Pages

உயிர்காக்கும் தயிர் - உடற் சூட்டை தணிப்பதில் தயிர் மாபெரும் பங்கு வகிக்கிறது!

உயிர்காக்கும் தயிர் — உணவே மருந்து

உயிர்காக்கும் தயிரா? அது எப்படி? என்று அறிய ஆவலாக வந்துள்ள அன்பு நண்பர்களுக்கு வணக்கம். 

சிறுவயது முதல் பெரியவர்கள் வரை அனைவரும் உணவில் சேர்த்துக்கொள்ளும் ஒரு சிறந்த உணவுப்பொருள் தயிர் என்றால் அது
மிகையாகாது.

தயிரில் உடலுக்கு வேண்டிய சத்துக்கள் கொடுக்கக்கூடிய மருந்துப்பொருட்கள் உள்ளது. வெறும் ருசிக்காகவே உண்பது இதுவல்ல. இதில் நிறைய மருத்துவ குணங்கள் உள்ளது. அது என்னென்ன? வாங்க பார்த்துடலாம்.

உயிர்காக்கும் தயிர் என்று குறிப்பிட்டிருக்கிறேனே அது எப்படி என்கிறீர்களா?

நோயில்லா உடலே அதிக வாழ்நாளைக் கொடுக்கும். உடலில் நோய்கள் பல வரக்காரணமே உடற்சூடுதான். அதனால் உடலில் பல்வேறு இராசயன மாற்றங்கள் ஏற்பட்டு, வெப்பத்தால் ஒவ்வொரு உடல் உறுப்பும் தனது பணியை சரிவர செய்யாமல், இயங்காமல் இருந்துவிடும். இதனால் விளைவது நோய்கள். 

உடற் சூட்டை தணிப்பதில் தயிர் மாபெரும் பங்கு வகிக்கிறது. தலையில் தயிரைத் தேய்துக்கொள்வதன் மூலம் நிம்மதியான தூக்கத்தைப் பெறுவதோடு, நல்ல ஆரோக்கியமான, பளபளக்கும் தலைமுடியைப் பெறலாம். உடற் சூடும் தணியும். 

உடல் சூடு தனிவதால் , உடலில் உள்ள உள்ளுறுப்புகள் சரிவர வேலை செய்யத்துவங்கும். உடலும் சீரான நிலைக்கு வந்துவிடும். இப்போது சொல்லுங்கள் தயிர் ஒரு உயிர்காக்கும் உணவுப்பொருள்தானே..

மேலும் தயிரில் என்னென்ன நன்மைகள் கிடைக்கின்றன?
1. பால் உடலுக்கு நல்லதுதான். ஆனால் பாலைவிட தயிரே சிறந்த உணவுப்பொருள். இது பாலைவிட அதிவிரைவாக ஜீரணமாகிவிடுகிறது. தயிரில் உள்ள பாக்டீரியாக்கள் குடலில் உள்ள தீமை தரும் பாக்டீரியாவை அழிக்கிறது. 
2.உடலில் விரைவாக ஜீரணசக்தியை தூண்டும் பாக்டீரியாக்களை உருவாக்குகிறது. இதனால் உணவு எளிதில் ஜிரணமாகிவிடும். மருத்துவர்கள் கூட தயிரை சிபாரிசு செய்வார்கள். நோய்வாய்ப்பட்டவர்கள் முதலில் ஆகாரமாக தயிர் சாதத்தை எடுத்துக்கொள்வார்கள். தயிரிலுள்ள Lactobasil ஜீரண சக்தியைத் தூண்டுகிறது. 
3. வயிற்றுப்போக்கு, வயிற்றுப்பொருமல் போன்ற உபாதைகளை சரி செய்வதில் தயிரின் பங்கு அதிகம். இதுபோன்ற சூழ்நிலைகளில் தயிரை அப்படியே சாப்பிடலாம். இதன் சிறிது வெந்தயத்தையும் கலந்து சாப்பிட வயிற்றுப்பொருமல், வயிறு உப்புசம் நீங்கும். 
4. தயிரைக் கடைந்து மோராக்கி அதனுடன் சிறிது உப்பு, கொத்தமல்லி, பெருங்காயம், கருவேப்பிலை கலந்து நீர்மோராக பருகலாம். இதனால் உடல் சூடு தனிந்து உடலுக்கு நல்ல புத்துணர்ச்சிக் கிடைக்கும். 
5. சர்க்கரை, இரத்த அழுத்தம் உள்ளவர்கள் அதிக கொழுப்புள்ள பாலில் உருவாக்கிய தயிரை சாப்பிட்டு வர நோய் குணமாகும். 
6. தயிரைக் கொண்டு தோலில் மசாஜ் செய்துவர தோலிலுள்ள நுண்துளைகளில் அழுக்குகள் நீங்கும். தோலுக்கு புத்துணர்ச்சி ஏற்படும். 
7. தயிரிலுள்ள பாக்டீரியாக்கள் விட்டமின் B கிரகிப்பதற்கு உதவுகின்றன. 
8. தயிரில் அதிகளவு கால்சியம், புரதம் போன்ற ஊட்டத்துச்சத்துகள் உள்ளது.
9. தேன்,பப்பாளியுடன் தயிரைச் சேர்த்து முகத்தில் தேய்து வர முகம் பொலிவு பெறும். 
10. மஞ்சள் காமாலை நோய்க்கு மருந்தாக தயிர் அல்லது மோருடன் தேன்கலந்து கொடுப்பார்கள்.
11. மலச்சிக்கல் ஏற்படாமல் இருக்க தயிர் பயன்படுகிறது. வயிற்றுப்போக்கின் போது தயிர் கொடுத்தால் வயிற்றுப்போக்கு கட்டுப்படும். 
12. வெயிலின் தாக்கத்தினால் தோல்களில் ஏற்படும் பாதிப்புகளை தயிர் சரி செய்கிறது. தோல் தடிப்பு வியாதிகளுக்கு தயிர் அல்லது மோர்க்கட்டு சிறந்ததொரு மருந்தாகும்.
 
தயிரின் முக்கியப் பயன்: 
ஒரு மனிதன் நன்றாக தூங்கி எழுந்தாலே போதும். அவனுடைய உடல் ஆரோக்கியமாக இருக்கும் என்று மருத்துவர்கள் உட்பட பலரும் சொல்லும் கருத்து இது. இத்தகைய நிம்மதியான தூக்கத்தைப் பெற தயிரை உணவுடன் சேர்த்துக்கொள்ளுங்கள்.. நிம்மதியான தூக்கத்தைப் பெறுங்கள்.! நன்றி நண்பர்களே..!
தாகம் தணிக்கும் தயிர்
“ பசுவின் பாலிலிருந்து தயாரிக்கப்படும் தயிர்தான் மிகவும் சிறந்தது” நம் குடலுக்குத் தேவையான எண்ணெய் பசையைத் தந்து வயிற்றிலுள்ள வாயுவைக் கட்டுப்படுத்துகிறது. வயிற்றில் புளிப்பை ஏற்படுத்தாது.

மற்ற மிருகங்களின் பாலிலிருந்து உண்டாகும் தயிர் பொதுவாக ஆரோக்கியத்து நல்லதல்ல எருமையின் தயிர் சாப்பிட்டால் நல்ல தூக்கம் வரும். எளிதில் செரிக்காது. அதிகம் சாப்பிட சளித்தொல்லை ஏற்படுத்தும். வயிற்றில் செரிக்காமல் கிடந்தால் புளித்துப் போய் ரத்தத்தை கெடுத்துவிடும்.

புளிப்பு தலை காட்டத் தொடங்கிய நிலையில்தயிரைச் சாப்பிட்டால் பசியைத் தூண்டும். பசி மிகவும் குறைவாக உள்ளவர்களுக்கும் இது நல்லது. ஆனால் தயிர் மிக அதிகமாகப் புளித்துவிட்டால் ரத்தக்கொதிப்பு பித்தவாயு வயிற்றுக்கோளாறுகள் உள்ளவர்கல் சாப்பிட ஏற்றதல்ல. மேலும் நன்றாகப் புளித்த தயிர் பற்களில் கூச்சம் குரல் கம்முதல் உடல் எரிச்சல் போன்றவைகளையும் ஏற்படுத்தும்

தயிரை மெல்லிய துணியில் கட்டித் தொங்கவிட்டு அதிலுள்ள நீர் முழுவதும் வடிந்த பிறகு துணியிலுள்ள கெட்டியான பகுதியுடன் சர்க்கரை ஏலக்காய் கிராம்பு குங்குமப்பூ பச்சைக்கற்பூரம் சேர்த்து குளிர வைத்துத் தயாரிப்பதற்கு ஸ்ரீகண்ட் என்று பெயர். ருசியான சத்துள்ள உணவு இது. உடல் புஷ்டி பருமன் தரக்கூடியது. உடலில் உஷ்ண வறட்சியைக் குறைக்கும். அதிகம் சாப்பிட்டால் சளித்தொல்லை ஏற்படலாம். பசும் பாலிலிருந்து கிடைக்கும் தயிரைவிட எருமை தயிரே இதற்கு ஏற்றது.

தயிரைச் சுட வைத்து சூடாகச் சாப்பிடக்கூடாது. இரவில் தொடர்ந்து அதிக அளவில் சாப்பிடக்கூடாது. சிலர் சூடான சாதத்தில் தயிர் கலந்து கடுகு தாளித்து உப்பு சேர்த்து சாப்பிடுகின்றனர். இது உடலுக்கு நல்லதல்ல. மண் சட்டியிலிட்டு தோய்த்து தயாரிக்கப்படும் தயிர் மிகவும் சிறந்தது. பாலைக் கடைந்து வெண்ணெய் நீக்கிய பிறகு பாலைக் காய்ச்சி தயிர் தயாரித்து சாப்பிடுவது பசியின்மையும் வயிற்றுப்போக்கும் உள்ளவர்களுக்கு நல்லது.

தோய்ந்து  நிற்கும் தயிரின் அடிப்பகுதியில் தெளிவான தண்ணீர் உள்ளதைப் பார்த்திருக்கலாம். அந்த தண்ணீர் புளிப்பும் இனிப்பும் துவர்ப்பும் கலந்த ஒரு மிகச் சிறந்த பானம். அந்தத் தண்ணீரை மட்டும் சுமார் கால் கப் முதல் அரை கப் வரை காலை மாலை வெறும் வயிற்றில் சாப்பிடுவது தொண்டை எரிச்சல் குமட்டல் உடற்சூடு களைப்பு இவற்றுக்கு ஏற்றது.

பாலில் புரை குத்திய பின் நன்கு உறையாமல் பால் நிலைக்கும் தயிர் நிலைக்கும்  இடையே இருக்கும் தயிரை சாப்பிடக்கூடாது. அது வயிற்றில் வேகமாக புளிக்கத் தொடங்கி பசியைக் குறைத்து நெஞ்செரிச்சல் புளித்த ஏப்பம் வாய்ப்புண் முதலியவற்றை உண்டாக்கும்.

தயிரின் மேல் நிற்கும் ஆடையை மட்டும் எடுத்து சிறிது தேன் வெல்லம் சேர்த்து சாப்பிட நல்ல உடல் புஷ்டியைத் தரும். ஆண்களுக்கு விந்துவை அதிகப்படுத்தி போக சக்தியை உண்டாக்கும். அதிக அளவு சாப்பிட்டால் பசி மந்தமாகிவிடும்.

பகலில் ஓடி ஆடி வேலை செய்வதால் உடலிலுள்ள இறுக்கமான கபம் தளர்ந்து விடும். இரவில் குளிர்ச்சியான தன்மையில் தயிரைச் சாப்பிட்டால் அதன் பிசுபிசுப்புத் தன்மையால் தளர்ந்த கபத்துடன் சேர்ந்து  நுரையீரலில் இருகி ஜீரணக்குறைவு தோன்றக்கூடும். அதனால் தான் தயிரை இரவில் தவிர்க்க வேண்டும். இரவில் தொடர்ந்து தயிர் சாப்பிடும் போது சோகை காமாலை சரும  நோய் ரத்தக்கொதிப்பு போன்றவை உண்டாகக் கூடும். இரவு  தயிர் மட்டும் சாப்பிடவேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டால் சிறிது தேன் கலந்து சாப்பிடலாம்.
 
தயிர் பற்றி தெரிந்து கொள்வோமா?
என் பையனுக்குத் தயிர் வாடையே பிடிக்காது   தயிர் சாப்பிட்டால் சளி பிடிக்கும்” பல தாய்மார்களின் நம்பிக்கை இதுதான், தயிர் ஒரு சரிவிகித உணவு  பற்பல தவறான கருத்துக்களால் நமது இளைய தலைமுறையினர் தயிறைத் தவிக்கின்றனர்.  பால் நொதித்து தயிராகிறது. நொதித்தல் என்பது பலவகை பாக்டீரியாக்கள்  ஈஸ்ட் வகைகள் பல்கிப் பெருகுவதுதான். பாக்டீரியா என்றதும் பயந்து விட வேண்டாம். இவை நன்மை செய்யும் பாக்டீரியாக்கள். ஆச்சர்யமாக இருக்கிறதல்லவா

> நமது உணவுப் பாதையில் அதாவது வாயில் தொடங்கி பெருங்குடல் வரை கோடிக்கணக்கான நுண் பாக்டீரியாக்கள் படுக்கை விரிப்பு போல் படிந்திருக்கின்றன. உணவுப் பொருட்களைச் செரிக்க வைக்கும் என்ஸைம்களை இவை உற்பத்தி செய்வதுடன் குடலைத் தாக்கும் பலவிதமான நோய்க் கிருமிகளை எதிர்த்துப் போராடுகின்றன. இவற்றில் ‘ லேக்டோ பாசில்லஸ் ‘ என்பது பாலில் இருக்கும் ஒருவகை பாக்டீரியா  இவை பல்கிப் பெருகுவதற்கு 6–10 மணி நேரம் பிடிக்கும். அப்போது தான் பால் தயிராக மாறும். நாம் தயிர் சாப்பிடும்போது இவை நமது உணவுப் பாதையில் சேருகின்றன. அதோடு உணவைச் செரிப்பதர்ற்கு இவை பெரிதும் உதவுகின்றன.

பால் தயிராகும்போது  பாலில் இருக்கும் கார்போஹைட்டேட் புரதம் கொழுப்பு போன்றவை சிறு சிறு பிரிவுகளாக உடைக்கப்படுகிறது. இதனால் நம் உணவுப்பாதை மிக விரைவாகவும் எளிதாகவும் செறிக்கிறது  எனவேதான் நம் முன்னோர்கள் நமது உணவில் தயர் சாதம் சேர்த்தார்கள். தயிரை  8-10 மணி நேரம் மட்டுமே புலிக்க வைக்க வேண்டும். ஆனால் பிரிட்ஜில் ஒருநாள் மட்டும் வைத்துப் பயன்படுத்தலாம்.  பிறந்து ஆறு மாதங்கள் ஆனா குழந்தைகளுக்கு  இட்லி இடியாப்பம் சாதத்துடன் தயிரும் கலந்து கொடுப்பதால் எளிதில் ஜீரணம் ஆகும். செரிமானம் குடல் சம்பந்தமான பிரச்னை உள்ளவர்களுக்குத் தயிர் மிகவும் அவசியம்.  சிலர் தயிரை சூடாக்கி பயன்படுத்துவர். தயிரைக் காய்ச்சுவதால் நன்மை செய்யும் நுண்ணுயிர்கள் அழிந்துவிடும். எனவே தயிரை தாளித்துப் பயன்படுத்தலாம்.

வயிற்றுப்போக்கு உள்ளவர்களுக்கு எந்த வயதினராயினும் தயிர் சாதம் சிறந்தது. தயிரின் மகத்துவத்தை மிகச் சிறந்த மருத்துவ குணத்தை உணர்ந்த வெளிநாட்டவர் நன்கு காய்ச்சிய பாலில் செயற்கை முறையில் வளர்க்கப்பட்ட பாக்டீரியாக்களைச் சேர்த்து ‘ யோகர்ட்’ தயாரிக்கின்றனர். தயிரில் இஞ்சி  பெருங்காயத்தூள்  சீரகத்தூள்  பச்சை மிளகாய்  உப்பு  சர்க்கரை கறிவேப்பிலை கொத்தமல்லி வெங்காயம்  மாங்காய் திராட்சை மாதுளை முத்துக்கள் என நம் விருப்பப்படி சேர்த்து சாப்பிடலாம்.  தினமும் உங்கள் சாப்பாட்டில் தயிர் இருக்கும்படியாகப் பார்த்துக்கொள்ளுங்கள். தயிர் நம் உடலை வளர்க்கிறது. நோய் எதிர்ப்புச் சக்தியைக் கொடுக்கிறது  ஆகவே தயிருக்கு ஒரு   ஓ ……. போடுங்க
No comments: