Pages

பெற்றோரிடம் பேசத்தயங்கும் பிள்ளைகள்!

இன்றைய இளைஞர்கள் அறிவியல், தகவல் தொடர்பு மற்றும் தொழில் ட்பம் போன்ற பல்வேறு துறைகளில் வேக வேகமாக முன்னேறி வருகின்றனர். பல்வேறு திறமைகளை கைவசம் கொண்ட அவர்களுக்கு தங்கள் சொந்த பிரச்சினைகள் மட்டும் பூதாகரமாக இருப்பது ஏன்? இன்றைய தலைமுறையை சிக்கலுக்குள்ளாக்கும் கேள்வி இதுதான்.

நவீன தலைமுறையினருக்கு தங்களது பிரச்சினைகளை பெற்றோர்களிடம் ஏன் வெளிப்படையாக தெரிவிக்க முடியவில்லை...இதற்கு என்ன காரணம்? அப்படியே திக்கித்திணறி தெரிவித்தாலும் கூட அவை பெரும்பாலும் தோல்வியில் தான் முடிகின்றன. இதற்கு என்னதான் காரணம்?

பல் மருத்துவப் பறவை!


`
புளோவர்' என்று ஒரு சிறுபறவை. இது முதலைகளின் பற்களைச் சுத்தம் செய்யும் வைத்தியராகப் பணியாற்றுகிறது.
முதலை, உயிரினங்கள் எல்லாவற்றையும் தின்னக்கூடியது. இரையின் எச்சங்கள் அதன் கோர மான பற்களிடையே சிக்கிக் கொண்டிருக்கும்.

கழுத்து வலி...

எண் சாண் உடம்புக்கு சிரசே பிரதானம் என்பது சித்தர்களின் முதுமொழியாகும். மனிதனின் இயக்கங்கள் அனைத்திற்கும் உள்ள சூட்சும பகுதிதான் சிரசு. பஞ்ச பூதங்களின் செயல்பாடுகள், பிரபஞ்ச சக்தியை உணரும் தன்மை அனைத்தும் சிரசின் வழியே தான் நடை பெறுகிறது. இத்தகைய சக்திகள் அனைத்தையும் தன்னுள் அடக்கி பல கோடிக் கணக்கான அணுக்களைக் கொண்ட பந்து போல தோற்றமளிக்கும் சிரசை தாங்கி நிற்பது கழுத்துப் பகுதிதான். கழுத்து உடலின் முக்கிய உறுப்பாகும். கழுத்தில்தான் முக்கிய நாடி நரம்புகள் நெருக்கமாக செயல்பட்டுக்கொண்டு இருக்கும்., தசை நார்களும் உறுதி கொடுக்கின்றன. இந்த கழுத்து எலும்பிலிருந்து தான் கைகளுக்கு போகும் நரம்புகள் வெளிவருகின்றன.

உலகம் முழுவதும் வெப்பம் அதிகரித்து வருவதை, மனிதர்களுக்கு, பென்குயின்கள் உணர்த்துகின்றன.

பென்குயின் பறவைகள் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். மிகவும் கடுமையான குளிர் பிரதேசமான அண்டார்டிகாவில் வசிக்கும் இந்த பறவைகள் மிகவும் சாதுவானவை. ரத்தத்தை உறைய வைக்கும் கடும் பனிப்பாறைகள் நிறைந்த, துருவ பகுதியில் மட்டுமே இவைகள் வளரும். பெரும் பனிப்பாறைகள் மிதக்கும் கடலில், இவைகள் குதித்து விளையாடும், தண்ணீரில் மூழ்கி மீன்களை பிடித்து சாப்பிடும். இந்த அபூர்வ காட்சியை பார்ப்பதற்கு என்றே, சுற்றுலாப் பயணிகள் துருவ பகுதியில் குவிவர்.

அம்மை நோய்...

சித்திரை மாதம் பிறந்துவிட்டது. கோடை வெயிலும் தாக்க ஆரம்பித்துவிட்டது. கோடைக்காலத்து சூரியன் கொடுமையால் நிலம் சூடடைவது போல் நம் உடலும் வெப்பத்திற்கு ஏற்ப மாறுதல் அடையும். இந்த மாறுதல்கள் நிகழும்போது ஒரு சில நோய்கள் நம்மை தாக்கக்கூடும். அதில் முதன்மையாக வருவது அம்மை நோயே.

அஞ்சாத நெஞ்சம்!-ஏப்., 28 - திருநாவுக்கரசர் குருபூஜை!

பயமில்லாதவன் யார் என்றால், ஆன்மிகவாதி தான் என்பதற்கு, உதாரண புருஷராகத் திகழ்ந்தவர் திருநாவுக்கரசர். "நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம்...' என்ற தேவாரப் பாடல் ஒலிக்காத நெஞ்சங்களே இல்லை. இந்த பாட்டுக்கு சொந்தக்காரர் இவர். இறைவனை மனதில் நிறுத்தியவன், எமனுக்கு கூட அஞ்ச மாட்டான் என்று அறிவித்தவர். அவரது குருபூஜை, சித்திரை சதய நட்சத்திரத்தில் நடத்தப்படும்.
விழுப்புரம் அருகிலுள்ள திருவாமூரில் வசித்த தீவிர சிவபக்தரான புகழனார் - மாதினியார் தம்பதிக்கு, திலகவதி என்ற மகளும், மருள்நீக்கி என்ற மகனும் பிறந்தனர். இருவருக்கும் வயது இடைவெளி அதிகம்; இதனால், தம்பியை, பிள்ளை போல கருதினார் திலகவதி.
திலகவதிக்கும், அந்நாட்டு படைத் தலைவர் கலிப்பகை யாருக்கும் திருமணம் நிச்சயமானது. நிச்சயதார்த்தத்துக்கு பிறகு நடந்த போரில், அவர் கொல்லப்பட்டார். திலகவதியின் தந்தையும், தாயும் இந்த கவலையிலேயே இறந்து விட்டனர். துக்கம் தாளாத திலகவதியும் இறக்க முடிவெடுத் தார். தனிமையில் விடப்பட்ட மருள்நீக்கி, தனக்காக வாழும்படி சகோதரியிடம் கெஞ்சினார். அதனால், மனம் மாறி, இனி, வேறு யாரையும் மணப்பதில்லை என்ற உறுதியுடன், தம்பியை வளர்த்து வந்தார் திலகவதி.
மருள்நீக்கி சிறப்பாக படித்தார். மதப்பூசல் அதிகமாக இருந்த அந்த நேரத்தில், நாடாண்ட மகேந்திர பல்லவன், மக்களை சமண மதத்தைக் கடைபிடிக்க உத்தரவிட்டான். சமணர்கள் மந்திர, தந்திரங்களில் வல்லவர்கள். மருள்நீக்கியின் கல்வியறிவைக் கேள்விப்பட்டனர். அவரது புத்திசாலித்தனம், சமணத்தை வளர்க்க உதவும் என நம்பினர். தங்கள் மதத்தின் சிறப்பை எடுத்துக் கூறினர். மருள்நீக்கியும் சமணத்தில் இணைந்து, "தேவசேனன்' என்று பெயர் மாற்றிக் கொண்டார். சைவத்தில் இருந்து சமணத்துக்கு மாறியதை, திலகவதி ஒப்புக் கொள்ள மறுத்தார்.
தம்பியை மீண்டும் சைவத்துக்கு மாற்ற அவர் எடுத்த முயற்சி, பலன் அளிக்கவில்லை. இதனால், அவர் தம்பியை விட்டு, அருகிலுள்ள ஊருக்கு போய் விட்டார். சிவனை எண்ணி உள்ளமுருகி பாடி, தன் தம்பி மீண்டும் சைவம் திரும்ப வேண்டினார். ஒருநாள், சிவன், அவரது கனவில் தோன்றி, "<உன் தம்பிக்கு கடும் வயிற்றுவலியைக் கொடுத்து, சைவத்திற்கு திரும்பச் செய்வேன்...' என உறுதியளித்தார்.
அதன்படி, தேவசேனனுக்கு வலி ஏற்பட, சமணர்கள் செய்த மந்திர சிகிச்சை பலன் தரவில்லை. வலி தாளாமல் சகோதரியை தேடி ஓடினார். அவரை, சிவாலயத்துக்கு அழைத்துச் சென்றார் திலகவதி. கோவிலுக்குள் நுழைந்ததுமே வலி நீங்கியது; உடனே, பல பாடல்களைப் பாடினார். சைவத்துக்கு மாறி, பழைய பெயரையே வைத்துக் கொண்டார்.
இதையறிந்து, மன்னரிடம் முறையிட்டனர் சமணர்கள். "தேவசேனன் வயிற்றுவலி வந்தது போலவும், எங்கள் மந்திரங்களால் குணமாகாதது போலவும், சிவன் கோவிலுக்கு சென்றதும் குணமாகி விட்டது போலவும் நாடகமாடுகிறான். சைவ மதமே சிறந்தது என்று காட்ட முயற்சிக்கிறான்...' என்று புகார் கூறினர்.
அவரை அழைத்து வர உத்தரவிட்டான் மன்னர்.
"நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம்...' என்ற பாடலைப் பாடி, "நான் உங்கள் அரசனுக்கு கட்டுப்பட்டவன் அல்ல. சிவனுக்கு மட்டுமே அடிமை; அங்கு வர முடியாது. இதனால், எனக்கு மரணதண்டனை தந்தாலும் பரவாயில்லை...' என்ற ரீதியில் பாடல் அமைந்தது. கோபமடைந்த அரசன், நேரில் வந்து, அவரை சுண்ணாம்பு காளவாசலில் வைத்து கொல்ல முயன்றான்; காளவாசல் குளிர்ந்து விட்டது. விஷம் கொடுத்தான்; அதுவும், அவரைக் கொல்லவில்லை. கல்லைக் கட்டி கடலில் வீசினான்; அவர் மூழ்கவில்லை. மன்னரே பயந்து போனார். அதன்பின், மன்னரும் சைவத்தை தழுவினான்.
இவரது இனிய பாடல்களால், "நாவுக்கரசர்' என்ற பெயர் இவருக்கு அமைந்தது.
தஞ்சாவூர் அருகிலுள்ள திங்களூர் அப்பூதி அடிகள், நாவுக்கரசரின் புகழைப் கேள்விப்பட்டு, தன் பிள்ளைகளுக்கு பெரிய திருநாவுக்கரசு, சின்ன திருநாவுக்கரசு என்று பெயரிட்டார். மூத்தவனை பாம்பு கடித்த போது, அவனை பிழைக்க வைத்தார் நாவுக்கரசர்.
திருநாவுக்கரசரின் தேவாரம் படித்து, அஞ்சாநெஞ்சம் பெறுவோம்..

நான் ஸ்டிக் பொருட்களினால் பெண்களுக்கு பாதிப்பு

இயற்கையான உணவை அதிகம் எடுத்து கொள்ளும் போது அது உடலின் ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது. உணவில் இயற்கைக்கு மாறாக வேதி பொருள்கள் கலப்பு அதிகரிப்பால் அவை பல்வேறு வியாதிகளை உடலில் ஏற்படுத்தி விடுகிறது. இது பற்றி வெஸ்ட் விர்ஜினியா பல்கலை கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் ஓர் ஆய்வு மேற்கொண்டனர். அதில், நம்மை சுற்றி பி.எப்.சி. காணப்படுகிறது. இது தண்ணீர் மற்றும் கொழுப்பு போன்ற பொருள்களுடன் ஒட்டுவதில்லை. இந்த தன்மையினால் இவ்வேதிபொருள், நான்ஸ்டிக் குக்வேர் போன்ற தயாரிப்புகளில் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. இவ்வகை தயாரிப்புகள் அதிகமாக உபயோகிக்கப்படும் பொழுது தைராய்டு புற்றுநோய், நோய் எதிர்ப்பு சக்தியில் பாதிப்பு ஆகியவை ஏற்படுகின்றன. மேலும் ஹார்மோன் சமச்சீர் நிலையும் வெகுவாக பாதிக்கப்படுகிறது. இதனால் பெண்களுக்கு ஏற்படும் மெனோபாஸ் குறிப்பிட்ட காலத்திற்கு முன்பே நிகழ்ந்து விடுகிறது. பெண்களின் உடலில் பி.எப்.சி.யின் அளவு அதிகமாவதால் ஈஸ்ட்ரோஜன் என்ற ஹார்மோனின் அளவு குறைந்து விடுகிறது. இதுவே மெனோபாஸ் பாதிப்பின் முக்கிய காரணமாக விளங்குகிறது என ஆய்வில் இருந்து தெரிய வந்துள்ளது.

எரிமலைகளாலும் நன்மை உண்டு!

எரிமலை சீறும்போது எரிமலைக் குழம்போடு கந்தக ஆவி வெளிவருகிறது. அந்தக் கந்தக ஆவியானது, அனல் போன்ற பாறைக் குழம்பு குளிர்ந்து இறுகும்போது கட்டியாக மாறி, எரிமலைப் பள்ளங்களில் படிந்து விடுகிறது. இம்மாதிரியான எரிமலைப் படிவுகள் உள்ள எரிமலைப் பகுதிகள் தென் அமெரிக்கா, நியூசிலாந்து, ஜப்பான், மெக்சிகோ, சிசிலி முதலிய இடங்களில் காணப்படுகின்றன. அப்பகுதிகளில் 500 முதல் ஆயிரம் அடிக்கு சுரங்கம் தோண்டி கந்தகம் வெட்டி எடுக்கிறார்கள். , துப்பாக்கி மருந்து தயாரிப்பதற்கும், ரப்பர் பதனிடுவதற்கும், நமது நோய் தீர்க்கும் சல்பா மருந்து தயாரிக்கவும், பூச்சிக்கொல்லி மருந்துகள் போன்றவை தயாரிப்பதற்கும் பயன்படுத்துகிறார்கள்.

மைடியர் மைண்ட்பவர்

ஆல்ஃபா நிலையில் ஒரு இலட்சியத்தை ஆழ்மனத்தில் பதித்தால் அது நம் வாழ்க்கையில் சுலபமாக நிறைவேறும் என்பதை பார்த்தோம். அந்தக் காட்சியை சரியான முறையில் அமைப்பது மிகவும் முக்கியம். அது எப்படி என்பதை பார்ப்போம்.
நமது மூளையின் ஆல்ஃபா நிலை என்பது மிக அற்புதமான, சுகமான நிலையாகும். மூனையின் வேகம் வினாடிக்கு 7லிருந்து 14 வரை இருக்கும் நிலை ஆல்ஃபா நிலை. நாம் சற்று அமைதியாக இருக்கும் நிலை இது. தியானத்தின் மூலம் இந்த நிலையை அடைகிறோம். இதற்கு பயிற்சி தேவை. ஆல்ஃபா நிலையை நாம் அடைந்தவுடன் நமக்குள் இருக்கும் ஆழ்மனம் திறக்கிறது. அங்கிருக்கும் வியக்கத்தக்க சக்தியை அந்த நேரத்தில் நாம் பயன்படுத்த முடிகிறது.
நமது இலட்சியங்களை ஆல்ஃபா நிலையில் மனத்திரையில் ஒரு காட்சியாகப் பார்க்க வேண்டும். அப்படிப் பார்க்கும் காட்சி, ஆழ்மனத்தில் பதிந்து அங்கிருந்து பிரபஞ்ச சக்திக்கே ஒரு செய்தியாகப் போய் சேர்ந்துவிடுகிறது. பிரபஞ்ச சக்தி பல விதத்தில் செயல்பட்டு நமது இலட்சியத்தை நிறைவேற்றிக் கொடுக்கிறது. தகுந்த சூழ் நிலைகளை நமது வாழ்க்கையில் உருவாக்கி, தகுந்த மனிதர்களைச் சந்திக்க செய்து அந்த இலட்சியம் நிறைவேற வழி வகுக்கிறது.
இப்படி ஆல்ஃபா நிலையில், இலட்சியத்தை ஆழ்மனத்தில் பதிக்கும் பொழுது, நாம் கவனிக்க வேண்டிய விஷயங்களில் மிக முக்கியமானது அந்தக் காட்சிகளின் அமைப்புதான். இலட்சியத்தை மனத் திரையில் உருவாக்கும் பொழுது அந்த இலட்சியம் நிறைவேறிவிட்ட காட்சியை மட்டும் கண்டால் போதும். இதை எப்படி அடையப்போகிறோம், வழிமுறைகள் என்ன, என்பதைப் பற்றி தியானத்தில் யோசிக்க வேண்டாம். வழிமுறைகளை யோசிக்கும் பொழுது நமது மனம் பல இடங்களில் செயல்பட முடியாமல் தடுமாறும்.
சுரேந்திரனின் அனுபவத்தைப் பார்ப்போம். அவர் ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். ஒருமுறை என்னைச் சந்தித்து தன் பிரச்னையைப் பற்றிச் சொன்னார்.
"குடும்பத்தில் செலவு மிகவும் அதிகமாகிவிட்டது. என்னால் சமாளிக்க முடியவில்லை. எப்படியாவது எனக்கு பிரமோஷன் கிடைத்து சம்பளம் உயர வேண்டும் என்று பல மாதங்களாக ஆல்ஃபா தியானம் செய்து வருகிறேன். ஆனால், இதுவரை நடக்கவில்லை. என்ன செய்வது?'
"சரி. உங்கள் நிறுவனத்தின் பதவி உயர்வுக்கான வாய்ப்புகள் எப்படி இருக்கின்றன?'
"அதுதான் மேடம் பிரச்னை. எனக்கு மேல் உயர் பதவி எதுவும் இல்லை. எம்.டி. தான் இருக்கிறார். இருந்தாலும் வேறு எப்படி தியானம் செய்வது என்று எனக்கு புரியவில்லை. அதனால்தான் இந்த வழிமுறையை யோசித்தேன்.'
"நீங்கள் இந்த பிரமோஷன் என்கின்ற வழிமுறையை விட்டுவிட்டு குடும்ப வருமானம் பெருகுவது போல் பார்த்து வாருங்கள். நிச்சயம் நடக்கும்.' என்றேன்.
நாமாக யோசிக்கும் பொழுது நமது இலட்சியம் நிறைவேற ஏதேனும் ஒருவழிதான் நமக்கு புலப்படும். ஆனால் வழிமுறைகளை பிரபஞ்சத்திடம் விட்டுவிட்டோமானால் நம் கண்ணுக்குத் தெரியாத பல கதவுகள் திறக்கும். பல வழிகள் பிறக்கும்.
நான் சொன்னபடி சுரேந்திரன், தியானம் செய்து வந்தார். சில மாதங்கள் கழித்து சுரேந்திரன் தன் மனைவியுடன் என்னை சந்திக்க வந்தார். இருவர் முகத்திலும் பிரகாசமான புன்னகை.
"நீங்கள் சொன்னபடி இருவருமே தியானம் செய்து வந்தோம். அதன் பிறகு என் மனைவி செய்த சில கைவினைப் பொருட்கள், ஒரு கண்காட்சியில் வைத்து விற்கும் வாய்ப்பு கிடைத்தது. இன்று அதுவே அவளுக்கு மிகப் பெரிய ஒரு தொழிலாக அமைந்துவிட்டது. இன்று அதன் மூலம் எங்களது குடும்ப வருமானம் பெருகி மிகவும் சௌகரியமாக இருக்கிறோம்.'
இப்பொழுது உங்களுக்குப் புரிந்திருக்கும். பிரபஞ்ச சக்தி ஒரு தாய் போன்றது. நமக்கு என்ன வேண்டும் என்பதை ஒரு குழந்தையைப் போல் காண்பித்தால் போதும். அந்தத் தாய் அதை நிச்சயம் நிறைவேற்றிக் கொடுப்பாள். வழிமுறைகளை நாம் தியானத்தில் செல்லும் பொழுது பல சமயம் அது நமக்கு சரியான வழியாக இல்லாமல் போகலாம். அப்பொழுது பிரபஞ்ச சக்தியால் கூட நமது இலட்சியத்தை நிறைவேற்ற முடியாமல் போகலாம். அதனால்தான் இலட்சியம் நிறைவேறும் காட்சியை மட்டும் காண வேண்டும். எந்த நிபந்தனைகளும் இன்றிக் காண வேண்டும். அப்படிச் செய்தால் நமது இலட்சியங்கள் ஒவ்வொன்றாக நாம் நினைத்ததைவிட மிகவும் சுலபமாக நடைபெறுவதை நாம் காண முடியும்.
பிரபஞ்ச சக்தி நமக்கு எல்லா வளங்களையும் கொடுக்கத் தயாராக இருக்கிறது. அவற்றை குறைவின்றிப் பெற்றுக் கொள்ள நாம் தான் தயாராக வேண்டும்.

பெண்கள் முகத்தில் அதிகம் முடி வளர்வது ஏன்?

பெண்களை பெற்றவர்கள், தங்கள் பெண் புத்திசாலியாக, அழகாக இருப்பதில் பெருமைப்பட்டுக் கொள்வர். வயது வந்ததும், திடீரென உடல் ஊதும்போது, அழகு கெட்டு விடுகிறது. வழவழப்பான சருமம் எண்ணெய் நிறைந்ததாய், முகத்தில் பருவுடன் காட்சியளிக்கிறது. முகத்தில், கழுத்தில், கைகளில், மார்பில், தொடையில் முடி அதிகமாய் வளர்கிறது.
ஆனால், தலையில் முடி உதிர்ந்து, வழுக்கை கூட ஏற்படுகிறது. கழுத்து, கை, அக்குள், தொடை ஆகிய இடங்கள் கருநிறமாய் மாறுகின்றன. சரியாக குளிப்பதில்லையோ என, மற்றவர்கள் நினைக்கும் நிலை ஏற்படுகிறது. கழுத்திலும், அக்குளிலும் கருமையான சிறு சிறு மருக்கள் தோன்றி விடுகின்றன. இவை துணியில் உரசும் போது வலியும், அசவுகரியமும் ஏற்படுகிறது.
இதோடு கூட, மாதவிடாய் சுழற்சியிலும் கோளாறு ஏற்படுகிறது. சில மாதங்களுக்கு மாதவிடாயே ஏற்படாமல், திடீரென அளவுக்கு அதிகமாய் உதிரப் போக்கு ஏற்படும் நிலை உருவாகும். அடி வயிற்றில் கடுமையான வலி, விட்டு விட்டு ஏற்படும். தொட்டால், இன்னும் அதிக வலி ஏற்படும்.
இந்தியாவில், 14 முதல் 40 வயதுக்குட்பட்ட, 30 - 35 சதவீதப் பெண்களுக்கு இந்த பிரச்னை உள்ளது. கர்ப்பப் பை கட்டியால் அவதிப்படுகின்றனர். இல்லையெனில் நீரிழிவு நோய் ஏற்படுகிறது. கர்ப்பப் பை கட்டியை கண்டறிய, ரத்தப் பரிசோதனை முறை இல்லை. ரத்தத்தில் அதிக சர்க்கரை அளவு, அதிக கொழுப்பு, ரத்த அழுத்தம், ஆண் ஹார்மோன்கள் அதிகமாய் தென்படுதல் ஆகியவை இருக்கலாம். "அல்ட்ரா சவுண்டு ஸ்கேன்' மூலம் மட்டுமே, கட்டியை கண்டறிய முடியும்.
கட்டி உள்ளவர்களின் கருப்பையில் உள்ள முட்டைகள், போதுமான வளர்ச்சியடைய வழியில்லாமல் போவதால், முதிர்ச்சியும் அடைவதில்லை. இதனால், மாதவிடாயும் ஏற்படுவதில்லை. முட்டை வளர்ந்து, வெளிவந்தால் தான், குழந்தை பிறக்க வழி உண்டாகும். முட்டை முதிர்வடையவில்லை எனில், மகப்பேறுக்கான வாய்ப்பே இல்லாமல் போகும்.
இதனால், பயந்து போகும் பெண்ணின் பெற்றோர், தீர்வு தேடி அலைகின்றனர். மருத்துவரிடம் சரியான ஆலோசனை பெறாமல், இரும்புச் சத்து, சுண்ணாம்புச் சத்து மாத்திரைகளை வாங்கிக் கொடுக்கின்றனர். "குடும்ப பாரம்பரியமே இப்படி தான்' என்று கருதி, மருத்துவரிடம் செல்வதே இல்லை. மூலிகைகள், நாட்டு மருந்துகளை கொடுக்கின்றனர்.
முகத்தில் முடி நீக்குதல், அதிக உடல் எடை குறைத்தல், மாதவிடாய் சீராக்குதல், மகப்பேறுக்கு வழி உண்டாக்குதல் ஆகியவை அவசியம். கருத்தடை மாத்திரைகள் சாப்பிடுவதால், மாதவிடாய் சீராகும்; ஆண் ஹார்மோன்கள் அளவு குறையும். முகத்தில் பருக்களும் குறையலாம்; ஆனால், மகப்பேறு தவிர்க்கப்படும். மாத்திரையை நிறுத்தி விட்டால், மீண்டும் பிரச்னைகள் முளைக்கும்.
நீரிழிவு நோய் எதிர்ப்பு மருந்தான, "மெட்பார்மின்' இந்த உபாதைகளை குறைக்கும்; உடல் எடையும் குறையும். சில மாதங்களில், கருத்தரித்தல் நிகழும்.
திருமணமான பெண்கள், கருத்தரிக்க இயலாமல் போனால், அதற்குரிய மருந்துகள் சாப்பிட வேண்டும். டாக்டரின் ஆலோசனையுடன், "மெட்பார்மின்' மாத்திரை சாப்பிடுவதை தொடரும் போது, கருத்தரிப்புக்கான மாத்திரைகள் சாப்பிடும் அளவை குறைத்து கொள்ளலாம்.
மகப்பேறுக்கு தயாராக இல்லாதவர்கள், "ஸ்பைரோனோலாக்டோன் சைப்ரோடெரோன் அசிடேட்' சாப்பிட்டால், முகத்தில், கை, கால்களில் முடி வளர்வதை தவிர்க்கலாம்; மாதவிடாயும் சீராகும். கர்ப்பப் பையில் கட்டி ஏற்பட்டால், வேறு சில பிரச்னைகளும் உருவாகலாம். ஹார்மோன் சீரற்ற நிலையில், கர்ப்பப் பை சுவற்றில் புற்றுநோய் ஏற்படவும் வாய்ப்பு உண்டு. வளர்சிதை மாற்றம் சீராக இல்லாமல், நீரிழிவு நோய், உயர் கொழுப்பு, ரத்த அழுத்தம், இதய நோய் ஆகியவை ஏற்படவும் வாய்ப்பு உண்டு.
மெனோபாஸ் கட்டத்தை அடையும் போது, மாதவிடாய் சீராகும். ஆனால், முகத்தில் முடி வளர்தல், தலைமுடி மெலிதாகுதல், வழுக்கை விழுதல் ஆகிய பிரச்னைகள் உருவாகும்.
மன உறுதியுடன் இருந்தால், மருந்து இல்லாமலேயே இப்பிரச்னையை சரி செய்யலாம். சரிவிகித உணவு, உடற்பயிற்சி ஆகியவை மேற்கொண்டு, உடல் எடையை சீராக வைத்து கொண்டாலே, ஹார்மோன் சுரப்பது சீராகும். அதிக உடல் எடையில் 10 சதவீதத்தை குறைத்தாலே, கர்ப்பப் பையில் கட்டி உள்ளவர்களின் மாதவிடாய் பிரச்னை சீராகும். கர்ப்பப் பை கட்டி உள்ளவர்கள், மற்றவர்களை விட, குறைவான அளவு உணவே உண்ண வேண்டும். மற்றவர்கள் உதவி இன்றி நடப்பது, மாடிப் படிகளில் ஏறி, இறங்குவது, ஒரு மணி நேர நடைபயிற்சி மேற்கொள்வது ஆகியவை, பருவமடைந்த பெண்களுக்கு, உடல் எடையை சீராக்க உதவும். மேலே சொன்ன பிரச்னைகளிலிருந்து வெளிவர உதவும்.

அறிவை வளர்க்கும் ஆலயங்கள்தான் நூலகம்

அறிவை வளர்க்கும் ஆலயங்கள்தான் நூலகம். அதன் அவசியம் அறிந்தே, `இல்லங்கள் தோறும் நூலகம் இருக்க வேண்டியது அவசியம்` என்றார் அறிஞர் அண்ணா. இன்று உலகம் முழுவதும் நூலகங்கள் பெருகி உள்ளன. நூலக பெருமையை உலகோர் உணர்ந்ததையே இது காட்டுகிறது. 

இளமை... இம்சை..!

இளமையில் பெரும்பாலான ஆண்கள், பெண்களுக்கு பெரும் பிரச்சினையாக இருப்பது இளநரை.
உணவுக் குறைபாடு, மரபுத் தன்மை, குளிக்கும் தண்ணீரை அடிக்கடி மாற்றுவது, மாசுபட்ட சுற்றுப்புறச் சூழல், அடிக்கடி ஷாம்பு போடுவது ஆகியவையே இளநரைக்கு அடிப்படை காரணம். இந்த காரணிகளை தவிர்த்து, கட்டுப்பாட்டுடன் இருந்தால் இளநரையை தவிர்க்கலாம்.

பால் அதிகமாக குடிப்பது பார்வைக்கு பலம் சேர்க்கும்: ஆய்வில் தகவல்

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் அமைந்துள்ள பவலோ பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஏமி மில்லன் என்பவர் தலைமையில் வயது தொடர்பான பார்வை குறைபாடு (ஏ.எம்.டி.) பற்றி ஆய்வு ஒன்று மேற்கொள்ளப்பட்டது. பெரும்பாலும் 50 வயதினை நெருங்கும் பெண்களை பாதிக்கும் இக்குறைபாடு, சாதாரணமாக செய்யும் வேலைகளான வாசித்தல், வாகனம் ஓட்டுதல் மற்றும் தெரிந்தவர்களின் முகத்தை அடையாளம் காணுதல் போன்றவற்றை கூட செய்ய இயலாத நிலைக்கு அவர்களை தள்ளி விடுகிறது. பிரிட்டனில் வருடத்திற்கு ஏறத்தாழ 2 லட்சம் பேர் இக்குறைபாட்டினால் பாதிக்கப்படுகின்றனர். 1,313 பெண்களிடம் நடத்தப்பட்ட அந்த ஆய்வில் டி வைட்டமின் அதிகம் நிறைந்த உணவை உட்கொள்வோர் மற்றும் உடலில் டி வைட்டமின் அளவு அதிகமாக உள்ளோர் ஆகியோரிடம் இக்குறைபாடு அதிகமாக காணப்படவில்லை என்பது தெரிய வந்தது. குறிப்பாக பால் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட வெண்ணெய் மற்றும் தானியம் ஆகியவற்றை அதிகம் எடுத்து கொள்வது நன்மை பயக்கிறது. சூரிய ஒளியில் அதிக நேரம் செலவிடுவதும் நன்மையையே தருகிறது. ஏனெனில் வைட்டமின் டி உற்பத்தியில் தோல் முக்கிய பணியாற்றுகிறது. எனவே, பால் மற்றும் அதிலிருந்து பெறப்படும் வெண்ணெய் போன்ற உணவு பொருள்களை பயன்படுத்துவது இக்குறைபாட்டை தவிர்க்க பெரிதும் உதவுகிறது என அந்த ஆய்விலிருந்து தெரிய வந்துள்ளது. மேலும், மீனில் இருந்து பெறப்படும் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த உணவு பயன் தரும் என்பதும் முன்பு நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பற்கள் சுத்தம்: ஏன்?

னக்கு சமீபத்தில் பல்வலி வந்ததால் பல் டாக்டரிடம் சென்றிருந்தேன். `இதற்கு முன் பற்களில் வலி வந்திருக்கிறதா?' என்று டாக்டர் கேட்டார். `வாழ்நாளில் வந்ததில்லை. இன்றுதான் முதன் முதலாக பல் டாக்டரையே பார்க்க வந்திருக்கிறேன்' என்றேன். வாயைத் திறக்கச் சொன்னார். 

செரிமானத்தைத் தூண்டும் பெருங்காயம்

நம்ம தமிழ்நாட்டுல ரசத்தையும், சாம்பாரையும் `கமகமக்க' வைக்கிற பெருமை பெருங்காயத்தை தான் சேரும். இதை, `கடவுளர்களின் மருந்து'ன்னு குறிப்பிடுறாங்க. பச்சையாக இருக்குறப்போ சகிக்க முடியாத இதனோட வாசனை, சமையல்ல சேர்த்த பிறகு ஆளை அசத்தும். ஈரான், துருக்கி, ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகள்ல தான் பெருங்காயச்செடி வளருது. சிறிய மரம் அளவுக்கு வளர்ந்த உடனே தண்டையும், வேரையும் கீறிவிட்டு, அதுல வழியும் பிசினை எடுத்து பக்குவப்படுத்தி காயவைச்சா, அதுதான் பெருங்காயம். பால் பெருங்காயம், சிவப்பு பெருங்காயம்னு இதுல ரெண்டு வகை இருக்குது. 

ஏன் இந்த நம்பிக்கை - கவியரசு கண்ணதாசன் (அர்த்தமுள்ள இந்து மதம்)

"தத்துவ ஞானம் எது பேசினாலும் பேசுக; பிராமணவாதம் எதனைக் கொள்னினும் கொள்ளுக; உலகிலே மரணம் என்பது இருக்கும் வரையும், மனித இதயத்திலே பலவீனம் இருக்கும் வரையும், அந்த பலவீனத்திலே மனிதனுடைய இதயத்திலிருந்து அழுகுரல் வரும் வரையில், ஆண்டவனிடத்தில் நம்பிக்கை இருந்தே தீரும்'' என்கிறார் சுவாமி விவேகானந்தர். ஆம், பலவீனத்திலும் பயத்திலுந்தான் கடவுள் நம்பிக்கை தோற்றமளிக்கிறது. இந்து சமயமன்றிப் பிற சமயங்களும் இந்த உண்மையை ஒப்புக் கொண்டிருக்கின்றன. நீண்ட நாட்களுக்கு முன் ஒரு திரைப்படத்தில் கேட்டதாக நினைவு. ஓர் ஆசிரியர் தன் மாணவியைப் பார்த்துக் கேட்கிறார்: 

தெய்வபலம் கிடைக்க வேண்டுமா?

பகவத் சங்கல்பம் என்பது வேறு; மனித சங்கல்பம் என்பது வேறு. பகவத் சங்கல்பம் என்பது, பகவான் போடும் திட்டம்; அது, அதன்படியே நடந்து விடும். மனித சங்கல்பம் என்பது, மனிதன் மனதால் போடும் திட்டம்; இது, நிறைவேற வேண்டுமானால், தெய்வ பலம் வேண்டும். வெறும் பண பலம், மனித பலம், ஆயுத பலம் எதுவும் இதில் பயன்படாது.
கவுரவர்கள் நூறு பேர்; பாண்டவர்கள் ஐந்து பேர் தான். ஆனாலும், துரியோதனனுக்கு தோல்விதான் ஏற்பட்டது; பாண்டவர்களுக்கு வெற்றி கிடைத்தது. காரணம், துரியோதனனுக்கு படைபலம் இருந்ததே தவிர, தெய்வ பலம் இல்லை. துரியோதனனுக்கு, பாண்டவர்களிடம் துவேஷமே அதிகம் இருந்தது. அவர்களை எப்படியாவது மட்டம் தட்டி, அவமானப்படுத்த வேண்டும் என்பதே அவன் எண்ணம். ராஜசூய யாகம் செய்ய விரும்பினார் தர்மபுத்திரர். அதற்கு, தெய்வ பலம் முக்கியம் என்பதால், கிருஷ்ணனிடம் அதை நடத்தி வைக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டார்; பகவானும் ஒப்புக் கொண்டார். ராஜசூய யாகம் என்றால், திக் விஜயம் செய்து, எல்லா அரசர்களையும் ஜெயிக்க வேண்டும்.
மற்ற அரசர்களை ஜெயித்து விடலாம் அல்லது அவர்களை தன் வசப்படுத்தி விடலாம்; ஆனால், ஜராசந்தனை ஜெயிப்பது சிரமம். அதனால், இதற்கு பீமன் தான் சரியானவன் என்று எண்ணினார். ஜராசந்தன் என்பவன், இரு உடற்கூறுகள் ஒன்றாக சேர்ந்த உருவம். அவனை வதம் செய்ய என்ன செய்ய வேண்டும் என்பது கண்ணனுக்கு தெரியும்.
பீமன், ஜராசந்தன் யுத்தம் துவங்கியது. ஜராசந்தனை இரண்டாகக் கிழித்துப் போட்டான் பீமன்; ஆனால், அது ஒன்று சேர்ந்து விட்டது. ஜராசந்தன் எழுந்து வந்து யுத்தம் செய்தான். இப்படி பலமுறை, அவனை பீமன் கிழித்துப் போட்டும் கூட, அவை ஒன்று சேர்ந்து விட்டது. பீமனுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. பக்கத்தில் நின்றிருந்த கிருஷ்ணனை, பரிதாபமாக பார்த்தான். உடனே, ஒரு தருப்பையை எடுத்து, இரண்டாக கிழித்து, தலைப்பை மாற்றி கீழே போட்டான் கிருஷ்ணன். இதை கவனித்த பீமன், புரிந்து கொண்டான். உடனே, ஜராசந்தனை பிடித்து, அவன் கால்களை பிடித்திழுத்து, இரண்டு கூறுகளாக்கி தலைப்பை மாற்றி, கீழே போட்டான். தலைப்பு மாறி கிடந்த ஜராசந்தன் எழுந்து வந்து ஒட்டிக் கொள்ள முடியாமல் மாண்டு போனான். பிறகு, ராஜசூய யாகம் நடந்தது.
எவ்வளவு பலமிருந்தாலும் தெய்வ பலம் அவசியம். அதே போல, ராஜசூய யாகத்தில் யார், யார் என்ன பொறுப்பு வகிக்க வேண்டும் என்பதையும் தீர்மானம் செய்தார் பகவான். துரியோதனனுக்கு பொக்கிஷ சாலை பொறுப்பு; கர்ணனுக்கு தானம் கொடுக்கும் பொறுப்பு கொடுக்கப்பட்டது.
துர்புத்தியுள்ள துரியோதனன் சந்தோஷப்பட்டான். கர்ணனிடம், தானம் செய்யும் போது, ஒன்றுக்கு பத்தாக அள்ளிவிடு; பொக்கிஷம் காலியாகி விடும்; யாக நடுவில் பொக்கிஷம் காலியானால், தர்மத்துக்கு ஒன்றுமில்லாமல் தர்ம புத்திரர் அவமானப்படுவார்; நாம் சந்தோஷப்படலாம்...' என்றான்; கர்ணனும் சம்மதித்தான். ஆனால், கர்ணன் எவ்வளவுதான் வாரி, வாரிக் கொடுத்தாலும், பொக்கிஷம் நிரம்பிக் கொண்டேயிருந்தது. பொருள் மேலும், மேலும் வந்து குவிந்து கொண்டே இருந்தது. இவர்கள் திட்டம் பலிக்கவில்லை; அவமானப்பட்டனர்.
என்ன காரணம்? துரியோதனன் கையில் தன ரேகை இருக்கிறது; இது பகவானுக்கு தெரியும். பொக்கிஷத்தை அவனிடம் ஒப்படைத்தால், பொக்கிஷம் நிரம்பிக் கொண்டே இருக்கும். அதனால், அதை, அவனிடம் ஒப்படைத்தார். கர்ணனுக்கு தானம் செய்வதில் விருப்பம் அதிகம்; சளைக்கவே மாட்டான்; அள்ளி, அள்ளிக் கொடுப்பான். யாகத்தில் அது தானே முக்கியம். அதனால், தானம் செய்வதை கர்ணனிடம் ஒப்படைத்தார்.
யாகம் நன்றாகவே நடைபெற்று முடிந்தது. துரியோதனனும், கர்ணனும் போட்ட திட்டம் நிறைவேறவில்லை;பகவான் போட்ட திட்டம் தான் நிறைவேறியது. நம்முடைய புத்திக்கு அப்பாற்பட்டது தெய்வ பலம். அந்த பலத்தையே நாட வேண்டும்; மற்றபடி சவடால் பேர் வழிகளை நம்பினால், நடுத்தெருவில் நிற்க வேண்டியது தான்!