சுகப்பிரசவம் அருளும் தாயுமானவர்

திருச்சி என்று சொன்னதும் சட்டென்று நம் நினைவுக்கு வருவது மலைக்கோட்டை. இந்த மலைக்கோட்டையில் 258 படிக்கட்டுகள் ஏறினால், தாயாகி பக்தை ஒருவருக்கு பிரசவம் பார்த்த இறைவன் தாயுமானவர் கோவிலை சென்றடையலாம். இங்குள்ள இறைவன் தாயுமானேஸ்வரர், மாத்ரு பூதேஸ்வரர் என்றும் அழைக்கப்படுகிறார். இறைவியின் திருநாமங்கள் மட்டுவார் குழலி, சுகந்த குந்தளாம்பிகை.
தாயுமானவர் மீது மிகுந்த பக்தி கொண்ட பெண் ஒருவர் காவிரியின் வடகரையில் வாழ்ந்து வந்தாள். இவளுடைய பிரசவ காலத்தில் காவிரியில் வெள்ளம் பெருகியதால் தாய், தந்தையரால் உதவி செய்ய முடியவில்லை. அந்த சமயத்தில் தன் இஷ்ட தெய்வமான தாயுமானவரை மனம் உருக வேண்டினாள். அந்த பக்தையின் கூப்பிட்ட குரலுக்கு, அவளது தாய் உருவத்திலேயே ஓடோடி வந்தார் இறைவன். பரசவ வலியில் துடித்த பெண்ணுக்கு சுகப்பிரசவம் பார்த்தார்.
இதன் காரணமாக, இத்தலத்து இறைவனை கர்ப்பிணிப் பெண்கள் வழிபட்டால் சுகப்பிரசவம் ஆகும் என்பது நம்பிக்கை.
கர்ப்பிணிப் பெண்கள் இத்தலத்து இறைவனை வழிபட்டு, திருஞான சம்பந்தரால் பாடப்பெற்ற ``நன்றுடையானை'' எனத் தொடங்கும் பதிகத்தை ஓதினால் பிரசவம் இனிதே நடைபெறும். அந்த பதிகம் உங்கள் பார்வைக்கும்...
``நன்றுடையானைத் தீயதிலானை நரை வெள்ளேறு
ஒன்றுடையானை உமையொரு பாகம் உடையானைச்
சென்றடையாத திருவுடையானைச் சிராப்பள்ளி
குன்றுடையானைக் கூற என்னுள்ளம் குளிருமே.''

2 comments:

இராஜராஜேஸ்வரி said...

`நன்றுடையானை'' எனத் தொடங்கும் பதிகத்தை ஓதினால் பிரசவம் இனிதே நடைபெறும். அந்த பதிகம் உங்கள் பார்வைக்கும்...//
Thank you for sharing useful post.

சிவ.சி.மா. ஜானகிராமன் said...

வணக்கம் அசோக் அவர்களே,

இன்னும் கொஞ்சம் விரிவாகத் தந்திருக்கலாம் எனத் தோன்றுகிறது..

மேலும் திருஞானசம்பந்தரது திருப்பதிகத்தை முழுமையாகத் தந்திருக்கலாமே ?

http://sivaayasivaa.blogspot.com

அன்பன் சிவ.சி.மா.ஜா