தான் கதி; நீ விட்ட வழி…’ என்று பொறுப்பை அவனிடம் விட்டு விட்டால், பொறுப்பு பகவானுடையதாகி விடுகிறது. பகவான் இவனைக் காப்பாற்றுகிறான்; நல்வழி காட்டுகிறான்; துயர் துடைக்கிறான்; நற்கதியடையச் செய்கிறான்; பிறவித் துன் பத்தையும் போக்குகிறான். நீயே கதி என்று சரணடைந்தவர் களுக்கு இப்படி. “நான், நான்’ என்று சொல்லி, “நான் தான் செய்தேன், நானே செய்து விடுவேன்…’ என்று சொல்பவர்களிடம் அவன் போவதில்லை; அவனே செய்து கொள்ளட்டும் என்று விட்டு விடுகிறான். பகவானைக் கூப்பிட்டால் அவன் ஓடி வந்து உதவுவான்.
பக்தியால் சிறந்தவர்களான பல மகான்கள், பெரியோர் பற்றிய கதைகள் நிறைய உண்டு. ஆக, பகவானிடம் சரணாகதி அடைந்து விட்டால், அவன் கைவிட மாட்டான். நம்பிக்கையும், பக்தியும் தான் இதற்கு முக்கியம். ***
ஆஞ்சநேயர் கோவிலுக்குச் சென்றால், மூன்று வகை கயிறு கொடுக்கின்றனரே… அதன் பலன் என்ன?
கறுப்புக் கயிறு – தீய சக்திகளிடம் சிக்காமல் நம்மைக் காக்கும். சிவப்பு கயிறு – வெளியில் செல்லும் போது, பயந்து விடாமல் பாதுகாக்கும். பச்சைக் கயிறு – செல்வத்தை கொடுக்கும்

சுவாமியே சரணம் ஐயப்பா !


கார்த்திகை மாதம் பிறந்து விட்டது. தை மாதம் வரை, எங்கும் ஐயப்பசரணகோஷம் ஒலிக்கும். இவரது வரலாறை புதிதாக மலைக்குச் செல்லும்கன்னி சுவாமிகள் தெரிந்து செல்ல வேண்டுமல்லவா!
தேவலோகத்தில் நாட்டியமாடும் ரம்பைக்கு, ஒரு மகள் இருந்தாள்; அவளதுபெயர் மகிஷி. இவள் கடும் தவமிருந்து, இரண்டு ஆண்களுக்கு, அதுவும்சிவன் மற்றும் விஷ்ணுவுக்குப் பிறக்கும் மகனால் மட்டுமே அழிவு வரவேண்டுமென்ற வரம் பெற்றாள்.
"ஆணுக்கும் ஆணுக்கும் குழந்தை பிறப்பது சாத்தியமல்ல...' என்பதால்,தன்னைக் கொல்ல யாருமில்லை என்று எண்ணிய மகிஷி, பலஅட்டூழியங்களைச் செய்தாள்; தேவர்கள் அவஸ்தைப்பட்டனர்.விஷ்ணுவிடம், இதுபற்றி முறையிட்டனர்.

"நோய் இருக்கு... ஆனா இல்லே'' - எனச்சொல்பவரா நீங்கள் ?


இது முரண்பாடு என்று நினைக்காதீர்; இதுதான் உண்மையும் கூட. ஜுரம், தலைவலி போன்றவை, மருந்து சாப்பிட்ட பின் குணமாகி விடும். ஆனால், சில வியாதிகள், நம்மோடு இருந்து கொண்டே இருக்கும். அது போன்ற வியாதிகள், நம் இறுதி நாட்கள் வரை நம்முடனே இருக்கும்.

பக்திக் காதல்பக்தியோடு வளர்ந்தவள் ஆண்டாள்.அவள் தந்தை பெரியாழ்வாருக்கோ பக்தி என்பது உண்ணும் உணவும் பருகும் நீரும் போல.தன் மகளுக்கு பக்தி கலந்த பாலையும், தேனையும் ஊட்டினார் பெரியாழ்வார். தன் மகளுக்கு கதை சொல்லும்போது கூட ஹரி கதைகளையே சொல்லுவார். யானைக்கு அன்று அருள் புரிந்தான் அவன் என்பார். துஷ்ட அசுரரை அருளால் அழித்தான் என்பார். மானிட பண்பு விளங்க ராமனாய்ப் பிறந்து வீரனாகவும், அதிவீரனாகிய தியாகியாகவும், அடைக்கலம் புகுந்தவரை உயிர் கொடுத்து காக்கத் துணிந்த கருணைக் கடலாகவும் விளங்கியதை கதை கதையாக சொல்லுவார்.