கோடை காலத்தில் வாயு பதார்த்தங்களை தவிர்ப்பது நல்லது.

இந்த கோடை காலத்தில் பொதுவாகவே அமிலத்தன்மை உடலில் உருவாகும் .அதனால் அதை தவிர்க்க வாயு பதார்த்தங்களை கோடை காலத்தில் தவிர்ப்பது நல்லது.

இன்று நேரம் தவறி சாப்பிடுவதாலும் ,முறையற்ற உணவு பழக்கத்தாலும் ,பலர் அசிடிட்டி பிரச்சினையால் அவதிப்படுகிறார்கள் .அதனால்தான் ‘உணவை குடி ,தண்ணீரை மெல்’ என்று ஆயுர்வேதத்தில் உணவு உண்ணும் முறை பற்றி கூறியுள்ளனர் .உணவு விஷயங்களில் சில வழிமுறைகளை கடைப்பிடிப்பதன் மூலம் அசிடிட்டி பிரச்சினைக்கு தீர்வு கண்டுவிடலாம்.

மேலும் துரித உணவு வகைகளை அதிகமாக சாப்பிடுவது, வேகமாக சாப்பிடுவது, உணவை மென்று சாப்பிடாமல் அப்படியே விழுங்குவது போன்றவை அசிடிட்டி பிரச்சினை ஏற்படுவதற்கான பொதுவான காரணங்களாகும்..

முதலில் உணவை மெதுவாக மென்று சாப்பிடுவதற்கு பழகிக்கொள்ள வேண்டும். மூன்று வேளை உணவையும் சீரான இடைவெளியில் சாப்பிட வேண்டும். ஒருபோதும் அதிக இடைவெளி விட்டு சாப்பிடக்கூடாது.

உலர் திராட்சை அசிடிட்டி ஏற்படாமல் தடுக்க உதவும். உலர்திராட்சையை இரவு முழுவதும் ஊற வைத்துக்கொள்ள வேண்டும். காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் ஒரு டம்ளர் தண்ணீர் பருகிவிட்டு பின்பு ஊற வைத்த உலர்திராட்சையை மென்று சாப்பிடலாம். பனங்கற்கண்டும் அசிடிட்டியை போக்கும்தன்மை கொண்டது. இயற்கையாகவே உடலில் அமிலத்தன்மையை சமநிலையில் பராமரிப்பதற்கு பனங்கற்கண்டு உதவும்.

சிறுநீரகத்தை சுத்தம் செய்ய சில எளிய டிப்ஸ் உங்களுக்காக...

கைப்பிடி அளவு கொத்தமல்லி தழைகள், அரை ஸ்பூன் சீரகம், அரை டம்ளர் எலுமிச்சை பழம் சாறு மற்றும் ஒரு டம்ளர் தண்ணீர் ஆகியவற்றை ஒன்றாக கலந்து அடுப்பில் வைக்கவும். அது பாதியளவு சுண்டும் வரை கொதிக்க வைத்து ஆறிய பிறகு வடிகட்டி மூன்று நாட்கள் தொடர்ந்து காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் சிறுநீரகம் சுத்தமாகும். இதனை குழந்தைகளுக்கும் கொடுக்கலாம்.