Pages

நல்லது, கெட்டது, பிறப்பு, இறப்பு, வரவு, செலவு இவையெல்லாம், ஒரு தொலைபேசி அழைப்பிலேயே அடங்கிவிடும் வெளிநாட்டு வாழ்க்கை

"கல்யாணம் பண்ணிப்பார்"
"புது வீடு கட்டிப்பார்"
*
"வெளிநாடு வந்துப்பார்"......
*
இனிமேல் இந்த வாசகத்தையும்
சேர்த்துக்கொள்ளுங்கள்.
*
*
பார்ப்பதற்குத்தான் ஆடம்பரம்.
ஆனாலும் இது ஒரு மாய வலை...
*
சந்தோஷம் என்று உள்ளேயும் இருக்க
முடியாது.
வேண்டாம் என்று வெளியிலும் போக
முடியாது.
*
நல்லது, கெட்டது, பிறப்பு, இறப்பு,
வரவு, செலவு இவையெல்லாம்,
ஒரு தொலைபேசி அழைப்பிலேயே
அடங்கிவிடும்.
*
வலிக்கும்...
ஆனாலும் சொல்ல முடியாது.
அப்படியே சொன்னாலும், யாருக்கும்
புரியாது.
யாரும் புரிந்து கொள்ளவும் மாட்டார்கள்.
*
அழுவோம்.....
ஆனாலும் யாருக்கும் தெரியாது.
ஏனென்றால்,
இங்கே பார்ப்பதற்கு யாரும் இருக்க
மாட்டார்கள்.
*
வலியென்றால் தோளில் சாயவும்,
சந்தோசம் என்றால் அணைத்துக்கொள்ளவும்,
அன்யோன்யமானவர்கள் யாரும்
இருக்கமாட்டார்கள்.
கண் எட்டும் தூரம் வரை,
தனிமை மட்டும் தான் மிஞ்சும்....
*
நன்றாக பசிக்கும்.
நிறைய சாப்பிடவும் செய்வோம்.
ஆனாலும் வயிறும், மனமும் நிறையாது....
ஏனென்றால், எங்காவது ஒரு மூலையில்
ஒரு வித ஏக்கம் இருந்து கொண்டே இருக்கும்.
*
நியாயமாக பார்த்தால்,
ஊரில் இருந்து தான் நமக்கு யாராவது
ஃபோன் பண்ணி விசாரிக்க வேண்டும்..
ஆனாலும், அப்படி யாரும்
கூப்பிட போவதில்லை என்றும் தெரியும்.
தெரிந்தும் யாராவது விசாரிக்கமாட்டா
ர்களா..??
என்ற ஏக்கம் இருந்து கொண்டே இருக்கும்.
*
ஆனாலும், குடும்பத்தில் யாராவது
ஒருத்தருக்கு
2 வாரம் ஃபோன் பண்ணாமல், பண்ணிபாருங்கள்.
நம்மிடம் கேட்பார்கள் பாருங்கள்.....
"என்னப்பா, வெளி நாடு போன உடனே
எங்களையெல்லாம் மறந்திட்ட போல" என்று........
அப்பொழுதும் இங்கிருந்து
சிரித்துக்கொண்டே
பதில் சொல்ல வேண்டும்.....!!
*
"மனதின் காயங்களை மறைக்கிறேன்.
ஊராருக்கு ஆனந்தம் தரவே சிரிக்கிறேன்".
****************************************
இதெல்லாம் ஏன் சொல்றேன்னா ம்ஹூம்...
ஏன்னு தெரியல.... சும்மா சொல்லணும் போல
தோணிச்சு
சிரிச்சிக்கிட்டே.... ஸ்மைலி..!!
வெளிநாட்டில் வசிக்கும் ஒரு சகோதரனின்
வலியை எனக்கு உணர்த்திய இந்த வரிகள்......
இன்னும் இவர் போன்று எத்தனை
உடன்பிறப்புகளோ... நண்பர்களோ....
தெரியவில்லை...

Thanks...
★ அனைத்து செய்திகளையும் ஒரே தளத்தில்
படிக்க... http://www.tamilvoice.com/

மீன் சாப்பிடுவது மன அழுத்த நோயிலிருந்து பாதுகாப்பளிக்கும்!

அதிக அளவு மீன் சாப்பிடுவது மன அழுத்த நோயிலிருந்து பாதுகாப்பளிக்கும்
என்று ஆய்வுகள் தெரிவித்துள்ளன.
சுமார் ஒன்றரை லட்சம் பேரிடம் நடத்தப்பட்ட 26
வெவ்வேறு ஆய்வுகளின் முடிவுகளை
ஒப்பிட்டு ஆராய்ந்ததில் அதிக அளவு மீன்
சாப்பிடுபவர்களுக்கு மன அழுத்த நோய்
தோன்றுவதற்கான வாய்ப்பு 17 சதவீதம்
குறைவதாக தெரியவந்திருக்கிறது.

உயிர்காக்கும் தயிர் - உடற் சூட்டை தணிப்பதில் தயிர் மாபெரும் பங்கு வகிக்கிறது!

உயிர்காக்கும் தயிர் — உணவே மருந்து

உயிர்காக்கும் தயிரா? அது எப்படி? என்று அறிய ஆவலாக வந்துள்ள அன்பு நண்பர்களுக்கு வணக்கம். 

சிறுவயது முதல் பெரியவர்கள் வரை அனைவரும் உணவில் சேர்த்துக்கொள்ளும் ஒரு சிறந்த உணவுப்பொருள் தயிர் என்றால் அது
மிகையாகாது.

வளமையான ஆன்டி-ஆக்ஸிடன்ட் நிறைந்த குடை மிளகாய்

குடை மிளகாய் என்பது, வளமையான ஆன்டி-ஆக்ஸிடன்ட் நிறைந்த உணவு. இருப்பினும், நாம் உணவோடு சேர்த்து உண்ணும், சாதாரண பச்சை மிளகாயை, சாதாரணமாக விட்டுவிட முடியாது.
இந்திய பச்சை மிளகாயில், வைட்டமின் "சி’ அதிகமாக உள்ளது. இது, இயற்கையான நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தும்.

உடல் ஆரோக்கியத்துக்கு தேவையான வைட்டமின்கள், தாதுப்பொருட்கள் அதிகமாக உள்ள புதினா கீரை!

புதினா கீரையில் உடல் ஆரோக்கியத்துக்கு தேவையான வைட்டமின்கள், தாதுப்பொருட்கள் அதிகமாக உள்ளன. புதினாக் கீரையை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால், ரத்தம் சுத்தமாகும். வாய் நாற்றம் அகலும். ஜீரண சக்தி அதிகரித்து, பசி தூண்டப்படும்.
மலச்சிக்கல் நீங்கும். பெண்களின் மாதவிலக்கு பிரச்னை தீரும். ஆண்மை குறைவை நீக்கவும் புதினா உதவுகிறது. ஊளைச்சதையை குறைக்க, புதினா சிறந்த மருந்தாக பயன்படுகிறது. வயிற்று புழுக்களை அழிக்கிறது. வாயுத் தொல்லையை போக்குகிறது.
தலைவலி தீர, புதினா இலையின் சாற்றை பூசலாம்.

ஆவணி அவிட்டம்: கடவுளை அறியும் அறிவைப் பெறுவோம்!

நயனம் என்றால் கண்.
நமக்கு இரண்டு
நயனங்கள் (கண்கள்)
இருக்கின்றன. அவை
ஊனக் கண்கள். இதுதவிர
மூன்றாவதாக ஒரு
கண்தேவை. அது தான்
ஞானக்கண்.
அக்கண்ணைப்
பெறுவதற்கான
சடங்குதான்உபநயனம்.
உபநயனம் என்றால்
துணைக்கண் என்று
பொருள். ஞானம் என்னும் கல்வி
அறிவை பெற்றால் மட்டுமே ஒருவன்
கண் பெற்ற பயனைப் பெறுகிறான்
என்று தெய்வப்புலவர் திருவள்ளுவர்
குறிப்பிடுகிறார். கடவுளைப் பற்றி
அறியும்அறிவே உயர்ந்த அறிவாகும்.
அதனால் பூணூல் அணியும்
சடங்கினை பிரம்மோபதேசம் என்று
குறிப்பிடுவதுண்டு. மகாவிஷ்ணு
பூலோகத்தில் பல அவதாரங்களை
எடுத்து தர்மத்தை நிலைநாட்டினார்.
அதில் வாமன அவதாரமும் ஒன்று.
அதிதி காஷ்யபரின்
பிள்ளையாகஅவதரித்த
வாமனமூர்த்திக்கு சூரியபகவானே
உபநயனம் (பூணூல்அணிவித்தல்)
செய்தார். பகவானே பூணூல்
அணிந்து கொண்டதன் மூலம்,
இச்சடங்கின் சிறப்பினை உணரமுடியும்.
பூணூலை யக்ஞோபவீதம் என்று
அழைப்பர். இதற்கு மிகவும்
புனிதமானது என்று பொருள்.
பூணூல் அணிபவர் களும், அதனைத்
தயாரிப்பவர்களும் ஆச்சார
அனுஷ்டானங்களில் இருந்து சிறிதும்
விலகுதல் கூடாது. ஆவணி
அவிட்டத்தன்று பூணூல் அணியும்
இளைய தலைமுறையினரும் இதன்
முக்கியத்துவத்தை உணர்வது அவசியம்.
விரத முறை: கணபதி பூஜையுடன்
இவ்விரதத்தை துவங்கி,
புண்யாவாகனம் செய்த பின், பஞ்சகவ்யம்
அருந்தி உடல், மனம், இருப்பிடங்களைத்
சுத்தமாக்கிக் கொள்ள வேண்டும்.
இவ்வேளையில் கிழக்கு நுனியாக
வாழை இலை போட்டு, அதில் அரிசி
பரப்பி 7 கொட்டைப் பாக்குகள் வைத்து,
அதில் சப்தரிஷிகளை ஆவாஹனம்
செய்து, தீபாராதனை செய்து,
நைவேத்தியம் படைக்க வேண்டும். பின்,
சப்தரிஷிகளை வேண்டி ஹோமம் செய்ய
வேண்டும். அதில் அரசு அல்லது புரசு
சமித்துக்கள் (குச்சிகள்), சத்துமாவு,
நெய், நெல்பொரி ஆகியவற்றை மந்திரம்
சொல்லி அக்னியில் இட வேண்டும். பின்,
புதிய பூணூல் அணிந்து கொள்ள
வேண்டும்.இவ்வேளையில்
பஞ்சபூதங்களையும் வழிபடலாம்.
திருமணம் ஆகாத ஆண்கள் பூணூலை
குருவிற்கும், வயதில்
மூத்தோருக்கும் தானமாகத் தரலாம்.
புதிய பூணூல் அணிந்த அனைவரும்
முதலில் தேவர்களுக்கும், பின்னர்
ரிஷிகளுக்கும் தர்ப்பணம் செய்கின்றனர்.
இவர்களில் தந்தையை இழந்தவர்கள்
தேவர்களுக்கும், ரிஷிகளுக்கும்
தர்ப்பணம் செய்தபிறகு தங்களுடைய
பிதுர்களுக்கும் தர்ப்பணம் செய்ய
வேண்டும். இதற்கு பிறகு
குருவிற்கும், வயதில்
மூத்தோருக்கும் வெற்றிலை பாக்கு,
பழம் மற்றும் அவர்கள் சக்திக்குத்
தகுந்தாற்போல் காணிக்கைகளை
அளித்து அவர்களின் ஆசிர்வாதம் பெற
வேண்டும்.
பலன்: இவ்விரதம் இருந்து பூணூல்
அணிந்து கொண்டவர்களை செய்பவரை
எவ்வித துன்பமும் நெருங்காது.
எதிரிகளின் தொல்லை குறையும்.

http://temple.dinamalar.com/news_detail.php?id=5179

ஆவணி அவிட்டம்

ஆவணி அவிட்டம் என்னும் ஆண்டுச் சடங்கு
உபநயனம் செய்து கொண்ட பிராமணர் ஆடி
அல்லது ஆவணி மாதங்களில் அவிட்டம்
நட்சத்திரத்தினோடு கூடிய பௌர்ணமியில்
கடைபிடிக்கும் வழிபாடாகும்.

காப்பீடு அல்லது காப்புறுதி (insurance)

சட்டம் மற்றும் பொருளியலில்‚ காப்பீடு அல்லது காப்புறுதி (insurance) என்பது சார்ந்திருப்போர் இழப்பின் பாதிப்பு இடர்பாட்டினைக் கடப்பதற்கு முதன்மையாகப் பயன்படுத்தப்படும் இடர் மேலாண்மை வடிவமாகும். பெரிய அளவிலான அதிர்ச்சியளிக்கும் இழப்பிற்கான வாய்ப்பை தவிர்க்கும் வகையில் ஒரு சிறிய உத்தரவாதம் மிக்க இழப்பாக ப்ரீமியத்தைப் பெற்று‚ ஒரு தரப்பிலிருந்து மற்றொரு தரப்பிற்கு இழப்பு இடர்பாட்டிற்கு சமமான மாற்றினை வழங்குவதே காப்பீடு ஆகும்.

தைராய்டு உள்ளவர்கள் தவிர்க்க வேண்டிய உணவுப் பொருட்கள்!

கழுத்திற்கு நடுவில் உள்ள ஓர் சுரப்பி தான் தைராய்டு. இந்த சுரப்பி சுரக்கும் ஓர் ஹர்மோன் தான் தைராக்ஸின். இது தான் உடலின் வெப்பநிலை, உடல் எடை, மெட்டபாலிசம் போன்றவற்றை சீராக பராமரிக்கவும், உடலுக்கு வேண்டிய ஆற்றலை உற்பத்தி செய்யவும் உதவுகிறது.

எலும்பு தேய்மானத்தை சூரிய ஒளி தடுக்கும் !

எலும்பு என்பது மனிதனின் உடலில் காணப்படும் விறைப்பான, கடினத்தன்மை கொண்ட உறுப்பாகும். உடல் உள் உறுப்புகளுக்கு பாதுகாப்பாக அமைந்து உடலை தாங்கும் உறுப்புகள்தான் எலும்புகள்.

உடலில்உள்ளநச்சுக்களைவெளியேற்றிஉடலைசுத்தப்படுத்தும் உணவு வகைகள்!

உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி உடலை சுத்தப்படுத்தும் உணவு
வகைகள் சிலவற்றை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்,

குரு பெயர்ச்சி பலன்கள் - 2015

ஜோதிடத்தில் பொதுவாக குருவும்
சுக்கிரனும் சுப கிரகங்களாக
கூறப்படுகிறார்கள். வசதி வாய்ப்புடன்
வாழ்பவர்களை பார்த்து சுக்கிர தசை
அடிக்கிறது என்பார்கள். சுக்கிரன் தனி மனித
செல்வத்திற்க்கு காரகர் குரு பொது
செல்வத்திற்க்கு காரகர் எனவே குரு
பெயர்ச்சி எல்லோராலும் எதிர்பார்க்கும்
தன்மையுடையதாகிறது.

எச்சரிக்கை! இறுக்கமான ஜீன்ஸ் அணிவதால் ...

இறுக்கமான ஜீன்ஸ் அணிவதால் ஆண்களின்
விதைப்பைகள் பாதிக்கப்பட்டு, விந்தணு
உற்பத்தி குறைக்கப்படுவதோடு,
நெஞ்செரிச்சல் அதிகரிக்குமென்றும்,
தொடைத்தசைகளும் தோலும்
பாதிக்கப்படுவதோடு, கால் நரம்புகளின்
இரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டு தசைகளும்
பாதிக்கப்படுவதாக எச்சரிக்கை
விடுக்கப்பட்டிருக்கிறது.
ஆஸ்திரேலியாவில் பெண் ஒருவர்
இறுக்கமான ஜீன்ஸ் அணிந்ததால் அவரது
கால்கள் பெருமளவு உணர்விழந்த சம்பவத்தை
அடுத்து, இறுக்கமான ஜீன்ஸ் அணிவதால்
நரம்பியல் பாதிப்பு ஏற்படும் என்பதை தாங்கள்
கண்டறிந்துள்ளதாக ஆஸ்திரேலிய
மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
தனது உறவினர் ஒருவர் வீடு மாற்றுவதற்கு
உதவச்சென்ற பெயர் குறிப்பிடப்படாத அந்த
பெண், இறுக்கமான ஜீன்ஸ் அணிந்து பல மணி
நேரம் முழங்கால்களை மடக்கி
உட்கார்ந்திருக்கிறார்.
அதனால் அவரது கால்களின் கீழ்ப்பகுதியில்
உணர்விழந்துபோன நிலையில் அந்த பெண்
திடீரென மயங்கி விழுந்துவிட ஆபத்து
அதிகமானது. அவரது கால்களின் கீழ்ப்பகுதி
பெருமளவு வீங்கியிருந்ததால் அவர்
அணிந்திருந்த ஜீன்ஸ் கழற்ற முடியாமல் அதை
அவசர அவசரமாக வெட்டி எடுக்க வேணிய
அளவுக்கு நிலைமை விபரீதமானது.
அவர் அணிந்திருந்த இறுக்கமான ஜீன்ஸை
வெட்டி எடுத்துவிட்டு அவருக்கு நான்கு
நாட்களுக்கு மருத்துவமனையில் வைத்து
நரம்பூசி மூலம் மருந்து செலுத்தப்பட்டு
தொடர் சிகிச்சையளிக்கப்பட்டது.
இரத்த ஓட்டத்தை தடுத்து நரம்புகளை
பாதிக்கக்கூடும்
அவர் இறுக்கமான ஜீன்ஸ் அணிந்து பல
மணிநேரம் அமர்ந்திருந்ததால் அவரது
கால்களுக்கான இரத்த ஓட்டம் தடைபட்டு
பாதிப்பு ஏற்பட்டதாகவும், அத்துடன் அவரது
கால் தசைகள் மற்றும் நரம்புகளுக்கும் சேதம்
ஏற்பட்டதாகவும் மருத்துவர்கள்
தெரிவித்துள்ளனர்.‘ஜர்னல் ஆப் நியூராலஜி,
நியூரோசர்ஜரி மற்றும் சைக்கியாட்ரி’ என்ற
மருத்துவ சஞ்சிகையில் இது குறித்த
மருத்துவர்களின் குறிப்புகள்
வெளியிடப்பட்டுள்ளன.
இறுக்கமான ஜீன்ஸ் அணிவது உடலுக்கு
நல்லதல்ல என்கிற எச்சரிக்கை விடப்படுவது
இது முதல் முறையல்ல.
இளம்தலைமுறையினர் மத்தியில் தங்களின்
உடல் வனப்பை வெளிப்படுத்தும் நாகரிக
உடையாக இறுக்கமான ஜீன்ஸ்
பார்க்கப்பட்டாலும், பெரிதும்
விரும்பப்பட்டாலும், அது உடல்
ஆரோக்கியத்துக்கு நல்லதல்ல என்கிற
எச்சரிக்கைகள் தொடர்ந்தும் மருத்துவர்களால்
விடுக்கப்பட்டு வந்திருக்கின்றன.
ஏற்கனவே பல ஆய்வாளர்கள் இறுக்கமான, லொ
கட் ஜீன்ஸ்களை அணிபவர்களுக்கு
தொடைகளில் வலியும், எரிச்சலும்
ஏற்படுவதாக ஆய்வாளர்கள் எச்சரித்திருந்தனர்.
விதைப்பைகள் பாதிக்கப்பட்டு விந்தணு
உற்பத்தி குறையும்
அதிலும் ஆண்கள் இப்படியான இறுக்கமான
ஜீன்ஸ்களை தொடர்ந்து அணிந்தால் அவர்களின்
விதைப்பைகளின் அமைப்பே மாறி,
திருகப்பட்ட தோற்றத்தை பெறும் என்று
எச்சரிக்கும் மருத்துவர்கள் ஆண்களின்
விந்தணு உற்பத்தியும் இதனால்
பாதிக்கப்படும் என்றும் தெரிவிக்கிறார்கள்.
அதனால் தான் குழந்தை பெற விரும்பும்
ஆண்கள் இறுக்கமில்லாத உள்ளாடைகள் மற்றும்
கால் சராய்களை அணியும்படி தாங்கள்
பரிந்துரைப்பதாக தெரிவிக்கிறார்
மருத்துவர் சாரா ஜார்விஸ்.
காரணம் இறுக்கமான உடைகள்
அணியும்போது ஆணின் விதைப்பைகள்
தொடர்ந்து உடலோடு அழுத்தி
இறுக்கிவைக்கப்படுகின்றன. அது
விதைப்பைகளின் வெப்பத்தை அதிகரிக்கச்
செய்து விந்தணு உற்பத்தியை பாதிக்கும்
என்கிறார் சாரா. எனவே குழந்தை பெற
விரும்பும் ஆண்கள் ஆரோக்கியமான விந்தணு
உற்பத்திக்கு உதவும் வகையில் இறுக்கமான
ஜீன்ஸ் அணியாமல், காற்றோட்டமான ஆடைகளை
அணியவேண்டும் என்கிறார் அவர்.
சிறுநீர்ப்பாதைத் தொற்று மற்றும்
நெஞ்செரிச்சலை அதிகரிக்கும்
சிறுநீர்ப்பாதையில் தொற்று இருப்பவர்களும்
கூட இறுக்கமான ஜீன்ஸ் அணியக்கூடாது
என்று மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள்.
காரணம் இறுக்கமான உடைகள் அவர்களின்
சிறுநீர்ப்பாதை தொற்றை அதிகரிக்கச்
செய்யும் என்றும் மோசமடையச் செய்யும்
என்றும் மருத்துவர்கள் அறிவுரை
கூறுகிறார்கள்.
அதேபோல, நெஞ்செரிச்சல் பிரச்சனை
இருப்பவர்களும் இறுக்கமான ஜீன்ஸ்
அணியக்கூடாது என்று மருத்துவர்கள்
கூறுகிறார்கள். காரணம் இறுக்கமான
ஜீன்ஸ்கள், அடிவயிற்றில் கூடுதலான
அழுத்தத்தை செலுத்துவதால், வயிற்றில்
சுரக்கும் அமிலங்கள் மேல்நோக்கி உந்தப்பட்டு
ஏற்கனவே இருக்கும் நெஞ்செரிச்சல்
பிரச்சனையை மேலும் அதிகப்படுத்தும்
என்கிறார்கள் மருத்துவர்கள்.
அதேசமயம், இத்தகைய ஆபத்துக்களின்
சதவீதத்தை அளவுக்கு அதிகமாக நினைத்து
கவலைப்படத் தேவையில்லை என்றும்
கூறுகிறார் மருத்துவர் ஜார்விஸ்.
நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பவர்கள் தங்களின்
உடல் வனப்பை காட்ட நாகரிக உடையாக
இறுக்கமான ஜீன்ஸ் அணிய விரும்பும்போது
அதில் இருக்கும் ஆபத்தையும்
உணர்ந்திருப்பது அவசியம் என்பதே
மருத்துவர்களின் அறிவுரையாக
இருக்கிறது.

Thanks...
http://www.bbc.com/tamil/science/2015/06/150623_tightjeansproblems

மன அழுத்தம் ஏற்படும் போது உடலில் என்னவெல்லாம் நடக்கும்?

மன அழுத்தத்திற்கு குழந்தைகள்கூட விதிவிலக்கு இல்லை. தலை முடியில் தொடங்கி கால்கள் வரைக்கும் உடலின் பெரும்பாலான பாகங்களைப் பாதிக்கக் கூடியது மன அழுத்தம். மன அழுத்தம் ஏற்படும் போது உடலில் என்னவெல்லாம் நடக்கும்?

மனிதரும் தெய்வமாகலாம்!

ஆனி பிரம்மோற்சவம் ஆரம்பம்
குறுநில மன்னன் ஒருவன், தன் அதிகாரத்தை பயன்படுத்தி, நாட்டு மக்களின் நிலத்தைப் பறித்தான். அதனால், நியாயம் கேட்டு பேரரசரிடம் சென்றனர் மக்கள். அவர், குறுநில மன்னிடம் விசாரித்த போது, 'அது தன் நிலமே...' என வாதாடினான் மன்னன். பேரரசரும் அதை நம்பி விட்டார். திக்கற்றவருக்கு தெய்வமே துணை என, அவ்வூரில் உள்ள சிவன் கோவிலுக்குச் சென்று, 'உண்மையை வெளிக்கொண்டு வர உன்னைத் தவிர வேறு கதியில்லை...' என்று மனமுருகி வேண்டினர் மக்கள்...

கீதாச்சாரம்!

எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது
எது நடக்கிறதோ, அது நன்றாகவே
நடக்கிறது
எது நடக்க இருக்கிறதோ,அதுவும்
நன்றாகவே நடக்கும்.
உன்னுடையதை எதை இழந்தாய்,
எதற்காக நீ அழுகிறாய்?
எதை நீ கொண்டு வந்தாய் அதை நீ
இழப்பதற்கு?
எதை நீ படைத்திருந்தாய், அது
வீணாவதற்கு?
எதை நீ எடுத்துக் கொண்டாயோ,
அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது.
எதை கொடுத்தாயோ,
அது இங்கேயே கொடுக்கப்பட்டது.
எது இன்று உன்னுடையதோ
அது நாளை மற்றோருவருடையதாகிறது
மற்றொருநாள், அது
வேறொருவருடையதாகும்.
இதுவே உலக நியதியும் எனது படைப்பின்
சாராம்சமாகும்.

- பகவான் கிருஷ்ணர

மே 1 - உழைக்கும் வர்க்கத்தின் உரிமைகளை வென்றெடுத்த தினம்

ஒருவர் எதற்காக உழைக்கிறார்? மகிழ்ச்சியாக வாழ்வதற்காக! ஆனால், நாள் முழுக்க உழைத்துக் கொண்டே இருப்பவர்களுக்கு மகிழ்ச்சி எப்படி கிடைக்கும்?
அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளி, கல்லூரிகளில் பணிபுரிபவர் களுக்கும், பெரும்பாலான தொழில் நிறுவனங்களிலும் 8 மணி நேரம்தான் வேலை நிர்ணயிக்கப்பட் டிருக்கிறது. அதற்கேற்ப ஊதிய மும் தரப்படுகிறது. இந்த 8 மணி நேர வேலை என்பதும், அதற்கேற்ற ஊதியம் என்பதும் எங்கே, எப்போது, எதற்காக, எப்படி நிர்ணயிக்கப்பட்டது?

100 ஆண்டுகள் ஆகிவிட்டது! (குற்றப் பரம்பரைச் சட்டம் ) சில தகவல்கள்...


குற்றப் பரம்பரை சட்டத்தின்
வரம்பிற்குள் கொண்டுவரப்பட்ட
கோவிந்த தோம்ஸ் கூட்டத்தினரின்
மீதான சுதந்திரத்திற்கு முந்தைய
வங்காள அரசு குற்ற புலனாய்வு
பிரிவின் துண்டு பிரசுரம்.
குற்றப் பரம்பரைச் சட்டம் (Criminal Tribes Act )
என்பது இந்தியாவில் பிரித்தானிய
ஆட்சியின் பொழுது வேறுபட்ட
காலகட்டங்களில் நிறைவேற்றப்பட்ட
குறிப்பிட்ட சமூகத்தினருக்கு எதிரான
சட்டம் ஆகும். இது முதன் முதலாக 1871 இல்
இயற்றப்பட்டது. இது பெரும்பாலும் வட
இந்திய சமூகத்தினரையே அதிக அளவில்
குறிவைத்து உருவாக்கப்பட்ட சட்டம் ஆகும்.
பின்னாளில் இது வங்க மாகாணத்திற்கும்
1876 இல் அமுல்படுத்தபட்டது. கடைசியாக
1911 ஆம் ஆண்டில் சென்னை மாகாணத்திற்கு
இது அமுல்படுத்தபட்டது. இந்தச் சட்டமானது
இயற்றப்பட்ட நாளில் இருந்தே பல
சட்டத்திருத்தங்களுக்கு உள்ளாகி பின்னர்
கடைசியாகக் குற்றப் பரம்பரை சட்டம் (1924
ஆம் ஆண்டின் VI வது திருத்தம்) என்று
இந்தியா முழுவதும் அமுலாகியது.
அமுலாக்கம்
இந்தியாவிற்கான ஆளுநரின் அதிகாரத்தின்
கீழ்படியாக அக்டோபர் 12 ஆம் நாள் 1871 ஆம்
ஆண்டு இந்தச் சட்டம் இந்திய மக்களின் மீது
விதிக்கப்பட்டது. இது இந்திய மக்களின் மீது
குறிப்பிட்ட சமூகத்தினரை ஒடுக்கவும்,
அவர்கள் மீது திருட்டு போன்ற குற்றங்களைக்
காரணம் காட்டி அவர்களைப் பிணையில்
வெளிவர முடியாதபடிக்கு சிறையில்
அரசாங்கம் விரும்பும் வரைக்கும் சிறையில்
அடைத்து வைப்பதற்குமாக
உருவாக்கப்பட்டதாகும். இதில் உள்ளடங்கும்
சமூகத்தினரை குற்றம் புரிவதை
வாடிக்கையாகக் கொண்ட பிரிவினர் என்று
பொருள்படும்படிக்கு இயற்றப்பட்டது. இந்தச்
சட்டத்தின் கீழ் வரும் சமூகத்தினை சேர்ந்த
குழந்தைகள் அல்லாத ஆண்கள் அனைவரும்
அருகில் உள்ள காவல் நிலையத்தில்
வாரமொருமுறை தங்களது இருப்பினை
பதிவு செய்யும்படிக்கு
கட்டாயப்படுத்தப்பட்டனர்.
இந்திய சுதந்திரத்தின் பொழுது 127
வெவ்வேறு சமூகத்தினை சேர்ந்த
பதிமூன்று மில்லியன் எண்ணிக்கை
அளவிலான இந்திய மக்கள்
பாதிக்கப்பட்டிருந்தனர். இந்தச் சட்டத்தின் கீழ்
கொண்டுவரப்பட்ட சமூகத்தினருக்கு
சொந்தமான இடத்தில் அரசானது தேடுதல்
நடத்துவதோ அல்லது அவர்களைக் கைது
செய்வதற்கோ எந்தவித பிடியாணையும்
இல்லாமல் இந்தச் சட்டத்தின் பெயரில் அவர்கள்
மீது நடவடிக்கை எடுக்கக் காவல்துறைக்கு
அதிகாரம் உண்டு. இந்தச் சட்டத்தின் கடுமை
தாக்கத்தின் விளைவாக இந்தச் சட்டமானது
1949 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் தள்ளுபடி
செய்யப்பட்டது. இந்தச் சட்டத்தின் பிடியில்
இருந்த சமூகத்தினர் குற்ற பரம்பரை என்ற
பெயரிலிருந்து குற்ற மரபினர் பட்டியலில்
நீக்கப்பட்டவர் என்று அழைக்கப்பட்டனர். மேலும்
சீர் மரபினர் என்றும் அழைக்கப்பட்டனர். பின்னர்
இந்தச் சட்டத்தின் பெயரில்
அடைக்கப்பட்டிருந்தவர்களை இந்திய மாநில
ஆரசுகள் 1961 ஆம் ஆண்டில் முழுமையாக
விடுவித்தது.
இந்தச் சமூகத்தினரில் அதிகப்படியான 60
மில்லியன் எண்ணிக்கையிலான மக்கள்
இவர்கள் மீதான சட்டக்கடுமைகள் விலக்கப்பட்ட
பின்பும் கூட ஊடகங்களாலும்
காவல்துறையாலும் தொடர்ந்து
ஒடுக்கப்பட்டு வந்தனர். இன்று நாடோடிகள்
பழங்குடியினரை சேர்ந்த 313 சமூக
பிரிவினரும் 198 பட்டியலில் நீக்கப்பட்ட மற்ற சீர்
மரபினரும் இந்தியாவில் இருக்கின்றனர்.
இந்தச் சட்டத்தில் இருந்து விடுவிக்கப்பட்ட பல
சமூகத்தினரின் அடையாளங்கள்
மாறிவிட்டபோதிலும் இன்றும் கூட அந்தப்
பிரிவில் சில சமூகத்தினர் விமுக்த
ஜாதி யினர் (Denotified tribes of India ) என்று
அழைக்கப்படுகின்றனர்.
சட்டத்திற்கான காரணங்கள்
19ஆம் நூற்றாண்டில் வட இந்தியாவில்
பரவலாக, வங்காளத்தில் குறிப்பாகப்
பெருகிவந்த குற்றங்களை அப்போதைய
ஆங்கில அரசு ஆராயத் தொடங்கியது.
குற்றங்களின் தன்மை, இடம், எண்ணிக்கை,
குற்றவாளிகளின் குணாதிசியங்கள்,
அவர்களுக்கு இடையே ஆன தொடர்புகள்,
ஒற்றுமைகள் ஆகியவற்றை ஆங்கிலேயர்
கவனமாகக் குறிப்பெடுத்தனர். பல மாறுபட்ட
தேசிய மொழிவாரி இனங்களின்
கூட்டுக்கலவையாக விளங்கிய இந்தியா
அவர்களுக்குப் புரியாத புதிராகவே
இருந்தது. இருப்பினும் தங்களின் ஆராய்ச்சி
முடிவில் தக்கீ (Thuggee/Thug) போன்ற
குறிப்பிட்ட சில இன மக்கள் குற்றங்களின்
முக்கிய காரணியாக இருப்பதை
கண்டுபிடித்தனர். தக்கீ இன மக்கள் நாடோடி
கொள்ளையர்களாக 17, 18 மற்றும் 19ஆம்
நூற்றாண்டுகளில் வாழ்ந்து வந்தனர்.
வியாபாரிகள், அதிலும் குறிப்பாக
நெடுந்தொலைவு நடந்தும்,
குதிரையிலும் செல்லும் வியாபாரிகளே
இவர்களின் முக்கிய இலக்காயினர்.
கொள்ளைக்கு இடையூறாய் உரிமைதாரர்
இருப்பதால், பெரும்பாலும் கொலையும்
களவின் ஒரு பகுதியாகவே போனது. 20
லட்சத்திற்கும் மேற்பட்ட மக்களைத் தக்கீயர்
கொன்றிருப்பதாகக் கின்னஸ் புத்தகம்
கூறுகிறது.
பெரும்பான்மை மக்களிடமிருந்து விலகிக்
காட்டுப் பகுதிகளில் வாழ்ந்த இவர்களின்
கலாசாரம், பண்பாடு ஆகியவை சராசரி
மக்களை விட்டு வேறுபட்டு நின்றது. சீக்கிய
கள்ளர்கள், இசுலாமிய கள்ளர்கள் ஆகியோர்
இருந்தபோதும் ‘காளி’ வழிபாடு செய்யும்
இந்து கள்ளர்களே அதிக எண்ணிக்கையில்
இருந்தனர். (குறிப்பு: தமிழ்நாட்டில் வாழும்
“கள்ளர்” இன மக்கள் அல்ல)
கொள்ளையை ஒழிக்கும் அளவுக்குப்
பொறுமையோ, அவகாசமோ, ஆர்வமோ
இல்லாத ஆங்கிலேயர் கொள்ளையர்களை
ஒழிக்க முடிவுசெய்தனர். வில்லியம் ஸ்லீமன்
(William Sleeman)தலைமையிலான “Thuggee and
Dacoity Department” ஆயிரக்கணக்கான தக்கீ
இனத்தாரை தூக்கிலிட்டும், நாடு
கடத்தியும், வாழ்நாள் சிறை தண்டனை
விதித்தும் வங்காளத்தை சுற்றி வழிப்பறி,
கொள்ளைச் சம்பவங்களுக்கு முற்றுபுள்ளி
வைத்தனர். குறிப்பாக 1835 முதல் 1850 வரை
சுமார் 3000க்கும் மேற்பட்ட கள்ளர்கள்
நசுக்கப்பட்டனர்.
அடக்குமுறை வெற்றியடைந்ததை ஒட்டி
நாடு முழுவதும் குற்றங்களைக்
குறைக்கவும், தடுக்கவும் இதே முறை
கொண்டு வருவதாகத் தீர்மானம்
நிறைவேறியது. இதன் சட்ட வடிவமே
“குற்றப் பரம்பரையினர் சட்டம்” (Criminal Tribes Act
1871).இதை கொண்டுவந்த நீதிபதி ஜேம்சு
ஸ்டீபன் (James F. Stephen), இந்தச் சட்டத்தின்
சாராம்சமாக முன்மொழிந்த கூற்று,
"கைவினை, தச்சு வேலை போல, (தகீயர்
போன்ற)சிலருக்கு களவும்
குலத்தொழில், அவர்களை ::
முற்றிலுமாக ஒழிப்பது மட்டுமே
குற்றங்களை குறைக்க ஒரே வழி" ("like
weaving, carpentry,.. we speak of professional
criminals, tribes whose ancestors were criminals
from time immemorial, themselves destined by the
caste to commit crime and offend law. The whole
tribe should be exterminated, like Thugs)
இப்படியாக முன்மொழியப்பட்ட சட்டம்
பின்னாளில் தவறாகப் பயன்படுத்தப்பட்டு
கோடிகணக்கான அப்பாவி மக்களை “பிறவிக்
குற்றவாளிகளாக” அடையாளப்படுத்தி
சமூக நீதிக்கெதிராகக் குற்றம் சாட்ட வழி
வகுத்தது. [1]
உப்பு வரியும் குற்றச் சட்டமும்
18 ஆம் நூற்றாண்டில் வங்காளத்தை
நிருவகித்து வந்த வாரன் ஹேஸ்டிங் உப்பு
வணிகத்தை முழுவதும் கிழக்கிந்தியக்
கம்பெணியின் கட்டுப்பாட்டில் கொண்டு
வந்தார். இதனால் உப்பு கொண்டு
செல்லப்படும் வழிகள் அடையாளம்
காணப்பட்டு வழிகள் அடைக்கப்பட்டன.
தலைச்சுமையாக உப்பு கொண்டு
செல்வதைத் தடுக்கும் நடவடிக்கைகளுக்கு
எதிராகப் பாரம்பரியமாக இதில் ஈடுபட்டு
வந்த நாடோடி இன மக்களான உப்புக்
குறவர்களும், தெலுங்கு பேசும்
எருகுலரும், கொரச்சர்களும் தடையை மீறி
உப்பைக் கடத்தி விற்க முற்பட்டார்கள். இதே
போன்று லம்பாடிகள், பஞ்ஞாராக்கள்
ஆகியோர் காலனியக் கட்டுப்பாடுகளை மீறி
உப்பைப் பிற மாநிலங்களில் விற்றார்கள்.
இவர்களைத் தடுக்க வன்முறையை ஏவி
விட்டதோடு இவர்களைத் திருடர்கள் எனக்
குற்றம் சாட்டிய ஆங்கிலேய அரசு
இவர்களையும் குற்றப்பரம்பரையில்
சேர்த்தது. [2]
ஆரம்ப காலகட்டங்களில் இந்தச் சட்டமானது
தெற்காசியாவில் குறிப்பாக வடஇந்திய
பகுதிகளில் வாழ்ந்த தக்கி எனப்படும்
கொலை மற்றும் வழிப்பறியை தொழிலாகக்
கொண்ட சமூகத்தினரை எதிர்கொள்வத
க்காகவே உருவாக்கப்பட்டது. 1857களில் அந்தச்
சட்டமானது புரட்சி செய்யும்
குழுக்களையும் இதன் வரம்பிற்குள் அடக்கி
அவர்கள் மீதும் பாய்ந்தது. இதன்மூலமாகப்
பல்வேறு பழங்குடி தலைவர்கள் மீது துரோக
குற்றம் சாட்டி துன்புறுத்தி
வந்தமையினால் புரட்சி செய்யும்
அனைவருக்கும் எதிராகப் பாயும் சட்டமாக
மாற்றிக் கையாளப்பட்டது.
இந்தச் சட்டத்தில் அடக்கமான
முன்னாள்
குற்றபரம்பரையினர் பட்டியல்
இந்தப் பட்டியலில் உள்ள பெரும்பாலான
பிரிவுகள் பாகிஸ்தான் மற்றும் இந்தியா
ஆகிய இரு நாடுகளிலும் வசிக்கின்றனர்.

பெயர் வட்டாரம்
பதக் ராஜஸ்தான்
பக்ஹிர் ராஜஸ்தான்
பலோச் ராஜஸ்தான்
பஞ்சரா ராஜஸ்தான்,
பஞ்சாப்
பவோரி ராஜஸ்தான்,
பஞ்சாப்
பவரியா ராஜஸ்தான்,
பஞ்சாப்
பாவரியாஸ் ராஜஸ்தான்,
பஞ்சாப்
சாரா சாராநகர்,
குஜராத்
தேகரோ பிர்பும், மேற்கு
வங்காளம்
திகரு மேற்கு
வங்காளம்
ஹர்ஸ் பாகிஸ்தான்
கஞ்சர் ராஜஸ்தான்
கோரசாஸ் தமிழ் நாடு
குறவர் தமிழ் நாடு,
கேரளா
லம்பாடி ஆந்திர
பிரதேசம்
லோதா மேற்கு
வங்காளம்
மக்தம் ராஜஸ்தான்,
பஞ்சாப்
மீனாக்கள் ராஜஸ்தான்
நட் பீகார்
சபர் மேற்கு
வங்காளம்
சன்சி ராஜஸ்தான்,
பஞ்சாப்
பஸ் பர்தி
மகாராஷ்டிரா,
மத்திய
பிரதேசம்
முத்தரையர்-வலையர் தமிழ்நாடு
முக்குலத்தோர் , பிரமலைக்
கள்ளர் தமிழ்நாடு
வைகரி குஜராத்
எருகளா
ஆந்திரா
பிரதேசம்,
தமிழ்நாடு
மற்றும்
கர்நாடகா
தமிழகத்தில் குற்றப்பரம்பரைச்
சட்டம்
தமிழ்நாட்டில் முக்குலத்தோராகிய கள்ளர்,
மறவர், பிரமலை கள்ளர், மறவர், வலையர்,
கேப்மாரி, அகமுடையர்... என 89 சாதிகள்
குற்றப் பரம்பரைச் சட்டப்படி இப்பட்டியலில்
இருந்தன. சில சாதியினர் குற்றப்
பரம்பரையினர் என அறிவிக்கப்பட்டனர். அதில்
குறவர், உப்புக் குறவர், ஆத்தூர்
மேல்நாட்டுக் குறவர், சி.கே. குறவர், போன்ற
ஜாதிகளும் அடங்காத, அடங்க மறுக்கும்
ஜாதிகளும் குற்றப் பரம்பரைப் பட்டியலில்
இணைக்கப்பட்டிருந்தன.

குற்றப் பரம்பரைப் பட்டியலில்
கொண்டுவரப்பட்ட சாதி ஆண்கள் குறிப்பாக
16 வயதிற்கும் 60 வயதிற்கும் இடைப்பட்டவர்கள்
காவல் கண்காணிப்பில் இருக்கவேண்டும்.
அவர்களிடம் நாள்தோறும் கைரேகை பதிவு
செய்யப்படும். மேற்கண்ட சாதிகளில்
குறிப்பாகக் கள்ளர், மறவர், அகமுடையோர்
போன்ற சில சமூகத்தினர் கைரேகை
சட்டத்தில் சேர்க்கப்பட்டனர்.
அகமுடையார்களிலும் விவசாய நிலம்
வைத்திருந்த விவசாயிகள், நிலவரி
கட்டுபவர்கள், நிரந்தரத் தொழில் செய்வோர்,
அலுவலர், நிரந்தரமாக ஒரே இடத்தில்
வசிப்போர் ஆகிய பெரும்பான்மையோர்
கைரேகைச் சட்டத்தில் இணைக்கப்படவில்லை.
1921 ஆம் ஆண்டில் கள்ளர்கள்
தலைமையிலேயே கள்ளர்களைக்
கண்காணிக்கும் கண்காணிப்பு
கிராமங்களாக ‘கள்ளர் பஞ்சாயத்துக்கள்’
உருவாக்கப்பட்டன. உள்ளூரிலேயே அதே
சாதியைச் சேர்ந்த கள்ளர் சமுதாயத்தைச்
சார்ந்தவர்களும் இடம் பெற்றிருந்த ஒரு
குழுவிடம் ஒரு பதிவேடு இருக்கும்.
அதிலேயே கைரேகை வைக்கலாம்.
ஆனாலும் பல நேரங்களில் அவர்கள் காவல்
நிலையத்தில் தூங்குமாறும், அருகே
இருக்குமாறும்
கட்டாயப்படுத்தப்பட்டனர்.வெளியூர் செல்ல
வேண்டுமென்றால் அந்தக் குழுவிடம்
அடையாளச் சீட்டு வாங்கிச் செல்ல வேண்டும்.
தாம் செல்லும் ஊரில் இருக்கும் ஊர்ப்
பெரியவர் குழுவில் இந்த அடையாளச்
சீட்டைக் காண்பிக்க வேண்டும். அடையாளச்
சீட்டு இல்லாதவர்கள் கைது
செய்யப்படுவார்கள். அடையாளச் சீட்டு
இல்லாமல் அடிக்கடி கைதாகும் நபர்கள்
தனியாகப் பட்டியலிடப்பட்டு அவர்கள்
நேரடியாகக் காவல்நிலையத்தில் கைரேகை
வைக்க வலியுறுத்தப்பட்டனர். [4]
ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குச்
செல்ல நேர்ந்தால், ‘ராத்திரிச் சீட்டு’ பெற்றுச்
செல்லவும் கட்டாயப்படுத்தப்பட்டனர். (இந்தச்
சீட்டில் வ.எண், பெயர், குற்றப்பதிவு எண்,
குற்றப் புலனாய்வுத் துறை, குழு எண்,
வெளியே போவதற்கான காரணம், செல்லும்
வழித்தடம், நேரம், திரும்பும் நேரம்,
பெருவிரல் ரேகைப் பதிவு ஆகியவை
இருந்தன). மூன்று பிரதிகளைக் கொண்ட
இந்த ராத்திரிச் சீட்டின் முதல் படி உள்ளூர்
காவல் நிலையத்திலும், இரண்டாவது படி
அந்த நபர் செல்ல இருக்கும் காவல்
நிலையத்துக்கும், மூன்றாவது படி அந்த
நபரிடமும் தரப்பட்டது. வழியில் எங்காவது
இரவு தங்க நேர்ந்தால், அந்தக் கிராமத்தின்
தலைவனது கையொப்பம் பெறப்பட வேண்டும்
என்பதும் குறிப்பிடத்தக்கது. [5]
தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த கோபாலசாமி
ரெகுநாத ராஜாளியார் என்பவர் 1911-லேயே
ஐந்தாம் ஜார்ஜ் மன்னரை நேரில் சந்தித்துப்
பேசிக் குற்றப் பரம்பரைப் பட்டியலில்
இருந்து தஞ்சை, திருச்சி மாவட்ட
கள்ளர்களைக் குற்றப் பரம்பரைப் பட்டியலில்
இருந்து மீட்கப் போராடி வெற்றி பெற்றார்.
1920 ஆம் ஆண்டு உசிலம்பட்டி அருகே உள்ள
பெருங்காமநல்லூர் என்ற கிராமத்தில்
இச்சட்டத்தை எதிர்த்தும், ஆங்கில
அரசாங்கத்தை எதிர்த்தும் கடுமையான
போராட்டம் நடைபெற்றது. அதை
அடக்குவதற்காக அரசாங்கம் நடத்திய
துப்பாக்கிச் சூட்டில் 'மாயாக்காள்' என்ற
பெண் உட்பட 17 பிரமலைக் கள்ளர் சமூகத்தினர்
வீரமரணம் அடைந்தனர். [6] குற்றப் பரம்பரைச்
சட்டத்தை எதிர்த்துத் தமிழ்நாட்டில்
நடைபெற்ற மிக முக்கியப் போராட்டம் இது.
[7]
அதன் பிறகு 1921 ஆம் ஆண்டிலிருந்து
தொடர்ச்சியாகக் கேரளாவைச் சேர்ந்தவரும்
மதுரையில் குடியிருந்தவருமான ஜார்ஜ்
ஜோசப் என்ற வழக்குரைஞர்
முதன்முறையாகக் கள்ளர் நாடு
முழுமைக்கும் சுற்றுப் பயணம் செய்து
மக்களைத் திரட்டிக் குறிப்பாகக் குற்றப்
பரம்பரைச் சட்டத்திற்கெதிராக மட்டுமே
போராட்டங்களை முன்னெடுத்தார். இவரை
அப்பகுதி கள்ளர்கள் அப்போது ‘ரோசாப்பூ
துரை’ என்றே அழைத்தனர். அவரது
நினைவாக இன்று வரை குழந்தைகளுக்கு
ரோசாப்பூ என்று பெயர் சூட்டுகின்றனர்.
1933 இல் இந்திய அரசியல் சட்ட சீர்திருத்தக்
குழு முன்னிலையில் நடந்த
விசாரணையில் அம்பேத்கர் இச்சட்டத்தின்
கொடுமைகளையும் தீர்க்கும்
வழிமுறைகளையும் குறித்து
எடுத்துரைத்தார். இந்த விசாரணையில்தான்
மிக முக்கியமாகக் குற்றப் பரம்பரைச்
சட்டத்தில் திருத்தம் செய்யவோ, குற்றப்
பரம்பரையினர்க்கு மறுவாழ்வு
அளிப்பதற்கோ, அவர்களைக்
கட்டுப்படுத்துவதற்கோ இந்திய அரசின்
ஆளுநரைவிட அந்தந்த மாகாண
அரசுகளுக்கே அதிக அதிகாரம் இருக்கிறது
என்பதை இந்திய அரசே பதிவு செய்தது. [4]
1927ம் ஆண்டு மதுரை, ராமநாதபுரம்,
திருநெல்வேலி மாவட்டங்களில் குற்ற
பரம்பரைச் சட்டம் அமலில் இருந்து வந்தது.
அக்காலத்தில் அரசியலில் ஈடுபட்ட
முத்துராமலிங்கம் இந்தச் சட்டத்தை
நீக்குவதற்காக அவர் ஆதரவு திரட்டத்
தொடங்கினார். கிராமம் கிராமமாகச்
சென்று கூட்டங்களை நடத்தினார்.
இந்த நிலையில் 1929ம் ஆண்டு மதுரை
மாவட்டத்தைச் சேர்ந்த மேலும் 19
கிராமங்களைச் சேர்ந்த மறவர்
சமுதாயத்தினரை இந்தச் சட்டத்தின் கீழ்
கொண்டு வந்தனர். இதை எதிர்த்து மிகப்
பெரிய அளவில் கூட்டங்களையும்,
பேரணிகளையும் நடத்தினார்
முத்துராமலிங்கம். இந்தச் சட்டத்திற்கு மறவர்
சமுதாயத்தினர் யாரும் அடிபணிய
வேண்டாம் என கோரிக்கை விடுத்தார்.
இதையடுத்து அவர்களும் போராட்டத்தில்
குதிக்க அந்தச் சட்டத்தைப் பகுதியாக
விலக்கிக் கொண்டது அப்போதைய
சென்னை மாகாண அரசு. இவரின் தொடர்
முயற்சிகளால் 2000 கிராமங்கள் இந்தச்
சட்டத்தின் கீழ் இருந்த நிலை மாறி 341 ஆகக்
குறைந்தது. [8]
சட்டத்தைத் திரும்பப் பெறுதல்
இப்படிச் சட்டத்தின் பெயரால் நடந்த
இக்கொடுமைகளை எதிர்த்து, 1930களில்
இருந்தே பல விவாதங்கள் நடந்தன. 1936களில்
பண்டித ஜவஹர்லால் நேரு, ‘சட்டப்
புத்தகத்திலிருந்து இந்தச் சட்டம்
நீக்கப்படுவதற்கு நடவடிக்கை
எடுக்கப்படவேண்டும்’ என்றார். இதே போல,
சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி
திரு சுப்பராவ், ஹரிஜன சேவா சங்கத்
தலைவர் கி.சி. தக்கா, ப. ஜீவானந்தம், பி.
ராமமூர்த்தி, முத்துராமலிங்கத் தேவர்
ஆகியோர் வலியுறுத்தினர். அதன்
விளைவால், 1947-இல் காவல் துறை
அமைச்சராக இருந்த பி. சுப்பாராவ், இந்தச்
சட்டத்தைத் திரும்பப் பெறுவதற்கான
தீர்மானம் ஒன்றைக் கொண்டு வந்தார். பேகம்
சுல்தான் அம்ருதீன் போன்றவர்களால் இதற்கு
முட்டுக்கட்டை போடப்பட்டபோதும், தீர்மானம்
நிறைவேறியது; சுதந்திரத்திற்குப் பிறகு
தானாகவே காலாவதியானது.

நன்றி...
http://ta.m.wikipedia.org/wiki/குற்றப்_பரம்பரைச்_சட்டம்