மைக்ரோவேவ்வில் மொறுமொறுப்பான உருளைக்கிழங்கு சிப்ஸ் செய்வது எப்படி | Microwave crispy potato chips in tamil

உருளைக்கிழங்கு சிப்ஸ் என்பது அனைவர்க்கும் பிடித்தமான ஒரு ரெசிபி. எண்ணெய்யில் பொறித்து செய்யப்படும் உருளைக்கிழங்கு சிப்ஸ் ஆனது அனைவராலும் எளிதில் செய்ய முடியாது. அத்துடன் அதில் எண்ணெய் அதிகம் சேர்ந்திருப்பதால் அதிகம் சாப்பிட முடியாது.

  மைக்ரோவேவ்வில் செய்யப்படும் இந்த சிப்ஸ் செய்வதற்கு மிகவும் எளிதாக இருக்கும். ஒரு மைக்ரோவேவ் தட்டு இருந்தால் இதை குறைந்த நிமிடத்தில் செய்து சாப்பிட முடியும். சமையல் தெரியாதவர்கள் கூட இதை எளிதில் செய்து விடுவார்கள்.

மைக்ரோவேவ்வில் செய்யப்படும் சுவையான மொறுமொறுப்பான உருளைக்கிழங்கு சிப்ஸ்.

தேவையான பொருள்கள் (Ingredients)
  • உருளைக்கிழங்கு – 1
  • எண்ணெய் – சிறிதளவு
  • உப்பு – தேவைக்கேற்ப
  • மிளகாய்த்தூள் – தேவைக்கேற்ப
செய்முறை (Instructions)
  • உருளைக்கிழங்கை நன்கு கழுவி சீவிக் கொள்ளவும்.
  • பிறகு ஒரு மைக்ரோவேவ் தட்டில் பேக்கிங் சீட் போடவும்.
  • சீவிய உருளைக்கிழங்கை இடைவெளிவிட்டு ஒவ்வொன்றாக அதன் மேல் அடுக்கவும்.
  • உருளைக்கிழங்கின் இரு பக்கமும் எண்ணெய் தடவவும்.
  • பிறகு தட்டை மைக்ரோவேவ் ஓவனில் அதிக பவரில் 5 நிமிடம் வைக்கவும்.
  • 5 நிமிடத்திற்குப் பிறகு தட்டை வெளியே எடுத்து உருளைக்கிழங்கை ஒவ்வொன்றாக திருப்பி மறுபடியும் மைக்ரோவேவ்வில் 1 நிமிடம் வைக்கவும்.
  • சுவையான உருளைக்கிழங்கு சிப்ஸ் தயாராகிவிட்டது. உப்பு மற்றும் மிளகாய் தூள் தூவி பரிமாறவும்

  • Thanks...

    No comments: