எல்.டி., பிரச்சினை உள்ள குட்டீசா?


குழந்தையின் அறிவுக் கூர்மையை அறிந்தால் படு வியப்பாக இருக்கும்; ஆனால், படிப்பில் படுமந்தமாக இருக்கும். தேர்வுகளில் மிகவும் குறைவாகவே மதிப்பெண் வாங்கும். இப்படிப்பட்ட குழந்தைகள் தான் லேர்னிங் டிசேபிலிட்டி(எல்.டி.,) கோளாறு உள்ளதாகக் கருதப்படுகிறது. எல்லாவற்றையும் தெளிவாகப் பேசுவதாகத் தெரிந்தாலும், ஒரு விஷயத்தை கிரகித்துக் கொள்ளும் அளவுக்கு வெளிப்படுத்த முடியாமல் போவது தான் இந்த குறைபாடு.
எல்.டி., என்றால் என்ன?

எல்.டி., என்பது, குழந்தைகள் சிலருக்கு எந்த ஒரு விஷயத்தையும் புரிந்து கொள்ளத் தெரியாது; அது போல, தெரிந்த விஷயத்தை ஒன்றுடன் ஒன்று சேர்த்து புரிந்து கொள்ளவும் முடியாது.
சில சமயம், ஒரு அரிய விஷயத்தைப் புரிந்துக் கொள்வதைப் பார்த்து வியப்பாக இருக்கும்; அதையே எழுதும் போதும், திரும்பச் சொல்லும் போதும் மந்தத் தன்மை இருக்கும்.
மூளை கட்டமைப்பில் உள்ள கோளாறு தான் காரணம். சுரப்பி இயங்குவது சீராக இல்லாத போதும் இந்தப் பிரச்சினை ஏற்படும். இந்தப் பிரச்சினைக்கு உள்ளான குழந்தைகள், படு திறமைசாலியாக இருப்பர்; சில குழந்தைகள் திறமை குறைவாக இருப்பர்.
படிக்கும் போதும், எழுதும் போதும், அப்படி கற்ற விஷயத்தை, கணித்ததை மீண்டும் சோதித்துப் பார்க்கும் போது, அறவே முடியாத நிலை தான் எல்.டி., இதனால் தான் தேர்வுகளில் இப்படிப்பட்ட குழந்தைகள் தொடர்ந்து தோல்வி அடைகின்றனர்.
எத்தனை வகை?
படித்தறிவதில், பல விஷயங்கள் இருக்கின்றன; படித்ததை எழுதத் தெரிவது, பகுத்தறிவது, நினைவில் பதிந்து கொள்வது போன்றவை எல்லாம் படிப்பறிதல் சார்ந்தவை. டாக்டர்கள் நுண்ணியமாக பல வகை எல்,டி.,க்கள் உள்ளன.
டிஸ்லெக்சியா:
எல்,டி.,க்களில் பொதுவானது இது. இந்த வகைப் பிரச்சினை உள்ளவர்களுக்குப் பெரும்பாலும் மொழிப்பிரச்சினை தான் ஏற்படும். இந்தக் கோளாறு உள்ள குழந்தைகளுக்குப் பொதுவாக வார்த்தைகளை தலைகீழாகத்தான் பேச வரும். சில வார்த்தைகளை அழுத்தி உச்சரிப்பர்; சில வார்த்தைகளை லேசாக உச்சரிப்பர்.
டிஸ்கால்குலியா:
கணிதத்தில் மந்தமாக இருப்பது தான் இந்தப் பிரச்சினை. கூட்டல், கழித்தல் போன்றவை கூட இந்த வகை குழந்தைகளுக்கு தகறாராக இருக்கும். எண்களில் அடிக்கடி குழப்பம் வரும்.
டிஸ்கிராபியா:
நான்கு வார்த்தைகளைக் கூட சரியாக எழுதத்தெரியாது; உருவத்தையும் மாற்றி, மாற்றி எழுதுவர். தெளிவாகவே இருக்காது. இதுபோல, இந்த வார்த்தைகளை உச்சரிக்கும் போதும் சரியாக இருக்காது. விஷயத்தை உள்வாங்குவதிலும் இந்த பாதிப்புள்ளவர்கள் மிகவும் கஷ்டப்படுவர்.
ஆட்டிசம்:
எல்லாரும் ஜாலியாக சிரித்துக் கொண்டிருப்பர்; ஆனால், இந்த வகை குழந்தைக்கு மட்டும் அதை அனுபவிக்கத் தெரியாது. அவர்களுடன் சேரவும் மாட்டார்கள். ஒரே மாதிரியாகத் தான் பேசுவர்; படிப்பிலும் சொன்னதைத் திரும்பத் திரும்பச் சொல்வர்.
ஏ.டி.எச்.டி:
அடென்ஷன் டெபிசிட் அண்ட் ஹைபர் ஆக்டிவிட்டி டிசார்டர் என்பதன் சுருக்கம் தான். துறுதுறுவுக்கு குறைவே இருக்காது; ஆனால், புரிந்ததை சொல்லத் தெரியாது.
காரணம் என்ன?
மூளையில் உள்ள நரம்பு மண்டல கோளாறு இது; அசாதாரணமாக இயங்குவதால் ஏற்படுகிறது. பேசுவது, எழுதுவது, புரிந்ததை சொல்வது, கிரகித்துக் கொள்வது என்று எதிலும் மந்தமாக இருப்பதற்கு இது தான் காரணம் என்று சொல்ல முடியாது.
மூளையில் உள்ள அசாதாரண இயக்கம் காரணமாக இருந்தாலும், பரம்பரைக் கோளாறு என்றும் சொல்கின்றனர் நிபுணர்கள். தாய், தந்தை இருவரோ, இருவரில் ஒருவரோ மதுப் பழக்கத்துக்கு ஆட்பட்டதால், பிரசவத்திலேயே கருவை பாதித்திருக்கலாம்; கருத்தரிப்பின் போது சாப்பிட்ட மருந்து, மாத்திரைகள் கூட காரணமாக இருக்கலாம்.
பிறந்து, தவழ்ந்து பேச ஆரம்பிக்கும் போதே இந்தக் கோளாறை கண்டுபிடித்து விடலாம். இரண்டு கிலோவுக்கு குறைவாக பிறப்பது, பத்து மாதத்துக்கு முன்பே பிறப்பது, போதுமான சத்துக்கள் கிடைக்காத நிலை ஆகியவை முக்கியக் காரணமாக உள்ளன.
மனக்கோளாறா இது?
இப்படித்தான் சில பெற்றோர், தங்கள் குழந்தையின் நிலையைப் பார்த்து முடிவு கட்டுகின்றனர். இது தவறு ‘டிஸ்ப்ராக்சியா’ பாதித்த குழந்தை, மற்ற ஒத்த வயதுள்ள குழந்தையை விட, மிக தாமதமாகத்தான் நடக்க ஆரம்பிக்கும்.
எனினும், படிக்க பள்ளிக்கு அனுப்பும் வரை இந்தக் கோளாறு பற்றி கண்டுபிடிக்க முடியாது.
பள்ளியில் ஆசிரியர்கள் இத்தகைய குழந்தைகளைக் கண்டுபிடித்து கூற முடியும். அப்போது விசேஷ பள்ளியில் போட்டாலே போதும்.
இது ஒரு வியாதி அல்ல. அதனால், மருந்து, மாத்திரையால் குணப்படுத்த முடியாது. அதே சமயம், குழந்தைப் பருவத்தில் இருந்தே ‘ஸ்பெஷல் ஸ்கூலில்’ சேர்த்து சரி செய்து விடலாம். அப்புறம், படிப்பில் ‘பட்டய’ கிளப்பி விடுவார்கள்.

1 comment:

சுதர்ஷன் said...

நன்றி இவ்வாற நோய் பிரச்சனைகள் பல தெரிந்திருப்பதில்ல்லை .. தகவலுக்கு நன்றி :)
http://ethamil.blogspot.com/2011/02/blog-post_15.html