| 
தேவையான பொருட்கள்.. 
தனித்தனியாக உரித்து எடுக்கப்பட்ட பூண்டு விழுதுகள் 20. தூய்மையான தேன் ஓர் ஜாடி அளவு (பூண்டு நன்கு மூழ்கும் அளவிற்கு) 
செய்முறை 
பூண்டு விழுதுகளை அந்த ஜாடியில் போட்டு, அதன் மேல் பூண்டுகள் அனைத்தும் நன்கு மூழ்கும் அளவிற்கு தூய்மையான தேனை ஊற்றி ஊற வைக்கவும். ஒரு வாரக் காலம் இதை ஊற விடுங்கள். (ஃப்ரிட்ஜில் வைத்து பயன்படுத்தி வந்தால் ஒரு வருடம் வரை இது கெடாமல் இருக்கும் தன்மையுடையது) 
நன்மைகள் 
சளி, காய்ச்சல், இருமல், நோய் கிருமி தொற்று போன்றவை ஏற்படாமல் இருக்கவும், இவைக்கான சிறந்த மருந்தாகவும் இந்த தேனில் ஊறவைத்த பூண்டு பயனளிக்கிறது. 
உட்கொள்ளும் முறை 
தினமும் காலை வெறும் வயிற்றில் அரை டீஸ்பூன் அளவு உட்கொண்டால் போதுமானது. ஒரு நாளுக்கு ஐந்தில் இருந்து ஆறுமுறை இதை அரை டீஸ்பூன் அளவில் உட்கொள்ளலாம். 
உட்கொள்ளும் முறை 
உணவு உண்ட பிறகு இதை உட்கொள்வது, இதன் செயலாற்றலை குறைத்துவிடும். எனவே தான் காலையில் எழுந்ததும் உட்கொள்ள கூறப்படுகிறது. பிறகு நற்பகல், மாலை வேளையிலும் கூட இதை உட்கொள்ளலாம். 
பூண்டு 
பண்டைய காலம் முதலே பூண்டு வெறும் உணவாக இன்றி, மருத்துவ பொருளாக தான் பயன்படுத்தி வரப்படுகிறது. எகிப்தில் இருந்து நமது தமிழ் கலாச்சாரம் வரை பூண்டை ஓர் மருத்துவ பொருளாக தான் பயன்படுத்தியுள்ளனர். 
பண்டைய கிரேக்கம் 
பண்டைய கிரேக்கத்தில் விளையாட்டு மற்றும் போர் வீரர்களின் உடற்திறனை மேம்படுத்து பூண்டை பயன்படுத்தி வந்துள்ளனர். இந்தியா, ஜப்பான், சீனா போன்ற நாடுகளில் பூண்டு இதயம் மற்றும் இரத்த அழுத்தத்தை சீராக்கவும் பயன்படுத்தி வந்துள்ளனர். 
தேன் 
உடல் எடை அதிகரிக்க, குறைக்க என இரண்டிற்கும் பயன் தரும் தன்மை கொண்டுள்ளது தேன். உடல் எடை குறைக்க தண்ணீரிலும், உடல் எடை அதிகரிக்க பாலிலும் தேனை கலந்து பருகலாம். 
பூண்டு, தேன் 
நல்ல மருத்துவ குணம் வாய்ந்த இந்த இரண்டையும், சேர்த்து உட்கொள்வதால், உடலில் நோய் எதிர்ப்பு அதிகரித்து, அன்றாடம் தாக்கும் உடல்நலப் பாதிப்புகள் ஏற்படுவதை தடுக்க முடிகிறது. 
 
 | 
No comments:
Post a Comment