உயிரூட்டும் சிகிச்சைத் துறையில் ஏற்பட்டுள்ள வெற்றிகளின் காரணமாக, மரணத்தின் விளிம்புக்கே சென்ற ஆயிரக் கணக்கானோர் மீண்டும் வாழ்வு பெற்று பல்லாண்டுகள் உயிருடன் இருந்திருக்கின்றனர்.
ரஷியாவில் ஆங்காங்கே உள்ள மருத்துவக்கூடங்களில், சிறப்பு உயிரூட்டும் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால், ஒரு மனிதனின் மூச்சு நின்றபின் 5 முதல் 6 நிமிடங்களுக்குள் உயிரூட்டும் சிகிச்சையைத் தொடங்கினால் மட்டுமே உயிர் பிழைக்க வைக்க முடியும் என்ற நிலை தற்போது உள்ளது. அந்த ஐந்தாறு நிமிடங் களுக்குள், மூளைப் புறவியலிலும், இதயத்திலும் உள்ள திசுக்களில் சில மாற்ற முடியாத விளைவுகள் ஏற்பட்டு விடுகின்றன. இந்தக் காலகட்டத்தை நாம் ஓரளவேனும் நீட்டிக்க முடிந்தால், மேலும் பல உயிர்களைக் காப்பாற்றிவிடலாம்.
எல்லா நாடுகளிலும் உள்ள உயிர்வேதி நிபுணர்களும், உயிரூட்டும் சிகிச்சை நிபுணர்களும் இந்த 5 நிமிட எல்லையை நீட்டிப்பது எப்படி என்ற ஆய்வில் ஈடுபட்டுள்ளனர். எரிவான் மருத்துவக் கூடத்தின் நோயியல், உடற்கூறியல் துறையைச் சேர்ந்த விஞ்ஞானிகளும் இந்த ஆராய்ச்சியை மேற்கொண்டுள்ளனர்.
உயிரூட்டும் சிகிச்சையில் பெரும் தடையாக இருப்பது, `ஹைபோக்சியா' என்ற நிலையே. அதாவது, ஆக்சிஜன் பற்றாக்குறையின் காரணமாக, பெருமூளைப் புறணி செல்கள் நாசமடைந்து விடுகின்றன. இதுகுறித்து, எரிவான் மருத்துவக் கூடத்தைச் சேர்ந்த கச்சட்ரியான் என்பவர் உயரமான மலை உச்சிகளில் சில பரிசோதனைகளை நடத்தினார்.
மலை உச்சிகளுக்குப் பழக்கப்பட்ட உயிரினங்களில், மூளைச்சாவுக்குப் பின் உயிரூட்டக்கூடிய காலம் 10 முதல் 12 நிமிடங்கள் வரை நீடிக்கிறது என்று அவர் கண்டுபிடித்தார். இது விஞ்ஞானத் துறையில் மிக முக்கியமான ஒரு கண்டுபிடிப்பாகும்.
ஒருவருக்குக் காய்ச்சல் ஏற்பட்டு, அந்த நிலையிலேயே அவர் மரணம் அடைந்தால், அவருக்குப் புத்துயிரூட்டும் முயற்சி வெற்றி பெறுவதில்லை. அதுகுறித்தும் கச்சட்ரியான் ஆய்வுகள் நடத்தியுள்ளார்.
காய்ச்சல் கண்ட ஒரு மனிதர் இறப்பதற்கு முன்னர் உள்ள நிலையில் அவரது அவயங்கள், திசுக்கள் ஆகியவற்றில் ஏற்கனவே சில மாறுதல்கள் ஏற்பட்டுவிடுகின்றன என்றும், அந்த நோயாளியின் வளர்சிதை மாற்றம் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது என்றும், எல்லாவற்றையும் விட முக் கியமாக, கார்போஹைட்ரேட், மாக்ரோர்ஜிக் பாஸ்பரஸ் கூட்டுப்பொருட்களின் சேமிப்பு பெரிதும் குறைந்துவிடுகிறது என்றும், அதுவே மரணத்துக்குக் காரணமாகிறது என்றும் கச்சட்ரியான் கண்டுபிடித்தார்.
1 comment:
அனைவரும் தெரிந்துவைத்திருக்க வேண்டிய விஷயம்...
Post a Comment