இந்து திருமணத்தில் தாலி கட்டும்போது மூன்று முடிச்சு இடுவதன் அர்த்தம்!

இந்து திருமணங்களில், மணமகன், மணமகளுக்கு மாங்கல்யம் அதாவது (தாலி) கட்டும்போது மூன்று முடிச்சு எதற்கு போடச் சொல்கிறார்கள். அது ஏன்? அந்த மூன்று முடிச்சுகளுக்கும் ஆறு பொருளிருக்கு...
1. முதல் முடிச்சு போடும்போது, தங்களுக்கு பிறக்கப்போகும் குழந்தை, ஆரோக்கியமாகவு ம், சிறந்த அறிவாளியாகவும் திகழ, படைக்கு ம் கடவுளான பிரம்மாவையும், ஞானத்தை ஊட்டும் சரஸ்வதி தேவியையும் வணங்கி, முதல் முடிச்சு போடப் படுகிறது.
. இரண்டாவது முடிச்சு போடும்போது, ஆரோக்கியமான, அறிவாளியான குழந்தை பிறந்தாலும், அக்குழந்தை நற்குணங்க ளோடு பிறருக்கு உதவி செய்து நல்லவனாக திகழவும், செல்வச் செழிப்புடன் வாழ வும், காக்கும் கடவுளான திருமாலையும், செல்வங்களை அள்ளித்தரும் லஷ்மியை யும் வணங்கி இரண்டாவது முடிச்சு போடப் படுகிறது.
மூன்றாவது முடிச்சு போடும் போது, ஆரோக்கிய மான, அறிவான குழந்தை பிறந்து, அது நற்குண ங்களோடு செல்வச் சீமானாக வாழ்ந் தாலும், அக்கிரமங்களை தட்டிக்கேட்டு, அவை தலை தூக்கும்முன்பே, அழித்து தர்மத்தை நிலை நாட்ட, அழித்தல்தொழிலை மேற்கொண்டிருக்கும் சிவனையும், வீரத்தி ற்கு பெயர் பெற்ற பார்வதி தேவியையும் வணங்கி மூன்றாவது முடிச்சு போடப்படுகிறது.

2. மணமக்கள் இருவரது மனம், வாக்கு, செயல் ஆகிய மூன்றிலு ம் ஒன்று பட்டு வாழ்ந்திருக்க.

3. கணவன் மனைவி இருவருக்கும் உள்ள இணைப்பு, இரு குடும்பங்களின் இணைப்பு ஆகும். மூன்று நாத்துனர் முடிச்சு. ஒரு பெண் ஒரு இடத்தில் பிறந்து வேறு இடத்தில் நாத்து போல் இடம் பெயர் வதால் அவர்கள் நாத்துனர் என்று அழைக்கப்படுகிறார்கள். அப்படி வரும் பெண், இந்த வீட்டில் உள்ள பெண்ணுக்கு உரிய இடத்தை நிரப்புவாள் என்பதற்காக மூன்றாம் முடிச்சு.

4. பெண்ணுடைய கடந்த காலத்தில் ஏற்பட்டவைக்கும், நிகழ் கால, எதிர் காலத்தில் ஏற்படும் விஷயங்களுக்கு நான் பொறுப் பாவேன் என்று ஆண் உறுதி அளித்தல்.

5.நம்முடைய பெற்றோர், விருத்தாளி, பித்ருக்கள் ஆகிய மூவருக்கும் செய்ய வேண்டிய கடமையில் இருந்து அவர்கள் தவற மாட்டார்கள் என்று உறுதி அளித்தல் .

6. பிறந்த வீட்டு பெருமைகளையும், புகுந்த வீட்டு பெருமைகளை யும் செவ்வனே எடுத்துச்சென்று எதிர்கால சந்ததியினருக்கு பரிசாக கொடுத்து, குடும்ப பெருமைகளை காப்பாற்றும் பெரும் பொறுப்பை பெண்ணுக்கு அளித்தல்….!

Thanks...
http://seithy.com/breifNews.php?newsID=107395&category=CommonNews&language=tamil

1 comment:

Anonymous said...

What's up to all, how is all, I think every ߋne is getting more from this web site, and уour views are pleasant іn favor
of neԝ viewers.