கண்களை கண்காணித்தல் அவசியம்!

கோடையில்
சூடு காரணமாக பாதிக்கப்படும் உறுப்புகளில்
முக்கியமானது கண் ! கண்வலி, கருவளையம்
என்று கண் பாதிப்பின்
வெளிப்பாடு நமக்கு தெரியும்போது,
உடனே அதற்கான சிகிச்சையை எடுப்பது நல்லது.

கண்ணுக்குக் கீழே உள்ள ரத்த நாளங்களில்
இருந்து சிவப்பணுக்கள் வெளியே அருகே உள்ள
சருமப் பகுதிக்குச்
சென்றுவிடும்போது கண்களைச்
சுற்றி கருவளையம் ஏற்படுகிறது . உங்கள்
உடம்பில் உள்ள நொதிகள் அந்த ரத்த
சிவப்பணுக்களை உடைக்கின்றன . `ஹíமோகுளோபின்’
உடைக்கப்படும்போது மீதமுள்ள பகுதிகள்
அடர்நíல - கறுப்பு நிறம் அடைகின்றன.
அவை தோலில் ஏற்படும் சிராய்ப்பு போல
கருவளையங்களை உண்டாக்குகின்றன .
எனவே கண்களுக்குக் கீழே ஏற்படும்
கருவளையமானது , ரத்த நாளங்களின்
இருந்து வெளியேறுபவற்றால் உருவாவதுதான்.
கண்களைச் சுற்றியுள்ள சருமம் மென்மையாகவும்,
ரத்த நாளங்கள் சரும வெளிப்பரப்பு மிக
அருகில் இருப்பதாலும் கருவளையங்கள்
` பளிச்’சென்று தெரிகின்றன. பலருக்குக்
கண்களுக்குக் கீழே உள்ள சருமம்
ஒளி ஊருவக்கூடியதாகவும் இருக்கிறது.
அதுவும் கருவளையங்கள் தெளிவாகத்
தெரிவதற்கு ஒரு முக்கியக் காரணம். நீங்கள்
ஜலதோஷம் அல்லது சைனஸால்
பாதிக்கப்பட்டிருக்கும்போது கண்களுக்குக்
கீழே உள்ள ரத்தக் குழாய்களுக்கு அழுத்தம்
அதிகரிப்பதாலும் கருவளையம் ஏற்படுகிறது.
தவறான கண்ணாடி, அலர்ஜிகள் போன்றவையும்
கருவளையங்களுக்குக் காரணமாக அமையலாம்.
கண்களுக்கு ஒரு மலர்ச்சியை அளிக்கவும்,
கண்களுக்குக் கீழே நிற மாற்றத்தைத்
தவிர்க்கவும் வெள்ளரித் துண்டுகள்
நீண்டகாலமாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
`டீ பேக்’கை வெநëநீரில் நனைத்து கண்களுக்குக்
கீழே ஒத்தடமிடலாம். அதில் உள்ள `டானின்’
பலனளிக்குமë. நிறையத் தண்ணீர் குடிப்பதும்
நல்லது.

1 comment:

இராஜராஜேஸ்வரி said...

கண்ணான தகவல்களுக்கு நன்றி.