இன்றைய அவசர உலகில் பெருகிவரும் பரபரப்பு,
பதட்டம் அதனால் ஏற்படும் மனக்கவலைகள்,
ஏமாற்றங்கள், எதிர்பார்ப்புகள் போன்றவை எல்லாம்
அதிகமான மனபாரத்தை ஏற்படுத்தி ரத்த
அழுத்தத்தை அதிகரிக்க செய்கின்றன .
அப்படி ஏற்படும் மன இறுக்கத்தை தளர்த்தி மன
அமைதி பெறும் வழிகளை இங்கே பார்ப்போம் .
முதலாவதாக உடல் மற்றும்
உள்ளத்தை தளர்த்தி ஆழமாக சுவாசிக்க வேண்டும்.
மூச்சை உள்வாங்கி, பின்னர் மெதுவாக
வெளியிடுவதும் முக்கியமானது. உயர் ரத்த
அழுத்தம் உள்ளவர்கள் மனதையும், உடலையும்
தளர்த்தி ஓய்வு எடுப்பது அவசியம்.
அதேபோல் நாம் எப்போதும் செய்யும்
வேலையை விட்டுவிட்டு , மாறுபட்ட நமக்குப்
பிடித்தமான ஏதாவது ஒரு வேலையை செய்வதும்,
அல்லது அதைப்பற்றி தெரிந்து கொள்வதும்
மனதை நிம்மதியாக்கும் . தோட்ட வேலை செய்தல்,
புத்தகம் அல்லது பத்திரிகை வாசித்தல்,
விளையாடுதல் ஆகியவற்றை பொழுது போக்காக
செய்தால் உடல் புத்துணர்வாகி , மனம்
அமைதி பெறும்.
தினமும் குறிப்பிட்ட நேரம் யோகாசனம்
செய்தால் ரத்த அழுத்தம் குறைந்து , மன
அழுத்தமும் குறைகிறது. ஆனால் யோகாசனம்
செய்பவர்களுக்கு எவ்வித கெட்டப் பழக்கமும்
இருக்கக் கூடாது .
மதுவகைகள், புகை பிடித்தல்,
புகையிலை பழக்கம்
ஆகியவற்றை தொடவே கூடாது. அதேபோல்
உணவு முறையில் கட்டப்பாடு இருந்தால்
மட்டுமே ரத்த அழுத்தம் சீராகும் .
யோகாசனம் செய்வதற்கு முன்பு, மனதில் அச்சம்,
பீதி, படபடப்பு, மன இறுக்கம்
போன்றவை மனதுக்குள் வைத்திருக்கக் கூடாது.
யோகாசனத்தை காலையில் செய்வது அவசியம்.
அப்படி தொடர்ந்து யோகாசனம் செய்து வந்தால்
கண்டிப்பாக மனம் நிம்மதி அடையும் .
பதட்டம் அதனால் ஏற்படும் மனக்கவலைகள்,
ஏமாற்றங்கள், எதிர்பார்ப்புகள் போன்றவை எல்லாம்
அதிகமான மனபாரத்தை ஏற்படுத்தி ரத்த
அழுத்தத்தை அதிகரிக்க செய்கின்றன .
அப்படி ஏற்படும் மன இறுக்கத்தை தளர்த்தி மன
அமைதி பெறும் வழிகளை இங்கே பார்ப்போம் .
முதலாவதாக உடல் மற்றும்
உள்ளத்தை தளர்த்தி ஆழமாக சுவாசிக்க வேண்டும்.
மூச்சை உள்வாங்கி, பின்னர் மெதுவாக
வெளியிடுவதும் முக்கியமானது. உயர் ரத்த
அழுத்தம் உள்ளவர்கள் மனதையும், உடலையும்
தளர்த்தி ஓய்வு எடுப்பது அவசியம்.
அதேபோல் நாம் எப்போதும் செய்யும்
வேலையை விட்டுவிட்டு , மாறுபட்ட நமக்குப்
பிடித்தமான ஏதாவது ஒரு வேலையை செய்வதும்,
அல்லது அதைப்பற்றி தெரிந்து கொள்வதும்
மனதை நிம்மதியாக்கும் . தோட்ட வேலை செய்தல்,
புத்தகம் அல்லது பத்திரிகை வாசித்தல்,
விளையாடுதல் ஆகியவற்றை பொழுது போக்காக
செய்தால் உடல் புத்துணர்வாகி , மனம்
அமைதி பெறும்.
தினமும் குறிப்பிட்ட நேரம் யோகாசனம்
செய்தால் ரத்த அழுத்தம் குறைந்து , மன
அழுத்தமும் குறைகிறது. ஆனால் யோகாசனம்
செய்பவர்களுக்கு எவ்வித கெட்டப் பழக்கமும்
இருக்கக் கூடாது .
மதுவகைகள், புகை பிடித்தல்,
புகையிலை பழக்கம்
ஆகியவற்றை தொடவே கூடாது. அதேபோல்
உணவு முறையில் கட்டப்பாடு இருந்தால்
மட்டுமே ரத்த அழுத்தம் சீராகும் .
யோகாசனம் செய்வதற்கு முன்பு, மனதில் அச்சம்,
பீதி, படபடப்பு, மன இறுக்கம்
போன்றவை மனதுக்குள் வைத்திருக்கக் கூடாது.
யோகாசனத்தை காலையில் செய்வது அவசியம்.
அப்படி தொடர்ந்து யோகாசனம் செய்து வந்தால்
கண்டிப்பாக மனம் நிம்மதி அடையும் .
1 comment:
அமைதி…அமைதி = நிம்மதி!
Post a Comment