Pages

ஆசியாவிலேயே பெரிய விநாயகர் கோவில்


ஆசியாவிலேயே மிகப்பெரிய விநாயகர் தலத்தை கொண்டிருப்பது, நம் தமிழகம்தான். அந்த தலம் திருநெல்வேலியில் தாமிரபரணி ஆற்றங்கரையில், மணிமூர்த்தீசுவரம் என்ற இடத்தில் அமைந்துள்ளது. இது, உச்சிஷ்ட கணபதி கோவில் என்று பக்தர்களால் அழைக்கப்படுகிறது.
கருவறையில், அம்பாளை மடியில் தாங்கி, பக்தர்களுக்கு அருள்பாலித்துக் கொண்டிருக்கும் `உச்சிஷ்ட கணபதி' நமக்கும் தரிசனம் தருகிறார். `உச்சிஷ்ட கணபதி' என்ற திருநாமம் இருந்தாலும், `மூர்த்தி விநாயகர்' என்றே இவர் அழைக்கப்படுகிறார்.

மூலம் முற்றிலும் குணம் ஆகும் இனி கவலை வேண்டாம்

மூலம் முற்றிலும் குணம் ஆகும் இனி கவலை வேண்டாம் நீங்கள் செய்ய வேண்டியது நாம் சொல்லபோகும் ஹோமியோபதிக் மாத்திரைகளை வாங்கி நீங்கள் சாப்பிட வேண்டியதுதான்.

மாத்திரை விலை :
அது என்ன மாத்திரை விலை எவ்வளவு என்று தானே நினைக்கிறீர்கள் நீங்கள் நினைப்பது போல் அது அதிகமான விளையும் இல்லை!
 ஹோமியோபதிக் மேடிசன் ஒரு பாட்டிலின் விலை ௫௦.௦௦ ஐம்பது மட்டும் தான் நீங்கள் இரண்டு பாட்டில் வாங்கினாலே போதும் பூர்ண குணம் ஆகும்.

சாப்பிடும் முறை :
மாத்திரைகளை ஒரு நாளைக்கு மூன்று அல்லது நான்கு முறை சாப்பிடுங்கள் உங்களுக்கே போதும் என்று நினைக்கும் போது நிறித்தினால் போதும் உங்களுடைய நோய் பூர்ண குணம் ஆகும். 

உணவு முறை :
முடிந்த அளவு காபி டீ குடிப்பதை மாத்திரை சாப்பிட்டு ஒரு மணி நேரத்திற்கு நிறுத்திவைத்தல் நலம் பயக்கும்.
மற்ற படி எந்த பத்தியமும் இல்லை.

மாத்திரைன் பெயர் :
BIO-COMBINATION
17
PILES

நீங்கள் இதை கடைபிடித்தால் நிச்சயம் உங்களுக்கு குணமடையும்.
இது ஒரு அனுபவ ரீதியான கட்டுரை.

பைரவர் வழிபாடு!


சிவபெருமானின் பஞ்சகுமாரர்களில் கணபதி, முருகன், வீரபத்திரர், ஐயனார் மற்றும் பைரவரும் ஒருவர்.
* பைரவர் என்பது வடமொழிச்சொல்லாகும். இதற்கு மிகவும் பயங்கரமானவர் என்பது பொருளாகும். எதிரிகளும் பயம் தந்து தன்னை நாடுபவர்களுக்கு அருள் செய்வதால் இவருக்கு "பைரவர்' என்பது பெயராயிற்று.
* பைரவருக்கு சேஷத்திர பாலகமூர்த்தி என்றும் ஒரு பெயருண்டு. சேஷத்திரம் என்றால் கோயில். பாலகர் என்றால் காப்பவர். கோயிலைக் காப்பதால் இப்பெயர் ஏற்பட்டது.
* பொதுவாக பைரவர் நீலமேனி கொண்டவராய், சிலம்புகள் அணிந்த திருவடியைக் கொண்டவராய், பாம்புகள் பொருந்திய திருவரையும் மண்டை ஓட்டு மாலைகள் புரளும் திருமார்பும், சூலம், பாசம், உடுக்கை மழு முதலியன தாங்கிய திருக்கரங்களை உடையவராய் கூறப்பட்டாலும் அஞ்டபைரவர் வடிவங்களாகக் கூறும்போது அவரின் வண்ணம், ஆயுதம், வாகனம் இவை மாறுபட்டுக் காணப்படும்.

ஆலமரம் - மருத்துவ குணங்கள் தெரியுமா ?


ஆல் போல் தழைத்து அருகுபோல் வேரோடி என திருமண தம்பதிகளுக்கு வாழ்த்துத் தெரிவிப்பதை இன்றும் கூட நம் கிராமங்களில் காணலாம்.
ஆலமரம் விழுதுகள் விட்டு பல நூறு ஆண்டுகள் வாழும் தன்மை கொண்டது.  மழை, வறட்சி இவைகளால் அதிகம் பாதிக்கப்படாதது.    அதுபோல் குடும்ப உறவை விழுதுகள் போல் அனைவரும் தாங்கி வருவதற்காகவே ஆலமரத்தைச் சொல்கின்றனர்.
நீண்ட நெடிய பல விழுதுகளைக் கொண்டு பரந்து விரிந்து பசுமையாகக் காணப்படும் மரம்தான் ஆலமரம்.  மரத்தின் கிளைகளைத் தாங்கி நிற்கவே விழுதுகள் தோன்றி அவை மண்ணில் ஊன்றுகின்றன. 

அறிவை குறைக்கும் நொறுக்குத் தீனி: ஆய்வில் தகவல்


குழந்தைகளின் நுண்ணறிவுத் திறனை (ஐ.க்யூ.,), "ஜங்க் புட்' குறைத்து விடுவதாக சமீபத்தில் வெளியான ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது."ஜங்க் புட்' எனப்படும், நொறுக்குத் தீனிகளைத் தடை செய்வது குறித்து இந்தாண்டின் இறுதியில் ஐ.நா., ஆலோசனை நடத்த உள்ளது. இந்நிலையில், பிரிஸ்டன் பல்கலையைச் சேர்ந்த டாக்டர்.கேட் நார்த்ஸ்டோன் என்பவர் தலைமையில் ஓர் ஆய்வு நடந்தது. நான்கு வயதுக்குக் குறைந்த நாலாயிரம் குழந்தைகளிடம் அவர்களின் நுண்ணறிவுத் திறன் ஆய்வு செய்யப்பட்டது.அவர்கள் உண்ணும் நொறுக்குத் தீனிகளுக்கு ஏற்ப, நுண்ணறிவுத் திறன் குறைவது கண்டறியப்பட்டது. சராசரியாக, 1.67 சதவீதம் இயல்பு நிலையில் இருந்து குறைவது தெரியவந்தது. இந்த இழப்பை சரி செய்ய முடியாது என்றும் ஆய்வு கூறுகிறது.

கா. ந. அண்ணாதுரை வாழ்க்கைக் குறிப்பு


அறிஞர் கா. ந. அண்ணாதுரை

பதவியில்
பெப்ரவரி, 1967 – 3 பெப்ரவரி 1969
பிரதமர்இந்திரா காந்தி
ஆளுநர்சர்தார் உஜ்ஜல் சிங்
முன்னவர்எம். பக்தவச்சலம்
பின்வந்தவர்வி. ஆர். நெடுஞ்செழியன்(தற்காலிகம்)

பதவியில்
1962 – 1967
குடியரசுத் தலைவர்சர்வபள்ளி ராதாகிருஷ்ணன்
பிரதமர்ஜவஹர்லால் நேரு,
லால் பகதூர் சாஸ்திரி,
இந்திரா காந்தி

பதவியில்
1967 – 1969
தலைவர்சர்வபள்ளி ராதாகிருஷ்ணன்
ஆளுநர்சர்தார் உஜ்ஜல் சிங்
முன்னவர்எஸ். வி. நடேச முதலியார்
தொகுதிகாஞ்சிபுரம்
பதவியில்
1957 – 1962
ஆளுநர்ஏ. ஜே. ஜான்,
பக்காலா வெங்கட்ட ராஜமன்னார்,
பீஷ்ணுராம் மெதி
முன்னவர்தெய்வசிகாமணி
பின்வந்தவர்எஸ். வி. நடேச முதலியார்

பிறப்புசெப்டம்பர் 15 1909
காஞ்சிபுரம்தமிழ்நாடு,பிரித்தானிய இந்தியா
இறப்புபெப்ரவரி 3 1969(அகவை 59)
சென்னைதமிழ்நாடு,இந்தியா
வாழ்க்கைத்
துணை
இராணி அண்ணாதுரை
பிள்ளைகள்யாருமில்லை, தனது தமக்கையின் பேரக்குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்தார்
தொழில்அரசியல்வாதி

குளூக்கோமா ஏற்படுவதற்கு மரபணுக்களும் காரணம் !குளூகோமா என்பது, கண்களில் அழுத்தம் காரணமாக, "ஆப்டிக் நரம்பு' பாதிக்கப்படுவதாகும். இதில், நரம்பு விரிவடைவதுடன், கண் பார்வை திறனும் குறையும். குளூகோமாவில் கண்களின் அழுத்தம் அதிகமாக இருக்கும். சாதாரணமாக இருக்கும் கண்களில் அழுத்தம் 11 முதல் 21 ட்ட்ஏஞ் வரை இருக்கும். ஆனால், குளூகோமா வந்துவிட்டால், கண் அழுத்தம் அதிகம் ஏறும்.
கண் பார்வை குறைவதால் கண் வலி, ஒரு பகுதியில் பார்வை மங்குதல் ஆகிய பிரச்னைகள் வரும். கண் வலியுடன் சிவப்பாக மாறுதலும் வரலாம். சர்க்கரை நோய், ரத்த அழுத்த நோய், இதய நோய் ஆகிய உடல் பிரச்னைகள் உடையோருக்கு, குளூகோமா வரும் வாய்ப்பு அதிகம் உள்ளது. பெரும்பாலும் 50 வயது மேல் உள்ளவர்களுக்கு வரும்.

கேன்சர் பற்றி அனைவரும் அறிந்து கொள்ள வேண்டியது

பின் தூங்கி முன் எழுபவரா நீங்கள்?மாரடைப்பு வருமாம் ஜாக்கிரதை: அதிகமாக தூங்கினாலும் ஆபத்து தான்


இரவில் தாமதமாக உறங்கி, காலையில் விரைவாக கண் விழிக்கும் வழக்கம் உடையவர்களுக்கு மாரடைப்பு, பக்கவாதம் வரும்'என, லண்டனில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. இதற்காக, தூங்கு மூஞ்சி ஆசாமிகள் சந்தோஷப்பட வேண்டாம். அளவுக்கு அதிகமாக தூங்கினாலும் மாரடைப்பு வருமாம்.பிரிட்டனின் வார்விக் மருத்துவ பள்ளி பல்கலை நடத்திய ஆய்வில் தெரிவிக்கப் பட்டுள்ளதாவது:தற்போது உலகம் முழுவதும் மக்களின் வாழ்க்கை முறை, வேகமாக மாறி வருகிறது.

வயிற்றுக்கு ஓய்வு கொடுங்கள்!


பிறப்புலேர்ந்து இறப்பு வரைக்கும் எல்லாருக்கும், எந்த வயதுலயும் வரக்கூடிய பிரச்சினை வயிற்றுப்போக்கு. இது பாதிச்ச அனுபவம் எல்லாருக்கும் இருக்கும். சாப்பிடற உணவு ஜீரணிக்கப்பட்ட பிறகு, சிறுகுடலால உறிஞ்சப்பட்டு, மீதி பெருங்குடலுக்குத் தள்ளப்படுது. சில சமயத்துல சிறுகுடல்லேர்ந்து உறிஞ்சப்படாம, அப்படியே பெருங் குடலுக்குத் தள்ளப்படும். அதோட பாக்டீரியா தொற்றும் சேர்ந்துதான் வயிற்றுப்போக்கை உண்டாக்குது. வயிற்றுப்போக்குக்கான காரணங்கள் நிறைய....
ஊரு விட்டு ஊரு, இல்லைனா நாடு விட்டு நாடு போறவங்களுக்கு, இது சகஜம். ஆரோக்கியமில்லாத சாப்பாடு, சமைக்காத உணவு, கை, கால்களை சரியா கழுவாததுன்னு இதுக்குப் பல காரணங்கள். சின்னக் குழந்தைகளுக்கு வரக்கூடிய வயிற்றுப்போக்குக்கு இன்ஃபெக்ஷனோ, பால் அலர்ஜியோ காரணமா இருக்கலாம். குழந்தைகளுக்கு பேதியாகிறப்ப அலட்சியம் கூடாது. 23 தடவை போனாலே என்னனு கவனிக்கணும்.

மற்றவர்களின் நோயைக் குறைக்கமுடியும் உங்களால் !


பொதுவாகவே, ஆஸ்பத்திரியில் உடல்நிலை சரியாக இல்லாத போது, உடல்நலம் முன்னேற்றம் அடைந்து, படுத்த படுக்கையாக இருக்கும்போது, தம்மைப் பார்த்துப்பேசி, தனக்குக் குணம் அடைய, தமது உறவினர்களோ அல்லது நண்பர்களோ வரமாட்டார்களா என்று எல்லோரும் ஆவலுடன் எதிர்பார்ப்பது இயற்கை.
அவர்கள் கூறும் நம்பிக்கையான உரையாடலால் நமக்கு நாமே உடல்நிலை முன்னேற்றமடைந்துவிட்டமாதிரி நமக்கு உற்சாகமோ சந்தோஷமோ உண்டாவது உண்மை.

எல்.டி., பிரச்சினை உள்ள குட்டீசா?


குழந்தையின் அறிவுக் கூர்மையை அறிந்தால் படு வியப்பாக இருக்கும்; ஆனால், படிப்பில் படுமந்தமாக இருக்கும். தேர்வுகளில் மிகவும் குறைவாகவே மதிப்பெண் வாங்கும். இப்படிப்பட்ட குழந்தைகள் தான் லேர்னிங் டிசேபிலிட்டி(எல்.டி.,) கோளாறு உள்ளதாகக் கருதப்படுகிறது. எல்லாவற்றையும் தெளிவாகப் பேசுவதாகத் தெரிந்தாலும், ஒரு விஷயத்தை கிரகித்துக் கொள்ளும் அளவுக்கு வெளிப்படுத்த முடியாமல் போவது தான் இந்த குறைபாடு.
எல்.டி., என்றால் என்ன?

இரத்த சோகைக்கு தீர்வு என்ன?


    எந்தக் காரியத்தையும் உங்களால் ஒழுங்காக ஒருங்கிணைக்க முடியவில்லையா?       
       சோம்பலாக இருக்கிறீர்களா?
       காலை ஒரு இடத்தில் வைத்திருக்க முடியாமல் ஆட்டிக்கொண்டே இருக்கிறீர்களா?
       உங்களுக்கு ரத்த சோகை இருக்கலாம். உடனடியாக மருத்துவரைச் சந்தியுங்கள்.

ஸ்ட்ராபெரீஸ், புளுபெரீஸ், கூஸ்பெரீஸ் சாப்பிட்டு இருக்கிறீர்களா?


கண்ணைக் கவரும் கலர்கலரான பெர்ரீஸ் பழவகைகளான ஸ்ட்ராபெரீஸ், புளுபெரீஸ், கூஸ்பெரீஸ் மற்றும் ரஸ்ப்பெரீஸ் ஆகியவை இயற்கையிலேயே இனிப்புச்சுவை கொண்டவை. அதோடு பார்வைக்கு அழகோடு தேகத்துக்கு சத்தும் தரும் இப்பழங்கள் ஒவ்வொன்றிலும் அடங்கியுள்ள ஊட்டச்சத்து வகைகளை ஊட்டச்சத்து நிபுணர்கள் டாக்டர் பிரீத்தி விஜய் மற்றும் டாக்டர் ரீதிகா சமாட்டார் இருவரும் பட்டியலிடுகிறார்கள்.
ஸ்ட்ராபெரீஸின் நன்மைகள்:

ஒரு கப் ஆரஞ்சுப்பழ ஜூஸ் தரக்கூடிய 100 மில்லிகிராம் வைட்டமின் சி ஊட்டச்சத்து ஸ்ட்ராபெரீஸ் பழம் ஒவ்வொன்றிலும் அடங்கியுள்ளது.

இஞ்சிக்கு மிஞ்சினது எதுவுமே இல்ல ! வயித்துக் கோளாறுகளை விரட்டியடிக்கணுமா..? வழிமுறை இதோ...

உணவே மருந்தாக - கீரை வகைகள்

[Rafi+TMH.jpg]

Mohammed Rafi TMH

About Me

அன்புள்ளவன்,எல்லோரிடமும் தோழமையுடன், உதவும் கரங்கள், எல்லோரையும் எனக்குப்பிடிக்கும்...

வெங்காயத்தின் 50 மருத்துவ குணங்கள்!


வெங்காயத்தை ஆனியன் என்கிறார்கள். இது யூனியோ என்ற லத்தீன் வார்த்தையிலிருந்து தோன்றியது. இதற்கு பெரிய முத்து என்று அர்த்தம்.
வெங்காயத்தின் காரத்தன்மைக்குக் காரணம் அதில் அலைல் புரோப்பைல் டை சல்பைடு என்ற எண்ணெயாகும். இதுவே வெங்காயத்தின் நெடிக்கும் நமது கண்களில் பட்டு கண்ணீர் வரவும் காணமாக இருக்கிறது. சிறிய வெங்காயம், பெல்லாரி வெங்காயம் இரண்டும் ஒரே தன்மையை உடையன. ஒரே பலனைத்தான் தருகின்றன. வெங்காயத்தில் புரதச்சத்துக்கள், தாது உப்புக்கள், வைட்டமின்கள் உள்ளன. எனவே நம் உடம்புக்கு இது ஊட்டச்சத்து தருகிறது.

வழுக்கை தலயில் முடிவளர சித்தவைத்திய முறை.


வழுக்கை தலையில் முடிவளர:
சுத்தமாக முடி இல்லாமல் வழுக்கையாக இருப்பவர்களுக்கு கீழாநெல்லி வேரை எடுத்து சுத்தம் செய்து அதனை துண்டுகளாக்கி தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி அதனை தலையில் தொடர்ந்து தலையில் தடவி வந்தால் வழுக்கை மறையும்.

முடி உதிர்வது மற்றும் நரை போக்க:
1) வேப்பிலை ஒரு கையளவு எடுத்து அதனை தண்ணீர் போட்டு கொதிக்க வைத்துவிட்டு மறுநாள் அந்தச் சாறு எடுத்து தலையைக் கழுவிக் கொள்ள வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்தால் முடி உதிர்வதைத் தடுக்கலாம்.

கறிவேப்பிலை: புற்று அபாயத்தை தடுக்கும்


உணவின் வாசனையை அதிகரிக்கத்தான் கறிவேப்பிலை பயன்படுகிறது என்று பலர் கருதுகின்றனர். இதனால் தான் சாப்பிடும்போது உணவில் கிடக்கும் கறிவேப்பிலையை எடுத்து கீழே போட்டு விடுகிறார்கள். ஆனால் இனிமேல் இப்படிச் செய்யாதீர்கள். ஏனெனில் கறிவேப்பிலையில் பல்வேறு மருத்துவ குணங்கள் இருப்பதாக சமீபத்திய ஆய்வுகள் மூலம் தெரிய வந்துள்ளது.

தீராத வியாதி.. டென்ஷன் !இன்று நாம் ஒரு அவசர யுகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். வாழ்வே இயந்திரமயமாகிப் போய்.. நம்மை நாமே இந்த அவசர உலகில் தொலைத்துவிட்டு தேடிக் கொண்டிருக்கிறோம். நம் அடையாளமே நமக்கு மறந்து போய்விட்டது.ஓய்வு என்ற வார்த்தை ஓய்வு பெற்று காலம் பலவாகிவிட்டது. ஒரே நேரத்தில் பல வேலைகளை செய்து முடித்துவிட வேண்டும் என்று பறக்கிறோம். அது முடியாத போது தோல்வி ஏற்பட்டு தன்னம்பிக்கையை இழக்கிறோம். இதன் விளைவு மன வருத்தம். இந்த மன வருத்தம் அதிகமாகும்போது மன பாதிப்பும், உடல் பாதிப்பும் ஏற்படுகிறது. மனமும், உடலும் விறைத்து ஸ்தம்பித்து போய்விடுகிறது. மூளை சரியாக செயல்பட மறுக்கிறது. இப்படி உடலும், மனமும் ஸ்தம்பித்து போவதைத் தான் இறுக்கம் என்கிறோம். இந்த இறுக்கம் அதிகமாகி டென்ஷனாக உருவெடுக்கிறது.

தேள் கடி விஷம் நீங்க அரும் மருந்து


1) தேள் கடிவாயில் வெங்காயத்தை இரண்டாக அரிந்து அதில் ஒரு பகுதியை கடிவாயில் வைத்து அழுத்தித் தேய்க்க வேண்டும். வலி நிற்க வில்லை என்றால் அடுத்த பகுதியையும் தேய்க்க வேண்டும்.

2) எலுமிச்சம்பழ விதையுடன் சிறிது உப்பையும் வைத்து அரைத்து தண்ணீரில் கலந்து குடிக்க தேலின் விஷம் இறங்கும்.

3) நவச்சாரத்தில் சிறிது சுண்ணாம்பை சேர்த்தால் அது நீராகக் கரைந்து விடும். அந்த நீரை தேள் கொட்டிய இடத்தில் வைத்தால் விஷம் இறங்கி விடும். கடுப்பும் குறையும்.

மாரடைப்பு பற்றி ஒரு ஆய்வு !!!


உலகளவில் பெரும்பாலான மக்களின் மரணத்திற்கு மாரடைப்பே முதற்காரணம். நம் நாட்டில் ஆண்களானாலும், பெண்களானாலும் இளம் வயதிலேயே கடுமையான மாரடைப்புக்கு ஆளாவது அதிகரித்து வருகிறது. மாரடைப்பை பொறுத்தளவில் மற்ற நாடுகளுக்கும், நமக்கும் மிகப்பெரிய வேறுபாடு உள்ளது. மற்ற நாடுகளை காட்டிலும், நம்நாட்டில் மாரடைப்பு இளம் வயதினரை (30 - 45) அதிகம் பாதிப்பது மட்டுமின்றி, அதன் வீரியமும், விளைவுகளும் மிகக் கடுமை.

வாழைத்தண்டும் அதன் மருத்துவ குணமும் !!!

சிறுநீர் சம்பந்தப்பட்ட நோய்களால் துன்பப்படுகிறவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருக்கிறது. உடலில் உள்ள கழிவுகள் சிறுநீர் மூலம் வெளியேற்றப்படுகின்றது. சிறுநீரைக் கட்டுப்படுத்துவதாலோ அல்லது நோய் பாதிப்புகளாலோ சிறுநீர் சரிவர உடலை விட்டு வெளியேறாமல் இருக்குமானால், அது பல பிரச்சினைகளைத் தோற்றுவிக்கும்.

சிறுநீரகத்தில் கல் உருவாவது இன்று மிக பரவலாகக் காணப்படும் நோய். அதிக காரமான உணவு, மிகக் குறைவாக நீர் அருந்துதல், வறட்சியான உணவு, மது அருந்தும் பழக்கம், அதிக தூரம் வாகனம் ஓட்டிச் செல்வது, கடின உடல் உழைப்பு, வீரியமான மருந்துகளை உட்கொள்ளுதல், அடிக்கடி சிறுநீரை அடக்குதல் போன்ற காரணங்களால் சிறுநீர் தடைபட்டு சிறுநீரகத்தில் கற்கள் உண்டாகின்றது.

சிறுநீரக கற்கள் உடலில் தோன்றும் போது வாந்தி, காய்ச்சல், பசியின்மை, இடுப்புப் பகுதியில் தாங்க முடியாத வலி, சிறுநீரில் ஒரு வித துர்நாற்றம், சிறுநீர் கழிக்கும் பொழுது வலி, சிறுநீரக கற்கள் சிறுநீர்ப்பையில் உராயும் பொழுது சிறுநீரில் ரத்தம் வெளியேறுதல் போன்றவை உருவாகும்.


சிறுநீரக கற்களை வெளியேற்ற மருந்துகளும், மருத்துவ முறைகளும் இருந்தாலும் நாம் உட்கொள்ளும் உணவு மூலமும் சிறுநீரக கற்களை வெளியேற்றலாம். வாழைத்தண்டுக்கு சிறுநீரக கற்களை வெளியேற்றும் தன்மை உண்டு. வாழைத்தண்டை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வதால், ஆரம்ப நிலையில் உள்ள கற்களை மிக எளிதாகக் கரைத்து விடலாம். சிறுநீரக கற்கள் உள்ளவர்கள் வாழைத்தண்டை வாரம் மூன்று முறை உணவில் சேர்த்துக் கொள்ளவேண்டும்.

"நிதி மிகுந்தவர் பொற்குவை தாரீர், நிதி குறைந்தவர் காசுகள் தாரீர்"


Image
உங்கள் திருமண நாள், உங்கள் குழந்தைகள்/பேரக்குழந்தைகளின் பிறந்த நாள் மற்றும் பாசம் மிகுந்த உங்கள் பெற்றோர்களின் நினைவு நாட்களில், கொடிய புற்று நோயினால் உயிருக்குப் போராடும் ஏழை நோயாளிகளுக்கு, வயிறார உணவளித்து அவர்கள் வியாதிக்கு தரம் வாய்ந்த சென்னை அடையாறு கேன்சர் மருத்துவமனையில் இலவசமாகவோ அல்லது குறைந்த செலவிலோ சிகிச்சை பெற உதவ நீங்கள் விரும்புகிறீர்களா?

ஒளி எங்கிருந்து வருகிறது?

Image
ஜனக மகாராஜன், ஓர் ஆன்மீக ஞானி. இவருக்கு, ஞானிகளின் சபையைக் கூட்டி விவாதங்கள் மூலம் வாழ்க்கைப் பேருண்மைகளை அறிவதில் எல்லையற்ற ஆசை. அன்றும் ஒரு விவாதம் அரங்கேறியது. யாக்ஞ்வல்கி என்ற வேதங்களில் வித்தாக விளங்கிய மகரிஷிக்கும், கார்கி என்ற அறிவிற் சிறந்த பெண்ணுக்கும் அறிவுப் போர் ஆரம்பமானது.
‘மகரிஷியே! ஒளி எங்கிருந்து வருகிறது?’ என்று கேட்டாள் கார்கி,
‘சூரியனிடமிருந்து; என்றார் மகஷிரி. விவாதம் தொடர்ந்தது.
‘சூரியன் இல்லாத போது?’’

தேங்காயில் உள்ள “ஃபேட்டி ஆசிட்” (Fatty Acid) உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் கரைக்கிறது. உடல் எடையைக் குறைக்கிறது


      
தேங்காயில் உள்ள “ஃபேட்டி ஆசிட்” (Fatty Acid) உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் கரைக்கிறது. உடல் எடையைக் குறைக்கிறது என்று சமீபத்திய ஒரு ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது மருத்துவ உலகினர் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
       “தேங்காயில், தேங்காய் எண்ணெயில் கொழுப்புச் சத்து அதிகம். உடலுக்கு ஆகாது. குறிப்பாக சர்க்கரை நோயாளிகள், இதய நோயாளிகள் தேங்காயைத் தொடக்கூடாது” என்ற பிரசாரத்துக்கு இந்த ஆய்வு பெரும் சவால் விடுத்துள்ளது.
       அதேவேளையில் பூலோகத்தின் கற்பக விருட்சம் என்று சொல்லி தென்னையையும் அதன் முத்தான தேங்காயையும் சித்த மருத்தவம் உள்பட இந்திய மருத்துவ முறைகள் காலம் காலமாகப் போற்றி வருகின்றன.
       தாய்ப்பாலில் உள்ள புரதச் சத்துக்கு இணையானது இளநீரில் உள்ள புரதச் சத்து.

மாசி மகம் (18 .02 .2011 ) - இரவு இறை தரிசனம் தவற விடாதீர்கள் !
18.2.2011 வெள்ளிக் கிழமை - இரவு 3 .30 மணிவரை  மாசி மாதத்து பவுர்ணமி வருகிறது.

சந்தர்ப்பம் இருப்பவர்கள்,உங்கள் ஊரில் இருக்கும் அம்மன் கோவிலுக்குச் செல்லுங்கள்.அன்று இரவு 10 மணி முதல் 12 அல்லது 1 மணிவரையிலும் பவுர்ணமி பூஜை நடைபெறும்.சென்னை,கோவை,மதுரை முதலான மாநகரங்களில் இரவு 8 முதல் 10 மணிக்குள் பவுர்ணமி பூஜை நடைபெற்று வருகிறது.

மாரடைப்பு ஏற்படாமல் தடுத்துக் கொள்வது எப்படி?


இதயத்திலிருந்து உடலின் பல்வேறு பகுதிகளுக்கு ரத்தம் எடுத்துச் செல்லும் தமனியின் சுவர்கள் தடித்துப் போவதால் இதய நோய்கள் ஏற்படுகின்றன. 

புகை பிடித்தல், குடிப்பழக்கம், மன அழுத்தம், அதிக கொழுப்புள்ள உணவுகளைச் சாப்பிடுதல், தவறான வாழ்க்கை முறை, அதிக ரத்த அழுத்தம் ஆகியவற்றைக் குறைத்தால் ரத்த நாளங்கள் சீராகச் செயல்பட ஆரம்பிக்கும். 

தினமும் உடற்பயிற்சி மிகவும் அவசியம். நல்ல உணவு, முறையான உடற்பயிற்சி ஆகியவை ரத்த நாளங்கள் பழுதடையாமல் செயல்பட உறுதுணையாக இருக்கும்.

வெறும் பத்து ரூவாய்லே - சிறுநீரகக் கல்லுக்கு சூப்பரான தீர்வு...

http://www.sailusfood.com/wp-content/uploads/2008/09/french-beans.jpg

செல்வ வளம் பெருக உதவும் லக்ஷ்மி கணபதி மந்திரம்

செல்வ வளம் பெருக உதவும் லக்ஷ்மி கணபதி மந்திரம்
பின்வரும் மந்திரத்தை தினமும் அரை மணி நேரம் வீதம் மூன்றுமாதங்கள் வரையிலும் ஜபித்து வந்தால் பொருளாதார ரீதியான கஷ்டங்கள் அடியோடு நீங்கி,செல்வ வளம் பெருகும்.
சதுர்புஜம் பாசதரம் கணேசம்
ததாங்குச தந்தயுக்தம் த்ரிநேத்ரம்
லம்போதரம் சர்பயக்ஞோபவீதம் கஜகர்ணம்
ரமயாசிஷ்ட பார்ஸ்வ பத்மமாலா
அலங்க்ருத விபும் சாந்தம் சுரகணசேவிதம்
லக்ஷ்மி கணபதிம் பாதபத்மம் பஜேஹம்

தங்களுக்கு ஏற்படும் ஜோதிடம் (Jothidam , josyam ), ஜாதகம் (horoscope ) , வாஸ்து (Vaasthu ) , கை ரேகை ( Palmistry ) , அதிர்ஷ்டக் கற்கள் (Gems ) , எண் கணிதம் (Numerology ), திருமணப் பொருத்தம் (Horoscope matching) சம்பந்தப்பட்ட அனைத்து கேள்விகளுக்கும் தகுந்த ஆலோசனைகள் வழங்கப்படும். எந்தவித கட்டணமும் வசூலிக்கப் படாது தங்கள் ஜாதக நகல் அல்லது , தாங்கள் பிறந்த தேதி , நேரம், பிறந்த ஊர் மற்றும் தங்கள் கேள்விகள் அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி : editor@livingextra.com

ஆழ்மனத்துடன் பேசி உங்கள் எதிர்காலத்தை நீங்களே உணர ஒரு சுலப முறை!!!

ஏதாவது ஒரு அமாவாசையன்று 50 கிராம் பசுநெய்யும்,50 கிராம் நல்லெண்ணையும், தாமரை நூல் திரியும் வாங்கிக் கொள்ள வேண்டும்.இதை நம் வீட்டில் இருக்கும் திருவிளக்கில் போட்டு தீபம் ஏற்ற வேண்டும்.விளக்கிலிருந்து நான்கு அடி தூரம் தள்ளி சுத்தமான மஞ்சள் விரிப்பு விரித்து அதில் நிமிர்ந்து உட்கார வேண்டும்.நமது புருவமத்திக்கு நேராக தீபம் எரிய வேண்டும்.
[DSCF0083.JPG]

கடவுளை நாளைக்கு நீங்களே பார்க்கலாம் !

பணக்காரனாக எளிய விரதம்! -பிப்.10 - ரத சப்தமிசூரியன் உதயமாகும் சமயத்தில், யாரொருவர் குளித்து, பணிகளுக்கு தயாராகி விடுகிறாரோ, அவர் ஏழையாக இருக்க மாட்டார் என்று சொல்கிறது சாஸ்திரம். ரதசப்தமி திருவிழாவின் தாத்பர்யமே அதுதான். சூரியனின் பிறந்தநாளை ரதசப்தமியாகக் கொண்டாடுகின்றனர். "சூரிய ஜெயந்தி' என்பது, இவ்விழாவின் மற்றொரு பெயர். சப்தம் என்றால் ஏழு. இதனால் தான் அமாவாசை அல்லது பவுர்ணமி கழிந்த ஏழாம் நாளை, "சப்தமி திதி' என்கிறோம்.

வில்லேந்திய வேலவன்

கடலூர் மாவட்டம் நெய்வேலி பஸ்ஸ்டாண்டிலிருந்து 3 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ள திருத்தலம் வில்லுடையான்பட்டு. இங்கு முருகன் வள்ளி, தெய்வானையுடன் வேலுடன் வில்லையும் ஏந்திஅருள்பாலிக்கிறார். அத்துடன் பாதங்களில் குறடு அணிந்து காணப்படுவதால்,இங்கு வழிபடும் பக்தர்கள் பாதக்குறடுகளை காணிக்கை பொருளாக செலுத்துகின்றனர். இந்த வில்லேந்திய வேலவனைப்பற்றி அருணகிரிநாதர் திருப்புகழில்,”சூலம், வாள், தண்டு செஞ்சேவல் கோதண்டமுஞ் சூடு தோளுந் தடந்திரு மார்பும் தூய தாள் தண்டையுங் காண ஆர்வஞ் செய்யுந்தோகைமேல் கொண்டு முன் வர வேணும்” என பாடியுள்ளார்.

புத்தி தெளிவு பெறலாமே!ஸ்ரீபகவானுடைய உபதேசங்களே வேதங்கள். அவைகளில் நமக்கு துக்கத்தைப் போக்கி, சுகத்தை அடையும் உபாயங்கள் கூறப்பட்டுள்ளன. அவைகளை நமக்குப் புரியும்படி விளக்கமாக கூறியுள்ளனர் மகான்களும், முனிவர்களும். வேளை தவறாமல் சாப்பிட்டு விட்டு, தூங்கி எழுவது மட்டுமே சுகம் அல்ல; மகான்களின் உபதேசத்தை தெரிந்து, அதன்படி நடப்பதே உண்மையான சுகத்துக்கும், மோட்சத்திற்கும் உரிய வழிகள்.

புத்திர பாக்கியம் அருளும் புத்திர காமேட்டீஸ்வரர்


என்னதான் ஒருவருக்கு அள்ள அள்ள செல்வம் வந்து கொண்டிருந்தாலும் குழந்தைச் செல்வம் என்று ஒன்று இல்லாவிட்டால் அவரது வாழ்க்கையில் மகிழ்ச்சியே இல்லாமல் போய்விடும்.
இதனால்தான், `குழலினிது யாழினிது என்பர் தம்மக்கள் மழலைச் சொல் கேளாதவர்' என்றார் வள்ளுவர்.    இப்படி, குழந்தை பாக்கியத்திற்காக ஏங்கும் தம்பதியரின் குறையை நீக்க ஈசன் குடிகொண்டிருக்கும் அவதார ஊர்தான் ஆரணி. இங்கு, குழந்தை இல்லாதோரின் தோஷம் நீக்கும் புத்திர காமேட்டீஸ்வரராக இறைவன் அருள் பாலிக்கிறார்.

கோடை நோய்கள் தீர்க்கும் கவுமாரியம்மன்


தேனி மாவட்டம் வீரபாண்டி என்னும் ஊரில் பிரசித்திபெற்ற கவுமாரியம்மன் கோவில் அமைந்துள்ளது.    பாண்டிய மன்னனுக்குக் கண் பார்வை தந்த இந்தக் கோவிலில் வணங்கிச் செல்பவர்களுக்கு அம்மை மற்றும் கோடைக்கால அனைத்து வெப்ப நோய்களும் நீங்கி விடும் என்கிறார்கள்.
இக்கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் சித்திரை திருவிழா புகழ்பெற்றது. இந்த விழாவின்போது, இங்குள்ள முல்லை ஆற்றின் கரையில் உள்ள சேற்றை உடல் முழுக்க பூசிக் கொண்டு வந்து கவுமாரியம்மனை வழிபடும் நேர்த்திக்கடனை பக்தர்கள் செலுத்துவது சிறப்புமிக்கது. தேனியில் இருந்து வீரபாண்டி செல்ல பஸ் வசதி உள்ளது. தேனி, திண்டுக்கல், மதுரை போன்ற நகரங்களில் இருந்து கம்பம், குமுளி செல்லும் புறநகர் பஸ்கள் அனைத்தும் வீரபாண்டி வழியாகவே செல்கின்றன.

அரை மணி நேரத்தில் ரத்தப் பரிசோதனை முடிவுகள்!


இன்றைய நவீன மருத்துவ முறையின் ஓர் அங்கம், ரத்தப் பரிசோதனை. தற்போது, ரத்தப் பரிசோதனைக்கு மருத்துவமனை அல்லது அதற்கென உள்ள சோதனைக் கூடத்தில் ரத்தம் கொடுத்துவிட்டு முடிவுக்காகக் காத்திருக்க வேண்டியிருக்கிறது.
இனி அந்த நிலை மாறப் போகிறது. ஒரு கைக்கு அடக்கமான, மலிவான ரத்தப் பரிசோதனைக் கருவியை விஞ்ஞானிகள் உருவாக்கியிருக்கிறார்கள். ஒரு துளி ரத்தம் இட்டால் போதும், இந்த உபகரணம் அரை மணி நேரத்தில் துல்லியமான முடிவுகளைக் கூறிவிடும்.

நினைவாற்றல் அதிகரிக்க


ஞாபக சக்தியை அதிகரிக்கும் உணவுப்பொருட்கள்: அச்சச்சோ! மறந்து போச்சே... இன்று நாம் அதிகமாகப் பயன்படுத்தும் வாக்கியம் அநேகமாக இதுவாகத்தான் இருக்கும். இதற்குக் காரணம் நினைவாற்றல் இல்லாதது தான். நினைவாற்றல் அதிகரிக்க பாஸ்பரஸ் மற்றும் குளுட்டாமிக் அமிலம் உள்ள உணவுப் பொருட்களைத் தொடர்ந்து சாப்பிட வேண்டும்.

* வாரம் ஒருமுறை வல்லாரைக் கீரையை உணவில் சேர்த்து வருவது நல்லது. இதுவும் ஞாபக சக்தியை அதிகரிக்கும். இக்கீரையை வெயிலில் காயவைத்துப் பொடியாக்கிக்கொண்டு, தினமும் அரை தேக்கரண்டியைப் பாலுடன் சேர்த்து அருந்தி வந்தால் பிள்ளைகள் மற்றும் பெரியவர்கள் நல்ல நினைவாற்றலுடன் சுறுசுறுப்பாகத் திகழ்வார்கள். கீரை கிடைக்காதவர்கள் வல்லாரை கேப்ஸ்யூல்களைப் பயன்படுத்தலாம்.

சனி ஊருக்குள் இப்படித்தான் வந்தாராம்..

முன்னோர் திருவிழா !பிப்., - 2 தை அமாவாசை!


மனிதப் பிறவி மகத்தான பிறவி. மனிதனாகப் பிறந்தால் தான், இறைவனை எளிதில் அடைய முடியும். வேறு எந்தப் பிறவிக்கும், இந்த சிறப்பு கிடையாது. வானுலகில் தேவராக இருந்தாலும் கூட, இறைவனைத் தரிசிக்கத்தான் முடியுமே ஒழிய, அவரோடு இரண்டறக் கலக்க முடியாது. ஆக, இத்தகைய அரிய மானிடப்பிறவியைத் தந்த நம் முன்னோருக்கு,