மகோற்கடர் என்கிற முனிவராக அவதாரம் செய்த விநாயகர், காசிப முனிவரின் ஆசிரமத்தில் தங்கியிருந்தார். ஒருமுறை அவர்கள் ஒரு யாகத்திற்கு புறப்பட்டபோது அசுரன் ஒருவன் அவர்களைத் தடுத்து நிறுத்தினான்.
விநாயகர் யாகத்திற்காகக் கொண்டு சென்ற கலசங்களின் மேலிருந்த தேங்காய்களை வீசி அந்த அசுரனைப் பொடிப் பொடியாக்கினார்.
இதன் மூலம் தனக்கு வந்த தடையைத் தேங்காயை வீசி எறிந்து தகர்த்தார் விநாயகர். அதன் தொடர்ச்சியாக `விக்னங்களை தகர்த்த விக்னேஸ்வரர்' என்ற பெயரும் அவருக்கு ஏற்பட்டது. சிதறுகாய் உடைக்கும் வழக்கமும் உருவானது.
இப்போதும் எந்த செயலுக்கு நாம் புறப்பட்டாலும் தடைகள் ஏற்பட்டால் அதை உடைக்க விநாயகரை வணங்கிச் செல்லும் வழக்கத்தை பின்பற்றி வருகிறோம்.
No comments:
Post a Comment