ஜனநாயகக் கடமை
வாக்காள பெருமக்களே...
பதிவு செய்யுங்கள் உங்கள் உரிமையை.......
நாட்டின் முத்திரையாய்....
சும்மா கிடைக்கவில்லை சுதந்திரம் என்பது போல்
வாக்குரிமையும் ...
சாதாரணமாய் பாமரன் வசப்படவில்லை
சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் நேரு அவர்களால்
1950 ஆம் ஆண்டு..தடுத்தவர்களை எல்லாம் மீறி...
அதுவரை வரிகட்டுபவர்களுக்கு மட்டுமே வாக்குரிமைஎன்பதை மாற்றி
ஜாதீய..பணமெனும் ..மாயையால்...
மேல் தட்டு...கீழ் தட்டு...
என பிரிந்து கிடந்த மக்கள் அனைவரையும்....
ஒரு கூரையின் கீழ் ஒன்று சேர்த்து ...
ஒரு நாட்டின் தலையெழுத்தை மாற்றி அமைக்கும் உரிமையை.....
தன் மண்ணில் பிறந்து தான் எனும் உரிமை நிலைநாட்டும் விவரம் புரியும் செயல்திறன் மிக்க வயதில் ...
அவனுக்கு வழங்கப்பட்ட...
மாபெரும் சொத்துரிமை
இந்திய தேர்தல் ஆணையம் எனும் தன்னாட்சி பெற்ற மாபெரும் அமைப்பு....
சுதந்திர இந்தியாவின் தலையெழுத்தை இந்த 60 ஆண்டுகளாக நிர்ணயித்துக் கொண்டு வருகிறது
ஓ...என் இந்தியப் பெருமகனே...
ஐந்து வருடங்களுக்கு ஒரு முறை உன் வாழ்வின் சட்டதிட்டங்களை...
கட்டுக் கோப்புகளை
கட்டியாள...வகைமுறைப்படுத்த....
உன்னை ஆள....
ஓர் ,,,தலைமகனை நீ தேர்ந்தெடுக்கிறாய்
உன் வாக்கு எத்தனை மகத்தானது...
இந்தியன் எனும் பெருமை சொல்ல...
பாரத தாயின் தவப் புதல்வன் நான் என பெயர் சொல்ல...
தாய் திருநாட்டின் வளமைகளை..அந்நிய சக்திகளிடம் இருந்து காப்பாற்ற...
வழி வழியாய் வந்த ...
மன்னராட்சி..
ஆண்டான் அடிமை முறைமை ஒழித்து
நீ பிறந்த கன்னி திரு நாட்டை காப்பாற்ற ...
உன் கையில் வழங்கப்பட்ட சாட்டை அது
சரியில்லையென்றால் அடித்து விளாசு...
நாடு முக்கியம் ..நாட்டின் வளம் முக்கியம்....
ராணுவம் செல்வது மட்டுமே வீரமல்ல...
நல்லதொரு ஆட்சி அமைய ...
நம் ஜனநாயகக் கடமை செய்வதே...
மாபெரும் அஹிம்சா புரட்சி
படித்தவர்களே ..
பண்பாளர்களே..
இளம் ரத்தம் துள்ளும்..
இளமை காளைகளே,,நாடு என்னசெய்தது,,என்ற சலிப்புகளை ஒதுக்கித் தள்ளி..
நாட்டிற்க்கு நாம் என்ன செய்வோம்..
என்ற உத்வேக முயற்சியுடன்...
வாக்களியுங்கள்
உங்களின் ஒரு ஓட்டு ...
ஒட்டுமொத்த சமுதாயத்தையும் மாற்றும் வல்லமை உடையது
இந்தியாவின் இனிய தலையெழுத்தான...
கிராமத்து தலைமுறைகளே...
பண நாயக இருள் களைந்து ஜனநாயக விழிப்பு வாருங்கள்....
உங்களுக்கென உங்கள் வாழ்வில் ஒளியேற்றவே,,,,
உங்கள் கையில் ஒட்டுரிமைப் பொக்கிஷம் திணிக்கப்பட்டிருக்கிறது
வாக்களிப்போம்..வளமான சமுதாயம் அமைய..
வல்லரசுகளுடன் போட்டியிட்டு நம் மனிதன்
நான் எனும் திமிராய் நிமிர்ந்து நாடு நலம் பெற
ஜனநாயக கடமையாற்ற
வாருங்கள் வருங்கால இந்திய நம்பிக்கைகளே...!!!
Thanks...
No comments:
Post a Comment