இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும் - ஊக்கப்படுத்துகிறார் சாந்தானந்தர்

* உலகில் உனக்குத் துணையாகக் கடவுள் ஒருவர் தான் உள்ளார், அவரைத் தவிர இவ்வுலகில் உனக்குத் துணை வேறுயாருமில்லை என்று நீ உறுதியாக நம்பினால் தான் உனக்கு நன்மை உண்டாகும்.
*
உலகத்தை நாடகமாகப் பார்த்து வந்தால், உன்னிடத்திலுள்ள குறுகிய மனப்பான்மை ஒழிந்து அனைவரும் நல்லவர்களாகவே தோன்றுவர்.
*
நீ வழிபடும் கடவுளைத் தவிர வேறு எந்த இடத்திலும் உன் மனம் செல்லாமல் இருக்கும்படி பார்த்துக் கொள்வதே, நீ செய்ய வேண்டிய மிகப்பெரிய சாதனை.
*
கடவுள் வழிபாட்டிற்கு துணைபுரியும் இடத்தில் வாழ்வதுடன், உன்மனம் தூயதாகிவிட்டால் திருவருட்பா சக்தியை உன்னால் உணர முடியும்.
*
பணிந்திரு, அனைவரையும் வணங்கு, சிரத்தை உள்ளவனாக இரு; விசுவாசம் குறைவின்றி, இருக்கட்டும், மகான்களையும், சாஸ்திரங்களையும் பூரணமாக நம்பு; இந்த பிறவியிலேயே பேரின்பம் கிடைக்கும்.
*
முட்டாள்தனமாக நீ கோபப்படுவதற்கு உன்னிடம் என்ன இருக்கிறது, உன்னைவிட எத்தனை கோடி மேதாவிகளும், பணக்காரர்களும், உலகில் இருக்கிறார்கள் என்பதை நினைத்துப்பார்.
*
அனைத்தையும் நீ வழிபடும் தெய்வமாகவே நம்பிவிடு, சந்தேகப்படாதே; கடவுள் இல்லாத இடமே இல்லை; நீ காண்பது எல்லாம் கடவுளாகவே சத்தியமாக நம்பிவிடு, உலகமே உன்னை வணங்கும், தெய்வங்கள் அனைத்தும் உன்னைப் போற்றும், தேவாதி தேவர்கள் உனக்கு உதவி செய்ய முன்வருவார்கள்.
*
தன்னம்பிக்கையற்ற மக்கள் உலகில் ஆயிரம் கோடிபேர் இருக்கிறார்கள், அவர்களில் நீயும் ஒருவனாகாதே. இவர் போல வாழ்ந்தவர்கள்உலகில் இல்லையென சொல்லுமளவு நடந்து கொள்.
*
பேராசையினாலும், பொறாமையினாலும் உண்டாகும் துக்கத்தை இவ்வளவு தான் என வர்ணிக்க முடியாது. பேராசையும், பொறாமையும் மனித இனத்துக்குச் செய்யும் மிகப்பெரிய துரோகமாகும்.
*
கடவுளைக் காண முதலில் உன்னைத் தகுதியுடையவனாக்கிக் கொள். கடவுளை நீ தேடி ஓட வேண்டாம், கடவுள் உனக்குள்ளே காட்சிதருவார்.
*
துன்பம் வரும் போதுதான் பாவ புண்ணியத்தைப் பற்றிய நினைவுக்கு வந்து, மனிதன் தன்னைச் சீர்திருத்தம் செய்து கொள்ள வேண்டும் என்று முந்துகிறான்.
*
நெருப்பில் போடப்படும் அனைத்தும் நெருப்பாகவே மாறிவிடுவதைப் போல், கடவுளோடு சேர்ந்தவர்கள் அனைவரும் கடவுள் மயமாகவே மாறிவிடுகிறார்கள்என்பதை நினைவில் வை.
*
உலகில் பெய்யும் மழை நதி வழியாகக் கடலைச் சேருவதைப்போல் உலகில் உள்ள அனைவரும் இறைவனைச் சேர்ந்தேயாக வேண்டும். அகங்காரம் உள்ளவனுக்கு கடவுள் கோடி, கோடி மைலுக்கு அப்பால் இருந்து வருகிறார்.
*
நீ கவலையோடு இருந்தால் கடவுளைச் சத்தியமாக நம்பு. பிறகு, உனது செயலை திருந்தச் செய்தால் அச்சமோ, ஆசையோ உன்னை அணுகாது.
*
உன் உள்ளத்தெளிவு மற்றும் மன அமைதி நாசமடையாதவாறு மிகவும் ஜாக்கிரதையாகப் பார்த்துக் கொள்வதே உனக்கு நீ செய்யும் மாபெரும் ஒத்தாசையாகும். 

 

No comments: