Pages

இதைப் படிக்காம கிளம்பாதீங்க...


சீறிச் செல்லும் வேகத்தில் பைக்கில் பறக்கிறார்கள் இளம் பெண்கள். அவர்களின் வேகம் சில நேரங்களில் திகைக்க வைக்கிறது. எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களும், கைகளால் கியர் மாற்றும் `பைக்'களும் வந்தபிறகு பைக் ஓட்டும் பெண்களின் எண்ணிக்கை பல மடங்கு பெருகிப் போனது.
பெற்றோர், காதலர் போன்ற உறவுகளுடனும், பணி நிமித்தமாக தனியாக, தோழிகளுடன் என பைக்கில் பயணிக்கும் பெண்கள் ஏராளம். வாகனம் ஓட்டுவதில் ஆண்களைவிட பெண்களுக்கு சிரமம் கொஞ்சம் அதிகம் தான். வேகம் மட்டும் பிரச்சினை அல்ல, பெண்கள் உடை அணியும் முறை கூட அவர்களை விபத்தில் சிக்க வைத்து விடும்.

கறுப்பு சருமம் தான் ஆரோக்கியமானதா?செக்கச்சிவந்த மேனியைத்தான் இன்றைய தலைமுறையினர் பெரிதும் விரும்புகிறார்கள். கறுப்பாக இருப்பவர்கள், 'ஏம்மா என்னை மட்டும் கறுப்பா பெத்த?' என்று தங்களது அம்மாவிடம் கோபித்துக் கொள்கிறார்கள். இப்படி, கறுப்பு நிற தேகத்தை வெறுப்பவர்கள் மத்தியில் ஒருவித தாழ்வு மனப்பான்மையே ஏற்பட்டு விடுகிறது. சிவப்பாக இருப்பவர்கள் மட்டும்தான் அழகு என்ற கருத்து அவர்களது ஆழ்மனதில் பதிந்து போய்விடுகிறது. ஆனால், கறுப்பானவர்கள் அதற்காக கவலைப்பட வேண்டாம் என்கிறார்கள் அழகுக்கலை நிபுணர்கள்.
* கறுப்பாக இருந்தாலும் 'களை'யாக இருப்பவர்கள் பலர் உண்டு. ஒருவருக்கு வெறும் வெள்ளை தோல் மட்டும் இருந்துவிட்டால் போதாது. முகம் களையாக இருப்பதும் அவசியம். அப்படி முகமும், உடல் அமைப்பும் களையாகவசீகரமாக இருந்தால் தான் ஒரிஜினல் அழகு. அந்தவகையில், விதவித அலங்காரங்களும், நகைகளும் களையான கறுப்பு தேகம் கொண்டவர்களுக்குத்தான் அதிகம் பொருந்தும்.

வலியை விரட்டும் அதிசய சிகிச்சை!


ஒருவருக்குத் தலைவலி. குடும்ப மருத்துவரிடம் போகிறார். என்னென்னவோ மருந்து, மாத்திரைகளைக் கொடுத்துப் பார்த்தும், பாதிப்படைந்தவருக்கு வலி குறையவில்லை. குடும்ப மருத்துவருக்கு, நோயாளிக்கு கண்ணில்தான் ஏதோ பிரச்னை என்று படுகிறது. உடனே, அவரை கண் மருத்துவரிடம் அனுப்புகிறார். கண் மருத்துவர் சோதித்துப் பார்க்கிறார். கண்ணில் எந்தப் பழுதும் இல்லை. அந்தச் சமயத்தில் நோயாளிக்குப் பல்லில் பிரச்னை இருப்பது தெரிகிறது. அவர், பல் மருத்துவரிடம் நோயாளியை அனுப்புகிறார். பல் மருத்துவர் சிகிச்சை செய்த பிறகும், தலைவலி மட்டும் குறையவில்லை. அவர், திரும்ப குடும்ப மருத்துவரிடமே அனுப்பப்படுகிறார். "எதற்கும் ஒரு எம்.ஆர்.ஐ., ஸ்கேன் செய்து பார்த்தால் என்ன' என்று மருத்துவருக்குத் தோன்ற, அதையும் செய்கிறார் அந்த நோயாளி. ரிசல்ட் படு சுத்தம். ஒரு பிரச்னையும் இல்லை. கடைசியாக வலி நிர்வாகத்துறைக்கு வருகிறார் அந்த நோயாளி. அங்கேதான் அவருக்கான சரியான தீர்வு கிடைக்கிறது.

நமது மூளை: சுவாரசியமான சில உண்மை!


"மனிதன் தனது மூளையால் ஓவியங்களை வரைகிறானே தவிர, கைகளால் அல்ல'' என்றார் உலகப் புகழ்பெற்ற ஓவியர் மைக்கேல் ஏஞ்சலோ
ஒருவர் சிறு தவறு செய்தாலும் அனிச்சையாக, `மூளையிருக்கா?' என்று கேட்டு விடுகிறோம். மூளைதான் எல்லா செயல்பாட்டுகளுக்கும் காரணம் என்பது அப்படி நமது உணர்விலேயே ஊறிப் போயிருக்கிறது. பேசுவது, சாப்பிடுவது, சிந்திப்பது, தூங்குவது, மூச்சுவிடுவது, நினைவுகள், உணர்வுகள், இதயத் துடிப்பு, வளர்ச்சி, செக்ஸ்... ஏன், உயிரும் கூட மூளையைச் சார்ந்துதான் இருக்கிறது. ஒன்றரை கிலோ எடையுள்ள பழுப்பும், வெள்ளையுமான திசுக்களாலான இந்த `தளதள' பொருள்தான் நமது மூளை. மூளையைப் பற்றிய சில சுவாரசியமான உண்மைகளைப் பார்ப்போம்...

கச்சிதமாக இருப்பதே அழகு!


நல்ல உணவு, அமைதியான மனம், மலர்ந்த முகம் இந்த மூன்றுமே உலகின் தலைசிறந்த டாக்டர்கள். மூன்றும் நன்றாக இருந்தால் தோற்றத்தில் அழகு துள்ளும். இயற்கையாகவே பெண்கள் அழகுதான். அழகுக்கு மேலும் அழகு சேர்க்க சில டிப்ஸ்:
* பசுமையான மரம் செடி கொடிகளை அடிக்கடி பார்ப்பது, கண்ணுக்கு குளிர்ச்சி. மனதுக்கும் மகிழ்ச்சி.
* கன்னம் ஒட்டிப் போய் இருக்கிறதா? தினமும் வாயில் தண்­ணீர் ஊற்றி கன்னத்தின் உட்பகுதி விரியுமளவுக்கு நன்றாக கொப்பளியுங்கள்.

டைபாய்டு - "சல்மோநெலா' என்ற வகை பாக்டீரியாவால் இந்நோய் ஏற்படுகிறது.


இந்தியாவில் மிகச்சாதாரணமாக ஏற்படும் தொற்றாக, டைபாய்டு உள்ளது. மூன்று அல்லது அதற்கு மேலான நாட்களில் காய்ச்சல் தொடர்ந்தால், அது டைபாய்டாக இருக்கும் என முடிவு செய்யப்படுகிறது. "சல்மோநெலா' என்ற வகை பாக்டீரியாவால் இந்நோய் ஏற்படுகிறது. கழிவுநீர் மூலமும், இந்நோய் தாக்கியுள்ள ஒருவர் அளிக்கும் உணவை சாப்பிடுவதன் மூலமும் இந்நோய் ஏற்படுகிறது.நம்மூர் அனைத்திலும் கழிவுநீர் மற்றும் கழிவுப் பொருட்களை அகற்ற சிறந்த முறை பின்பற்றப்படுவதில்லை. இதுபோன்ற சூழ்நிலையில் டைபாய்டு தொற்று ஏற்படுவது இயற்கையே. அதிர்ஷ்டவசமாக, டைபாய்டை தவிர்க்க தடுப்பு மருந்துகள் உள்ளன. 2 வயது நிறைந்தவுடன், ஒரு ஊசி போடலாம்.

யூசர் நேம்/பாஸ்வேர்ட் சரியா?


இணையத்தில் நுழைந்து நம் விருப்பமான வெப்சைட்டிற்குள் நுழைய, நம் யூசர் நேம் மற்றும் பாஸ்வேர்டினைத் தருவோம். வழக்கமாக, உடனே இணைய தளம் திறக்கப்படும். நாம் நமக்குத் தேவையான தகவல்களைப் பெற முயற்சிப்போம். ஆனால், சில வேளைகளில் “Your Password or Username is Invalid. Please Try Again.” என்ற செய்தி வந்து நம் ஆசைத்தீயில் தண்ணீரை ஊற்றிவிடும். "அய்யோ! சரியாகத்தானே யூசர் நேம் மற்றும் பாஸ் வேர்டையும் அடித்தோம் என்ன வாயிற்று?' என்ற பதற்றம் பற்றிக் கொள்ளும். அந்த பதற்றத்திலேயே இன்னும் பல தவறுகளைச் செய்திடத் தொடங்குவோம்.

வெயிலுக்கு தயாராயிட்டீங்களா?


உடலுக்கு அழகு சேர்க்கும் இயற்கை பொருட்கள்:


ரோஜா இதழ், எலுமிச்சை தோல், கடலைப் பருப்பு, மஞ்சள் ஆகியவற்றை ஒரு வாரம் வெயிலில் காய வைத்து பத்திரப்படுத்துங்கள். வெயிலில் அலைந்து திரியும்போது, உடலில் உள்ள வியர்வை துவாரங்கள் பெரிதாகி, தூசி அடைத்துக் கொள்ளும். மேலே சொன்னவற்றை மாவு மிஷின் கடையில் கொடுத்து அரைத்து வைத்து, தினமும் காலை குளிக்கும்போது உடலுக்குத் தேய்த்துக் குளிக்கலாம். கடைகளில் விற்கும் "காஸ்ட்லி ஸ்கிரப்பர்"களை விட இவை உடலுக்கு மிக மிக நல்லது.
வைட்டமின் "டி" குறைபாட்டை சரிகட்டுங்களேன்!
காலை நேரங்களில் சுளீர் வெயில் தலைதூக்கத் துவங்கி விட்டது. முட்டி வலி, மூட்டு வலி உட்பட பல உபாதைகளும் நீங்க, இளங்காலை வெயில் மேலே படும்படி உடற்பயிற்சி செய்ய வேண்டும். 10 நிமிடமாவது வெயிலில் காலார நடந்து விட்டு வாருங்கள்.

மண்ணின் மக(ரு)த்துவம்


இந்த உலகம் பஞ்ச பூதங்களால் ஆட்கொள்ளப் பட்டு  இயங்குகிறது. நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் அனைத்தும் ஒன்றுடன் ஒன்று இணைந்து செயல்பட்டால்தான் உலகில் உயிர்கள் உயிர்வாழ முடியும்.  இவற்றில் ஏதேனும் ஒன்றில் பாதிப்பு என்றாலும் உலகம் அழிவு நிலைக்குச் சென்றுவிடும்.
இவற்றுள் மண்ணைப் பற்றியும், அதில் அடங்கியுள்ள மருத்துவத்தைப் பற்றியும் ஒவ்வொருவரும் அறிந்துகொள்வது அவசியம்.

எந்தச் சுவையை முதலில் உண்ண வேண்டும்?


உணவு என்று சொன்னால், உணவின் சுவைதான் நினைவுக்கு வரும். சுவையில்லாத உணவு உணவாகாது. ஆறு சுவையுடன் கூடிய உணவே முறையான உணவாகும். நாக்கு அறியக் கூடிய சுவைகள் ஆறுவகை எனப் பழந்தமிழ் மருத்துவம் கூறுகிறது.
உடலில் இயங்குகின்ற முக்கியமான தாதுக்களுடன் ஆறு சுவைகளும் ஒன்றுகூடி உடலை வளர்க்கப் பயன்படுகின்றன. உடலானது ரத்தம், தசை, கொழுப்பு, எலும்பு, நரம்பு, உமிழ்நீர், மூளை ஆகிய ஏழு தாதுக்களால் ஆனது. இவற்றுள் ஏழாவது தாதுவாகிய மூளை சரியாக இயங்க வேண்டுமானால், பிற தாதுக்கள் ஆறும் தகுந்த அளவில் உடலில் இருக்க வேண்டும். இந்த ஆறு தாதுக்களை வளர்ப்பவை ஆறு சுவைகளாகும்.

உணவுப் பொருட்களில் அடங்கியுள்ள கலோரிகள்!


நாம் பலவிதமான உணவுகளை உட்கொள்கிறோம். சாதாரண பிஸ்கெட்டில் இருந்து பிரியாணி வரை சுவை சுவையாய்.. வகை வகையாய் சாப்பிடுகிறோம். ஆனால் நாம் உட்கொள்ளும் உணவில் இருந்து நமக்கு எவ்வளவு கலோரி சக்தி கிடைக்கிறது என நமக்குத் தெரியுமா?
பொதுவாக நாம் உட்கொள்ளும் சில உணவுப் பொருட்களில் அடங்கியுள்ள கலோரிகள் விவரம்:
பால் பொருட்கள்:
பால் ஒரு கப்  (225 மிலி) 150 கலோரி
வெண்ணெய் 1 டீ ஸ்பூன்  150
நெய் 1 டீ ஸ்பூன்  45

வறண்ட சருமத்தை பாதுகாக்க...


கோடையில் சருமம் எளிதில் வறண்டுபோய் விடும். அதை தடுக்க தினமும் 2 டம்ளர் மோர் குடித்து வாருங்கள். வறண்ட சருமம் நீங்கி தோல் பொலிவுபெறும்.
தோல் நீக்கிய ஆப்பிள் பழத்தை நன்றாக மசித்து, அதனுடன் சிறிது தேன், ஓட்ஸ் பவுடர் ஆகியவற்றை கலந்து, அந்த கலவையை முகத்தில் பூசி சுமார் 1/2 மணி நேரம் ஊறவிட்டு, முகத்தை கழுவவும். உங்கள் வறண்ட சருமம் காணாமல் போய்விடும்.
தோல் நீக்கிய சிறிது ஆப்பிள் பழத்துண்டுகளை ஒரு கப் பாலில் போட்டு நன்றாக கொதிக்க வைத்திடுங்கள். அது தயிர் போன்று மாறும். அதை நன்றாக ஆற விட்டு, அதில் தேவையான அளவு எடுத்து முகத்தில் பூசி 20 நிமிடங்கள் ஊறவிட்டு பின் கழுவி விடுங்கள். இப்படி தினமும் செய்து வாருங்கள். உங்கள் வறண்ட சருமம் மறைந்து போவதோடு, முகம் பிரகாசிக் கவும் ஆரம்பித்து விடும்.

அல்சரா...? இதை பாலோ பண்ணுங்க!


வயசுல பெரியவங்களா இருப்பாங்க.... சின்னக் குழந்தைங்க மாதிரி கைல எப்பவும் பிஸ்கட் மாதிரி ஏதாவது வச்சு, சாப்பிட்டுக்கிட்டே இருப்பாங்க. கேட்டா அல்சர்னு சொல்வாங்க. அல்சர் வந்தவங்க வயிறை காலியா விடக்கூடாது. அடிக்கடி கொஞ்சமா எதையாவது சாப்பிட்டுக்கிட்டே இருக்கணும்.
அதென்ன அல்சர்?
நம்ம வயிற்றுக்குள்ள, வயிற்றைப் பாதுகாக்க வழவழப்பான திரை அமைப்பு இருக்கு. ஜீரண நீர் சுரந்து, உணவோடு சேர்ந்து செரிமானமாகும். சாப்பாட்டுல காரமோ, புளிப்போ, உப்போ அதிகமானா, அது அந்தத்திரை அமைப்பை சீண்டிப் பார்க்கும். லேசா கிழிஞ்சாகூட, நேரடியா வயிறு அல்லது குடலுக்குத்தான் பாதிப்பு. இதன் காரணமா அடி வயித்துல வலி, புளிச்ச ஏப்பம், நெஞ்செரிச்சல், சாப்பிட்டது செரிக்காம அப்படியே தொண்டைலயே நிக்கிற மாதிரி உணர்வு... இதெல்லாம் இருக்கும். இதுதான் அல்சர்.

மூட்டு வலியை விரட்ட.மூப்பு வரும்போது மூட்டு வலியும் தானாக வந்து விடுகிறது. இளம், நடுத்தர வயதினரையும் இந்த பிரச்னை விட்டுவைப்பதில்லை. கொஞ்சம் உடற்பயிற்சி, கட்டுப்பாடான உணவு என கவனமாக இருந்தால் மூட்டு தேய்மானத்தையும், அதனால் ஏற்படும் மூட்டுவலியையும் தவிர்க்கலாம் என்கிறார் எலும்பு சிகிச்சை நிபுணர் டாக்டர் பிரேம்நாத்.
எலும்பு, நரம்பு மற்றும் தசைகள் நம் உடல் இயக்கத்தில் பெரும்பங்கு வகிக்கின்றன. நிற்கவும், உட்காரவும் நம் உடல் வளைந்து கொடுக்க உதவுபவை மூட்டுகள். இதில் முழங்கால் மூட்டு மிகவும் சிக்கலானது. எலும்பின் அசைவுக்கு உதவியாக அதன் மீது கட்டிலேஜ் என்ற ஜவ்வு உள்ளது. வயதாகும் போது இந்த ஜவ்வில் ஏற்படும் தேய்மானத்தால் எலும்பில் கிராக் மற்றும் பிராக்சர் போன்ற பிரச்னைகள் வருகிறது. இதன் காரணமாக வலி ஏற்படுகிறது. உடலின் எடையை தாங்கும் விதத்தில் முழங்கால் மூட்டு வலிமையுடன் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மூட்டு வெளியில் தெரியும்படி இருப்பதால் எளிதில் அடிபட்டு காயங்களுக்கு உள்ளாகிறது. இதனால் முழங்கால் மூட்டுப் பிடிப்பு மற்றும் பிறழ்வு ஏற்படுகிறது.

கண்களை அறிந்து கொள்வதும், இமைபோல பாதுகாப்பதும் அவசியம்.


லக வாழ்க்கையை ஆனந்தமாக அனுபவிக்க உதவுபவை கண்கள். கண்களின் செயல்பாடு அதிசயமானது. நமது வாழ்வில் 82 சதவீத அனுபவங்கள் கண் பார்வையின் மூலமாக கிடைப்ப தாக கண்டுபிடித்திருக்கிறார்கள். அவ்வளவு முக்கியத் துவம் வாய்ந்தவை கண்கள்.
இந்தியாவில் 4 பேரில் ஒருவருக்கு பார்வைக் குறைபாடு இருக்கிறது. எனவே கண்களை அறிந்து கொள்வதும், இமைபோல பாதுகாப்பதும் அவசியம்.

குடி தண்ணீரை சுத்தமாக்க வாழைப்பழ தோல் உதவும்


குடிநீரை சுத்தப்படுத்த இனி பியூரிபையர் தேவையில்லை. வாழைப்பழ தோல் போதும். ஆம், குடிநீரில் உள்ள நச்சுப்பொருட்களை அகற்றுவதில் பியூரிபையரை விட, வாழைப்பழ தோல் சிறப்பாக செயல்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். பிரேசில் நாட்டைச் சேர்ந்த இன்ஸ்டிடியூட் ஆப் பயோசின்சியாஸ் நிறுவனத்தின் குஸ்டவோ கேஸ்ட்ரோ தலைமையிலான குழுவினர் குடிநீரை சுத்தப்படுத்துவது குறித்து ஓர் ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளனர்.

இன்றைய இளைஞனுக்கு-கவியரசு கண்ணதாசன்


நாப்பிளக்கப் பொய்பேசி நவநிதியம் தேடி
நலமொன்றும் இல்லாத நாரியரைக் கூடிப்
பூப்பிளக்க வருகின்ற புற்றீசல் போலப்
பொலபொலலெனக் கலகலெனப்
புதல்வர்களைப் பெறுவீர்
காப்பதற்கும் வழியறியீர் கைவிடவும் மாட்டீர்
கவர்பிளந்த மரத்துளையில் கால்
நுழைத்துக்கொண்டு
ஆப்பதனை அசைத்திட்ட குரங்கதனைப் போல
அகப்பட்டீர் கடந்துழல அகப்பட்டீர் நீரே!

இரத்த சோகை - டாக்டர் மு.மோகனாம்பாள்


இரத்த சோகை என்பது இரத்த சிவப்பணுக்களில் உள்ள mm 3 ஹீமோகுளோபின் என்ற வேதிப்பொருள் குறைவாக இருத்தலே ஆகும். சாதாரணமாக ஆண்களுக்கு 5 மில்லியன்/mm3 சிவப்பணுக்களும் 15 கிராம் சதவிதம் ஹீமோகுளோபின் இருக்கும். பெண்களுக்கு 4.5 மில்லியன்/mm3 சிவப்பணுக்களும் 14.5 கிராம் சதவிதம் ஹீமோகுளோபின் இருக்கும்.
ஆனால் நம் நாட்டில் அனைவருக்கும் இப்படி உள்ளதா என்றால், அது முற்றிலும் தவறு. அப்படியானால் நாம் அனைவரும் இரத்த சோகை உள்ளவரா என்று கேள்வி நிச்சயம் எழும்.

மாயை தவிர்!


பகவான், பல கோடி ஜீவராசிகளைப் படைத்தான்; கூடவே, மாயை என்பதையும் படைத்தான். பரம புருஷன் ஒன்றே சத்யம், என்றும் இருப்பது; மற்றவை எல்லாம் மாயை, அழியக் கூடியது, இருப்பது போல் தோன்றுகிறது; ஆனால், ஒரு நாள் இல்லாமல் போய் விடுகிறது.
"இந்த மாயையில் மயங்காதே, சத்யமாக உள்ளதைத் தேடு, அதையே பிடித்துக் கொள்...' என்று மகான்கள் கூறியுள்ளனர். இதில், ஆத்ம விசாரணை என்ற பெயரில், பல உபதேசங்கள் உள்ளன. அவைகளில் சிலவற்றை இங்கே காணலாம்: மூடா... செல்வத்தின் பால் விருப்பை விடு. ஒன்றுக் கொன்றுள்ள வித்தியாசத்தை ஆராய்ந்து, தெரிந்து கொள். மனம் உணர்ச்சி வசப்படாமல் இருக்கப் பழகிக் கொள். உன் சொந்த முயற்சியால் ஈட்டும் சிறு பொருளானாலும்
திருப்தியடை... தீமைக்கெல்லாம் ஆதி காரணம் செல்வம் தான்.

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் சிறப்புகள்


ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலுக்கு என்று பல தனிச் சிறப்புகள் உள்ளன. அவற்றில் சில...
* தை, மாசி, சித்திரை ஆகிய மாதங்களில் பிரம்மோற்சவம் நடைபெறும் தலம்.
* புராணப்படி இக்கோவிலானது திருப்பாற்கடலில் இருந்து தோன்றியதாகக் கூறப்படுகிறது.
* சுயம்பு சேத்திரங்களில் ஒன்று இது.

* சயன கோலத்தில் மூலவரான பெருமாள் தெற்கு நோக்கியபடி உள்ளார். மூலவரின் விமானம் தங்கத்தால் வேயப்பெற்றது.
* மதுரகவி ஆழ்வார் தவிர அனைத்து ஆழ்வார்களும் பாடிய ஒரே திவ்யதேசம் ஸ்ரீரங்கம்தான்.
* ராமாவதாரம் முடிந்த பிறகு தோன்றிய பழமையான கோவில் இது.
* பெருமாளின் 108 திருப்பதிகளில் தெற்கு நோக்கி அமைந்த தலங்கள் இரண்டே இரண்டு தான். முதல் தலமான ஸ்ரீரங்கமும், 11-வது தலமான திருச்சிறுபுலியூருமே அந்த திருத்தலங்கள்.

முதுகு வலி அவதியா?

முதுகுக் கீழ்ப் பகுதியில் வலி இருந்தால் நாம் அலட்சியம் காட்டக்கூடாதுஏனெனில் அது அப்படியே கீழிறங்கி பின் தொடைப் பகுதிகளையும் சில வேளைகளில் கால் கெண்டைச் சதைகளையும் கூட சென்றடையும்

நாம் தினசரி காரியங்களில் முதுகு வலிக்கு ஆகாத பல விஷயங்களை அறியாமல் செய்கிறோ
ம்உதாரணமாக கூன் முதுகிட்டு உட்காருவததுநடக்கும் போது கூன் போடுவது,பொருட்களை தூக்கும்போது முதுகை வளைப்பது போன்றவற்றைச் செய்கிறோம்.

தண்ணி வாளிகுடங்களை தூக்கும்போ
துமுதுகு நேராக இருப்பது அவசியம்.வெயிட் அதிகமுள்ள பொருட்களை தூக்கும்போது நாம் முதுகை வளைத்தோமானால் தண்டுவடங்களுக்கு இடையிலான வட்டுக்களில் பாரம் அதிகரிக்கும்இதுதான் பிரச்சனை.

ரத்த அழுத்தம் வராமல் தடுக்க


இன்று உலக மக்களில் 65 சதவீதம் பேருக்கு மேல் இரத்த அழுத்தம், நீரிழிவு போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். அன்றாடம் நாம் சந்திக்கும் நபர்களில் இருவருக்காவது இரத்த அழுத்த நோயின் பாதிப்பு இருக்கிறது.
இந்த இரத்த அழுத்த நோய்  எவ்வாறு தோன்றுகிறது. இதற்கு காரணமென்ன, இதனை தடுக்க முடியுமா அல்லது முழுமையாக குணப்படுத்த முடியுமா என நம் மனதில் பல கேள்விகள் எழும்.

இல்லத்தரசிகளுக்கு இனிய யோசனைகள்!


பெண்கள் பொதுவாக சமையலில் வெளுத்து வாங்குவார்கள். அவங்களுக்கு சொல்லிக்கொடுக்க வேண்டியதில்லை. இருந்தாலும் அவர்களின் சமையலுக்கு உதவதற்காக குட்டிக் குட்டி டிப்ஸ். பல பேருக்குத் தெரிஞ்சதும் இருக்கலாம், தெரியாததும் இருக்கலாம். உங்களுக்குத் தேவையான டிப்ஸை எடுத்துக்கோங்க.. குடும்பத்தாரின் பாராட்டை அள்ளிக்கோங்க!

மூளை சுறுசுறுப்புக்கு 3 வேளை வாழைப்பழம்....!


வாழைப்பழம் எல்லாத் தரப்பு மக்களுக்கும் எளிதில் கிடைக்கும் சத்துகள் பல நிரம்பிய பழமாகும். மேலும், இதற்கு காலநிலை எதுவும் இல்லாமல் எல்லா காலங்களிலும் கிடைக்கும் ஒரு பழம் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் வாழைப்பழத்திற்கு இன்னொரு சிறப்பு இருப்பதாகக் கூறுகிறார்கள் இங்கிலாந்து ஆராய்ச்சியாளர்கள். அதாவது நாள்தோறும் மூன்று வேளை உணவுக்குப் பிறகு ஒரு வாழைப்பழம் சாப்பிட்டால் மூளை சுறுசுறுப்பாக இயங்கும் என்கின்றனர் அவர்கள்.

மூளையை சுறுசுறுப்பாக்குவதுடன் பல்வேறு நன்மைகளையும் தருகிறது வாழைப்பழம். அதாவது, வாழைப்பழம் மனிதனின் மூளைக்கு தேவையான எல்லாப் புரதச் சத்துகளையும் கொண்டுள்ளது.

உடலையும், உறுப்புகளையும் சீரழிக்கும் "ப்ரீ ராடிக்கல்'கள்!நமது உடல் பல உறுப்புகளால் ஆனது. இந்த உறுப்புகள் பல ஆயிரக்கணக்கான செல்களை கொண்ட திசுக்களால் ஆனது. திசுக்கள் செயல்பட, ப்ரீ ஆக்சிடன்ட், ஆன்டி ஆக்சிடன்ட் ஆகியவை, தராசு போல செயல்பட வேண்டும். ப்ரீ ஆக்சிடன்ட், பிராண வாயுவை கொடுக்கிறது. திசுவில் நடக்கும் வேதியியல் மாற்றத்தால், பல ப்ரீ ராடிக்கல்கள் வெளியே வருகின்றன.இந்த ப்ரீ ராடிக்கல்கள், உடலையும், உறுப்புகளையும் பாதிக்கின்றன. ப்ரீ ராடிக்கல்கள் தான், ஆக்சிடேட்டிவ் ஆக்சிடன்ட் (Oxidative Oxidants) என்றழைக்கப்படுகின்றன. இந்த, (Oxidant) களை வெளியேற்றி, உடலுறுப்புகளை காப்பாற்றுவது, ஆன்டி ஆக்சிடன்ட் (Anti Oxidant) எனும் மூலக்கூறு.வியாதிகள், சர்க்கரை நோய், சாதாரணமாக வரும் ஜுரம், இருமல், விபத்து, நோய் எதிர்ப்பு தன்மை குறைவு, தொப்பை, சுற்றுப்புற சுகாதாரமற்ற நிலைகள், காற்று மாசுபடுதல், கதிரியக்க வீச்சு, புகைப்பிடித்தல், ஊதாக்கதிர்கள் என பல காரணிகள், "ப்ரீ ராடிக்கல்'களை உருவாக்குகின்றன.

பித்தம் தணிக்கும் கொத்தமல்லிஉலகில் முதன் முதலாக உணரப்பட்ட மருத்துவப் பொருள் மூலிகைகளே.  நாம் அன்றாடம் பயன்படுத்தும் கீரை, காய்கள், கனிகள் அனைத்துமே ஒவ்வொரு வகையில் மருத்துவப் பயன் கொண்டவையாகும்.
மக்கள் பிணி நீங்கி  நீண்ட ஆரோக்கிய வாழ்வு வாழ்வதற்கும், இந்த மூலிகைகள் நமக்கு உதவு கின்றன.  இதனையே நாம் கற்ப மூலிகைகள் என்று அழைக்கிறோம்.  மிளகு, சீரகம், பூண்டு, பெருங்காயம், கொத்தமல்லி போன்றவற்றை தினமும் மசாலாவாக அரைத்து குழம்பு செய்து உண்ணும் வழக்கம் தென்னிந்தியாவிற்கே உரிய சிறந்த பழக்கமாகும்.

காய்கள் - அவரைக்காய்


இயற்கையுடன் இணைந்து வாழும் மனிதன் தன் இருப்பிடத்தைச் சுற்றி அதாவது வீட்டைச் சுற்றி தோட்டம் அமைத்தான். அதில் தமக்குத் தேவையான செடி, கொடி, மரங்களை நட்டு வைத்தான். அதிலிருந்து கிடைக்கும் பூ, இலை, காய், கனி அனைத்தையும் உண்டான். தன்னை வளர்த்து ஆளாக்கிய மனிதன் என்ற எஜமானுக்கு இவை நீண்ட ஆயுளை நன்றிக்கடனாக கொடுத்து வந்தன.
ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே நம் முன்னோர்கள் பருவ கால சூழ்நிலைக்கேற்ப எந்த வகையான உணவுகளை சாப்பிடவேண்டும், அதை எப்படிச் சாப்பிடவேண்டும் என்பதை தெளிவாக எடுத்துரைத்துள்ளனர்.

சாதனைப் பெண்மணி!- "காரடையான் நோன்பு'பெண்களுக்கு, எமனையும் வெல்லும் தைரியம் உண்டு என்பதற்கு, உதாரணமாகத் திகழ்ந்தவள் சாவித்திரி. அவளது வெற்றிக்கு காரணம் தைரியம், பொறுமை, கடமை, சமயோசிதம் ஆகியன. இவை அத்தனையும் ஒருங்கே இணைந்த தெய்வப் பிறவியாக அவள் திகழ்ந்தாள்.
மத்ர தேச மன்னன் அஸ்வபதி. இவருக்கு, குழந்தை பாக்கியம் இல்லை. இதற்காக, 10 ஆயிரம் யாகங்கள் செய்தார். சாவித்திரி தேவதையை நினைத்து, 18 ஆண்டுகள் தவமிருந்தார். அவரது தவத்தை மெச்சிய சாவித்திரி தேவதை, அவருக்கு குழந்தை பாக்கியம் அளித்தது. அந்தக் குழந்தைக்கு, தனக்கு வரமளித்த தேவதையின் பெயரையே இட்டார்.

முகப்பரு தழும்பு மாற!


உடல் ஆரோக்கியமாக இருந்தால் அதன் தெளிவு முகத்தில் பொலிவாக வெளிப்படும். உடலும் மனமும் சீராக இருந்தால் முகம் எப்போதுமே பொலிவுடன் இருக்கும். நாம் உண்ணும் உணவின் மாறுபாட்டால் உடல் சீர்கேடடைகிறது. இதனால் மலச்சிக்கல், சிறுநீர் தொந்தரவு, இதயக் கோளாறு, சிறுநீரக பாதிப்பு போன்றவை ஏற்படுகின்றன. ஒருவருக்கு முகம் பொலிவிழந்து காணப்படுகிறது என்றால் அதற்கு மேற்கண்ட நோய்கள் காரணமாக கூட இருக்கலாம். இதற்கு சரியான உணவு முறையை பின்பற்றுதலும், சரியான சிகிச்சையுமே சிறந்தது. முகப் பொலிவிற்கான ரசாயன பூச்சுகள் பலன் தராது.
சிலருக்கு சுற்றுப்புற சூழ்நிலை மாசுபாட்டின் காரணமாக முகத்திலும் சருமத்திலும் பாதிப்புகள் உண்டாகும்.  இந்த பாதிப்புகளைக் களைய இயற்கையான சில பொருட்களைப் பயன்படுத்தலாம். பக்க விளைவுகள் ஏதுமின்றி இயற்கை பொருட்கள் மூலம் நம் அழகை பராமரிக்கலாம்.

சண்டிகேசுவரர் முன்பு கை தட்டலாமா?


சோழநாட்டில் சேய்ஞ்ஞலூர் என்ற திருத்தலம் உள்ளது. இங்கு எச்சதத்தன்-பவித்திரை தம்பதியினர் வசித்தனர். இவர்களது மகன் விசாரசருமன். இவன் சிறு வயதிலேயே சிவபக்தி கொண்டவனாக வளர்ந்தான்.
பசுக்களை மேய்க்கும் தொழிலை மேற்கொண்டதால் பசுக்கள் இவனை தாங்கள் உயிராக கருதின. மாடு மேய்க்க செல்லும் இடத்தில் மணலில் சிவலிங்கம் வடிப்பது இவனது வழக்கம். மேய செல்லும் பசுக்கள் அதன்மேல் பாலை சுரந்து அபிஷேகம் செய்யும். இவ்வாறு சிவ சேவை செய்த பசுக்கள் வீட்டுக்கு வந்த பிறகும் தங்கள் எஜமானர்களுக்கும் தேவையான பாலை சுரந்து கொடுத்தன.
ஒருமுறை அந்த ஊர் இளைஞன் ஒருவன் சிவலிங்கம் மீது பசுக்கள் பால் சுரந்ததை பார்த்து விட்டான். அத்துடன், விசாரசருமன் அதை கண்டு கொள்ளாமல் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி ஆனான். ஊருக்குள் சென்று நடந்த விவரத்தை தெரிவித்தான். மாடுகளின் உரிமையாளர்கள் இதுகுறித்து எச்சதத்தனிடம் சொல்லி, மகனை கண்டிக்கும் படி கூறினர்.

வீண் வம்பு வேண்டாம்!யோகிகள் மிகுந்த தவ வலிமை பெற்றவர்கள். உடல் வலிமையை விட, இவர்களது தவ வலிமை பெருமை வாய்ந்தது. இவர்கள், சந்தோஷப்பட்டு ஆசி கூறினாலும், மனம் வருந்தி சாபம் கொடுத்தாலும், அது பலிக்கும்.
ஏதோ அவசரத்தில் சாபம் கொடுத்தாலும் உடனே பச்சாதாபப்பட்டு, சாப நிவர்த்திக்கான மார்க்கத்தையும் சொல்வர். அதனால், இப்படிப்பட்ட சாதுக்கள் மற்றும் யோகிகளிடம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.
ஒரு கந்தர்வன், முனிவரின் சாபத்தால் பாம்பானான். எப்படி? ஒரு சமயம் கோபர்கள் எல்லாரும் அம்பிகாவனம் சென்று, சரஸ்வதி நதியில் நீராடி, மகாதேவரையும், பார்வதி தேவியையும் பூஜித்தனர். பிறகு, நிவேதனம் செய்யப்பட்டவைகளை புசித்து, அன்றிரவு அங்கு தங்கினர். எல்லாரும் படுத்திருந்த போது, ஒரு பெரிய பாம்பு வந்து, நந்தகோபரை விழுங்கத் துவங்கியது.

செல்போனை அதிகம் பயன்படுத்தினால் கழுத்து வலிக்கும்!


தற்போது எந்நேரமும் செல்போனும் கையுமாக (காதுமாக?) இருப்பவர்களை அதிகம் காண முடிகிறது. செல்போன்களையோ, ஐ-பாடுகளையோ அதிகம் பயன்படுத்தினால் கழுத்தில் வலி ஏற்படும் என்று எச்சரிக்கிறார்கள் மருத்துவர்கள்.
`டெக்ஸ் நெக்' என்ற இந்தப் பாதிப்பு, செல்போனை அதிகம் பயன்படுத்துவோருக்கு, குறிப்பாக இளைய தலைமுறையினருக்கு அதிகம் ஏற்படுகிறது என்கிறார்கள் அவர்கள்.
குனிந்து செல்போனையே பார்த்துக் கொண்டிருப்பதால் அந்தத் தோற்றத்துக்கு ஏற்ப முதுகுத் தண்டுவட எலும்புகளும், தசைகளும் தங்களை மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கிறது. கழுத்து வளைவு, ஆதரவுத் தசைகள், மெல்லிய இணைப்புகளில் ஏற்படும் மாற்றம், கடைசியில் தசைகளில் வீக்கத்தையும், வலியையும் ஏற்படுத்துகிறது என்கிறார்கள் மருத்துவர்கள்.

வண்டி மறித்த காளியம்மன்


ராஜபாளையம் அருகே சங்கரன்கோவில் ரோட்டில் முறம்பு என்ற இடத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற வண்டி காளியம்மன் கோவில் அமைந்துள்ளது. இங்குள்ள காளியம்மன் படுத்த கோலத்தில் காட்சித் தருகிறார்.
சுமார் 80 ஆண்டுகளுக்கு முன்பு ராஜபாளையத்தில் இருந்து சங்கரன்கோவில் செல்லும் வழியில் உள்ள ஆசிலாபுரம் கிராமத்தில் நடந்த சந்தைக்கு பல பகுதிகளிலும் இருந்தும் வணிகர்கள், கிராம மக்கள் வருவார்கள். இந்த சந்தைக்கு ஒரு வயதான வியாபாரியும், அவரது பேத்தியும் மாட்டு வண்டியில் வந்தனர். மாட்டு வண்டியை வியாபாரி ஓட்டி வர பேத்தி வண்டியில் அமர்ந்து இருந்தாள். தற்போது கோவில் இருக்கும் இடத்துக்கு அருகே வண்டி வந்ததும் காளை மாடுகள் இரண்டும் நகர மறுத்தன. எவ்வளவோ முயன்றும் காளைகள் நகர்ந்தபாடில்லை.

சுனாமி என்றால் என்ன?


கடலுக்கு அடியில் ஏற்படும் நிலநடுக்கத்தால், நீர் உந்தப்பட்டு மிகப்பெரிய அலைகள் ஏற்படுகின்றன. இது கரையைத் தாண்டி சேதத்தை ஏற்படுத்துவதை சுனாமி என்கிறோம். கடலுக்கு அடியில் இருக்கும் பூமியின் கடினமான மேற்பகுதி, நிலநடுக்கத்தால் ஆட்டம் காண்கிறது. இதனால் ஏற்படும் மிகப்பெரும் விசையின் காரணமாக நீர் தரைப்பகுதிக்கு வந்து மிகப்பெரிய சேதத்தை ஏற்படுத்துகிறது.சுனாமியின் வேகம் மிகவும் பயங்கரமானது.

பயனுள்ள வீட்டுக்குறிப்புகள்


தெரிந்து கொள்வதற்காக இதோ எளிய வீட்டு உபயோகக் குறிப்புகள்:
பாதுகாப்பு:
* அந்துப் பூச்சி வராமலிருக்க நெல் மூட்டையைச் சுற்றிலும், அதன் இடுக்குகளிலும் புங்கை இலை, வேப்ப இலைகளை பறித்துப் போட்டு வைக்கவும்.
* பயறு வகைகளை சிறிது விளக்கெண்ணெய் சேர்த்து கிளறி வைப்பதால் அவை பல நாட்கள் வரை புழுத்துப் போகாமல் இருக்கும்.

ஆப்பிள் சாப்பிட்டா ஆயுள் கூடும்


‘அன் ஆப்பிள் எ டே, கீப்ஸ் த டாக்டர் அவே’ என்பது அனைவரும் அறிந்த மொழி. பொதுவாக உடல் நலம் பாதிக்கப்பட்டவர்களை பார்க்க செல்லும்போது, ஆப்பிள் கொடுப்பது வழக்கம். அந்த அளவுக்கு ஆப்பிளில் நோய் எதிர்ப்பு சக்தியும், ஊட்டச் சத்தும் நிறைந்திருக்கிறது.
ஆப்பிள் குறித்து மேற்கொள்ளப்பட்ட புதிய ஆராய்ச்சியில் தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிடுவது, நோயில் இருந்து பாதுகாப்பு அளிப்பதுடன் நீண்ட ஆயுளை அளிக்கும் என்பது தெரியவந்துள்ளது. சீனாவை சேர்ந்த ஹாங்காங் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் ஸென் யூ சென் தலைமையில் மேற்கொண்ட ஆராய்ச்சியின் வெளிப்பாடு இது.

பாடாய்படுத்தும் பாதவலி!


காலையில் படுக்கையை விட்டு எழுந்து தரையில் கால் வைத்ததும் பாதத்தில் வலி ஏற்படுகிறதா? பின்னர் நடக்க நடக்க வலி குறைந்து விடுகிறதா? இத்தகைய வலிக்கு பல காரணங்கள் இருந்தாலும், முக்கியக் காரணம் பிளான்டர் பியடிஸ் என்று ஆங்கிலத்தில் கூறப்படும் நோய்தான் என்று கூறுகிறார்கள் மருத்துவ அறிஞர்கள். பாதத்தின் அடிப்பகுதியில் உள்ள சவ்வுகளின் அழற்சியால் இந்த வலி ஏற்படுகிறது.

சைக்கிள் பிறந்த விதம்!

1700-களின் பிற்பகுதியில், கைப்பிடி இல்லாத `ஹேப்பி ஹார்சஸ்' என்ற வண்டியை வேடிக்கைக்காகப் பயன்படுத்தினார்கள். காலால் தரையை உந்தித் தள்ளி அதை நகர்த்த வேண்டும். வண்டி ஓட்டுபவருக்குக் கஷ்டமாகவும், பார்ப்பவருக்கு ஜாலியாகவும் இருக்கும். 1817-ல் டிரய்சினா என்ற கைப்பிடி இல்லாத `ஹேப்பி ஹார்சஸ்' வண்டி உருவானது.
1839-ல், கிராங் மூலம் பின்சக்கரத்துடன் பெடல்கள் இணைக்கப்பட்ட சைக்கிளை கிர்க் பேட்ரிக் மெக்மில் லன் உருவாக்கினார். இவ்வாறு ஆரம்பகட்ட சைக்கிள் பிறந்தது.
1861-ல் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த எர்னெஸ்ட் மிக்காவ்ஸ், இன்னும் சுலப மாகப் பயன்படுத்தப்படுக்கூடிய சைக்கிளாக அதை மேம்படுத்தினார். அதன் பெடல்கள் முன்சக்கரத்தோடு இணைக்கப்பட்டிருந்தன. காலப் போக்கில் முன்சக்கரம் பெரிதாக மாறி, `பென்னி பார்த்திங்' என்று அழைக்கப்பட்டது.
1885-ம் ஆண்டில்தான் இன்றைய சைக்கிள் அறிமுகமானது. ஜான் ஸ்டேர்லி என்பவர் தயாரித்த `ரோவர் சேப்டி' சைக்கிள்தான் அது.
1888-ம் ஆண்டில் பிரிட்டன் சாலைகளில் சைக்கிள்கள் அனுமதிக்கப்பட்டன. ஆனால் ஓட்டுபவர், தொடர்ந்து மணி அடித்துக்கொண்டே செல்ல வேண்டும்!

உடலுக்கு நன்மை பயக்கும் காய்கறிகள்!


'உணவே மருந்து, மருந்தே உணவு' என்ற சித்தர்களின் கூற்றை கடைப்பிடித்தாலே நோயின்றி ஆரோக்கியமாக வாழலாம். நம் முன்னோர்கள் தாங்கள் மேற்கொண்ட உணவு பழக்கங்களின் மூலம் எந்தவகையான நோயின் தாக்குதலுமின்றி ஆரோக்கியமாக வாழ்ந்தனர்.
இன்றைய நிலையை சற்று எண்ணிப் பார்ப்போமானால், 10 நபரில் 4 பேர் நீரிழிவு நோயின் தாக்குதலுக்கு ஆளானவராகவும், 3 பேர் இருதய சம்பந்தப்பட்ட நோயாளியாகவும், மீதம் 3 பேர் ஏதேனும் வேறு நோயின் தாக்குதலுக்கு ஆளானவராகவும் இருப்பார்கள்.

தேனீயாய் வந்த மகரிஷி ! - திருக்கொட்டாரம்


பசுமையான மரங்களும் பூஞ்சோலைகளும் நெல்வயல்களும் சூழ்ந்த அற்புதமான தலம், திருக்கொட்டாரம், குரவ மலரும், கோங்கு மலரும் பூத்துக் குலுங்கும் இத்தலம் காவிரித் தென்கரையில் அமைந்துள்ளது.
கி.பி.1253ஆம் ஆண்டு குலோத்துங்கச் சோழனால் இங்கு சிவாலயம் கட்டப்பெற்றுள்ளது. இம்மன்னனை கல்வெட்டு ஒன்று சோழ மண்டலத்து மண்ணிநாட்டு முழையூர் உடையான் அரையான் மதுராந்தகனான் குலோத்துங்கச் சோழன் எனக் குறிப்பிடுகின்றது.
""இரங்காய் உனது இன்னருளே...'' என சம்பந்தரால் பாடப்பெற்ற இத்தலப்பெருமானை துர்வாச முனிவரது சாபத்தினால் நிலைகுலைந்த ஐராவதம் என்னும் வெள்ளை யானை, தனது கொம்பினால் மேகத்தினை இடித்து, மழையை ஆறுபோல் உருவாக்கி அந்நதி தீர்த்தத்தால் இத்தல ஈசனை வழிபட்டுள்ளது.

சிவலோகத்தில் வாழும் பாக்கியம் எப்போது?


தெய்வங்களுக்கு மிருதுவானதும், கெட்டியானதும், சுத்தமானதுமான அழகான அங்கவஸ்திரம் சாத்தினால், அந்த அங்கவஸ்திரத்தில் எவ்வளவு இழை நூல் இருக்கிறதோ அவ்வளவு வருடத்திற்கு சிவலோகத்தில் வாழும் பாக்கியம் பெறலாம் என்று சிவ தருமம் என்ற நூலில் கூறப்பட்டுள்ளது.
பட்டு வஸ்திரம் (ஆடை), பஞ்சு நூலால் தயாரிக்கப்பட்ட வஸ்திரங்கள் போன்றவற்றைக் கொண்டே இறைவனை அலங்கரிக்க வேண்டும். ஒருமுறை பயன்படுத்திய வஸ்திரத்தை மறுமுறை உபயோகிப்பது என்றால் அதை நீரில் நனைத்து காய வைக்காமல் உபயோகிக்கக்கூடாது.

ஜெயித்தால் பாராட்டுங்கள்; தோற்றால் தட்டிக்கொடுங்கள்!


விரல் சப்புவது என்பது குழந்தைகளின் தவிர்க்க முடியாத ஒரு செயலாக உள்ளது. அப்படி விரல் சப்பினால் குழந்தையின் பல் உயர்ந்துவிடும் என்று பயப்படும் பெற்றோர், அக்குழந்தையை அடிக்காத குறையாக கண்டிக்கும் நிலைக்கு ஆளாகி விடுகிறார்கள்.
சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் 58.3 சதவீத பெற்றோர், தங்கள் குழந்தைகள் விரல் சப்பினால் கோபத்தில் சட்டென்று பிடித்து இழுத்துவிடுவதாக கூறினார்கள். அதே ஆய்வில், 18.8 சதவீத பெற்றோர், குழந்தையின் கை சப்பும் பழக்கத்தை தவிர்க்க, அக்குழந்தையின் கை விரல்களில் கசப்பு மருந்தை தடவி விட்டதை ஒப்புக் கொண்டுள்ளனர். 9.6 சதவீதம் பேர் விரல் சப்பும் தங்கள் குழந்தையை அடிப்பதாக குறிப்பிட்டுள்ளனர்.

கடலில் உதித்த கந்தன்


ஆர்ப்பரிக்கும் அலைகள் திருச்செந்தூர் கோயில் மதில் சுவரை முத்தமிட்டு, மணல் மீது நுரை பொங்கச் சரிந்து வீழ்கின்றன. "மண் ஆனாலும் திருச்செந்தூரில் மண் ஆவேன்' எனப் பாட வைத்த திருத்தலம். அறுபடை வீடுகளில் இரண்டாவது படை வீடு திருச்செந்தூர். இங்கு கந்தன், அருள் வள்ளி - தெய்வானையுடன் காட்சியருளுகிறார். தினசரி அபிஷேக நேரத்தில் திருப்புகழ் பாடல்களோடு, திருச்செந்தூர் முருகன் பிள்ளைத் தமிழ்ப் பாடல்களும் பாடப்படுகின்றன. நிறைய திருவிளையாடல்களுக்குச் சொந்தக்காரர் இந்த கந்தன். அதில் ஒன்று தான் திருச்செந்தூர் முருகன் பிள்ளைத் தமிழ்.

பள்ளி கொண்ட பரமேஸ்வரன்


பரந்தாமனான மகாவிஷ்ணுவைத்தான் பள்ளி கொண்ட திருக்கோலத்தில் தரிசிக்க முடியும். ஆனால், சுருட்டப்பள்ளிக்குச் சென்றால் பரமேஸ்வரனும் பள்ளி கொண்டிருக்கும் திருக்கோலத்தை தரிசிக்கலாம்.
தமிழக - ஆந்திரா எல்லை பகுதியில் ஊத்துக்கோட்டை அருகே இந்த சுருட்டப்பள்ளி அமைந்துள்ளது. இங்குள்ள இறைவன் `பள்ளி கொண்டீஸ்வரர்' என்று அழைக்கப்படுகிறார்.

ஆதிசிவன் தாள் பணிந்து அருள் பெறுவோமே


தங்கம் போல் பளிச்சிடும் கயிலாய மலை : சிவபெருமானின் இருப்பிடம் கைலாயம். இதனை வடமொழியில் "கைலாஷ்' என்பர். நாவுக்கரசர் கயிலைத்தாண்டகத்தில் "காவாய் கனகத்திரளே போற்றி! கயிலை மலையானே போற்றி போற்றி''( தங்கக்குவியல் போல் காட்சியளிக்கும் சிவனே வணக்கம், கயிலையில் வசிக்கும் இறைவனே வணக்கம்) என்று இம்மலையைப் போற்றி வணங்குகிறார். பனி சூழ்ந்த இம்மலை காலையில் சூரியோதய வேளையில் பொன்மலையாகக் காட்சி தரும். அக்காட்சியை அப்பர் "கனகத்திரள்' என்று குறிப்பிடுகிறார். இம்மலையில் சிவபெருமான் இருக்கிறார் என்பதைவிட, இம்மலையையே சிவபெருமானாகக் கருதி பக்தர்கள் வழிபடுகின்றனர். இந்த மலையின் அருகில் மானசரோவர் என்னும் புனித ஏரி உள்ளது.

எளிமையை விரும்பும் இறைவன்! - சிவராத்திரிஇறைவன் எளிமையானவன். அவன், பக்தனிடம் விரும்புவதும் எளிமையை தான். இதை வலியுறுத்தும் விரதம் தான் சிவராத்திரி. சிவனை வணங்க பெரிதாக எதுவும் தேவையில்லை. ஒரு கைப்பிடி வில்வ இலை, கொஞ்சம் தண்ணீர்... இதைக் கொண்டு தனக்கு செய்யும் பூஜையை, அவன் அன்புடன் ஏற்றுக் கொள்கிறான்.
மாசி மாதம் தேய்பிறை சதுர்த்தசி திதியை, சிவராத்திரியாக அனுஷ்டிக்கிறோம். இந்த நாளில், எல்லா சிவன் கோவில்களும் இரவு முழுவதும் திறந்திருக்கும். நான்கு ஜாம பூஜை நடக்கும். இந்த விரதம் அனுஷ்டிக்கப்படுவதற்குரிய காரணத்தைக் கேளுங்கள்...