சாப்பிடாமல் மெலிந்திருக்கும் குழந்தைகளின் பெற்றோருக்கு…

1. அன்பு, அரவணைப்பு, பாராட்டு, அக்கறை,   உணவில் அழகூட்டுதல் போன்றவற்றை நீங்கள் சமையலுக்கு முன்னும் பின்னும் சேர்க்காமல் இருப்பதும் பசியின்மைக்குக் காரணங்களாகும். அதில் முதலில் கவனம் செலுத்துங்கள்.

2. ‘ஸ்வீட் எடு.. கொண்டாடு!’ என இருக்க வேண்டாம். கொண்டாட்டம் என்றால், ‘பழம் எடு… பரவசமாகு’ என கற்றுக்கொடுப்போம். அத்தனை இனிப்புப் பண்டங்களும் பசியடக்கி கபம் வளர்க்கும். குறிப்பாக ‘மில்க் ஸ்வீட்’!

கல்லீரலில் கவனம் தேவை!

மலேரியா, சர்க்கரை நோய், எய்ட்ஸ், புற்றுநோய் பற்றி நமக்கு ஓரளவுக்குத் தெரியும். ஆனால், சத்தமில்லாமல் கொல்லக்கூடிய, எய்ட்ஸைவிட 100 மடங்கு வேகமாகத் தொற்றக்கூடிய ஹெபடைட்டிஸ் பி உள்ளிட்ட வைரஸ் கிருமிகளைப் பற்றி அதிகம் தெரியாது. ஆண்டுதோறும் 14 லட்சம் பேருக்கு, ஹெபடைட்டிஸ் ஏ தொற்று ஏற்படுகிறது. 2.4 கோடி பேர், ஹெபடைட்டிஸ் பி (எச்.பி.வி) கிருமித் தொற்றுடன் வாழ்கின்றனர். 7.8 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர். ஹெபடைட்டிஸ் ஏ, பி, சி, டி மற்றும் இ வைரஸ் கிருமியால் லட்சக்கணக்காணோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

குழந்தைகளை சாப்பிட வைப்பது எப்படி?

சாப்பிடாமல் அடம் பிடிப்பது குழந்தைகளின் சுபாவம். அதை மாற்ற முடியாமல் திண்டாடுவது அம்மாக்களின் சுபாவம் என்றாகிவிட்டது. அடம் பிடிக்கும் குழந்தைகளை ஊட்டச்சத்து மிக்க உணவு வகைகளை சாப்பிட வைப்பது சுலபமானதல்ல.