Showing posts with label உடல்நலம் மாரடைப்பு நெஞ்சுவலி இ.சி.ஜி இதயம். Show all posts
Showing posts with label உடல்நலம் மாரடைப்பு நெஞ்சுவலி இ.சி.ஜி இதயம். Show all posts

மாரடைப்பு மற்றும் சூடான குடிநீர்

நீங்கள் குளிர்ந்த தண்ணீர் குடிக்கும் பிரியரா?

அப்படியென்றால் இது உங்களுக்குத்தான்

உங்களுக்காக..
உங்களின் விலைமதிப்பற்ற
இரண்டு நிமிடங்களை செலவழித்து இதை கண்டிப்பாக
படிக்கவும்…

மாரடைப்பு மற்றும் சூடான குடிநீர்:

சீன மற்றும் ஜப்பான் மக்கள் தங்களின்
உணவிற்கு பிறகு குளிர்ந்த
தண்ணீரை விடுத்து சூடான தேநீர்
அருந்துவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
இப்பழக்கத்தை நாமும் பின்பற்ற வேண்டிய நேரம்
வந்துவிட்டது.
சாப்பிட்டவுடன் குளிர்ந்த நீர் குடிப்பதனால் , நம்
உணவில் உட்கொண்ட எண்ணெய் பொருட்கள்
திடப்பொருளாக
மாறி செரிமானத்தை மெதுவாக்கிவிடும்.
திடப்பொருளாக மாறிய கலவை நம் வயிற்றில்
இருக்கும் அமிலத்தோடு (Acid) வினைபுரியும்.
இது திட உணவை விட வேகமாக
உடைந்து குடலால் உறிஞ்சபடும்.
இது நம் குடலில்
அணிதிரண்டு அப்படியே நின்றுவிடும். மிக
விரைவில், இது கொழுப்புகளாக
மாறி புற்றுநோய்க்கு வழிவகுக்கும்.
ஆகவே உணவிற்கு பிறகு சூடான தண்ணீர்
அல்லது சூப் குடிப்பது நல்லது.
மாரடைப்பு பற்றி ஒரு குறிப்பு:
மாரடைப்பின் முதல் அறிகுறி இடது கையில்
ஏற்படும் கடுமையான வலி ஆகும். தாடையில்
தீவிர வலி ஏற்பட்டாலும் எச்சரிக்கையாக இருக்க
வேண்டும்.
மாரடைப்பு வரும்போது பொதுவாக
நெஞ்சு வலி ஏற்படாது. குமட்டல் மற்றும்
கடுமையான வியர்வையே மாரடைப்பு ஏற்பட
பொதுவான அறிகுறிகள் ஆகும். 60% சதவீத
மக்கள் தூக்கத்தில்
மாரடைப்பு ஏற்படும்போது அவர்களால்
எழுந்துகொள்ள முடியாது.
உறக்கத்திலேயே இறந்துவிடுவர்.
தாடை வலி ஏற்பட்டவர்கள் மட்டுமே அயர்ந்த
தூக்கத்திலிருந்து எழுந்து கொள்ள முடியும்.
ஆகவே எப்பொழுதும் கவனமாகவும்
எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும்.
படித்தவுடன் உங்களின்
நண்பர்களுக்கு கண்டிப்பாக பகிருங்கள்.
விழிப்புணர்வுடன் பகிர்ந்தால் குறைந்தபட்சம்
ஒரு உயிரையாவது காப்பாற்ற முடியும்.

Thanks...
Ntamil.com

குளிர் பிரதேசங்களில் மாரடைப்பு, திடீர் மரணம் ஏற்படுவது ஏன்?

குளிர் காலத்தில், மாரடைப்பு, பக்கவாதம், திடீர் மரணம் அதிகமாக ஏற்படுவதை, அரசு பொது மருத்துவமனை ஆவணங்கள் மூலம் அறியலாம். வட ஐரோப்பிய நாடுகளில், ஆண்டுக்கு ஆறு மாதங்கள், குளிர் வாட்டி எடுத்து விடும். நம் நாட்டில்,

மாரடைப்பை கண்டறிவது எப்படி?


நெஞ்சுவலியின் தன்மை பற்றி முழுமையாக கேட்டு, மாரடைப்பு வருவதற்கான காரணம் உள்ளதா என அறிந்து சில மருத்துவ பரிசோதனை செய்யப்படுகின்றன. அதன் மூலம் ஒருவருக்கு மாரடைப்பு வந்துள்ளதா என கண்டறியப்படுகிறது.
இ.சி.ஜி., (எலக்ட்ரோ கார்டியோ கிராம்):
* இதயம், மெல்லிய இழைகளாலான மின்சார வலையால் இயற்கையாகவே பின்னப்பட்டுள்ளது. இம்மின்சார இழைகளில் தானாக உருவாகும் மின் அலைகளால்தான் இதயம் சீராக இயங்குகிறது.
* ஒவ்வொரு இதய துடிப்பின்போதும், இத்தகைய மின்அலைகள் இதயத்தின் மேல்பாகத்தில் இருந்து அடிப்பாகம் வரை சீராக, முறையாக பரவுகிறது.
* இவ்வாறு இதயத்தில் பலபாகங்களில் ஒவ்வொரு இதய துடிப்பின்போதும், உருவாகும் மின்அலைகளை ஒரு இயந்திரத்தின் உதவியால் ஒரு தாளில் பதிவு செய்வதே இ.சி.ஜி., எனப்படுகிறது.
* மாரடைப்பு வருவோருக்கு இத்தகைய மின்அலைகளின் பதிவில் மாற்றங்கள் ஏற்படும்.
* அத்தகைய மாற்றங்களை வைத்து ஒருவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளதா, எப்போது ஏற்பட்டது, இதயத்தின் எந்தப் பகுதி பாதிக்கப்பட்டுள்ளது என்பதை அறியலாம்.
ரத்தப் பரிசோதனைகள்:
* மாரடைப்பு ஏற்படும்போது இருதய தசையின் எந்தப் பாகத்தில் ரத்த ஓட்டம் தடைபடுகிறதோ, அப்பகுதி சில மணி நேரங்களில் செயலிழக்கிறது.
* இவ்வாறு செயலிழந்த தசைப் பகுதியில் இருந்து புரதச் சத்து கலந்த பலவகை ரசாயன பொருட்கள் கசிந்து ரத்தத்தில் கலக்கின்றன.
* மாரடைப்பு ஏற்பட்டு, இரண்டு மணி நேரத்தில் இருந்து ஏறத்தாழ மூன்று நாட்கள் வரை வெவ்வேறு நேரங்களில், வெவ்வேறு விதமான ரசாயனப் பொருள் கசிந்து ரத்தத்தில் கலக்கிறது.
* ரத்தத்தில் இவ்வாறு கலக்கும் ரசாயன பொருட்களின் அளவை வைத்து மாரடைப்பு உறுதி செய்யப்படுகிறது.
* மேலும் மாரடைப்பு ஏற்பட்ட நேரம், மாரடைப்பின் அளவு, இத்தகைய மாரடைப்பால் பின்னாளில் எத்தகைய விளைவுகள் ஏற்படும் என்பவை பற்றியும் ஓரளவு துல்லியமாக கணிக்கலாம்.
* மாரடைப்பின்போது பொதுவாக ரத்தத்தில் பின்வரும் ரசாயனப் பொருட்கள் பரிசோதிக்கப்படுகின்றன.
1) Myoglobin, 2) Troponin.
கொரனரி ஆஞ்சியோகிராம்:
இதயத் தசைகளுக்கு ரத்தத்தை எடுத்துச் செல்லும் ரத்தக்குழாயைப் பரிசோதிப்பதற்காகவும், இதய அறைகள் நல்ல முறையில் இயங்குகின்றனவா, இருதயத்தின் எந்த பாகம் மாரடைப்பால் பாதிக்கப்பட்டுள்ளது என்பதை அறிவதற்காகவும் எடுக்கப்படும் ஒருவித சிறப்பு தன்மை வாய்ந்த "எக்ஸ் ரே' தான் கொரனரி ஆஞ்சியோகிராம். ரத்தப் பரிசோதனை மூலம், இதய தசைக்குச் செல்லும் மூன்று ரத்தக்குழாய்களில் எந்த குழாயில் அடைப்பு உள்ளது, எத்தனை அடைப்பு உள்ளது, அடைப்பின் தன்மைகள் என்ன, அடைப்புகள் எளிதாக பலூன் முறை மூலம் சரிப்படுத்துவதற்கு ஏதுவாக உள்ளதா என்பவற்றை கண்டறியலாம்.
ஆஞ்சியோகிராம் செய்யப்படுவது எப்படி?
*பொதுவாக இது எந்தச் சிக்கலோ, பக்கவிளைவோ இன்றி எளிதாக செய்யப்படும் பரிசோதனை.
* மெல்லிய, வளையும் தன்மை கொண்ட, நீளமான பிளாஸ்டிக் டியூப்கள் வலது கையின் மணிக்கட்டில் உள்ள ரத்தக்குழாய் மூலமாகவோ, வலது அல்லது இடது பக்கத் தொடைகளின் மேல்பகுதி இடுப்பில் உள்ள ரத்தக்குழாயின் வழியாகவோ செலுத்தப்பட்டு, பிளாஸ்டிக் குழாயின் நுனிப்பகுதி இதயத்தின் ரத்தக்குழாய்களுக்கு எடுத்துச் செல்லப்படுகின்றன.
* இந்த பிளாஸ்டிக் குழாய்கள் வழியாக எக்ஸ்ரே மூலம் எளிதில் பார்க்கக் கூடிய ஒருவித சிறப்பு வேதியியல் பொருள் இருதயத்தின் ரத்தக்குழாய்க்குள் செலுத்தப்படுகிறது. இதன் மூலம் இருதய ரத்தக் குழாயின் தன்மைகளை முழுமையாக பரிசோதிக்கலாம்.
* இந்தப் பரிசோதனையை எந்த வலியில்லாமலும், மயக்க மருந்து கொடுக்காமலும் எளிதாக செய்யலாம். மருத்துவ மனையில் ஓரிரு நாட்கள் தங்கினால் போதும்.
எக்கோ கார்டியோ கிராம்:
* இதுவும் ஒரு எளிதான, வலி ஏதும் இல்லாத பரிசோதனையே. பொதுவாக இது மாரடைப்பை கண்டுபிடிக்கத் தேவையான கட்டாய பரிசோதனை அல்ல.
* ஆனால் சில சமயங்களில் மாரடைப்பு ஏற்பட்டுள்ளது என்ற சந்தேகம் எழும்போது இ.சி.ஜி., பரிசோதனையில் எந்த மாற்றமும் தெரியாமல் இருக்கலாம்.
* குறிப்பாக மாரடைப்பு இதயத்தின் பின்பாகத்தில் ஏற்படும்போது, இ.சி.ஜி.,யில் எந்த மாற்றமும் தோன்றாமல் இருக்கலாம்.
* இத்தகைய சூழலில் எக்கோ கார்டியோ கிராம் பரிசோதனை மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
* இப்பரிசோதனையில் இடதுபுற மார்பு பகுதியில் இருந்து அல்ட்ரா சவுண்ட் முறைமூலம், இருதய தசையின் எல்லா பாகங்களின் செயல்பாடுகளையும் துல்லியமாக கண்டறியலாம்.
* மாரடைப்பால் பாதிக்கப்பட்ட பாகத்தின் செயல்பாடு குறைந்திருப்பதை இப்பரிசோதனையில் கண்டறிந்து, மாரடைப்பு ஏற்பட்டுள்ளதையும், அதன் அளவையும் உறுதி செய்யலாம்.
- டாக்டர் எஸ்.கே.பி.கருப்பையா,  மதுரை.  தொடர்புக்கு: 99447-94093