மூல நோய்க்கு கட்டாயம் சாப்பிடக்கூடாத 5 உணவுகள்..!

 1.பசையம் நிறைந்த உணவுகள்: பசையம் அதிகம் உள்ள உணவுகள் மலச்சிக்கல் மற்றும் பைல்ஸை ஏற்படுத்தும். ஏனென்றால், சில உணவுகளில் உள்ள பசையம் (புரதம்) குடல் சுவர்களில் ஒட்டிக்கொண்டு செரிமான செயல்முறையைத் தொந்தரவு செய்யும்.




கோதுமை, பார்லி போன்ற தானியங்களில் பசையம் எனப்படும் புரதம் காணப்படுகிறது. பசையம் சிலருக்கு ஆட்டோ இம்யூன் நோய்க்கு வழிவகுக்கும் மற்றும் செரிமானத்தை கடுமையாக சேதப்படுத்தும். இதனால் மலச்சிக்கல் பிரச்சனை ஏற்பட்டு, அது பின்நாளில் பைல்ஸ் நோயாக உருவெடுக்க வழிவகுக்கிறது.

2. பசும்பால் அல்லது பால் பொருட்கள்: சிலருக்கு, பசும்பால் அல்லது அதிலிருந்து தயாரிக்கப்படும் பால் பொருட்கள் மலச்சிக்கல் மற்றும் பைல்ஸ் நோயை உருவாக்கும். ஏனெனில் பசும்பாலில் உள்ள புரதமும் மலச்சிக்கலை ஏற்படுத்தக்கூடியது என பல ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது. பசும்பாலுக்கு பதிலாக சோயா பால் பயன்படுத்தலாம்.

3. சிவப்பு இறைச்சி: சிவப்பு இறைச்சியை உட்கொள்வது மலச்சிக்கலால் ஏற்படும் மூல நோய்க்கு காரணமாக இருக்கலாம். ஏனெனில் சிவப்பு இறைச்சியில் மிக குறைவான நார்ச்சத்துக்கள் உள்ளன மற்றும் கொழுப்பின் அளவும் அதிகமாக உள்ளது. இதன் காரணமாக அதனை உடலால் எளிதில் ஜீரணிக்க முடியாமல் போகிறது. இதனால் உருவாகும் கழிவையும் வெளியேற்றுவது மிகப்பெரிய சிக்கலாக உள்ளது. எனவே மூலநோயில் இருந்து தப்பிக்க சிவப்பு இறைச்சியை குறைவாக எடுத்துக்கொள்வது நல்லது.

4.பொரித்த மற்றும் ஃபாஸ்ட் புட் உணவுகள்: பொரித்த அல்லது ஃபாஸ்ட் புட் உணவுகளை அதிக அளவில் சாப்பிடுபவர்களுக்கு பைல்ஸ் பிரச்சனை வரலாம். ஏனெனில், சிவப்பு இறைச்சியைப் போலவே, இந்த உணவுகளிலும் நார்ச்சத்து குறைவாகவும், கொழுப்புகள் அதிகமாகவும் உள்ளது. அதற்கு பதிலாக, நீங்கள் பச்சை காய்கறிகள் மற்றும் பழங்களை எடுத்துக்கொள்வது சரிவிகித உணவுக்கான சரியான தேர்வாக அமையும்.

5. ஆல்கஹால்: மதுவில் உள்ள ஆல்கஹால் உடலில் நீரிழப்பை ஏற்படுகிறது, இதனால் ஏற்படும் வறட்சி, மலச்சிக்கல் பிரச்சனையை தீவிரமாக்குகிறது. இந்த மலச்சிக்கல் பிரச்சனையானது மலம் எளிதில் வெளியேறுவதை தடுப்பதோடு பைல்ஸ் நோயையும் உண்டாக்குகிறது.

No comments: