திருமணமான புதுமணத் தம்பதியர் பின்னிரவில் அருந்ததி பார்க்க வேண்டும் என்ற சம்பிரதாயம் இன்றைக்கும் வழக்கத்தில் உள்ளது.
இது ஏன் தெரியுமா?
வசிஷ்ட முனிவரின் மனைவி பெயர்தான் அருந்ததி. ஒருசமயம் தேவேந்திரன், அருந்ததியிடம் வந்து, "ஒரு குடம் கொண்டு வா. குளத்தில் இருந்தோ, கிணற்றில் இருந்தோ நீர் எடுக்காமல், குடத்தில் நீர் நிரப்பிக் காண்பிக்கிறேன்'' என்றான்.