Pages

கிறிஸ்துமஸ் ( பல சுவையான தகவல்கள் )இயேசு கிறிஸ்து அவதரித்ததும் உலகிற்கு அதை உணர்த்த ஒரு பிரகாசமான நட்சத்திரம் தோன்றியது. அப்படியோரு நட்சத்திரம் உண்மையிலேயே தோன்றியதா இல்லை கற்பனை கதையா என்று மாறுபட்ட கருத்துகள் நிலவி வந்தன. அதற்கு ஆராய்ச்சியாளர்கள் முற்று புள்ளி வைத்துள்ளனர். இயேசு பிறந்ததும் அதிசியதக்க வகையில் நட்சத்திரம் தோன்றியது உண்மைதான். அதை அறிவியல் பூர்வமாக நிரூபிக்க முடியும் என்று அறிவித்துள்ளனர்.
கிறிஸ்துமஸ் என்றவுடன் முதலில் நினைவுக்கு வருவது கிறிஸ்துமஸ் தாத்தா எனப்படும் சாண்டா கிளாஸ்தான். குழந்தைகளுக்கு குதூகுலம் தருபவர் இந்த கிறித்துமஸ் தாத்தா. இனிப்புகளை குழந்தைகளுக்கு அள்ளி தந்து அவர்களை உற்சாகப்படுத்துவார். எந்த குழந்தையும் அவரிடம் ஏமாந்ததில்லை. இந்த தாத்தா எப்படி உருவானார் என்பது உங்களுக்கு தெரியுமா.
முதன்முதலில் கிறிஸ்துமஸ் தாத்தா வேடம் போட்டவர் செயிண்ட் நிக்கோலஸ். இவர் பிறந்தது தென் துருக்கியில் இருக்கும் லிசியாவில். 4ம் நூற்றாண்டை சேர்ந்த நிக்கோலஸ் பிஷப் பதவியில் இருந்தவர். குழந்தைகளிடம் அதிக பிரியம் கொண்டவர். இப்போது வருவது போல் கிறிஸ்துமஸ்க்கு முதல் நாளன்று பின்னிரவில் கிறிஸ்துமஸ் தாத்தா வருவதில்லை. டிசம்பர் 6ம் தேதி இரவே வந்து கிறிஸ்துமஸ் பரிசுகளை கொடுப்பார். பழங்கள் சாக்லெட்கள், சிறு பொம்மைகள், சிறு பொருட்களை பரிசாக கொடுப்பார்.
16ம் நூற்றாண்டில் சிலுவை போர் நடந்த போது செயின்ட் நிக்கோலஸ் ஐரோப்பாவிலிருந்து வெளியேற்றப்பட்டார். டச்சுக்காரர்கள் மட்டும் செயிண்ட் நிக்கோலஸ் பழக்கங்களை பின்பற்றினர். அமெரிக்காதான் சாண்டா கிளாஸை பிரபலப்படுத்தியது. சாண்டா கிளாஸ் குண்டானவராக, வெள்ளை தாடியுடன், தொந்தி விழுந்த வயிறுடன், பல வண்ண உடையணிந்து வேடிக்கையானவராக சித்தரிக்கப்பட்டார். உண்மையில் ஏழைகள், இல்லாதவர்களுக்கு உதவும் பொருட்டே கிறிஸ்துமஸ் தாத்தா அவதரித்தார்.
விநாயகருக்கு வாகனமாக எலியும், முருகனுக்கு வாகனமாக மயிலும் இருப்பது போல் கிறிஸ்துமஸ் தாத்தாவுக்கும் வாகனம் உள்ளது. இது பறக்கும் மான். கிறிஸ்துமஸ் தாத்தா பறக்கும் மான் மூலம் பறந்து சென்றதாக கதைகள் இருக்கின்றன. மான் எப்படி பறக்கும், என்று நீங்கள் நினைப்பது புரிகிறது. கடும் குளிர் நிறைந்த .துருவ பிரதேசங்களில் பறக்கும் மான் வகைகள் உள்ளன. விண்ணில் அவை பறந்து செல்வதை பார்க்கும் போது கண்கொள்ளா காட்சியாக இருக்கும். இந்த அபூர்வ மான்களை கிறிஸ்துமஸ் தாத்தாவின் வாகனமாக கருதி வழிபடுகின்றனர்.
இங்கிலாந்து நாட்டை சேர்ந்த ஹென்றி என்ற தொழில் அதிபர் இந்த அட்டையை உருவாக்கிய பெருமை பெறுகிறார். பத்தொன்பதாம் நூற்றாண்டில் வசித்த இவர், கிறிஸ்துமஸ் சமயத்தில் உறவினர்களுக்கு கடிதம் எழுத இயலாததால் அட்டையில் படத்தை அச்சிட்டு வாழ்த்தாக அனுப்பினர். ஆயிரம் பேருக்கு அவர் வாழ்த்து அட்டை அனுப்பினார்.
அதன்பிறகு கிறிஸ்துமஸ் சமயத்தில் வாழ்த்து அட்டைகள் அனுப்பும் பழக்கம் ஏற்பட்டது. ஹென்றி அனுப்பிய ஆயிரம் வாழ்த்து அட்டைகளை இப்போதும் ஒருவர் லண்டனில் தன் வசம் வைத்துள்ளார்.
இயேசு பிரான் பவுர்ணமி தினத்தன்று அவதரித்தார். எனவே எந்த ஆண்டுகளில் எல்லாம் பவுர்ணமி வருகிறதோ அந்த கிருஸ்துமசை விஷேச கிருஸ்துமஸ் ஆக கொண்டாடுகின்றனர்.
இயேசுநாதர் பிறந்த பிறகு இதுவரை 72 தடவை கிருஸ்துமஸ் தினத்தன்று பவுர்ணமி வந்துள்ளது. இந்த நூற்றாண்டில் 1901, 1920, 1931, 1970, 1996 ஆகிய ஆண்டுகளில் 5 தடவை விஷேச கிருஸ்துமஸ் வந்துள்ளது. இனி கிறிஸ்துமஸ் தினமும், பவுர்ணமியும் ஒரே நாளில் வரும் அபூர்வம் 2015-ம் ஆண்டில் தான் வரும்.
கிறிஸ்துமஸ் மரம் அலங்கரிக்கப்படுவதற்கு ஒரு சுவையான காரணமும் கதையும் உண்டு. 17ம் நூற்றாண்டின் குளிர்கால இரவில் மார்டின் லூதர் காட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது சர்ச்சில் கூற வேண்டிய போதனைகளை நினைத்துக் கொண்டே சென்று கொண்டிருந்தார். வானில் இருள் சூழ்ந்து கொண்டது.
அந்த காலத்தில் ஜெர்மன் காடுகளில் கொடிய மிருகங்கள் இருக்கும். இருள் சூழ்ந்ததும் மார்ட்டினுக்கு பயம் பிடித்துக் கொண்டது. மனதிற்குள் இறைவனை வேண்டியவாறே காட்டை கடந்து கொண்டிருந்தார். காட்டிலிருந்து ஒரு மரத்தை பார்க்கும் போது நீல நிறத்திலும், வெள்ளி நிறத்திலும் விளக்குகள் போல நட்சத்திரங்கள் மின்னுவதை பார்த்தார். அப்போது வியப்பில் ஆழ்ந்தார். இயேசு பிரான் இறந்த இடத்திற்கு சாஸ்திரிகளை அழைத்து சென்ற நட்சத்திரம் போல தான் இவையும் என உணர்ந்தார். பின்னர் அந்த சிறிய மரத்தை எடுத்துக் கொண்டு தனது வீட்டிற்கு வந்தார்.
பின்னர் தன் குடும்பத்தினரை அழைத்து சுற்றி நிற்க வைத்து தனக்கு நேர்ந்த அனுபவங்களை தெரிவித்தார். தான் மிகவும் பயந்ததாக சொன்ன அவர் நட்சத்திரங்களின் ஒளி இறைவன்தான். நான் உன்னை கைவிட மாட்டேன் என நம்பிக்கை அளிக்கும விதமாக அமைந்தது உடல் சிலிர்த்தாக தெரிவித்தார். இறைவன் அருட்பார்வை துன்பப்படுபவர் மீது பட்டு அவர்களை காப்பாற்றும் என கூறினார்.
அன்று முதல்தான் கிறிஸ்துமஸ் மரத்துக்கு மெழுகுவர்த்திகள் ஏற்றி வைக்கும் வழக்கம் தோன்றியது. இன்றும் அது பின்பற்றப்பட்டு வருகிறது. கிறிஸ்துமஸ் மரத்தில் ஏற்றி வைக்கப்பட்டிருக்கும் விளக்கின் ஒளி மார்ட்டின் லூதர்கிங் கூறியது போல் இறைவன் தம்மை காப்பாற்ற காத்திருக்கிறார் என்பதை உணர்த்தும் நம்பிக்கை ஒளியாக ஜொலித்துக் கொண்டிருக்கிறது.
பசிலிக்கா என்பது கிரேக்க சொல். இதற்கு பெரிய கிறிஸ்துவ ஆலயம் என்று பொருள். கிறிஸ்தவ ஆலயங்களில் பேராலயம் என்ற பெருமைக்குரியதை பசிலிக்கா என்று அழைப்பார்கள்.
இந்தியாவில் 5 பசிலிக்காக்கள் உள்ளன. மும்பை பாந்திராவில் உள்ள மலை மாதா ஆலயம், கோவா போம் ஜேசு ஆலயம், சென்னை மயிலாப்பூர் புனித தோமையர் ஆலயம், வேளாங்கண்ணி ஆரோக்கிய அன்னை ஆலயம், பெங்களுரு ஆரோக்கியமாதா ஆலயம் ஆகியவை பசிலிக்காக்கள் என்றழைக்கப்படுகின்றன.
இயேசு நாதரின் வாழ்க்கை வரலாறை அவரது சீடர்கள் லூக்காஸ், மத்தேயு, மாற்கு, அருளப்பர் ஆகிய நான்கு பேர் எழுதியுள்ளனர்.
இயேசு சுமந்த சிலுவையின் மரத்துண்டு:
இயேசுநாதர் தனது தோளில் சுமந்து சென்று, ஆணியில் அறையப்பட்டு உயிர் தியாகம் செய்த புனித சிலுவை மரத்தின் புனித துண்டு ஒன்று தூத்துக்குடி மாவட்டம் மணப்பாடு ஆலயத்தில் இன்றும் ஆசி வழங்கிக் கொண்டிருக்கிறது. இந்த ஆலயத்துக்கு புனித சிலுவை மரத்தின் துண்டு வந்து சேர காரணமாக இருந்தவர் பங்கு தந்தை ஜான் சேதலனோவா அடிகளார்.
1581ம் ஆண்டு இந்த ஆலயத்தின் பங்கு தந்தையாக இருந்த இவர் ரோம் நகரில் இருந்து இயேசு தலைமை குருவான கிளாடியஸ், ஆக்குவா, வீவா அடிகளுக்கு புனித சிலுவையின் சிறு பகுதி வேண்டி விண்ணப்பம் செய்தார். அந்த விண்ணப்பத்தை தலைமை குரு போப் ஆண்டவரிடம் பரிந்துரை செய்து அனுப்பி வைத்தார்.
போப் ஆண்டவரும் இயேசு சிலுவையில் அறையப்ப்ட மரத்துண்டின் சிறிய பகுதியை சிலுவை வடிவில் கொடுத்தார். அதை தலைமை குரு மணப்பாடு ஆலயத்திற்கு அனுப்பி வைத்தார். 1583ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அந்த புனித சிலுவையின் துண்டு தூத்துக்குடி மணப்பாடு ஆலயத்திற்கு வந்தடைந்தது. அன்று கொண்டு வரப்பட்ட அந்த புனித சிலுவையை இன்று வரை பக்தியுடன் பாதுகாத்து வருகிறார்கள். மாதத்தின் முதல் வெள்ளியன்றும், திருவிழா நாட்களிலும் பக்தர்களின் வணக்கத்துக்காக இதை வைக்கிறார்கள்.
http://seithy.com/breifNews.php?newsID=53489&category=CommonNews&language=tamil

No comments: