100 ஆண்டுகள் ஆகிவிட்டது! (குற்றப் பரம்பரைச் சட்டம் ) சில தகவல்கள்...


குற்றப் பரம்பரை சட்டத்தின்
வரம்பிற்குள் கொண்டுவரப்பட்ட
கோவிந்த தோம்ஸ் கூட்டத்தினரின்
மீதான சுதந்திரத்திற்கு முந்தைய
வங்காள அரசு குற்ற புலனாய்வு
பிரிவின் துண்டு பிரசுரம்.
குற்றப் பரம்பரைச் சட்டம் (Criminal Tribes Act )
என்பது இந்தியாவில் பிரித்தானிய
ஆட்சியின் பொழுது வேறுபட்ட
காலகட்டங்களில் நிறைவேற்றப்பட்ட
குறிப்பிட்ட சமூகத்தினருக்கு எதிரான
சட்டம் ஆகும். இது முதன் முதலாக 1871 இல்
இயற்றப்பட்டது. இது பெரும்பாலும் வட
இந்திய சமூகத்தினரையே அதிக அளவில்
குறிவைத்து உருவாக்கப்பட்ட சட்டம் ஆகும்.
பின்னாளில் இது வங்க மாகாணத்திற்கும்
1876 இல் அமுல்படுத்தபட்டது. கடைசியாக
1911 ஆம் ஆண்டில் சென்னை மாகாணத்திற்கு
இது அமுல்படுத்தபட்டது. இந்தச் சட்டமானது
இயற்றப்பட்ட நாளில் இருந்தே பல
சட்டத்திருத்தங்களுக்கு உள்ளாகி பின்னர்
கடைசியாகக் குற்றப் பரம்பரை சட்டம் (1924
ஆம் ஆண்டின் VI வது திருத்தம்) என்று
இந்தியா முழுவதும் அமுலாகியது.
அமுலாக்கம்
இந்தியாவிற்கான ஆளுநரின் அதிகாரத்தின்
கீழ்படியாக அக்டோபர் 12 ஆம் நாள் 1871 ஆம்
ஆண்டு இந்தச் சட்டம் இந்திய மக்களின் மீது
விதிக்கப்பட்டது. இது இந்திய மக்களின் மீது
குறிப்பிட்ட சமூகத்தினரை ஒடுக்கவும்,
அவர்கள் மீது திருட்டு போன்ற குற்றங்களைக்
காரணம் காட்டி அவர்களைப் பிணையில்
வெளிவர முடியாதபடிக்கு சிறையில்
அரசாங்கம் விரும்பும் வரைக்கும் சிறையில்
அடைத்து வைப்பதற்குமாக
உருவாக்கப்பட்டதாகும். இதில் உள்ளடங்கும்
சமூகத்தினரை குற்றம் புரிவதை
வாடிக்கையாகக் கொண்ட பிரிவினர் என்று
பொருள்படும்படிக்கு இயற்றப்பட்டது. இந்தச்
சட்டத்தின் கீழ் வரும் சமூகத்தினை சேர்ந்த
குழந்தைகள் அல்லாத ஆண்கள் அனைவரும்
அருகில் உள்ள காவல் நிலையத்தில்
வாரமொருமுறை தங்களது இருப்பினை
பதிவு செய்யும்படிக்கு
கட்டாயப்படுத்தப்பட்டனர்.
இந்திய சுதந்திரத்தின் பொழுது 127
வெவ்வேறு சமூகத்தினை சேர்ந்த
பதிமூன்று மில்லியன் எண்ணிக்கை
அளவிலான இந்திய மக்கள்
பாதிக்கப்பட்டிருந்தனர். இந்தச் சட்டத்தின் கீழ்
கொண்டுவரப்பட்ட சமூகத்தினருக்கு
சொந்தமான இடத்தில் அரசானது தேடுதல்
நடத்துவதோ அல்லது அவர்களைக் கைது
செய்வதற்கோ எந்தவித பிடியாணையும்
இல்லாமல் இந்தச் சட்டத்தின் பெயரில் அவர்கள்
மீது நடவடிக்கை எடுக்கக் காவல்துறைக்கு
அதிகாரம் உண்டு. இந்தச் சட்டத்தின் கடுமை
தாக்கத்தின் விளைவாக இந்தச் சட்டமானது
1949 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் தள்ளுபடி
செய்யப்பட்டது. இந்தச் சட்டத்தின் பிடியில்
இருந்த சமூகத்தினர் குற்ற பரம்பரை என்ற
பெயரிலிருந்து குற்ற மரபினர் பட்டியலில்
நீக்கப்பட்டவர் என்று அழைக்கப்பட்டனர். மேலும்
சீர் மரபினர் என்றும் அழைக்கப்பட்டனர். பின்னர்
இந்தச் சட்டத்தின் பெயரில்
அடைக்கப்பட்டிருந்தவர்களை இந்திய மாநில
ஆரசுகள் 1961 ஆம் ஆண்டில் முழுமையாக
விடுவித்தது.
இந்தச் சமூகத்தினரில் அதிகப்படியான 60
மில்லியன் எண்ணிக்கையிலான மக்கள்
இவர்கள் மீதான சட்டக்கடுமைகள் விலக்கப்பட்ட
பின்பும் கூட ஊடகங்களாலும்
காவல்துறையாலும் தொடர்ந்து
ஒடுக்கப்பட்டு வந்தனர். இன்று நாடோடிகள்
பழங்குடியினரை சேர்ந்த 313 சமூக
பிரிவினரும் 198 பட்டியலில் நீக்கப்பட்ட மற்ற சீர்
மரபினரும் இந்தியாவில் இருக்கின்றனர்.
இந்தச் சட்டத்தில் இருந்து விடுவிக்கப்பட்ட பல
சமூகத்தினரின் அடையாளங்கள்
மாறிவிட்டபோதிலும் இன்றும் கூட அந்தப்
பிரிவில் சில சமூகத்தினர் விமுக்த
ஜாதி யினர் (Denotified tribes of India ) என்று
அழைக்கப்படுகின்றனர்.
சட்டத்திற்கான காரணங்கள்
19ஆம் நூற்றாண்டில் வட இந்தியாவில்
பரவலாக, வங்காளத்தில் குறிப்பாகப்
பெருகிவந்த குற்றங்களை அப்போதைய
ஆங்கில அரசு ஆராயத் தொடங்கியது.
குற்றங்களின் தன்மை, இடம், எண்ணிக்கை,
குற்றவாளிகளின் குணாதிசியங்கள்,
அவர்களுக்கு இடையே ஆன தொடர்புகள்,
ஒற்றுமைகள் ஆகியவற்றை ஆங்கிலேயர்
கவனமாகக் குறிப்பெடுத்தனர். பல மாறுபட்ட
தேசிய மொழிவாரி இனங்களின்
கூட்டுக்கலவையாக விளங்கிய இந்தியா
அவர்களுக்குப் புரியாத புதிராகவே
இருந்தது. இருப்பினும் தங்களின் ஆராய்ச்சி
முடிவில் தக்கீ (Thuggee/Thug) போன்ற
குறிப்பிட்ட சில இன மக்கள் குற்றங்களின்
முக்கிய காரணியாக இருப்பதை
கண்டுபிடித்தனர். தக்கீ இன மக்கள் நாடோடி
கொள்ளையர்களாக 17, 18 மற்றும் 19ஆம்
நூற்றாண்டுகளில் வாழ்ந்து வந்தனர்.
வியாபாரிகள், அதிலும் குறிப்பாக
நெடுந்தொலைவு நடந்தும்,
குதிரையிலும் செல்லும் வியாபாரிகளே
இவர்களின் முக்கிய இலக்காயினர்.
கொள்ளைக்கு இடையூறாய் உரிமைதாரர்
இருப்பதால், பெரும்பாலும் கொலையும்
களவின் ஒரு பகுதியாகவே போனது. 20
லட்சத்திற்கும் மேற்பட்ட மக்களைத் தக்கீயர்
கொன்றிருப்பதாகக் கின்னஸ் புத்தகம்
கூறுகிறது.
பெரும்பான்மை மக்களிடமிருந்து விலகிக்
காட்டுப் பகுதிகளில் வாழ்ந்த இவர்களின்
கலாசாரம், பண்பாடு ஆகியவை சராசரி
மக்களை விட்டு வேறுபட்டு நின்றது. சீக்கிய
கள்ளர்கள், இசுலாமிய கள்ளர்கள் ஆகியோர்
இருந்தபோதும் ‘காளி’ வழிபாடு செய்யும்
இந்து கள்ளர்களே அதிக எண்ணிக்கையில்
இருந்தனர். (குறிப்பு: தமிழ்நாட்டில் வாழும்
“கள்ளர்” இன மக்கள் அல்ல)
கொள்ளையை ஒழிக்கும் அளவுக்குப்
பொறுமையோ, அவகாசமோ, ஆர்வமோ
இல்லாத ஆங்கிலேயர் கொள்ளையர்களை
ஒழிக்க முடிவுசெய்தனர். வில்லியம் ஸ்லீமன்
(William Sleeman)தலைமையிலான “Thuggee and
Dacoity Department” ஆயிரக்கணக்கான தக்கீ
இனத்தாரை தூக்கிலிட்டும், நாடு
கடத்தியும், வாழ்நாள் சிறை தண்டனை
விதித்தும் வங்காளத்தை சுற்றி வழிப்பறி,
கொள்ளைச் சம்பவங்களுக்கு முற்றுபுள்ளி
வைத்தனர். குறிப்பாக 1835 முதல் 1850 வரை
சுமார் 3000க்கும் மேற்பட்ட கள்ளர்கள்
நசுக்கப்பட்டனர்.
அடக்குமுறை வெற்றியடைந்ததை ஒட்டி
நாடு முழுவதும் குற்றங்களைக்
குறைக்கவும், தடுக்கவும் இதே முறை
கொண்டு வருவதாகத் தீர்மானம்
நிறைவேறியது. இதன் சட்ட வடிவமே
“குற்றப் பரம்பரையினர் சட்டம்” (Criminal Tribes Act
1871).இதை கொண்டுவந்த நீதிபதி ஜேம்சு
ஸ்டீபன் (James F. Stephen), இந்தச் சட்டத்தின்
சாராம்சமாக முன்மொழிந்த கூற்று,
"கைவினை, தச்சு வேலை போல, (தகீயர்
போன்ற)சிலருக்கு களவும்
குலத்தொழில், அவர்களை ::
முற்றிலுமாக ஒழிப்பது மட்டுமே
குற்றங்களை குறைக்க ஒரே வழி" ("like
weaving, carpentry,.. we speak of professional
criminals, tribes whose ancestors were criminals
from time immemorial, themselves destined by the
caste to commit crime and offend law. The whole
tribe should be exterminated, like Thugs)
இப்படியாக முன்மொழியப்பட்ட சட்டம்
பின்னாளில் தவறாகப் பயன்படுத்தப்பட்டு
கோடிகணக்கான அப்பாவி மக்களை “பிறவிக்
குற்றவாளிகளாக” அடையாளப்படுத்தி
சமூக நீதிக்கெதிராகக் குற்றம் சாட்ட வழி
வகுத்தது. [1]
உப்பு வரியும் குற்றச் சட்டமும்
18 ஆம் நூற்றாண்டில் வங்காளத்தை
நிருவகித்து வந்த வாரன் ஹேஸ்டிங் உப்பு
வணிகத்தை முழுவதும் கிழக்கிந்தியக்
கம்பெணியின் கட்டுப்பாட்டில் கொண்டு
வந்தார். இதனால் உப்பு கொண்டு
செல்லப்படும் வழிகள் அடையாளம்
காணப்பட்டு வழிகள் அடைக்கப்பட்டன.
தலைச்சுமையாக உப்பு கொண்டு
செல்வதைத் தடுக்கும் நடவடிக்கைகளுக்கு
எதிராகப் பாரம்பரியமாக இதில் ஈடுபட்டு
வந்த நாடோடி இன மக்களான உப்புக்
குறவர்களும், தெலுங்கு பேசும்
எருகுலரும், கொரச்சர்களும் தடையை மீறி
உப்பைக் கடத்தி விற்க முற்பட்டார்கள். இதே
போன்று லம்பாடிகள், பஞ்ஞாராக்கள்
ஆகியோர் காலனியக் கட்டுப்பாடுகளை மீறி
உப்பைப் பிற மாநிலங்களில் விற்றார்கள்.
இவர்களைத் தடுக்க வன்முறையை ஏவி
விட்டதோடு இவர்களைத் திருடர்கள் எனக்
குற்றம் சாட்டிய ஆங்கிலேய அரசு
இவர்களையும் குற்றப்பரம்பரையில்
சேர்த்தது. [2]
ஆரம்ப காலகட்டங்களில் இந்தச் சட்டமானது
தெற்காசியாவில் குறிப்பாக வடஇந்திய
பகுதிகளில் வாழ்ந்த தக்கி எனப்படும்
கொலை மற்றும் வழிப்பறியை தொழிலாகக்
கொண்ட சமூகத்தினரை எதிர்கொள்வத
க்காகவே உருவாக்கப்பட்டது. 1857களில் அந்தச்
சட்டமானது புரட்சி செய்யும்
குழுக்களையும் இதன் வரம்பிற்குள் அடக்கி
அவர்கள் மீதும் பாய்ந்தது. இதன்மூலமாகப்
பல்வேறு பழங்குடி தலைவர்கள் மீது துரோக
குற்றம் சாட்டி துன்புறுத்தி
வந்தமையினால் புரட்சி செய்யும்
அனைவருக்கும் எதிராகப் பாயும் சட்டமாக
மாற்றிக் கையாளப்பட்டது.
இந்தச் சட்டத்தில் அடக்கமான
முன்னாள்
குற்றபரம்பரையினர் பட்டியல்
இந்தப் பட்டியலில் உள்ள பெரும்பாலான
பிரிவுகள் பாகிஸ்தான் மற்றும் இந்தியா
ஆகிய இரு நாடுகளிலும் வசிக்கின்றனர்.

பெயர் வட்டாரம்
பதக் ராஜஸ்தான்
பக்ஹிர் ராஜஸ்தான்
பலோச் ராஜஸ்தான்
பஞ்சரா ராஜஸ்தான்,
பஞ்சாப்
பவோரி ராஜஸ்தான்,
பஞ்சாப்
பவரியா ராஜஸ்தான்,
பஞ்சாப்
பாவரியாஸ் ராஜஸ்தான்,
பஞ்சாப்
சாரா சாராநகர்,
குஜராத்
தேகரோ பிர்பும், மேற்கு
வங்காளம்
திகரு மேற்கு
வங்காளம்
ஹர்ஸ் பாகிஸ்தான்
கஞ்சர் ராஜஸ்தான்
கோரசாஸ் தமிழ் நாடு
குறவர் தமிழ் நாடு,
கேரளா
லம்பாடி ஆந்திர
பிரதேசம்
லோதா மேற்கு
வங்காளம்
மக்தம் ராஜஸ்தான்,
பஞ்சாப்
மீனாக்கள் ராஜஸ்தான்
நட் பீகார்
சபர் மேற்கு
வங்காளம்
சன்சி ராஜஸ்தான்,
பஞ்சாப்
பஸ் பர்தி
மகாராஷ்டிரா,
மத்திய
பிரதேசம்
முத்தரையர்-வலையர் தமிழ்நாடு
முக்குலத்தோர் , பிரமலைக்
கள்ளர் தமிழ்நாடு
வைகரி குஜராத்
எருகளா
ஆந்திரா
பிரதேசம்,
தமிழ்நாடு
மற்றும்
கர்நாடகா
தமிழகத்தில் குற்றப்பரம்பரைச்
சட்டம்
தமிழ்நாட்டில் முக்குலத்தோராகிய கள்ளர்,
மறவர், பிரமலை கள்ளர், மறவர், வலையர்,
கேப்மாரி, அகமுடையர்... என 89 சாதிகள்
குற்றப் பரம்பரைச் சட்டப்படி இப்பட்டியலில்
இருந்தன. சில சாதியினர் குற்றப்
பரம்பரையினர் என அறிவிக்கப்பட்டனர். அதில்
குறவர், உப்புக் குறவர், ஆத்தூர்
மேல்நாட்டுக் குறவர், சி.கே. குறவர், போன்ற
ஜாதிகளும் அடங்காத, அடங்க மறுக்கும்
ஜாதிகளும் குற்றப் பரம்பரைப் பட்டியலில்
இணைக்கப்பட்டிருந்தன.

குற்றப் பரம்பரைப் பட்டியலில்
கொண்டுவரப்பட்ட சாதி ஆண்கள் குறிப்பாக
16 வயதிற்கும் 60 வயதிற்கும் இடைப்பட்டவர்கள்
காவல் கண்காணிப்பில் இருக்கவேண்டும்.
அவர்களிடம் நாள்தோறும் கைரேகை பதிவு
செய்யப்படும். மேற்கண்ட சாதிகளில்
குறிப்பாகக் கள்ளர், மறவர், அகமுடையோர்
போன்ற சில சமூகத்தினர் கைரேகை
சட்டத்தில் சேர்க்கப்பட்டனர்.
அகமுடையார்களிலும் விவசாய நிலம்
வைத்திருந்த விவசாயிகள், நிலவரி
கட்டுபவர்கள், நிரந்தரத் தொழில் செய்வோர்,
அலுவலர், நிரந்தரமாக ஒரே இடத்தில்
வசிப்போர் ஆகிய பெரும்பான்மையோர்
கைரேகைச் சட்டத்தில் இணைக்கப்படவில்லை.
1921 ஆம் ஆண்டில் கள்ளர்கள்
தலைமையிலேயே கள்ளர்களைக்
கண்காணிக்கும் கண்காணிப்பு
கிராமங்களாக ‘கள்ளர் பஞ்சாயத்துக்கள்’
உருவாக்கப்பட்டன. உள்ளூரிலேயே அதே
சாதியைச் சேர்ந்த கள்ளர் சமுதாயத்தைச்
சார்ந்தவர்களும் இடம் பெற்றிருந்த ஒரு
குழுவிடம் ஒரு பதிவேடு இருக்கும்.
அதிலேயே கைரேகை வைக்கலாம்.
ஆனாலும் பல நேரங்களில் அவர்கள் காவல்
நிலையத்தில் தூங்குமாறும், அருகே
இருக்குமாறும்
கட்டாயப்படுத்தப்பட்டனர்.வெளியூர் செல்ல
வேண்டுமென்றால் அந்தக் குழுவிடம்
அடையாளச் சீட்டு வாங்கிச் செல்ல வேண்டும்.
தாம் செல்லும் ஊரில் இருக்கும் ஊர்ப்
பெரியவர் குழுவில் இந்த அடையாளச்
சீட்டைக் காண்பிக்க வேண்டும். அடையாளச்
சீட்டு இல்லாதவர்கள் கைது
செய்யப்படுவார்கள். அடையாளச் சீட்டு
இல்லாமல் அடிக்கடி கைதாகும் நபர்கள்
தனியாகப் பட்டியலிடப்பட்டு அவர்கள்
நேரடியாகக் காவல்நிலையத்தில் கைரேகை
வைக்க வலியுறுத்தப்பட்டனர். [4]
ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குச்
செல்ல நேர்ந்தால், ‘ராத்திரிச் சீட்டு’ பெற்றுச்
செல்லவும் கட்டாயப்படுத்தப்பட்டனர். (இந்தச்
சீட்டில் வ.எண், பெயர், குற்றப்பதிவு எண்,
குற்றப் புலனாய்வுத் துறை, குழு எண்,
வெளியே போவதற்கான காரணம், செல்லும்
வழித்தடம், நேரம், திரும்பும் நேரம்,
பெருவிரல் ரேகைப் பதிவு ஆகியவை
இருந்தன). மூன்று பிரதிகளைக் கொண்ட
இந்த ராத்திரிச் சீட்டின் முதல் படி உள்ளூர்
காவல் நிலையத்திலும், இரண்டாவது படி
அந்த நபர் செல்ல இருக்கும் காவல்
நிலையத்துக்கும், மூன்றாவது படி அந்த
நபரிடமும் தரப்பட்டது. வழியில் எங்காவது
இரவு தங்க நேர்ந்தால், அந்தக் கிராமத்தின்
தலைவனது கையொப்பம் பெறப்பட வேண்டும்
என்பதும் குறிப்பிடத்தக்கது. [5]
தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த கோபாலசாமி
ரெகுநாத ராஜாளியார் என்பவர் 1911-லேயே
ஐந்தாம் ஜார்ஜ் மன்னரை நேரில் சந்தித்துப்
பேசிக் குற்றப் பரம்பரைப் பட்டியலில்
இருந்து தஞ்சை, திருச்சி மாவட்ட
கள்ளர்களைக் குற்றப் பரம்பரைப் பட்டியலில்
இருந்து மீட்கப் போராடி வெற்றி பெற்றார்.
1920 ஆம் ஆண்டு உசிலம்பட்டி அருகே உள்ள
பெருங்காமநல்லூர் என்ற கிராமத்தில்
இச்சட்டத்தை எதிர்த்தும், ஆங்கில
அரசாங்கத்தை எதிர்த்தும் கடுமையான
போராட்டம் நடைபெற்றது. அதை
அடக்குவதற்காக அரசாங்கம் நடத்திய
துப்பாக்கிச் சூட்டில் 'மாயாக்காள்' என்ற
பெண் உட்பட 17 பிரமலைக் கள்ளர் சமூகத்தினர்
வீரமரணம் அடைந்தனர். [6] குற்றப் பரம்பரைச்
சட்டத்தை எதிர்த்துத் தமிழ்நாட்டில்
நடைபெற்ற மிக முக்கியப் போராட்டம் இது.
[7]
அதன் பிறகு 1921 ஆம் ஆண்டிலிருந்து
தொடர்ச்சியாகக் கேரளாவைச் சேர்ந்தவரும்
மதுரையில் குடியிருந்தவருமான ஜார்ஜ்
ஜோசப் என்ற வழக்குரைஞர்
முதன்முறையாகக் கள்ளர் நாடு
முழுமைக்கும் சுற்றுப் பயணம் செய்து
மக்களைத் திரட்டிக் குறிப்பாகக் குற்றப்
பரம்பரைச் சட்டத்திற்கெதிராக மட்டுமே
போராட்டங்களை முன்னெடுத்தார். இவரை
அப்பகுதி கள்ளர்கள் அப்போது ‘ரோசாப்பூ
துரை’ என்றே அழைத்தனர். அவரது
நினைவாக இன்று வரை குழந்தைகளுக்கு
ரோசாப்பூ என்று பெயர் சூட்டுகின்றனர்.
1933 இல் இந்திய அரசியல் சட்ட சீர்திருத்தக்
குழு முன்னிலையில் நடந்த
விசாரணையில் அம்பேத்கர் இச்சட்டத்தின்
கொடுமைகளையும் தீர்க்கும்
வழிமுறைகளையும் குறித்து
எடுத்துரைத்தார். இந்த விசாரணையில்தான்
மிக முக்கியமாகக் குற்றப் பரம்பரைச்
சட்டத்தில் திருத்தம் செய்யவோ, குற்றப்
பரம்பரையினர்க்கு மறுவாழ்வு
அளிப்பதற்கோ, அவர்களைக்
கட்டுப்படுத்துவதற்கோ இந்திய அரசின்
ஆளுநரைவிட அந்தந்த மாகாண
அரசுகளுக்கே அதிக அதிகாரம் இருக்கிறது
என்பதை இந்திய அரசே பதிவு செய்தது. [4]
1927ம் ஆண்டு மதுரை, ராமநாதபுரம்,
திருநெல்வேலி மாவட்டங்களில் குற்ற
பரம்பரைச் சட்டம் அமலில் இருந்து வந்தது.
அக்காலத்தில் அரசியலில் ஈடுபட்ட
முத்துராமலிங்கம் இந்தச் சட்டத்தை
நீக்குவதற்காக அவர் ஆதரவு திரட்டத்
தொடங்கினார். கிராமம் கிராமமாகச்
சென்று கூட்டங்களை நடத்தினார்.
இந்த நிலையில் 1929ம் ஆண்டு மதுரை
மாவட்டத்தைச் சேர்ந்த மேலும் 19
கிராமங்களைச் சேர்ந்த மறவர்
சமுதாயத்தினரை இந்தச் சட்டத்தின் கீழ்
கொண்டு வந்தனர். இதை எதிர்த்து மிகப்
பெரிய அளவில் கூட்டங்களையும்,
பேரணிகளையும் நடத்தினார்
முத்துராமலிங்கம். இந்தச் சட்டத்திற்கு மறவர்
சமுதாயத்தினர் யாரும் அடிபணிய
வேண்டாம் என கோரிக்கை விடுத்தார்.
இதையடுத்து அவர்களும் போராட்டத்தில்
குதிக்க அந்தச் சட்டத்தைப் பகுதியாக
விலக்கிக் கொண்டது அப்போதைய
சென்னை மாகாண அரசு. இவரின் தொடர்
முயற்சிகளால் 2000 கிராமங்கள் இந்தச்
சட்டத்தின் கீழ் இருந்த நிலை மாறி 341 ஆகக்
குறைந்தது. [8]
சட்டத்தைத் திரும்பப் பெறுதல்
இப்படிச் சட்டத்தின் பெயரால் நடந்த
இக்கொடுமைகளை எதிர்த்து, 1930களில்
இருந்தே பல விவாதங்கள் நடந்தன. 1936களில்
பண்டித ஜவஹர்லால் நேரு, ‘சட்டப்
புத்தகத்திலிருந்து இந்தச் சட்டம்
நீக்கப்படுவதற்கு நடவடிக்கை
எடுக்கப்படவேண்டும்’ என்றார். இதே போல,
சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி
திரு சுப்பராவ், ஹரிஜன சேவா சங்கத்
தலைவர் கி.சி. தக்கா, ப. ஜீவானந்தம், பி.
ராமமூர்த்தி, முத்துராமலிங்கத் தேவர்
ஆகியோர் வலியுறுத்தினர். அதன்
விளைவால், 1947-இல் காவல் துறை
அமைச்சராக இருந்த பி. சுப்பாராவ், இந்தச்
சட்டத்தைத் திரும்பப் பெறுவதற்கான
தீர்மானம் ஒன்றைக் கொண்டு வந்தார். பேகம்
சுல்தான் அம்ருதீன் போன்றவர்களால் இதற்கு
முட்டுக்கட்டை போடப்பட்டபோதும், தீர்மானம்
நிறைவேறியது; சுதந்திரத்திற்குப் பிறகு
தானாகவே காலாவதியானது.

நன்றி...
http://ta.m.wikipedia.org/wiki/குற்றப்_பரம்பரைச்_சட்டம்

புனித வெள்ளி!


2000 ஆண்டுகளுக்கு முன் பாஸ்கா
பண்டிகையின் போது, குற்றமற்ற
ஒருவர் கொல்லப்பட்டார். அவர் நாசரேத்
என்ற ஊரைச் சேர்ந்த இயேசு கிறிஸ்து.
அவர் செய்த உயிர்த் தியாகம், கடந்த
இரண்டாயிரம் ஆண்டு மனித வாழ்வின்
மீது மாபெரும் தாக்கத்தை ஏற்படுத்தி
வந்திருக்கிறது. மரணம் என்பது
முடிவல்ல; அதிலிருந்தே உலகிற்கான
விடுதலை தொடங்குகிறது.
மரணத்தின் அர்த்தத்தை மாற்றி
எழுதியது இயேசுவின் மரணம்.
தேவ ஆட்டுக்குட்டி
தங்களது பாவங்கள், குற்றங்கள்,
குறைகள் ஆகியவற்றை மன்னிக்கும்படி
கடவுளிடம் கெஞ்சும் மனிதர்கள் ஆடு
அல்லது மாடு ஒன்றை பலி
செலுத்துவதை பாரம்பரியமாகச்
செய்து வந்தனர். உலகின் எல்லா
நாகரிகங்களிலும் இந்த பரிகாரப்
பலியைக் காணமுடியும். இவ்வாறு
ஒருவர் தவறுக்கு மற்றொரு உயிரை
பலியாகத் தரும்போது அது ஆடு
எனில் அதை ’ பலியாடு’ என்று
அழைக்கும் வழக்கம் இன்றும் இருப்பதை
அவதானிக்க முடியும்.
இயேசுவை ’தேவ ஆட்டுக்குட்டி’ என்று
அழைக்க, மனிதர்களின் பாவங்களுக்கு
பலியாக தனது இன்னுயிரை அவர்
ஈந்ததே காரணம். இந்த உயிர் ஈகையை
விவிலியத்தின் கண்ணோட்டத்தில்
பார்க்கும் அதேநேரம், இயேசு வாழ்ந்த
காலக்கட்டத்தின் வரலாற்றுப்
பின்னணியில் நோக்கும்போது
இன்னும் பல புனித உண்மைகளைப்
புரிந்துகொள்ள முடியும்.
யூத மதத்தின் வீழ்ச்சி
இயேசு பொதுவாழ்வுக்கு வந்துவிட்ட
காலகட்டத்தில் யூதமதத்தில் பல
பிரிவுகள் தோன்றி யிருந்தன.
அதற்குக் காரணம் எருசலேமின் வீழ்ச்சி.
முதல் நூற்றாண்டின் யூத
வரலாற்றாசிரியர் ஜொஸிஃபசின்
(Josephus) ‘யூத தொன்மையியல்
வரலாறு (Antiquities of the Jews c. 94) என்ற
வரலாற்று நூல் நமக்கு இதை எடுத்துக்
கூறுகிறது.
இயேசுவின் காலகட்டத்தில் யூத
மதத்தின் அதிகார மட்டத்தில் யூத
ஆட்சியாளர்களுக்குச் சமமாக ஆதிக்கம்
செலுத்தி வந்த இரண்டு உயர் வர்க்கப்
பிரிவினர் பரிசேயர்கள் மற்றும்
சதுசேயர்கள். மதத்தின் பெயரால்
பொதுமக்களை மிரட்டி
கைப்பாவைகளாக தங்கள் கட்டுக்குள்
வைத்திருந்த இவர்களே இயேசுவை
’மேசியா’( மக்களை மீட்டுக் காக்க வரும்
வலிமை மிக்க அரசன் என்பது பொருள்)
என்று சாமன்ய யூத மக்கள் அவரை
அழைப்பதற்கு ஆட்சேபணை
தெரிவித்தவர்கள்.
யூத மதத்தை பல்வேறு
பிரிவுகளாக்கி நீர்த்துப்போகச் செய்த
சதுசேயர்களையும் பரிசேயர்களையும்
பற்றிக் குறிப்பிடும் ஜொஸிஃபஸ்,
இவர்கள் கிரேக்கப் பண்பாடு மற்றும்
தத்துவத்தில்
மூழ்கிக்கொண்டிருந்ததை எடுத்துக்
காட்டுகிறார்.
செலூக்கிய ஆட்சியாளர்கள்
எருசலேமை வென்றபோது பரலோகத்
தந்தையின் வீடாகிய எருசலேம்
ஆலயத்தைக் கைப்பற்றி அதில் ஜியஸ்
கடவுளின் சிலையை பிரதிஷ்டை
செய்தபோது கிரேக்க மதத்திற்கும்
யூத மதத்திற்கும் இடையிலான
வெறுப்பும் இறுக்கமும் அதன் உச்சத்தை
எட்டியது. யூதா மக்கபே என்ற யூதத்
தலைவர் இதைச் சகித்துக் கொள்ள
முடியாமல் பெரும் படைத்திரட்டி
கிளர்ச்சி செய்து ஆலயத்தை மீட்டார்.
மக்கபேயர்களின் எழுச்சிக்குப் பிறகு
தத்துவங்களின் அடிப்படையில் யூத
மதத்தில் மேலும் பல உட்பிரிவுகள்
தோன்றின. இவை யூத சமூகத்தின்
மீது மேலும் ஆதிக்கம் செலுத்த
போட்டியிட்டன. இவ்வாறு யூத மதம்
கடும் விரிசலை சந்திக்க காரணமாக
இருந்தார்களை ஆராய்ந்தால்
பரிசேயர்களும் சதுசேயர்களும் வந்து
நிற்கிறார்கள்.
பரிசேயர்களும் சதுசேயர்களும்
பரிசேயர்கள் என்ற வார்த்தைக்கு
‘பிரிந்திருப்பவர்கள்’ என்ற
பொருளையும் தருகிறது யூத
மொழியின் மூல அகராதி.
பரிசேயர்கள் சமூக அடுக்கில் கல்வியில்
சிறந்து விளங்கி, வேத நூல்களில்
புலமை பெற்றவர்களாக வாழ்ந்தவர்கள்.
சடங்காச்சாரங்களிலிருந்து தங்களைப்
பிரித்துக் கொண்ட இவர்கள், யூதத்
திருச்சட்டங்களுக்கு விளக்கம்
கொடுப்பதில் புதிய முறையை
உருவாக்கினர்.
அதுவே வாய்மொழிச் சட்டம் என்று
மக்கள் மீது திணிக்கப்பட்டது.
சீமோனுடைய ஆட்சியின்போது
அவர்கள் மேலும் செல்வாக்கு பெற்று
வளர்ந்தனர். மதவிவகாரங்களில்
அரசனுக்கு ஆலோசனை சொல்லும்
மூப்பர்களின் ஆலோசனை சபையில்
இடம்பெறாத பரிசேயர்கள் தங்கள்
செல்வாக்கால் இடம்பிடிக்கத்
தொடங்கினர். அந்த ஆலோசனை
சபையே பிற்பாடு நியாயச் சங்கம்
என்று அழைக்கப்பட்டது.
இந்த நியாயச் சங்கத்திடம்தான்
ரோமானிய ஆளுநரான பிலாத்து,
இயேசுவை ஒப்படைத்து “ இவர்மீது
நான் எந்தக் குற்றமும் காணவில்லை.”
என்று இயேசுவைக் கைகழுவி,
பரிசேயர்கள் மற்றும் சதுசேயர்களின்
பகையை சம்பாதித்துக்
கொள்வதிலிருந்து தப்பித்து தன்
பதவியை தக்க வைத்துக் கொண்டர்.
அதேபோன்று சதுசேயர்கள்
சாலொமோனின் காலத்திலிருந்தே
மதகுருமார்களாக உயர்பதவியில்
இருந்து சேவை என்ற பெயரில்
ஆடம்பரங்களை அனுபவித்து வந்தவர்கள்.
மக்கள் மீது கடும் செல்வாக்கைச்
செலுத்தி வந்தவர்கள். இந்த இரண்டு
தரப்பினருமே புனிதம் என்ற பெரில்
யூத மதத்தை கீழான கோட்பாடுகளின்
கூடாரமாக மாற்றினர்.
இயேசு மீது வன்மத்தை விதைத்தது எது?
பிறப்பால் யூதரான இயேசு, பரலோகத்
தந்தை கையளித்த கட்டளைகளை மீறி
நடந்துகொண்டிருந்த யூத மதப்
பழக்கவழக்கங்களையும்,
ஒழுங்கீனங்களையும் எதிர்த்து
விமர்சித்தார். யூதம் கற்பித்த
கீழ்மைகளுக்கு எதிர்நிலையில்
நின்று அவற்றுக்கு மேலானதைப்
போதித்தார். இதனால் இயேசுவின்
போதனைகள் தங்களது
செயல்பாடுகளுக்கும்
வாழ்க்கைமுறைக்கும் எதிரானதாக
இருப்பதை உணர்ந்து அவர் மீது
பரிசேயர், சதுசேயர் மற்றும் உயர்குடி
யூதர்கள் கடுஞ்சினம் கொண்டனர்.
“கண்ணுக்குக் கண் பல்லுக்குப் பல்”
என்பது யூத மதத்தின் கடுமையான
அணுகுமுறை. “எதிரிக்கும் அன்பு
செய் - ஒரு கன்னத்தில் அடித்தால் மறு
கன்னத்தைக் காட்டு”. இது இயேசுவின்
அன்புமுறை. “பாலியல் தொழில்
செய்யும் பெண்ணைக் கல்லால்
அடித்துக் கொல்ல வேண்டும்” என்றனர்
யூதர்கள்.
“உங்களில் பாவம் செய்யாதவன் அவள்
மீது முதல் கல்லை எறியட்டும்” என்று
கூறி மன்னிப்பை போதித்தார்
இயேசு. யூத இனம் தவிர மற்ற
இனங்களெல்லாம் கீழானவை என்று
தீண்டாமையை போதித்தது யூதம்.
ஆனால் சமாரியப் பெண்ணிடம் தண்ணீர்
வாங்கி அருந்தி அனைவரும் சமம்
என்றார் இயேசு.
மத குருக்கள் மன்னர்களுக்கு
சமமானவர்கள் - அனைவரையும் விட
உயர்ந்தவர்கள் என்றது யூத மதம். ஆனால்
தன் சீடர்களின் கால்களை கழுவி
முத்தமிட்டு “உங்களில் தலைமை தாங்க
விரும்பும் யாரும் முதலில்
எல்லோருக்கும் பணியாளாக இருந்து
தொண்டு செய்ய துணிவு இருக்க
வேண்டும்” என்றவர் இயேசு.
பெரு நோயாளிகளை ஊரைவிட்டு
ஒதுக்கி வைத்தது யூத மதம்.
இயேசுவோ அவர்களை குணமாக்கி
சமூக நீரோட்டத்தில் இணைத்தார்.
கஷ்டங்களுக்கும் நோய்களுக்கும்
பாவமே காரணம். அதை மன்னிக்கும்
உரிமை கடவுளுக்கு மட்டுமே உண்டு
என்றது யூத மதம். இயேசுவோ தானே
பாவங்களை மன்னித்து குணமளித்தது
யூதர்களைக் கொதித்தெழச் செய்தது.
தந்தையின் விருப்பம்
நாளை புனித வெள்ளி. இயேசு
நமக்காக கொடூரமான மரணத்தை
ஏற்றுக்கொண்ட தினம். சீர்திருத்த
ஞானத்தைப் போதித்து ஒரு
தலைசிறந்த குருவாக விளங்கி,
பாவங்களை மன்னித்து
நோய்களிலிருந்து மக்களை
விடுவித்து வாழ்வளித்தவர் இறைமகன்
இயேசு. அவர் யார் என்ற கேள்விக்கான
பதில் அவரது மரணத்தின் மூலமாகவே
முழுமையாக வெளிப்படுகிறது.
மனிதர்களால் புரிந்துகொள்ளப்படாத
நிலையில், தம் சீடராலும் கைவிடப்பட்ட
நிலையில், பலவித துன்பங்களுக்கு
ஆளாக்கப்பட்ட நிலையில் இயேசு
நிலைகுலையாமல், தாம் ஆற்ற வந்த
பணியை நிறைவேற்றுவதிலேயே
முனைப்புடன் இறுதிவரை நின்றார்.
தாம் மனிதனாகப் பிறந்து வந்ததன்
நோக்கம் என்னவென்பதை அவரே
அறிவித்திருந்தார்: “மானிடமகன்
தொண்டு ஏற்பதற்கு அல்ல, மாறாகத்
தொண்டு செய்வதற்கும் பலருடைய
மீட்புக்காகத் தம் உயிரைக்
கொடுப்பதற்காகவுமே வந்தார்.
(மாற்கு 10:45). இவ்விதம் அவர்
தந்தையின் விருப்பத்தை
நிறைவேற்றினார்”(மாற்கு 14:36).

Thanks...
http://m.tamil.thehindu.com/society/spirituality/புனித-வெள்ளி-மரணம்-என்பது-முடிவல்ல/article7061195.ece