வில்லேந்திய வேலவன்

கடலூர் மாவட்டம் நெய்வேலி பஸ்ஸ்டாண்டிலிருந்து 3 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ள திருத்தலம் வில்லுடையான்பட்டு. இங்கு முருகன் வள்ளி, தெய்வானையுடன் வேலுடன் வில்லையும் ஏந்திஅருள்பாலிக்கிறார். அத்துடன் பாதங்களில் குறடு அணிந்து காணப்படுவதால்,இங்கு வழிபடும் பக்தர்கள் பாதக்குறடுகளை காணிக்கை பொருளாக செலுத்துகின்றனர். இந்த வில்லேந்திய வேலவனைப்பற்றி அருணகிரிநாதர் திருப்புகழில்,”சூலம், வாள், தண்டு செஞ்சேவல் கோதண்டமுஞ் சூடு தோளுந் தடந்திரு மார்பும் தூய தாள் தண்டையுங் காண ஆர்வஞ் செய்யுந்தோகைமேல் கொண்டு முன் வர வேணும்” என பாடியுள்ளார்.



சவுந்தர்ய லஹரி
ஜபோ ஜல்ப: சில்பம் ஸகலமபி
முத்ரா விரசனா
கதி: ப்ராதக்ஷிண்ய க்ரமண
மசனாத்யாஹுதி விதி:!
ப்ரணாம: ஸம்வேச: ஸுகமகில்
மாத்மார்ப்பண த்ருசா
ஸபர்யா பர்யாயஸ் தவ பவது
யன்மே விலஸிதம்!!
பொருள்: லோக மாதாவே! என்னையே உனக்கு அர்ப்பணித்து விட்டேன். எனவே, நான் சாதாரணமாக பேசுவதைக்கூட துதிப்பாடலாக எடுத்துக்கொள். என் ஒவ்வொரு அசைவையும் உனது முத்திரைகளின் அசைவாக நினைத்துக்கொள். நான் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியையும் உன்னை சுற்றிவருவதாக கருதிக்கொள். நான் சாப்பிடுவதை எல்லாம் உனது ஹோமப்பொருளாக கருதிக்கொள். நான் படுத்துக் கொள்வதை உனது காலடியில் விழுந்து ஆசிபெறுவதாக எண்ணிக்கொள். எனது சொந்த சுகத்திற்காக நான் செய்கிற எல்லாச் செயல்களையும் உனக்கு செய்யும் பூஜையாக நினைத்துக் கொள்.

No comments: