பாகற்காய் சிப்ஸ் | Bitter gourd chips in tamil | மொறுமொறுப்பான பாகற்காய் சிப்ஸ்
மொறுமொறுப்பான, சுவையான பாகற்காய் சிப்ஸ் ரெசிபி.
தேவையான பொருள்கள் (Ingredients)
- பெரிய பாகற்காய் – 1
- கடலை மாவு – 1 மேஜைக்கரண்டி
- அரிசி மாவு – 1 மேஜைக்கரண்டி
- சோள மாவு – 1 மேஜைக்கரண்டி
- மிளகாய்த்தூள் – 1 தேக்கரண்டி
- மல்லித்தூள் – 1 தேக்கரண்டி
- சீரகத்தூள் – ½ தேக்கரண்டி
- பெருஞ்சீரகம் – ½ தேக்கரண்டி (இடித்தது)
- மஞ்சள் தூள் – ¼ தேக்கரண்டி
- உப்பு – தேவையான அளவு
- எலுமிச்சம் சாறு – 2 தேக்கரண்டி
- தண்ணீர் - 1 – 2 மேஜைக்கரண்டி
- எண்ணெய் – பொறித்து எடுக்க
செய்முறை (Instructions)
கத்தி அல்லது வெஜிடபுள் கட்டரை கொண்டு பாகற்காயை மெல்லிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். நறுக்கிய பாகற்காயை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும்.
அத்துடன் கடலைமாவு, அரிசிமாவு, சோளமாவு, மிளகாய்தூள், மல்லிதூள், சீரகத்தூள், இடித்த பெருஞ்சீரகம், மஞ்சள்தூள், உப்பு மற்றும் எலுமிச்சம் சாறு சேர்க்கவும்.
மசாலாக்களை பாகற்காயுடன் நன்கு கலந்து தடவி வைக்கவும்.
சிறிது தண்ணீர் சேர்த்து கலந்து கொள்ளவும். தண்ணீர் அதிகம் சேர்க்கக் கூடாது. பாகற்காயுடன் ஒட்டும் அளவிற்கு மட்டும் தண்ணீர் சேர்த்தால் போதும்.
பாகற்காயை ஒவ்வொன்றாக எடுத்து சூடான எண்ணெய்யில் போடவும். பொன்னிறம் ஆகும் வரை பொறித்து எடுக்கவும். மொறுமொறுப்பான பாகற்காய் சிப்ஸ் தயாராகி விட்டது.
No comments:
Post a Comment