கோபம்தான் பல்வேறு நோய்களுக்கும்மூலகாரணம்...

கோபம்தான் பல்வேறு நோய்களுக்கும்
மூலகாரணம்.
இதை புரிந்து கொள்ளாமல்
தூக்கத்தை தொலைத்துவிட்டு பரிதவிக்க
வேண்டியிருக்கிறது. இது மேலும் உடல்
நலனை பாதிக்கிறது.
எப்படி விடுபடுவது?
* முதலில் வாழ்க்கையின் நோக்கத்தைப்
புரிந்து கொள்ளுங்கள்.
வாழ்க்கை வாழ்வதற்கே;
கவலைப்படுவதற்கு இல்லை என்று நினையுங்கள்.
பிரச்னைகள் இல்லாத வாழ்க்கை இல்லை.

* எல்லோரிடமும் அன்பாகப் பழகுங்கள். விட்டுக்
கொடுத்து அனுசரித்துச்
செல்லுங்கள். ஒருபோதும் பிறரைக்
குறை சொல்லாதீர்கள். முடிந்தால்
பிறருக்கு உதவி செய்யுங்கள்.
* உலகத்தைத் திருத்தப்போகும் தலைவனாக
ஒருபோதும் நினைத்துக் கொள்ளாதீர்கள்.
பிறருக்கு வலியச்
சென்று ஆலோசனை கூறுகிறேன்
என்று வாங்கிக் கட்டிக்
கொள்ளாதீர்கள். கேட்டால் மட்டும்
சொல்லுங்கள். அதுவும்
இது என்னுடைய
கருத்து உங்களுக்கு உதவுமானால்
ஏற்றுக்கொள்ளுங்கள்
என்று பேசுங்கள்.
* எதிர்மறையான எண்ணங்களை தவிர்த்து,
நல்லதையே நினைக்க வேண்டும்.
* கஷ்டம் , நஷ்டம், இன்பம், துன்பம்
ஆகியவை வாழ்வின் அங்கம்.
இது சுழற்சி வட்டம் போல மாறி,
மாறி வந்துகொண்டுதான்
இருக்கும். குழந்தையைப் போல மனம் இருந்தால்
உங்களுக்கு துன்பம் இல்லை.
* உங்கள் வழி நேர்மையாக இருந்தால் அந்த
வழியிலேயே தொடர்ந்து
செல்லுங்கள். உங்கள்
முடிவே உங்களுக்கு நன்மை பயக்கும்.
* மாதுளை, சாத்துக்குடி, ஆரஞ்சு ஜூஸ், இளநீர்
குடிப்பது கோபத்தை குறைக்க உதவும்.
* தினமும்
குறைந்தது பத்து நிமிடங்களாவது தியானத்தில்
அமருங்கள். குறிப்பிட்ட நேரத்தில், குறிப்பிட்ட
இடத்தில் தியானம் செய்ய
பழகும்போது மனம் எளிதில் வசப்படும்.
* எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பேன்.
அமைதியாக இருப்பேன்
என்பது போன்று எண்ணத்
தொடங்குங்கள். இவை ஆழ்மனதில்
பதியப் பதிய டென்ஷனும், பரபரப்பும்
குறைந்து நிம்மதி அடைவீர்கள்.
* இனிய இசை கேட்டல்; நம்பிக்கை தரும்
நூல்களை வாசித்தல்; சிறிது நேரம்
இயற்கையை ரசித்தல்; நண்பர்களுடன்
உரையாடுதல்; குடும்பத்தாருடன் மனம்விட்டுப்
பேசுதல்; குழந்தைகளோடு குழந்தைகளாக
விளையாடுதல் போன்றவை கோபத்தை குறைக்க உதவும்.


No comments: