எதிர்காலத்தில் எலிகள்தான் உணவா?

சைவ உணவைத் தாண்டி அசைவம்
சாப்பிடுபவர்களுக்கு உள்ள எதிர்காலச் சாத்தியங்கள்
பல ஆண்டுகளுக்கு முன் இந்தியாவில் கடும்
உணவு தானியப் பற்றாக்குறை ஏற்பட்டது.
"எல்லோரும்
ஒருவேளை சாப்பிடுவதை நிறுத்தினால்
பற்றாக்குறையைத் தவிர்க்கலாம்"
என்று அப்போதிருந்த மத்திய உணவுத்
துறை அமைச்சர் கூறினார். "மக்களைப்
பட்டினி கிடக்கச் சொல்வதா?" என்று எதிர்க்
கட்சித் தலைவர்களும்
பத்திரிகைகளும் மத்திய
அமைச்சரைக் கண்டித்தார்கள்.
அதே பிரச்சினை மேலும்
தொடர்ந்தது. "எலிகளின் இறைச்சியில்
புரதச் சத்து அதிகம். எலிகூட நல்ல
உணவுதான்" என்று சில ஆண்டுகளுக்குப்
பிறகு இன்னொரு அமைச்சர் பேசினார். "20
ஆண்டுகள் ஆண்டு விட்டு எலியைத்
தின்னச் சொல்வதா?" என்று தமிழகத்தில்
அப்போதைய எதிர்க் கட்சித்
தலைவர்கள்
எதுகை மோனையோடு அன்றைய
காங்கிரஸ்
ஆட்சியாளர்களை வறுத்தெடுத்தார்கள்
விவசாயத்துக்குத் தண்ணீரில்லை
எதிர்காலத்தில் வேளாண் விளைச்சல்
நிலைக்குமா என்று தெரியவில்லை.
விவசாயத்துக்குப் போதுமான தண்ணீர்
கிடைப்பது கடினமாக இருக்கிறது. விவசாய
நிலங்கள் வீட்டுமனைகளாக மாற்றப்பட்டுவருகின்றன. பருவ மாற்றங்கள்
காரணமாக, மழை பெய்யும் பாங்குகள் ஏறுமாறாகிவிட்டன.
ஊர்களுக்கு வெளியில் கால்நடைகள் மேய்வதற்காக
ஒதுக்கப்பட்டிருந்த மந்தை வெளிகள்
மறைந்துவிட்டன. ஆடு, மாடுகளின் விலையும்,
புரதச் சத்துகளை வழங்கவல்ல
பருப்பு வகைகள், முட்டை ஆகியவற்றின் விலையும்
நாளுக்கு நாள் அதிகரித்துக்
கொண்டே வருகின்றன. விவசாயமும் லாபகரமாக இல்லை.
ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளில் தானிய உணவுகள்
மக்களுக்குத் தேவையான புரதச்
சத்தை அளிப்பதில்லை.
அது இறைச்சியில் மட்டுமே போதுமான
அளவு கிடைக்கும். அரேபிய நாடுகளில் ஒட்டகம்,
குதிரைகளைச் சாப்பிடுகிறார்கள். உணவுப்
பற்றாக்குறைக் காலங்களில் ஆப்பிரிக்க நாடுகளில் நெருப்புக்
கோழி, வரிக்குதிரை, யானைகளைக்கூட
வேட்டையாடி உண்கிறார்கள்.
சீனர்களும் ஜப்பானியர்களும் கொரியர்களும் வியட்நாமியர்களும் நீர், நிலம், வானம் என்று எல்லா வற்றிலும் வாழ்கிற
எல்லா வகையான ஜீவராசிகளையும் தின்கிறார்கள். நம் நாட்டிலும்
குறவர்கள் பூனை, அணில், காடை,
கவுதாரி போன்றவற்றை உண்கிறார்கள். ஓணான், உடும்பு,
பாம்பு, ஈசல் ஆகியவையும்
உண்ணப்படுவது உண்டு.
வருமானம் இல்லாததால், இன்றைக்கும் பல
நூறு கோடி மக்கள்,
இறைச்சி உணவை வாங்க முடியாமல் அரை வயிறும்
கால் வயிறுமாகச் சாப்பிடுகிறார்கள். நோயல் வியட்மேயர் என்கிற நிபுணர்,
எதிர்கால உணவுத்
தேவைகளைப் பற்றி ஆய்வு செய்துள்ளார். சிறிய
உடலமைப்புள்ள குள்ளப் பன்றிகள், எலிமான்கள்,
மூஞ்சுறு வகைகள், பெருச்சாளிகள்,
அசை போடும் இதர பிராணிகள்
ஆகியவற்றை மக்கள் உணவாகப் பழக்க வேண்டும் என்கிறார்.
ஐக்கிய நாடுகள் சபையின் வேளாண்
உணவு ஸ்தாபனத்தின் பத்திரிகையில்
இது தொடர்பாகக்
கட்டுரை எழுதியிருக்கிறார்.
இந்தியாவின் வடக்குப் பகுதிகளில் காணப்படும் குள்ளப் பன்றிகள்,
ஆப்பிரிக்காவில் வசிக்கும் டுய்க்கர் ஆன்டிலோப் போன்றவை மலிவான
புரத உணவுகளாகும்
வாய்ப்புகுறித்து இதுவரை ஆய்வு செய்யப்ப
சுட்டிக்காட்டுகிறார். சைவ உணவைத்
தாண்டி அசைவம் சாப்பிடுபவர்களுக்கு உள்ள
எதிர்காலச் சாத்தியங்களுள் இவையும்
அடங்கும். \
உணவுக்குப் பிராணிகள்
மக்கள்தொகைப் பெருக்கத்தாலும் பாகப்
பிரிவினை களாலும் நகர்மயமாக்கலாலும் விவசாய நிலங்கள் தபால்
தலைகளைப் போலச்
சிறுத்துக்கொண்டே வருகின்றன.
கால்நடைகளை வளர்க்க இட வசதியும் பண
வசதியும் இல்லை. எனவே, சிறிய
பிராணிகளிடமிருந்து புரதச் சத்துமிக்க புலால்
உணவைப் பெற
வாய்ப்புகளை ஆராய்வது அவசியமாகிவிட்டது. நிலமற்ற
ஏழைகள்கூடத் தாங்கள் வசிக்கும்
குடிசைக்குள்ளேயே சிறிய
பிராணி களை வளர்த்து உணவாக்கிக்கொள்ள முடியும்
என்கிறார்கள்.
வளர்ந்துவிட்ட நாடுகளில் உள்ள உயிரினப்
பாதுகாப்புவாதிகளுக்கும் பிராணி நேயர்களுக்கும்
இந்தக் கருத்துகள்
அதிர்ச்சியையும் அருவருப்பையும்
ஏற்படுத்தக்கூடும். ஏழை நாடுகளில் நிலவும்
இட வசதி, உணவுப் பற்றாக்குறை,
பிராணிகளை வளர்க்க இயலாத
நிலைகுறித்து அவர்களுக்கு நேரடியாக
எதுவும் தெரியாது.
பொலிவியா, பெரு, ஈக்வடார் ஆகிய தென்னமெரிக்க
நாடுகளின் மலைப் பகுதிகளில் வாழும் பழங்குடிகள் கினிப் பன்றிகள்,
சீமைப் பெருச்சாளிகள் போன்றவற்றைத்
தமது குடிசையிலேயே வளர்த்து
பெருக்கி உணவாகக் கொள்கிறார்கள். வாயில்புறத்தில்
ஒரு கற்பலகையைக் குறுக்காக
வைத்துவிட்டால், இந்தப் பிராணிகள்
வீட்டைவிட்டு வெளியே போகாது. அவற்றின்
இறைச்சியை ரொட்டியுடன்
சேர்த்து வறுத்து உண்கிறார்கள்.
7 கோடி கினிப் பன்றிகள்
பெரு நாட்டில் ஓராண்டில் ஏறத்தாழ 7 கோடி கினிப்
பன்றிகள் உண்ணப்படுகின்றன. அந்த நாட்டின் நகரங்களில்
அடுக்குமாடிக் கட்டிடங்களில் வசிப்பவர் கள்கூட,
அட்டைப் பெட்டிகளில்
வைத்து கினிப் பன்றி களை உணவுக்காக
வளர்க்கிறார்கள். சிறுவர்களும் பெண்களும்கூடச் சுமார் 3,000
கினிப் பன்றிகள் வரை பராமரிக்க முடியும் என்று வியட்மேயர் கூறுகிறார்.
கினிப் பன்றி விரைவாக இனப்பெருக்கம் செய்யும். ஓர் ஆணும்
10 பெண் பன்றிகளும் சேர்ந்து ஓராண்டில் 3,000
பன்றிகளை இனப்பெருக்கம் செய்யும். 3 பேர் உள்ள
குடும்பத்துக்கு ஆண்டு முழுவதும்
புரதச் சத்துமிக்க புலால்
உணவு போதுமான அளவில் அவற்றிலிருந்து கிட்டும்.
கினிப் பன்றியினத்தைச் சேர்ந்த
கேபிபாரா நாலடி நீளமுள்ள, வாலில்லா பிராணி. அது தென்னமெரிக் காவின்
ஆறுகளிலும் ஏரிகளிலும் வசிக்கிறது. அவற்றைப்
பண்ணை முறையில் வளர்த்து உணவாகக்
கொள்கிறார்கள். அமெரிக்காவில் உள்ள
ஃப்ளோரிடா பல்கலைக்கழகத்தில்,
அப்பண்ணைகளின் உற்பத்தித்
திறனை அதிகரிப்பதற்கான ஆய்வுகள்
மேற்கொள்ளப்படுகின்றன.
எலி, வௌவால், நத்தை
மேற்கு ஆப்பிரிக்கப் பழங்குடியினர்
வெகு காலமாகவே எலிகளையும் வௌவால்களையும்
நத்தை களையும் பிடித்துச்
சமைத்துச் சாப்பிடுகிறார்கள்.
தென்னமெரிக்காவில் இகுவானா என்ற ராட்சத ஓணானின்
இறைச்சி சுவையானது என்பதால்,
அந்த இனமே முற்றாக அழிந்துபோகிற
அளவுக்கு அதை வேட்டையாடித்
தின்றுவருகிறார்கள். குராக்காவோ என்ற இடத்தில் உள்ள
கரிபியன் கடல்வாழ் உயிரின ஆய்வு நிலையத்தில்
இகுவானாக்களைப் பண்ணை முறையில்
வளர்த்துப் பெருக்கிவருகிறார்கள்.
மேற்கு ஆப்பிரிக்காவில், புல்வெட்டி என்ற வகை எலிகளின்
இறைச்சி மேல்தட்டு மக்களின்
தேர்வுக்குரிய ஆடம்பர
உணவாகவே மதிக்கப்படுகிறது. அவற்றின்
இறைச்சி ஆழ்ந்த சிவப்பு நிறத்துடன், முயல்
இறைச்சிக்கு ஒப்பான சுவையுடன்
இருப்பதாக வியட்மோர் சொல்கிறார். அவற்றையும்
பண்ணை முறையில் வளர்க்கிறார்கள். அவற்றின் முடி உட்பட
உடலின் எல்லா பகுதிகளையும் சாப்பிடுகிறார்கள்.
சிறு பிராணிகள் வளர்ப்பு
சிறு பிராணிகளை வீட்டிலேயே வளர்ப்பது சுலபம்.
ஆப்பிரிக்காவில் 80 வகையான டுய்க்கர் ஆன்டி லோப்புகள் உள்ளன.
காட்டில் இருக்கும் வரை கூச்சமும் அச்ச
உணர்வும் கொண்ட இரவாடிகளாக (நாக்டர்னல்)
இருந்தாலும், வீட்டில் வைத்து வளர்த்தால்
இயல்பாகப் பழகும். அவற்றைக்
கையிலெடுத்துக் கொஞ்சவும்
விளையாடவும் முடியும். அவற்றின் பாலைக்கூட உண்ணலாம்.
ஓரடி உயரமும் சுமார் 4 கிலோ எடையும் உள்ள
ஒரு டுய்க்கர், ஒரு சராசரிக் குடும்பத்தின்
ஒருவேளைச் சாப்பாட்டுக்குப்
போதுமானது. வட இந்தியாவில் காணப்படும் குள்ளப் பன்றிகள்
10 அங்குல உயரமே உள்ளன. வீடுகளில் மிஞ்சும்
உணவுகளை ஊட்டியே அவற்றை வளர்க்கலாம்.
இதுபோன்ற சிறிய பாலூட்டிகளை வளர்க்க அதிகம்
செலவாகாது. ஒரு முழுப்
பிராணியை ஒரே வேளையில் சாப்பிட்டுவிட
முடிவதால் உணவும் மீந்துபோகாது.
குளிர்பதனச் சாதனம் வைத்துக்கொள்ளும்
அளவுக்கு வசதியில்லாதவர்களுக்கு இது அனு
சிறிய பிராணிகள், பெரிய கால்நடைகளைப் போலன்றி வெப்பமும்
வறட்சியும் உள்ள மேய்ச்சல் நிலங்களில்
கிடைப்பதைக்கூடத் தின்று வாழும்.
புல், வைக்கோல், தானியங்களை ஊட்டி ஆடு,
மாடுகளை வளர்க்க வசதியில்லாத பரம
ஏழைகளுக்குக் களைகள், இலை,
தழை, மீந்துபோகும்
உணவு ஆகியவற்றை ஊட்டி,
வீட்டுக்குள்ளேயே அட்டைப் பெட்டிகளில்
வைத்து வளர்க்கக்கூடிய குட்டைப்
பிராணிகள்தான், நலமாக வாழப் போதுமான புரத
உணவை அளி்க்க முடியும் என்கிறார் வியட்மேயர்.
தொடர்ந்து நீராதாரங்கள்
குறைந்துவருகின்றன; விவசாயமும்
பொய்த்துவருகிறது; மக்கள்தொகைப்
பெருக்கத்துக்கேற்ப
உணவுத்தட்டுப்பாடும்
அதிகரித்து வருகிறது. இந்தச்
சூழலில் மேற்கண்ட சாத்தியங்களை நாம்
அவ்வளவு எளிதாகப் புறக்கணித்துவிட
முடியாது.
- கே.என். ராமசந்திரன், பேராசிரியர் (ஓய்வு).

நன்றி...
http://m.tamil.thehindu.com/opinion/columns/எதிர்காலத்தில்-எலிகள்தான்-உணவா/article6724769.ece

No comments: