இட்லி பொடி செய்வது எப்படி | இட்லி மிளகாய் பொடி | Idly podi recipe in tamil

தென்னிந்தியாவின் காலை உணவான இட்லி தோசைக்கு இட்லி பொடி மிகவும் அருமையாக இருக்கும். சமைப்பதற்கு மிகவும் எளிதாகவும், சுவையாகவும் இருப்பதால் அனைவரும் இதை விரும்பி உண்பர். அவரவர் காரத்திற்கேற்ப வத்தல் சேர்த்து கொள்ளலாம்.

தென்னிந்தியாவில் இட்லி பொடி இல்லாத வீடே கிடையாது. வீட்டில் இட்லி பொடி இருந்தால் இட்லி தோசைக்கு சாம்பாரோ, சட்னியோ தேவை இல்லை.

எள்ளு சேர்த்து இந்த இட்லி பொடி செய்திருப்பதால் நல்ல மனமாகவும், சுவையாகவும் இருக்கும். எள்ளு பிடித்தவர்கள் எள்ளு துவையல் மற்றும் எள்ளு உருண்டை ரெசிபிகளை ட்ரை செய்து பார்க்கவும்.

உளுந்தம் பருப்பு, கடலை பருப்பு மற்றும் எள்ளு சேர்த்து செய்த சுவையான இட்லி பொடி.

தேவையான பொருள்கள் (Ingredients)
  • நல்லெண்ணெய் – 1 தேக்கரண்டி
  • கடலை பருப்பு – 1/4 கப்
  • உளுந்தம் பருப்பு – 1/2 - 3/4 கப்
  • வத்தல் - 8
  • கறிவேப்பிலை -3 மேஜைக்கரண்டி
  • வெள்ளை எள்ளு – 3 மேஜைக்கரண்டி
  • பெருங்காயம் -1 தேக்கரண்டி
  • உப்பு -2 தேக்கரண்டி
செய்முறை (Instructions)
  • கடாயில் சிறிதளவு நல்லெண்ணெய் சேர்த்து உளுந்தம் பருப்பு மற்றும் கடலை பருப்பு சிறிது சிவக்கும் வரை நன்கு வறுக்கவும்.
  • வறுத்ததை தட்டில் போட்டு ஆற வைக்கவும். பிறகு அதே கடாயில் கறிவேப்பிலை மற்றும் வத்தல் சேர்த்து நன்கு வறுக்கவும்.
  • அடுத்து எள்ளு சேர்த்து வெடிக்கும் வரை வறுத்துக் கொள்ளவும்.
  • வறுத்த வற்றை ஒவ்வொன்றாக தட்டில் தட்டி நன்கு ஆற வைக்கவும்.
  • நன்கு ஆறிய பிறகு அதை மிக்ஸி ஜாரில் எடுத்து, அத்துடன் உப்பு மற்றும் பெருங்காயம் சேர்த்து அரைக்கவும். நைசாக அரைக்க தேவையில்லை.
  • நல்லெண்ணெய் சேர்த்து பரிமாறவும்.  Thanks...

  • No comments: