உடல் ஆரோக்கியத்துக்கு தேவையான வைட்டமின்கள், தாதுப்பொருட்கள் அதிகமாக உள்ள புதினா கீரை!

புதினா கீரையில் உடல் ஆரோக்கியத்துக்கு தேவையான வைட்டமின்கள், தாதுப்பொருட்கள் அதிகமாக உள்ளன. புதினாக் கீரையை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால், ரத்தம் சுத்தமாகும். வாய் நாற்றம் அகலும். ஜீரண சக்தி அதிகரித்து, பசி தூண்டப்படும்.
மலச்சிக்கல் நீங்கும். பெண்களின் மாதவிலக்கு பிரச்னை தீரும். ஆண்மை குறைவை நீக்கவும் புதினா உதவுகிறது. ஊளைச்சதையை குறைக்க, புதினா சிறந்த மருந்தாக பயன்படுகிறது. வயிற்று புழுக்களை அழிக்கிறது. வாயுத் தொல்லையை போக்குகிறது.
தலைவலி தீர, புதினா இலையின் சாற்றை பூசலாம்.

புதினா வளர்ப்பது எப்படி?: புதினா கீரையை வீட்டுத் தோட்டத்திலும், தொட்டிகளிலும் எளிதாக வளர்க்கலாம். புதினா கீரை வாங்கும்போது, இலைகளை பயன்படுத்தி விட்டு, தூர எறியும் தண்டை மண்ணில் ஊன்றி வைத்தால், அவை தளிர்த்து புதிய இலைகளை கொடுக்கும்.
புதினா பல்பொடி: புதினா பல்பொடி பல் வியாதிகளை, எளிதில் குணப்படுத்தும். புதினா பல்பொடி தயாரிப்பது எளிது. எவ்வளவு பற்பொடி தேவையோ, அந்த அளவுக்கு புதினா கீரையின் இலையை மட்டும் கிள்ளி எடுத்து, வெயிலில் நன்றாக காய வைக்க வேண்டும்.
சருகு போல் காய்ந்தபின், அந்த இலை இருக்கும் அளவில், எட்டில் ஒரு பங்கு உப்பை அதனுடன் சேர்த்து, உரலில் போட்டு நன்றாக இடிக்க வேண்டும். தூளான பின் அதை எடுத்து, மாவு சலிக்கும் சல்லடையில் சலித்து எடுத்து, வாய் அகன்ற பாட்டிலில் போட்டு வைத்துக் கொள்ள வேண்டும். இதை தினசரி உபயோகித்து வந்தால், பற்கள் முத்தைப்போல் பிரகாசிக்கும்.

No comments: