அழகே வா... அருகே வா..!
அழகாக ஜொலிக்க விரும்புகிறீர்களா? உங்களுக்குத்தான் இந்த ஐடியாக்கள்...
* ஒரு நாளைக்கு குறைந்தது 3 லிட்டர் தண்ணீர் பருகுங்கள்.
* ஆறு, ஏழு மணி நேரம் தூக்கம் அவசியம். (செல்போனை நோண்டிக் கொண்டிருப்பது, சீரியல்களில் மூழ்கிவிடுவதை தவிர்த்தாலே தூங்க நேரம் கிடைக்கும். நன்றாக தூக்கமும் வரும்.)
* நார்ச்சத்து உணவுகள் அதிகமாக உட்கொள்ளுங்கள். பச்சைக் காய்கறிகளைச் சமைக்காமல் சாலட் செய்து சாப்பிடவும்.
* தினமும் இருமுறை குளிக்க வேண்டும். எத்தனை அசதியாக, சோம்பலாக இருந்தாலும் படுக்கைக்குச் செல்லும் முன் குளித்துவிட்டுப் படுக்கவும்.
* உடலுக்கும் தலைமுடிக்கும் தொடர்ந்து ஒழுங்காக எண்ணை தேய்க்கவும். அழகு சாதன பொருட்களை உபயோகித்தால் அவை மருத்துவத்தன்மையும், (ஹெர்பல்), இயற்கை தன்மையும் மிகுந்ததாக இருக்க வேண்டும்.
* பழங்கள் நிறையச் சாப்பிட வேண்டும். உடற்பயிற்சி கண்டிப்பாகச் செய்ய வேண்டும். ஒல்லியான, ஆரோக்கியமான உடல்வாகு வேண்டுமென்றால் அதற்காக நேரம் ஒதுக்கி உடற்பயிற்சி செய்ய வேண்டும்.
* படுக்கச் செல்லும் முன் ஒரு கிளாஸ் பால் குடியுங்கள். கால்சியம் கிடைக்கும். மேனி மெருகு பெறும்.
* கூடிய வரை காலநிலைக்கு ஏற்ப உடையணிய வேண்டும். மிக
அதிக வெப்பம், மிக அதிகமான குளிர் இரண்டுமே சருமத்தில் அதிகம் படக்கூடாது.
* வறுத்த, பொரித்த, மணமூட்டப்பட்ட உணவுகளை சாப்பிட வேண்டாம்.
* நள்ளிரவு வரை கண் விழிக்கக் கூடாது.
* ரசாயனங்கள் கலந்த பானங்கள், உணவுகள் வயிற்றுக்கும், காஸ்மெடிக்ஸ் வகைகள் சருமத்துக்கும் கேடு விளைவிக்கும். எனவே இவற்றைத் தவிர்க்கலாம்.
* ரோஜா இதழ்களை அரைத்து அதில் வேக வைக்காத உருளைக் கிழங்கை துருவிப்போட்டு, அரை எலுமிச்சையைப் பிழிந்து குளிர்சாதன பெட்டியில் 20 நிமிடங்கள் வைத்து எடுத்து கண்களின் கீழே தடவி வந்தால் `கருவளையம்' மறைத்துவிடும். சிலருக்கு கண்களின் வெளிப்பகுதியில் சுருக்கங்கள் இருக்கும். இதை `க்ரோபீட்' என்பார்கள். மேற்கண்ட கலவையை பூசிவந்தால் அதுவும் காணாமல் போய்விடும்.
* முதுமையில் கஷ்டப்படாமல் இருக்க வேண்டுமென்றால் இளமையில் கொஞ்சம் கஷ்டப்படுங்கள் என்று சொல்வார்கள். அழகை விரும்பினாலும் அப்படித்தான். கொஞ்சம் கஷ்டப்பட்டு சில முயற்சிகளை செய்யத்தான் வேண்டும். செய்து பாருங்களேன்!
1 comment:
அனைவருக்கும் தேவையான ஆலோசனைப் பதிவு பகிர்ந்தமைக்கு நன்றி .
Post a Comment