நம் இதயம் நன்றாக இருக்கவேண்டுமெனில் ஆட்டு இதயம் சாப்பிடலாம்!

இதயத்துக்கு இதமளிக்கும் இதயம்
நம் இதயம் நன்றாக இருக்கவேண்டுமெனில் ஆட்டு இதயம் சாப்பிடலாம்.
சதைபகுதி மாமிசத்தை விட ஆர்கன் மாமிசத்தில் சத்துக்கள் அதிகம். அப்படி புல்மேய்ந்த ஆட்டு இதயத்தில் உள்ள சத்துக்களை இன்று பார்க்கலாம்.
இதில் கொ என்சைம் கியு 10 (சி.ஓ.கியு 10) எனும் மிக சத்துவாய்ந்த என்சைம் உள்ளது.

ஸ்டாடின் உண்கையில் நம் லிவர் கொலஸ்டிராலை உற்பத்தி செய்வதை சுத்தமாக நிறுத்திவிடுகிறது. ஸ்டாடின்கள் அத்துடன் நம் லிவர் சி.ஓ.கியு 10 உற்பத்தி செய்வதையும் நிறுத்திவிடுகிறது. சி.ஓ.கியு10 இதயத்துக்கு மிக இதமான என்சைம். இது:
நம் இதயசுவர்களில் படிந்துள்ல ஆக்சிசைஸ் ஆன கொழுப்புக்களை அகற்றுகிறது
நம் இதயம் 24 மணிநேரமும் துடித்துகொண்டே இருப்பதால் அதீத அளவில் ஆக்ஸிஜன் உட்புகுகையில் இதயம் பலவீனம் உள்ளவர்களுக்கு அதை தாங்கமுடியாமல் ஸ்டேபிள் ஆஞ்சைனா எனும் இதய வலி வரும். பலரும் இதை மாரடைப்பு என கருதி பயப்படுவார்கள். ஆனால் இது அது அல்ல. அவர்கள் உடலால் உடல்பயிர்சியை தாங்கும் சக்தி இல்லை என்பதையே இது காட்டுகிறது. (ஜாக்கிங் வேண்டாம் என சொல்ல இதுவும் ஒரு காரணம்). சி.ஓ.கியு 10 இதயத்தின் இத்தகைய பலவீனத்தை குறைத்து உடல்பயிர்சியையும், ஆக்ஸிஜனையும் தாங்கும் சக்தியை இதயத்துக்கு அளிக்கிறது
இதயதுடிப்பை சீராக வைக்கிறது
அதுவும் புல்மேய்ந்த ஆட்டு இதயம் முழுக்க நலமளிக்கும் ஒமேகா 3 கொழுப்பு நிரம்பியது. இதில் உள்ல கொழுப்பில் சரிபாதி ஒலிக் அமிலம் (ஆலிவ் ஆயிலில் இருப்பதற்கு ஒப்பான கொழுப்பு). இதில் செலனியம், ஸின்க் முதலான ஆண்டிஆக்சிடன்டு மினரல்கள் ஏராளம் உள்ளன. ஆட்டு இதயமும், ஆட்டுக்கறியும் நம் உடலில் உள்ல ஹோமோசிஸ்டைன் அளவுகளை கட்டுக்குள் வைக்கின்றன. ஹோமோசிஸ்டைன் அளவு அதிகரித்தால் இதய குழாய்கள் டேமேஜ் ஆகி மாரடைப்பு ஏற்படும்.
இத்தனை சிறப்புவாய்ந்த புல்மேயும் ஆட்டுஇதய சூப்பை காரட், ரோஸ்மரி, பேஸில் போன்ற மூலிகைகளை சேர்த்து ஸ்லோகுக்கரில் சமைத்து இன்று உண்டேன். இதயம் நன்றி சொல்வது போல் ஒரு பிரமை

--
செல்வன்
https://www.facebook.com/groups/tamilhealth/  (ஆரோக்கியம் & நல்வாழ்வு)

http://holyox.blogspot.com (பொதுவான என் தமிழ் வலைபதிவு)

No comments: