உருளைக்கிழங்கு சிப்ஸ் | Crispy potato chips in tamil | வீட்டிலேயே மொறுமொறுப்பான உருளைக்கிழங்கு சிப்ஸ் செய்வது எப்படி

சுலபமான முறையில் வீட்டிலேயே செய்யப்படும் சுவையான ,மொறுமொறுப்பான உருளைக்கிழங்கு சிப்ஸ்.

தேவையான பொருள்கள் (Ingredients)
  • உருளைக்கிழங்கு – 2
  • குளிர்ந்த தண்ணீர் – 4 கப்
  • உப்பு – ½ தேக்கரண்டி (உருளைக்கிழங்கை ஊற வைக்க)
  • உப்பு – தேவையான அளவு (சிப்ஸ் மேல் தூவ)
  • சிவப்பு மிளகாய் தூள் அல்லது மிளகுத்தூள் – தேவையான அளவு (சிப்ஸ் மேல் தூவ)



செய்முறை (Instructions)
  1. உருளைக்கிழங்கைக் கழுவி மெலிதாக சீவிக் கொள்ளவும்.
  2. அதை குளிர்ந்த நீரில் போட்டு அத்துடன் சிறிது உப்பு சேர்க்கவும்.
  3. 10 லிருந்து 20 நிமிடம் வரை அப்படியே வைக்க வேண்டும். இப்படி செய்தால் உருளைக்கிழங்கு சிப்ஸ் கடையில் கிடைப்பது போலவே மொறுமொறுப்பாக வரும்.
  4. ஊறிய பிறகு தண்ணீரை வடிகட்டி உருளைக்கிழங்கை தட்டில் போட்டு ஈரத்தை நன்கு உலர வைக்க வேண்டும்.
  5. பிறகு சூடான எண்ணெய்யில் போட்டு பொறித்து எடுக்க வேண்டும்.
  6. பொறித்து எடுத்த பிறகு அதில் உப்பு, மிளகாய்தூள் தூவி சூடாக பரிமாறவும்.

Thanks...

No comments: