Pages

ஆவணி அவிட்டம்: கடவுளை அறியும் அறிவைப் பெறுவோம்!

நயனம் என்றால் கண்.
நமக்கு இரண்டு
நயனங்கள் (கண்கள்)
இருக்கின்றன. அவை
ஊனக் கண்கள். இதுதவிர
மூன்றாவதாக ஒரு
கண்தேவை. அது தான்
ஞானக்கண்.
அக்கண்ணைப்
பெறுவதற்கான
சடங்குதான்உபநயனம்.
உபநயனம் என்றால்
துணைக்கண் என்று
பொருள். ஞானம் என்னும் கல்வி
அறிவை பெற்றால் மட்டுமே ஒருவன்
கண் பெற்ற பயனைப் பெறுகிறான்
என்று தெய்வப்புலவர் திருவள்ளுவர்
குறிப்பிடுகிறார். கடவுளைப் பற்றி
அறியும்அறிவே உயர்ந்த அறிவாகும்.
அதனால் பூணூல் அணியும்
சடங்கினை பிரம்மோபதேசம் என்று
குறிப்பிடுவதுண்டு. மகாவிஷ்ணு
பூலோகத்தில் பல அவதாரங்களை
எடுத்து தர்மத்தை நிலைநாட்டினார்.
அதில் வாமன அவதாரமும் ஒன்று.
அதிதி காஷ்யபரின்
பிள்ளையாகஅவதரித்த
வாமனமூர்த்திக்கு சூரியபகவானே
உபநயனம் (பூணூல்அணிவித்தல்)
செய்தார். பகவானே பூணூல்
அணிந்து கொண்டதன் மூலம்,
இச்சடங்கின் சிறப்பினை உணரமுடியும்.
பூணூலை யக்ஞோபவீதம் என்று
அழைப்பர். இதற்கு மிகவும்
புனிதமானது என்று பொருள்.
பூணூல் அணிபவர் களும், அதனைத்
தயாரிப்பவர்களும் ஆச்சார
அனுஷ்டானங்களில் இருந்து சிறிதும்
விலகுதல் கூடாது. ஆவணி
அவிட்டத்தன்று பூணூல் அணியும்
இளைய தலைமுறையினரும் இதன்
முக்கியத்துவத்தை உணர்வது அவசியம்.
விரத முறை: கணபதி பூஜையுடன்
இவ்விரதத்தை துவங்கி,
புண்யாவாகனம் செய்த பின், பஞ்சகவ்யம்
அருந்தி உடல், மனம், இருப்பிடங்களைத்
சுத்தமாக்கிக் கொள்ள வேண்டும்.
இவ்வேளையில் கிழக்கு நுனியாக
வாழை இலை போட்டு, அதில் அரிசி
பரப்பி 7 கொட்டைப் பாக்குகள் வைத்து,
அதில் சப்தரிஷிகளை ஆவாஹனம்
செய்து, தீபாராதனை செய்து,
நைவேத்தியம் படைக்க வேண்டும். பின்,
சப்தரிஷிகளை வேண்டி ஹோமம் செய்ய
வேண்டும். அதில் அரசு அல்லது புரசு
சமித்துக்கள் (குச்சிகள்), சத்துமாவு,
நெய், நெல்பொரி ஆகியவற்றை மந்திரம்
சொல்லி அக்னியில் இட வேண்டும். பின்,
புதிய பூணூல் அணிந்து கொள்ள
வேண்டும்.இவ்வேளையில்
பஞ்சபூதங்களையும் வழிபடலாம்.
திருமணம் ஆகாத ஆண்கள் பூணூலை
குருவிற்கும், வயதில்
மூத்தோருக்கும் தானமாகத் தரலாம்.
புதிய பூணூல் அணிந்த அனைவரும்
முதலில் தேவர்களுக்கும், பின்னர்
ரிஷிகளுக்கும் தர்ப்பணம் செய்கின்றனர்.
இவர்களில் தந்தையை இழந்தவர்கள்
தேவர்களுக்கும், ரிஷிகளுக்கும்
தர்ப்பணம் செய்தபிறகு தங்களுடைய
பிதுர்களுக்கும் தர்ப்பணம் செய்ய
வேண்டும். இதற்கு பிறகு
குருவிற்கும், வயதில்
மூத்தோருக்கும் வெற்றிலை பாக்கு,
பழம் மற்றும் அவர்கள் சக்திக்குத்
தகுந்தாற்போல் காணிக்கைகளை
அளித்து அவர்களின் ஆசிர்வாதம் பெற
வேண்டும்.
பலன்: இவ்விரதம் இருந்து பூணூல்
அணிந்து கொண்டவர்களை செய்பவரை
எவ்வித துன்பமும் நெருங்காது.
எதிரிகளின் தொல்லை குறையும்.

http://temple.dinamalar.com/news_detail.php?id=5179

ஆவணி அவிட்டம்

ஆவணி அவிட்டம் என்னும் ஆண்டுச் சடங்கு
உபநயனம் செய்து கொண்ட பிராமணர் ஆடி
அல்லது ஆவணி மாதங்களில் அவிட்டம்
நட்சத்திரத்தினோடு கூடிய பௌர்ணமியில்
கடைபிடிக்கும் வழிபாடாகும்.

காப்பீடு அல்லது காப்புறுதி (insurance)

சட்டம் மற்றும் பொருளியலில்‚ காப்பீடு அல்லது காப்புறுதி (insurance) என்பது சார்ந்திருப்போர் இழப்பின் பாதிப்பு இடர்பாட்டினைக் கடப்பதற்கு முதன்மையாகப் பயன்படுத்தப்படும் இடர் மேலாண்மை வடிவமாகும். பெரிய அளவிலான அதிர்ச்சியளிக்கும் இழப்பிற்கான வாய்ப்பை தவிர்க்கும் வகையில் ஒரு சிறிய உத்தரவாதம் மிக்க இழப்பாக ப்ரீமியத்தைப் பெற்று‚ ஒரு தரப்பிலிருந்து மற்றொரு தரப்பிற்கு இழப்பு இடர்பாட்டிற்கு சமமான மாற்றினை வழங்குவதே காப்பீடு ஆகும்.

தைராய்டு உள்ளவர்கள் தவிர்க்க வேண்டிய உணவுப் பொருட்கள்!

கழுத்திற்கு நடுவில் உள்ள ஓர் சுரப்பி தான் தைராய்டு. இந்த சுரப்பி சுரக்கும் ஓர் ஹர்மோன் தான் தைராக்ஸின். இது தான் உடலின் வெப்பநிலை, உடல் எடை, மெட்டபாலிசம் போன்றவற்றை சீராக பராமரிக்கவும், உடலுக்கு வேண்டிய ஆற்றலை உற்பத்தி செய்யவும் உதவுகிறது.

எலும்பு தேய்மானத்தை சூரிய ஒளி தடுக்கும் !

எலும்பு என்பது மனிதனின் உடலில் காணப்படும் விறைப்பான, கடினத்தன்மை கொண்ட உறுப்பாகும். உடல் உள் உறுப்புகளுக்கு பாதுகாப்பாக அமைந்து உடலை தாங்கும் உறுப்புகள்தான் எலும்புகள்.

உடலில்உள்ளநச்சுக்களைவெளியேற்றிஉடலைசுத்தப்படுத்தும் உணவு வகைகள்!

உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி உடலை சுத்தப்படுத்தும் உணவு
வகைகள் சிலவற்றை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்,