ஆன்மீகம் உடல்நலம் உலகம் காயகற்பம் குருபெயர்ச்சி ராசி ஜோதிடம் சம்பிரதாயம் சாஸ்திரம் வாழ்க்கை தெய்வம் நவக்கிரகங்கள் ராசி நட்சத்திரம் மருத்துவ செய்தி வாழ்க்கைக் குறிப்பு விஞ்ஞான மேதைகள் விஞ்ஞானம்...
எம். எஸ். பாடின இந்தப் பாட்ட கேட்டுருக்கீங்களா? ரொம்ப உருக்கமான பாட்டு.
குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா குறை ஒன்றும் இல்லை கண்ணா குறை ஒன்றும் இல்லை கோவிந்தா (குறை)
கண்ணுக்குத் தெரியாமல் நிற்கின்றாய் கண்ணா கண்ணுக்குத் தெரியாமல் நின்றாலும் எனக்கு குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா வேண்டியதை தந்திட வேங்கடேசன் என்றிருக்க வேண்டியது வேறில்லை மறைமூர்த்தி கண்ணா மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா
திரையின் பின் நிற்கின்றாய் கண்ணா - உன்னை மறை ஓதும் ஞானியர் மட்டுமே காண்பார் என்றாலும் குறை ஒன்றும் எனக்கில்லை கண்ணா குன்றின் மேல் கல்லாகி நிற்கின்ற வரதா குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா
கலிநாளுக்கிரங்கி கல்லிலே இறங்கி நிலையாக கோவிலில் நிற்கின்றாய் கேசவா யாதும் மறுக்காத மலையப்பா – உன் மார்பில் ஏதும் தர நிற்கும் கருணைக் கடல் அன்னை என்றும் இருந்திட ஏது குறை எனக்கு ஒன்றும் குறை இல்லை மறைமூர்த்தி கண்ணா மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா ================================ கண்ணன் குந்தி தேவிக்கிட்ட என்ன வரம் வேணும்ன்னு கேட்டப்ப, 'எனக்குஎப்பவும் ஏதாவது கஷ்டம் இருக்கணும்'ன்னு வரம் கேட்டாங்களாம். கண்ணன்ஆச்சரியமாய் 'ஏம்மா…எல்லாரும் கஷ்டமே வரக்கூடாதுன்னுதான் வரம்கேப்பாங்க…நீங்க கஷ்டம் வேணும்ன்னு கேக்கறீங்களே'ன்னு கேட்டதுக்கு, 'கண்ணா.கஷ்டம் வர்ரப்பதான் மக்களுக்கு உன் நினைப்பே வரும். நான் எப்பவும் உன்நினைப்பாவே இருக்கணும்ன்னு நினைக்கறேன். அதான் அந்த வரம் கேட்டேன்'னுசொன்னாங்களாம்.
இந்தப் பாட்டுல 'நீயிருக்கிறப்ப எனக்கு எந்த குறையும் இல்ல' அப்படின்னுஇராஜாஜி எழுதியிருக்கார்========================== M .S அம்மாபாடுன ஒரு 84 பாடல்கள் - track லிங்க் இங்கே கீழே இருக்கு.மனசு கொஞ்சம் உற்சாகமாகணும், நெனைச்சா கேட்டுப் பாருங்க..
2 comments:
ம்.. சூப்பர்..
arumaiyaana paattu .. kurai onrumillai.. ungkal therivil.. vaalththukkal
Post a Comment