Pages

எதிர்காலத்தில் எலிகள்தான் உணவா?

சைவ உணவைத் தாண்டி அசைவம்
சாப்பிடுபவர்களுக்கு உள்ள எதிர்காலச் சாத்தியங்கள்
பல ஆண்டுகளுக்கு முன் இந்தியாவில் கடும்
உணவு தானியப் பற்றாக்குறை ஏற்பட்டது.
"எல்லோரும்
ஒருவேளை சாப்பிடுவதை நிறுத்தினால்
பற்றாக்குறையைத் தவிர்க்கலாம்"
என்று அப்போதிருந்த மத்திய உணவுத்
துறை அமைச்சர் கூறினார். "மக்களைப்
பட்டினி கிடக்கச் சொல்வதா?" என்று எதிர்க்
கட்சித் தலைவர்களும்
பத்திரிகைகளும் மத்திய
அமைச்சரைக் கண்டித்தார்கள்.

இந்துக் கடவுள் அய்யப்பனுக்கு கேரளத்தில் ஆறு கோவில்கள் உள்ளன.

சபரிமலைக்கு புனித யாத்திரை மேற்கொள்ளும் பக்தர்கள், அய்யப்பன் எழுந்தருளி அருள்பாலிக்கும் இந்த 6 கோவில்களுக்கும்
சென்று வழிபட்டால் சிறப்பு பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

1.ஆரியங்காவு

ஆரியங்காவு ஐயப்பன் கோவில்
நெல்லை மாவட்டம்
செங்கோட்டையில்
இருந்து சுமார் 20 கிலோமீட்டர்
தொலைவில், கேரள மாநிலத்தில்
இந்த ஊர் அமைந்துள்ளது.
இங்குள்ள கோவிலில்
சௌராஷ்ட்ர
குலதேவி புஷ்கலையுடன்
அரசராக காட்சித் தருகிறார்
அய்யப்பன்.

மழை காலங்களில் எதை சாப்பிடலாம், எதை சாப்பிடக் கூடாது?

'மழை காலங்களில் சிறந்த
உணவு எது?'னு பலருக்கு சந்தேகம்
இருக்கும். எதை சாப்பிடலாம்,
எதை சாப்பிடக்
கூடாதுனு குழப்பமா இருக்கும்.
சிலருக்கு ஒத்துக்கொள்ளும்;
சிலருக்கு ஒவ்வாமை ஏற்ப்படுத்தும்.
இதை தீர்க்க சில உணவு குறிப்புகள் இதோ...

* மழை நேர வைரஸ் காய்ச்சலுக்கு,
உடனடியாக கொடுக்க,
நிலவேம்பு கஷாயம் பெஸ்ட். நம்
வீட்டிலேயே நிலவேம்பு பொடியை வாங்கி வைத்துக்
கொண்டால் நல்லது. இந்த
நிலவேம்பு பொடியுடன் தண்ணீ­
ர் சேர்த்து காய்ச்சி,
பனங்கற்கண்டு சேர்த்து,
கொதிக்க வைத்து, வடிகட்டி,
வைரஸ் காய்ச்சல்
உள்ளவர்களுக்கு கொடுக்கலாம்.
உடனடியாக காய்ச்சல்
பறந்தோடி விடும்.

* மழைக் காலத்தில் நாம் சாப்பிடும்
உணவில், இனிப்பு அதிகம் சேர்த்துக்
கொள்ளாமல்
இருப்பது நல்லது.

* பால் மற்றும் பால் சார்ந்த தயிர்,
வெண்ணெய், நெய்
போன்றவற்றையும் அதிகம் சாப்பிடக்
கூடாது. ஆனால், மோர் சாப்பிடலாம்.
உடலுக்கு நல்லது.

* நம் உணவில் காரம், கசப்பு,
துவர்ப்பு சுவையுள்ள
உணவுகளை மழைக்காலத்தில் அதிகம்
சேர்த்துக் கொள்ளலாம்.

* மதிய உணவின் போது தூதுவளை ரசம்
வைத்து சாப்பிடலாம்.

* இரவு தூங்குவதற்கு முன், பாலில்
மஞ்சள் தூள், மிளகுத்தூள்,
பனங்கற்கண்டு சேர்த்து சாப்பிடுவது நல்லது.

* நீர்ச் சத்துக்கள் நிறைந்த சுரைக்காய்,
பூசணி, புடலை, பீர்க்கன்,
வெள்ளரி போன்ற காய்கறிகளை,
மழை சீசனில் உணவில் சேர்த்துக்
கொள்வதை தவிருங்கள்.

* கண்டிப்பாக மழைக் காலத்தில், நம்
உணவுப் பதார்த்தங்களில்,
மிளகு பொடியைச் சேர்த்துச்
சமைத்துச் சாப்பிடுவது நல்லது.
இரவு உணவில் பச்சைப் பயறு, கேழ்வரகு,
கீரை ஆகியவற்றைச் சேர்க்காதிருத்தல்
நல்லது.

* மழை சீசனில் பிஸ்கட் சீக்கிரம் நமத்துப்
போகாமல் இருக்க, பிஸ்கட் வைக்கும்
டப்பாவில் சிறிது சர்க்கரைத்
துகள்களை போட்டு வைக்கவும்.

* மழைக் காலங்களில் பழங்களைச்
சாப்பிடும் எண்ணம் அவ்வளவாக
ஏற்படாது. ஆனாலும்,
பழத்தை அப்படியே துண்டுகளாக
வெட்டிச் சாப்பிட
விருப்பமுள்ளவர்கள் சாப்பிடலாம்.
எல்லா சீசனுக்கும்
பொருத்தமானது வாழைப்பழம்.
அதற்காக வாழைப்
பழத்தை மட்டுமே சாப்பிடுவதற்கு பதிலாக,
மற்ற பழங்களையும்
சேர்த்து சாப்பிடலாம்.

* சிலருக்கு சளி, இருமல் இருந்தாலும்,
விட்டமின் 'சி' சத்து ஒத்துப் போகும்.
சிலருக்கு மழைக்காலம்
வந்து விட்டாலே ஒத்துக்
கொள்ளாது. எலுமிச்சம்,
ஆரஞ்சு ஜூஸ் சாப்பிட்டாலும் ஒன்றும்
செய்யாது. ஆனால், ஒத்துக்
கொள்ளாதவர்கள்
கண்டிப்பாக சாப்பிடாமல்
இருப்பது நல்லது.

* சாப்பிடும் உணவுகள், லேசான
சூட்டில் இருக்கும் படி பார்த்துக்
கொண்டால் நல்லது.

* மழை சீசனில், கீரைகள் அதிகம்
சாப்பிடா விட்டாலும்
பரவாயில்லை என்றே சொல்லலாம்.
ஏனென்றால், கீரைகளை நன்றாக
தண்ணீரில் கழுவி பயன்படுத்த
வேண்டும். இல்லாவிட்டால்
கீரைகளால் புதுசாக நோய் ஏற்படும்
வாய்ப்புகள் அதிகம்.
* மழை சீசனில்,
எல்லா காய்கறிகளையும் உணவில்
சேர்த்துக் கொள்ளலாம்.
சிலருக்கு, தண்ணீர் சத்து அதிகமுள்ள
காய்கறிகள் ஒத்துக்
கொள்ளாது. அத்தகையவர்கள்
அவர்களுக்கு ஏற்ற
காய்கறிகளை சமைத்துச் சாப்பிடலாம்.

* அசைவ உணவாக, மீன், முட்டை, கறி,
சிக்கன் என்று சாப்பிடலாம்
ஆனால், அவை பிரஷ்ஷாக
இருக்கும்படி பார்த்துக்
கொள்ள வேண்டும்.
ஏனென்றால், மழைக்
காலங்களில் கடைகளுக்குப் போய்
வாங்குபவர்கள் குறைவு. அதனால்,
மீன் போன்றவை பழைய ஸ்டாக் இருக்க
வாய்ப்பு உண்டு.

* மழை சீசனில், எண்ணெயில்
பொரித்த உணவுகளையும்
அதிகம் சாப்பிடக் கூடாது. சூடாகச்
சாப்பிட வேண்டும் என்று தோன்றும் போது,
பஜ்ஜி, போண்டா என சாப்பிடாமல்,
அதற்கு பதிலாக உப்புமா உருண்டை,
இட்லி சாம்பார், பிரட் டோஸ்ட் என
சாப்பிடலாம். நாம் தினமும்
சாப்பிடும் உணவையே, சற்று சூடாகச்
சாப்பிட்டால் போதும்.

பெற்றோரைக் கொல்லும் பிள்ளைகள்!

தமிழ்நாட்டில் தற்போது முதியோர் பராமரிப்பு என்பது மிகப்பெரிய
சமூக சிக்கலாக மாறியதற்கான முதன்மைக்காரணிகளில்
முக்கியமானது தமிழ்ச்சமூகத்தில்
உடைந்து சிதறிய கூட்டுக்குடும்ப
வாழ்க்கை முறையும், பெருகிவிட்ட சிறுகுடும்ப வாழ்வும்
என்கிறார்கள் சமூகவியலாளர்கள்.
ஒரு சமூகத்தின்
அடிப்படை அலகு என்பது குடும்பம் என்கிற அமைப்பு. பல
தலைமுறைகளாக தமிழ்ச்சமூகம் என்பது கிராமப்புற விவசாய
சமூகமாக இருந்தது. அதில்
பெரும்பாலானவை கூட்டுக்குடும்பங்களாக இருந்தன.
இத்தகைய கூட்டுக்குடும்ப முறையில்
ஒரே குடும்பத்தில் திருமணமான பல பெண்கள்
சேர்ந்து வாழ்ந்த நிலையில் முதியோர்
பராமரிப்பு என்பது இயல்பாக, எளிதாக இருந்தது என்கிறார்
கோவையில் இருக்கும் பி எஸ் ஜி ஆர் கிருஷ்ணம்மாள் கல்லூரியின் முதியோர்
பராமரிப்புத்துறையின் ஒருங்கிணைப்பாளர் ச அருள்மொழி.
குடும்பநலத்திட்டம் கூட்டுக்குடும்ப
சிதைவை வேகப்படுத்தியது
இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில்
இருந்தே தமிழ்நாட்டில் சிறுகுடும்பம் என்கிற
கருத்தாக்கமும்,
இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றுக்கொள்ள
வேண்டாம் என்கிற வலுவான பிரச்சாரமும் மிகப்பெரும்
தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
அதன் விளைவாக தமிழ்ச்சமூகத்தில்
இருபத்திஓராம் நூற்றாண்டில் கூட்டுக்குடும்பம் என்கிற
அமைப்பு காணாமல் போய்விட்டது. ஒட்டுமொத்த
இந்தியாவில் மிகவும் குறைவான பிறப்பு விகிதம் கொண்ட பெரிய மாநிலம்
தமிழ்நாடு என்கிற நிலையும் உருவாகியுள்ளது.
இதன் காரணமாக தமிழ்நாட்டில் தற்போதைய நிலையில்
பராமரிப்பு தேவைப்படும் முதியோரின்
எண்ணிக்கை அதிகமாகவும், அவர்களை பராமரிக்க
வேண்டிய இளையோரின்
எண்ணிக்கை குறைவாகவும் இருப்பதாகவும்
தெரிவிக்கும் சென்னை வளர்ச்சி நிறுவனத்தின்
துணைப்பேராசிரியர் விஜயபாஸ்கர், இது முதியோர் பராமரிப்பில்
நேரடி தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதா
கூறினார்.
முதியோர் பராமரிப்பிலிருந்து விலகிய பெண்கள்
ஒரு பக்கம், கூட்டுக்குடும்பம்
சிறுத்து தனிக்குடும்பமானது மட்டுமல்ல, குடும்பம்
என்கிற
அமைப்பிற்குள்ளேயே தலைமுறை தலைமுற
எந்த எதிர்க்கேள்வியும் கேட்காமல்
முதியோரை முழுநேரமும் பராமரித்துவந்த பெண்கள்,
அதிலிருந்து விலகவேண்டிய பரிணாம வளர்ச்சி ஏற்பட்டிருப்பதாக
சுட்டிக்காட்டுகிறார் பெண்ணியவாதி ஓவியா.
நன்கு கல்விகற்ற, வேலைக்குப்போய் சம்பாதிக்கக்கூடிய,
சுயமரியாதை மிக்க பெண்கள் இனியும் குடும்பத்தில்
இருக்கும் குழந்தைகளையும் முதியோரையும்
முழுநேரமும் பராமரிக்கும் தாதிகளாக மட்டும்
தொடர்ந்து இருக்கவும் முடியாது; இயங்கவும்
முடியாது என்கிறார் ஓவியா.
சமூகத்தின் அடிப்படை அலகான குடும்பம், அந்த
குடும்பத்தில் முதியோரை பராமரிப்பதை முழுநேர
வேலையாக செய்துகொண்டிருந்த
பெண்களிடம் ஏற்பட்டிருக்கும் மாற்றம் ஆகிய காரணங்கள் தவிர,
ஒட்டுமொத்த இந்தியாவில் வேகமாக நகர்மயமாகும் முதல்
மாநிலமாக தமிழ்நாடு இருப்பதும் முதியோரின் இன்றைய
நிலைமைக்கு முக்கிய காரணம் என்கிறார் விஜயபாஸ்கர்.
அதிகபட்ச நகர்மயமான மாநிலம் தமிழ்நாடு
இருபதாம் நூற்றாண்டில் தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த
வருமானத்தில் பெருமளவு கிராமப்புறம் சார்ந்த விவசாய வருமானமாக
இருந்தது. ஆனால் இன்றைய தமிழ்நாட்டின் மொத்த
வருமானத்தில் விவசாயத்தின் பங்கு வெறும் 8
சதவீதமாக சுருங்கிவிட்டது என்கிறார் விஜயபாஸ்கர்.
இதன் விளைவாக படித்த கிராமப்புற இளம்
தலைமுறையினர் விவாசயத்தை விட்டும்
கிராமங்களைவிட்டும் நகரங்களை நோக்கி வரவேண்டிய நிர்ப்பந்தம்
நேர்ந்திருப்பதாக கூறுகிறார் பாஸ்கர். இந்த வரலாற்றுப்போக்கின்
விளைவாக கிராமங்களில் விடுபட்டுப்போகும் எச்சமாக
தொக்கி நிற்கும் முதியவர் நிலைமை மோசமாவதாக
கூறுகிறார் முதியவர்களுக்கான தேசிய கூட்டமைப்பின்
துணை இயக்குநர் ஆர் சுப்பராஜ்.
ஆயுட்காலத்தை அதிகரித்திருக்கும்
மருத்துவ முன்னேற்றம்.
கூட்டுக்குடும்ப அமைப்பின் சிதைவு,
குடும்பத்து முதியவர்களை பராமரிப்பதில்
குறைந்துவரும் பெண்களின் பங்களிப்பு, வேகமான நகர்மயமாதல்
ஆகியவற்றுக்கு அடுத்தபடியாக, மருத்துவ விஞ்ஞான
முன்னேற்றங்கள் தமிழர்களின் வாழ்நாளை மிகப்பெரிய
அளவுக்கு அதிகப்படுத்தியிருப்பதும் முதியோர்
எண்ணிக்கை அதிகரிக்க முக்கிய காரணம் என்கிறார்
இந்தியாவின் முன்னணி முதியோர் மருத்துவர்களில் ஒருவரான வி எஸ் நடராஜன்.
இந்தியா சுதந்திரம்
அடைந்தபோது தமிழர்களின் சராசரி ஆயுட்காலம் சுமார் 40
ஆண்டுகள் என்றிருந்த நிலைமை மாறி, இன்று தமிழர்களின்
சராசரி ஆயுட்காலம் 70
ஆண்டுகளைத்தாண்டி வேகமாக
உயர்ந்து கொண்டிருப்பதாக சுட்டிக்காட்டுகிறார் நடராஜன்.
இப்படி அதிக ஆயுட்காலம் வாழநேரும்
முதியவர்களை கையாள்வதற்குத்
தேவைப்படும் பக்குவம் இளம்தலைமுறையினரிடம்
போதுமான அளவு இல்லை என்று கூறும் ஹெல்ப் ஏஜ்
இந்தியா என்கிற முதியவர்களுக்கான
தொண்டு நிறுவனத்தின் துணை இயக்குநர்
சத்தியபாபு, இவர்களில் சிலர் பெற்றோரைக் கொல்லும்
பிள்ளைகளாக மாறிவிடுகிற அவலமும் தமிழ்நாட்டில் பரவலாகநடக்கிறது என்கிறார்.

Thanks...
http://www.bbc.co.uk/tamil/india/2014/11/141116_oldageseriespart2