Pages

சித்திரை மாத எண் கணித பலன்கள்...

1, 10, 19, 28 தேதிகளில் பிறந்தவர்களுக்கு...

அதிகார தோரணையும் எடுத்த முடிவை மாற்றிக் கொள்ளாத  குணமுமுடையவர்களே, இந்த மாதம் சின்ன விஷயத்துக்குக் கூட கோபம் வரலாம், நிதானமாக இருப்பது நன்மை தரும். ஆனால், புத்தி சாதுரியத்தால்  எதையும் சமாளிப்பீர்கள். வீண் அலைச்சல் ஏற்படும். நீங்கள் நினைப்பது போல மற்றவர்கள் நடந்து கொள்ளாததால் டென்ஷன் ஏற்படலாம். தொழில், வியாபாரப் பயணங்களால் அலைச்சல் ஏற்படலாம். வியாபார  விரிவாக்கப் பணிகளில் சில இடையூறுகள் ஏற்படலாம். உத்தியோகஸ்தர்களுக்கு வேலை சுமை அதிகரிப்பது, அலைச்சல், சோர்வு என உண்டாகும். குடும்பத்தின் இறுக்கமான சூழ்நிலை நீங்கும். குடும்ப உறுப்பினர் களால் வருமானம் வரும். சொன்ன சொல்லை எப்படியும் காப்பாற்றுவீர்கள்.

சிறப்பான கிழமைகள்: ஞாயிறு, வியாழன்.

அனுகூலமான திசைகள்: தெற்கு, கிழக்கு.

அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 7.

பரிகாரம்: அருகிலிருக்கும் சிவன் கோயிலில் பிரதோஷ நாட்களில் நெய் விளக்கு ஏற்றி ஈசனை வலம் வந்து வணங்குங்கள்.

2, 11, 20, 29 தேதிகளில் பிறந்தவர்களுக்கு...

எதிர்ப்புகள் விலகும். கடன் பிரச்னைகள் தீரும். பலவகையான  யோகங்கள் ஏற்படும். நோய்கள் நீங்கி ஆரோக்கியம் உண்டாகும். மனக்குழப்பம் நீங்கும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் காணப்படும். தொழில் முயற்சிகள் வெற்றி பெறும். பொருளாதார முன்னேற்றம் உண்டாகும். உத்தி யோகஸ்தர்கள் எதைப் பற்றியும் கவலைப் படாமல் கொடுக்கப்பட்ட பணியை திறம்பட செய்வார்கள். போட்டிகள் மறையும். திருமண விஷயங்கள் சாதகமாகும். குடும்பத்திலிருந்த மறைமுக எதிர்ப்புகள் மறையும். உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். கணவன், மனைவிக்கிடையே இருந்த மனக்கசப்பு நீங்கும். பிள்ளைகள் உங்களது பேச்சுக்கு செவி சாய்ப்பார்கள்.

சிறப்பான கிழமைகள்: திங்கள், வெள்ளி.

அனுகூலமான திசைகள்: தெற்கு, மேற்கு.

அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9.

பரிகாரம்: திங்கள் தோறும் அருகிலிருக்கும் பெருமாள் ஆலயத்தை 11 முறை வலம் வாருங்கள்.

3, 12, 21, 30 தேதிகளில் பிறந்தவர்களுக்கு...

பல வழியிலும் பணவரத்து  இருக்கும். காரியத் தடைகள் நீங்கும். இரக்கப்பட்டு பிறருக்கு உதவுவீர்கள். பெரியோர் மூலம் காரிய அனுகூலம் உண்டாகும். பெரும் புள்ளிகளின் அறிமுகம் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். வாக்கு வன்மை யால் தொழில், வியாபாரம் சிறப்படையும். உத்தியோகஸ்தர்களுக்கு புதிய பதவி கிடைக்கும். அந்தஸ்து உயரும். நிலுவையில் இருந்த பணம் வந்து சேரும். குடும்பத்தில் மகிழ்ச்சி கொண்டாட்டங்கள் உண்டு. குடும்ப சுகம் பூரணமாக கிடைக்கும். பிள்ளை களால் பெருமை உண்டாகும். உறவினர் வீட்டு சுப விசேஷங்களில் குடும்பத்தினருடன் கலந்து கொள்வீர்கள்.

சிறப்பான கிழமைகள்: ஞாயிறு, வியாழன்.

அனுகூலமான திசைகள்: வடக்கு, கிழக்கு.

அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9.

பரிகாரம்: வியாழக்கிழமை தோறும் சிவன் கோயிலில் குருவிற்கு முழுக்கடலை மாலை சமர்ப்பித்து வணங்கி  3 வலம் வரவும்.

4, 13, 22, 31 தேதிகளில் பிறந்தவர்களுக்கு...

எல்லா விதத்திலும் நன்மை உண்டாகும். எதையும் துணிச்சலுடன் எதிர் கொள்வீர்கள். தடைப் பட்டு வந்த காரியங்கள் சுலபமாக நிறைவேறும். பணவரத்து அதிகரிக்கும். உங்கள் செயல்களுக்கு  தடைகளை ஏற்படுத்தியவர்கள் தாமாகவே விலகிவிடுவார்கள். தொழில், வியாபாரம் போட்டிகள் நீங்கி நன்கு நடக்கும். முக்கிய பொறுப்புகளில் இருப்பவர்களின் ஆதரவு கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் சாதுரியமான பேச்சால் மேலதிகாரிகளின் கட்டளைகளை நிறைவேற்றி பாராட்டு பெறுவார்கள். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த பதவி உயர்வு தேடி வரும். வாழ்க்கைத் துணை ஆதரவாக இருப்பார். பிள்ளைகளின் நலனுக்காக பாடுபடுவீர்கள். விருந்தினர் வருகை இருக்கும். தடைப்பட்ட திருமண விஷயங்கள் சாதகமாக முடியும்.

சிறப்பான கிழமைகள்: செவ்வாய், வெள்ளி.

அனுகூலமான திசைகள்: வடக்கு, கிழக்கு.

அதிர்ஷ்ட எண்கள்: 2, 4, 6.

பரிகாரம்: வெள்ளிக்கிழமைதோறும் அருகி லிருக்கும் அம்மனுக்கு செவ்வரளி மலர் சாத்தி இலுப்பை எண்ணெய் தீபம் ஏற்றி வழிபடவும்.

5, 14, 23 தேதிகளில் பிறந்தவர்களுக்கு...

எதிர்பார்த்த தகவல்கள் தாமதமாக வரும். கூட இருப்பவர்களிடம் கவனமாக இருப்பது நல்லது. பொதுவாக அவசர முடிவெடுப்பதை தவிர்ப்பது நன்மை தரும். முக்கிய நபர்களின் அறிமுகமும்  அவர் மூலம் உதவியும் கிடைக்கும். புதிய ஆர்டர் விஷயமாக தொழில், வியாபாரத்தில் இருப்பவர்கள் வெளியூர் செல்ல நேரிடும். உத்தியோகஸ்தர்கள் அலுவலக வேலையாக முக்கிய நபர்களை சந்திப்பீர்கள். கொடுத்த கடனை திருப்பி வாங்க முயல்வீர்கள். குடும்பத்தில் வீண் வாக்குவாதங்கள் ஏற்படலாம். கவனமாக  பேசுவது நல்லது. உறவினர்கள், கணவன், மனைவிக்கிடையே அனுசரித்து செல்வது நல்லது. வாகன சுகம் ஏற்படும்.

சிறப்பான கிழமைகள்: திங்கள், புதன், வெள்ளி.

அனுகூலமான திசைகள்: வடக்கு, கிழக்கு.

அதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 6.

பரிகாரம்: புதன் தோறும் பெருமாளுக்கு துளசி மாலை அர்ப்பணித்து அர்ச்சனை செய்து வழிபடவும்.

6, 15, 24 தேதிகளில் பிறந்தவர்களுக்கு...

திட்டமிட்டபடி காரியங்களை செய்து முடிப்பீர்கள். பணவரத்து தாமதப்பட்டாலும் கையில் இருப்பு இருக்கும். முக்கியமான பணிகள் தாமதமாக நடக்கும். வீண் விவகாரங்களில் தலையிடாமல் ஒதுங்கிவிடுங்கள். உடல் ஆரோக்கியம் மேம்படும். மனம் மகிழ நிகழ்ச்சிகள் நடக்கும். தொழில், வியாபாரத்தில் இருப்பவர்கள் கடின உழைப்பால் முன்னேற்றம் அடைவார்கள். எதிர்பார்த்த ஆர்டர் வரும். வாடிக்கையாளர்களை திருப்தி செய்ய கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். உத்தியோகஸ்தர்கள் திறமையாக செயல்பட்டு பாராட்டு பெறுவார்கள். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். அவர்களின் நலனுக்காக பாடுபடுவீர்கள். மனதில் துணிச்சல் ஏற்படும்.

சிறப்பான கிழமைகள்: புதன், வெள்ளி.

அனுகூலமான திசைகள்: வடக்கு, கிழக்கு.

அதிர்ஷ்ட எண்கள்: 5, 6.

பரிகாரம்: வெள்ளிக்கிழமைகளில் சுக்கிரன் ஹோரையில் (காலை 6-7 மணி) மல்லிகை மலரை மகாலக்ஷ்மிக்கு அர்ப்பணித்து வலம் வரவும்.

7, 16, 25 தேதிகளில் பிறந்தவர்களுக்கு...

எதிர்பார்த்த பணவரவு இருக்கும். எந்த முடிவையும் செயல்படுத்தும் முன் ஒரு முறைக்கு இருமுறை ஆலோசிப்பது நல்லது. வீண் வாக்குவாதங்கள£ல் பகையை  வளர்த்துக் கொள்ளாதீர்கள். வீண் அலைச்சலுக்கு பிறகே எந்த ஒரு காரியமும் முடியும். தொழில் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு அலைச்சல் அதிகமாகும். உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரி சொன்ன வேலையை எளிதாக முடிக்க முடியாமல் தவிக்க வேண்டி இருக்கும். சக பணியாளர்களிடம் வீண்
பேச்சுகளை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் விருந்தினர் வருகையால் திடீர் செலவுகள் ஏற்படலாம். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள குடும்பத்தினருடன் வெளியிடங்களுக்குச் செல்வீர்கள்.

சிறப்பான கிழமைகள்: செவ்வாய், வியாழன்.

அனுகூலமான திசைகள்: வடக்கு, கிழக்கு.

அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 7.

பரிகாரம்: செவ்வாய்க்கிழமை தோறும் அருகிலிருக்கும் விநாயகர் கோயிலில் நெய் விளக்கு ஏற்றி வைத்து வணங்கவும்.

8, 17, 26 தேதிகளில் பிறந்தவர்களுக்கு...

வாக்கு வன்மையால் லாபம் உண்டு. வீண் பயணங்களால் அலைச்சல் ஏற்படும். இடமாற்றம் உண்டாகலாம். கெட்ட கனவுகள் தோன்றும். தொழில்,  வியாபாரத்தில் மந்த நிலை காணப்படும். வரவேண்டிய பணம் தாமதமாக வரும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலை கடுமையாகும். உத்தியோகம் காரணமாக வெளியில் தங்க நேரிடும். அலுவலகத்தில் அனுசரித்து செல்வது நல்லது. கணவன், மனைவிக்கிடையே திடீர் பூசல்கள் ஏற்பட்டு சரியாகும். குடும்பச் செலவுகள் கூடும். குடும்பக் கவலைகள் உண்டாகும். உறவினர்கள், நண்பர்களிடம் பேசும்போது நிதானமாக பேசுங்கள். நெருப்பு ஆயுதங்களை பயன்படுத்தும் போது எச்சரிக்கை தேவை.

சிறப்பான கிழமைகள்: புதன், சனி.

அனுகூலமான திசைகள்: தெற்கு, மேற்கு.

அதிர்ஷ்ட எண்கள்: 4, 6, 8.

பரிகாரம்: சனிக்கிழமை தோறும் அருகிலிருக்கும் பெருமாள் கோயிலுக்குச் சென்று கருடனுக்கு நெய் தீபம் ஏற்றி 3 முறை வலம் வரவும்.

9, 18, 27 தேதிகளில் பிறந்தவர்களுக்கு...

வாழ்க்கைத் தரம் உயரும். வழக்கத்தை விட செலவு கூடும். தொழில், வியாபாரப் பேச்சு வார்த்தைகளில் நிதானமாகப் பேசுங்கள். உத்தியோகஸ்தர்களுக்கு ஏதாவது ஒரு அலைச்சல், கூடுதல் செலவு என வரும். வீண்பழி ஏற்க வேண்டி இருக்கும். கணவன், மனைவிக்கிடையே மன வருத்தம் ஏற்பட்டு நீங்கும். அக்கம் பக்கத்தாருடன் அனுசரித்து சென்றால் நன்மை. உறவினர்களின் கேள்விகளுக்கு பதில் சொல்லும் போது நிதானத்தைக் கடைப்பிடியுங்கள். உங்களது  பொருட்களை பத்திரமாக வைத்துக் கொள்ளுங்கள்.

சிறப்பான கிழமைகள்: செவ்வாய், வியாழன்.

அனுகூலமான திசைகள்: வடக்கு, கிழக்கு.

அதிர்ஷ்ட எண்கள்: 3, 9.

பரிகாரம்: செவ்வாய்க்கிழமைகளில் அருகிலிருக்கும் முருகன் கோயிலுக்குச் சென்று வேலுக்கு எலுமிச்சை படைத்து வணங்கவும்.

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

Thanks...
http://astrology.dinakaran.com/specialrasidetails.aspx?id=137

No comments: