சிவப்பு தக்காளியை விட, தக்காளிக்காயில் சத்துக்கள் அதிகம் உள்ளதாக, விஞ்ஞானிகள் தெரிவிப்பு!

நாம் அன்றாடம் சமையலில் பயன்படுத்தும், சிவப்பு தக்காளியை விட, தக்காளிக்காயில் சத்துக்கள் அதிகம் உள்ளதாக, விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து, அமெரிக்காவின், அயோவா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கூறியதாவது - பச்சை நிற தக்காளிக்காயில் உள்ள, "டொமட்டடைன்', மனிதர்களின் தசை வளர்ச்சிக்கும், வலிமைக்கும் உதவுகிறது. வயது அதிகரிப்பு மற்றும் பல்வேறு நோய் தாக்குதலால், தசை இழப்பு ஏற்படும். புற்றுநோய் மற்றும் விபத்துகளால் ஏற்படும் எலும்பு முறிவுகள் போன்றவற்றாலும், தசை இழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. ஆனால், காய் தக்காளியில் உள்ள, டொமட்டடைன் சத்து, இது போன்ற தசை இழப்புகளில் இருந்து பாதுகாக்கும். உடலில் உள்ள கொழுப்புகள் குறைந்தாலும், தசைகளின் உறுதியும், தோற்றமும் மாறாது. இவ்வாறு, அவர்கள் கூறியுள்ளன.

Thanks...
http://seithy.com/breifNews.php?newsID=107486&category=CommonNews&language=tamil

No comments: