ஒளி எங்கிருந்து வருகிறது?

Image
ஜனக மகாராஜன், ஓர் ஆன்மீக ஞானி. இவருக்கு, ஞானிகளின் சபையைக் கூட்டி விவாதங்கள் மூலம் வாழ்க்கைப் பேருண்மைகளை அறிவதில் எல்லையற்ற ஆசை. அன்றும் ஒரு விவாதம் அரங்கேறியது. யாக்ஞ்வல்கி என்ற வேதங்களில் வித்தாக விளங்கிய மகரிஷிக்கும், கார்கி என்ற அறிவிற் சிறந்த பெண்ணுக்கும் அறிவுப் போர் ஆரம்பமானது.
‘மகரிஷியே! ஒளி எங்கிருந்து வருகிறது?’ என்று கேட்டாள் கார்கி,
‘சூரியனிடமிருந்து; என்றார் மகஷிரி. விவாதம் தொடர்ந்தது.
‘சூரியன் இல்லாத போது?’’

 
‘சந்திரனிடமிருந்து ஒளி கிடைக்கும்!’
‘சூரியனும் சந்திரன் இல்லாத போது?’’
சூரியனும் சந்திரனும் இல்லாத நேரங்களில்?
‘நட்சத்திரங்களிலிருந்து ஒளி கிடைக்கும்
நட்சத்திரங்கள் இல்லாத நேரங்களில்?
நெருப்பிலிருந்து ஒளி கவரும்
நெருப்பு இல்லாத போது?
‘பேசும் பேச்சிலிருந்து வரும்
பேச்சற்றுப் போகும் போது எங்கிருந்து ஒளி வரும்? என்று கேட்டாள் கார்கி.
பெண்ணே! எந்த ஒளியும் இல்லாத போது அவரவர் ஆன்ம ஒளி வழிகாட்டும்.
ஒவ்வொருவரின் ஆன்ம ஒளியைப் பெருக்கும் அற்புத சாதனங்கள் தியானமும், பிராத்தனையும்! சுயநல்மாக சுருங்கி விடாமல், உலகம் தழுவிய அன்பைப் பொழிவதே பிரார்த்தனையின் மூல மந்திரம் என்பதை முதலில் நாம் புரிந்து கொள்வோம். பிரார்த்தனை, பிரபஞ்ச அன்பாக பெருக வேண்டும். தீயிடம் ஒப்படைக்கபட்ட விறகுக் கட்டை, தானே தீயாவது போல்... பிரார்த்தினை மூலம் தெய்வத்தைச் சேர்பவன், தானே தெய்வம் ஆகிறான்.

Image
‘மனிதன் அழியாத பரம்பொருளின் வடிவம்’ என்கிறது மெய்நூல். பரம் பொருள், ஒரு தேகத்துக்குக் கட்டுண்டு ஜீவனாகத் தன்னை உணர ஆரம்பிப்பதே மயக்கம், மாயை! 
நான் என்னும் ஓர் அகந்தை எவர்க்கும் வந்து
நலிந்தவுடன் ஜ்கமாயை நானவாகி
தான்வந்து தொடரும் இத்தால் வளரும் துன்பச்
சாகரத்தின் பொருமை எவர் சாற்றவல்லார்!
ஊனென்றும் உடலென்றும் கரணம் என்றும்
உள் என்றும் புறம் என்றும் ஒழியா நின்ற
வான் என்றும் கால் என்றும் தீநீர் என்றும்
மண் என்றும் மலை என்றும் வனமது என்றும்
மலைமலையாம் காட்சிகண் காணாமை ஆதி
மறப்பு என்றும் நினைப்பு என்றும் மாயாவாரி
அவை அலையாய் அடிக்கும் இன்ப துன்பம் என்றும்
அதை விளைக்கும் வினை என்றும் அதனைத் தீர்க்கத்
தலைபலவாம் சமயம் என்றும் தெய்வம் என்றும்
சாதகர் என்றும் அதற்குச் சாட்சி ஆகக்
கலைபலவாம் நெறி என்றும் தர்க்கம் என்றும்
கடல் உறும் நுண்மணலை எண்ணிக் காணும் போதும்
காணறிய அல்லல் எல்லாம் தானே
கட்டுக்கட்டாக விளையும்.
- இது  தாயுமானவரின் பாடல்.
அகந்தையைக் களைந்து, தன்னை அறியும் ஓர் உள் நோக்கிய பயணமே சகல கட்டுகளில் இருந்தும் மனிதனை விடுவிக்கும் வழி.
- கிருஷ்ணன், சிங்கை -

No comments: