கொழுப்பு கல்லீரல் பற்றி தெறிந்து வைத்திருப்பது மிகவும் தேவை

 கொழுப்பு கல்லீரல் அமைதியாக ஒரு வீட்டுப் பிரச்சினையாக மாறி வருகிறது, குறிப்பாக உட்கார்ந்தே வேலை செய்யும் பழக்கவழக்கங்களும் பதப்படுத்தப்பட்ட உணவுகளும் முக்கிய இடத்தைப் பிடிக்கின்றன. 

ஆனால் இங்கே ஒரு ஆறுதலான சிந்தனை உள்ளது, உணவும்


குணமடையக்கூடும். ஹார்வர்டில் பயிற்சி பெற்ற கல்லீரல் மற்றும் குடல் நிபுணர் டாக்டர் சௌரப் சேத்தி, ஆரோக்கியமான வாழ்க்கை முறையுடன் இணைந்தால், கொழுப்பு கல்லீரலை மாற்றியமைக்க உதவும் 4 குறிப்பிட்ட சிற்றுண்டி சேர்க்கைகளுக்கு கவனத்தை ஈர்த்துள்ளார். இவை சீரற்ற ஆரோக்கியமான உணவுகள் மட்டுமல்ல, அவை கல்லீரல் கொழுப்பு வளர்சிதை மாற்றம், வீக்கம் மற்றும் குடல் ஆரோக்கியத்தை எவ்வாறு பாதிக்கின்றன என்பதன் அடிப்படையில் கவனமாக தேர்ந்தெடுக்கப்படுகின்றன.


மூல நோய்க்கு கட்டாயம் சாப்பிடக்கூடாத 5 உணவுகள்..!

 1.பசையம் நிறைந்த உணவுகள்: பசையம் அதிகம் உள்ள உணவுகள் மலச்சிக்கல் மற்றும் பைல்ஸை ஏற்படுத்தும். ஏனென்றால், சில உணவுகளில் உள்ள பசையம் (புரதம்) குடல் சுவர்களில் ஒட்டிக்கொண்டு செரிமான செயல்முறையைத் தொந்தரவு செய்யும்.




கோதுமை, பார்லி போன்ற தானியங்களில் பசையம் எனப்படும் புரதம் காணப்படுகிறது. பசையம் சிலருக்கு ஆட்டோ இம்யூன் நோய்க்கு வழிவகுக்கும் மற்றும் செரிமானத்தை கடுமையாக சேதப்படுத்தும். இதனால் மலச்சிக்கல் பிரச்சனை ஏற்பட்டு, அது பின்நாளில் பைல்ஸ் நோயாக உருவெடுக்க வழிவகுக்கிறது.

2. பசும்பால் அல்லது பால் பொருட்கள்: சிலருக்கு, பசும்பால் அல்லது அதிலிருந்து தயாரிக்கப்படும் பால் பொருட்கள் மலச்சிக்கல் மற்றும் பைல்ஸ் நோயை உருவாக்கும். ஏனெனில் பசும்பாலில் உள்ள புரதமும் மலச்சிக்கலை ஏற்படுத்தக்கூடியது என பல ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது. பசும்பாலுக்கு பதிலாக சோயா பால் பயன்படுத்தலாம்.

3. சிவப்பு இறைச்சி: சிவப்பு இறைச்சியை உட்கொள்வது மலச்சிக்கலால் ஏற்படும் மூல நோய்க்கு காரணமாக இருக்கலாம். ஏனெனில் சிவப்பு இறைச்சியில் மிக குறைவான நார்ச்சத்துக்கள் உள்ளன மற்றும் கொழுப்பின் அளவும் அதிகமாக உள்ளது. இதன் காரணமாக அதனை உடலால் எளிதில் ஜீரணிக்க முடியாமல் போகிறது. இதனால் உருவாகும் கழிவையும் வெளியேற்றுவது மிகப்பெரிய சிக்கலாக உள்ளது. எனவே மூலநோயில் இருந்து தப்பிக்க சிவப்பு இறைச்சியை குறைவாக எடுத்துக்கொள்வது நல்லது.

4.பொரித்த மற்றும் ஃபாஸ்ட் புட் உணவுகள்: பொரித்த அல்லது ஃபாஸ்ட் புட் உணவுகளை அதிக அளவில் சாப்பிடுபவர்களுக்கு பைல்ஸ் பிரச்சனை வரலாம். ஏனெனில், சிவப்பு இறைச்சியைப் போலவே, இந்த உணவுகளிலும் நார்ச்சத்து குறைவாகவும், கொழுப்புகள் அதிகமாகவும் உள்ளது. அதற்கு பதிலாக, நீங்கள் பச்சை காய்கறிகள் மற்றும் பழங்களை எடுத்துக்கொள்வது சரிவிகித உணவுக்கான சரியான தேர்வாக அமையும்.

5. ஆல்கஹால்: மதுவில் உள்ள ஆல்கஹால் உடலில் நீரிழப்பை ஏற்படுகிறது, இதனால் ஏற்படும் வறட்சி, மலச்சிக்கல் பிரச்சனையை தீவிரமாக்குகிறது. இந்த மலச்சிக்கல் பிரச்சனையானது மலம் எளிதில் வெளியேறுவதை தடுப்பதோடு பைல்ஸ் நோயையும் உண்டாக்குகிறது.

இனிய தைப்பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்


🌾 சங்ககாலத்தில் அறுவடை காலத்தில் நல்ல மழை பெய்யவும், நாடு செழிக்கவும் பெண்கள் விரதத்தைக் கடைபிடிப்பார்கள். தை முதல் தினத்தில் இந்த விரதத்தை முடிப்பார்கள். நல்ல விளைச்சல் கொடுத்தமைக்காக பூமி, சூரியன், உதவிய மாடு போன்றவற்றிற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக சர்க்கரைப் பொங்கல் படைத்து வழிபட்டனர்.

இதுவே நாளடைவில் நான்கு தினங்கள் கொண்டாடும் பொங்கல் கொண்டாட்டமாக மாறியது.

🌾 பொங்கல் பண்டிகையைப் பொறுத்தவரையில் எக்காலத்திலும் விவசாயம் சம்பந்தபட்டதாகவே இருந்துள்ளது என்பது யாரும் மறுக்க இயலாத உண்மையாக இருந்து வருகிறது. இந்திர விழா என்ற பெயரில் இலக்கிய காலத்திலேயே இருந்துள்ளது. இப்போது போகிப்பண்டிகை, தைப்பொங்கல், மாட்டு பொங்கல், காணும் பொங்கல் என்று நான்கு நாட்கள் கொண்டாடப்படுகிறது.

🌾 இவ்விழா நாளில் பகைமை, பசி நோய் நீங்க இறைவன் பிரார்த்தனை செய்யப்பட்டது. மழைக்குரிய தெய்வம் இந்திரன், அவரை வழிபட்டால், மாதம் மும்மாரி மழை பெய்து பயிர் செழிக்கும் என்பது மக்கள் நம்பிக்கை.பொங்கல் பண்டிகையைப் பொறுத்தவரையில் எக்காலத்திலும் விவசாயம் சம்பந்தபட்டதாகவே இருந்துள்ளது என்பது யாரும் மறுக்க இயலாத உண்மையாக இருந்து வருகிறது. இந்திர விழா என்ற பெயரில் இலக்கிய காலத்திலேயே இருந்துள்ளது. இப்போது போகிப்பண்டிகை, தைப்பொங்கல், மாட்டு பொங்கல், காணும் பொங்கல் என்று நான்கு நாட்கள் கொண்டாடப்படுகிறது. இவ்விழா நாளில் பகைமை, பசி நோய் நீங்க இறைவன் பிரார்த்தனை செய்யப்பட்டது. மழைக்குரிய தெய்வம் இந்திரன், அவரை வழிபட்டால், மாதம் மும்மாரி மழை பெய்து பயிர் செழிக்கும் என்பது மக்கள் நம்பிக்கை.

தைப் பொங்கல் என்பது நமக்கு நெல்லை விளைவிக்க எவையெல்லாம் உதவியதோ அவற்றிற்கெல்லாம் நன்றிகூறி வழிபடுவது. புதிதாக விளைந்த நெல்லை அறுவடை செய்து அரிசியாக்கி பொங்கலிட்டு இயற்கைத் தெய்வத்துக்கும், சூரியன், மாடு உட்பட உதவிய எல்லாவற்றிற்கும் நன்றி செலுத்துவதே பொங்கல். இந்தப் பண்டிகை தொடர்ச்சியாக நான்கு நாட்கள், நகரம் முதல் கிராமங்கள் வரை விழாவாக கொண்டாடப்படுகிறது.

1. முதல்நாள் போகி பண்டிகை. இந்நாள் இந்திரனுக்காக ஆயர்களால் கொண்டாடப்படும் விழாவாகும்.

2. இரண்டாம் நாள் சூரியன் பொங்கள். சூரிய பகவானுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக கொண்டாடப்படும் பண்டிகையாகும்.

3. மூன்றாம் நாள் மாட்டுப்பொங்கல். உழவுத் தொழிலுக்கு துணையாக விளங்கிய இயற்கைக்கும், கால்நடைகளுக்கும் நன்றி கூறும் நாளாகும்.

4. நான்காம் நாள் காணும் பொங்கல்.

🌾 அறுப்புக் களத்தில் அறுத்த நெற்கதிர்களில் சிலவற்றை அழகாகப் பின்னி ஒரு அலங்காரம் போல் செய்து (அதிலிருக்கும் நெல் மணிகளுக்கு கொஞ்சமும் சேதம் வராமல்) அதை வீட்டு முன் வாசலில் தொங்க விடுவார்கள். சிறு சிட்டுக் குருவிகள் அந்த நெற்கதிர்களை அவற்றின் மேலேயே அமர்ந்து கொத்தித் தின்னும். அப்போது அந்த நெற்கதிர்ப் பின்னல் ஆடுவது பார்க்க அந்தக் குருவி ஊஞ்சலாடுவது போல அவ்வளவு அழகாக இருக்கும்.

🌾 குருவிகளுக்காகவேதான் அவற்றைப் பின்னுவார்கள். தனக்குக் கிடைத்த உணவை மற்ற உயிரினங்களோடும் பகிர்ந்துண்ணும் தமிழனின் பெருந்தன்மை அதில் தெரியும்.

🌾 பொங்கல் பண்டிகையின் முக்கிய பங்காக இருக்கும் கரும்பானது உழைப்பின் அருமையை நமக்குக் கற்றுத்தருகிறது. அதன் மேல்பகுதி உப்புத்தன்மையுடனும், அடிக்கரும்பு இனிமை மிக்கதாகவும் இருக்கும். வாழ்க்கையும் அப்படித்தான். இளமையில் கஷ்டப்பட்டு உழைக்க எந்த வித தயக்கமும் கொள்ளக்கூடாது. அப்படியானால் தான் முதுமையில் சிரமமில்லாமல் இனியவாழ்வு வாழ முடியும். இந்த உண்மையை உணர்ந்து கரும்பைச் சுவைக்க வேண்டும். உழைத்து வாழ்வில் முன்னேற்றம் பெற கரும்பு நமக்கு ஒரு நல்ல உதாரணம் என்றால் அது மிகையாகாது.

கோடை காலத்தில் வாயு பதார்த்தங்களை தவிர்ப்பது நல்லது.

இந்த கோடை காலத்தில் பொதுவாகவே அமிலத்தன்மை உடலில் உருவாகும் .அதனால் அதை தவிர்க்க வாயு பதார்த்தங்களை கோடை காலத்தில் தவிர்ப்பது நல்லது.

இன்று நேரம் தவறி சாப்பிடுவதாலும் ,முறையற்ற உணவு பழக்கத்தாலும் ,பலர் அசிடிட்டி பிரச்சினையால் அவதிப்படுகிறார்கள் .அதனால்தான் ‘உணவை குடி ,தண்ணீரை மெல்’ என்று ஆயுர்வேதத்தில் உணவு உண்ணும் முறை பற்றி கூறியுள்ளனர் .உணவு விஷயங்களில் சில வழிமுறைகளை கடைப்பிடிப்பதன் மூலம் அசிடிட்டி பிரச்சினைக்கு தீர்வு கண்டுவிடலாம்.

மேலும் துரித உணவு வகைகளை அதிகமாக சாப்பிடுவது, வேகமாக சாப்பிடுவது, உணவை மென்று சாப்பிடாமல் அப்படியே விழுங்குவது போன்றவை அசிடிட்டி பிரச்சினை ஏற்படுவதற்கான பொதுவான காரணங்களாகும்..

முதலில் உணவை மெதுவாக மென்று சாப்பிடுவதற்கு பழகிக்கொள்ள வேண்டும். மூன்று வேளை உணவையும் சீரான இடைவெளியில் சாப்பிட வேண்டும். ஒருபோதும் அதிக இடைவெளி விட்டு சாப்பிடக்கூடாது.

உலர் திராட்சை அசிடிட்டி ஏற்படாமல் தடுக்க உதவும். உலர்திராட்சையை இரவு முழுவதும் ஊற வைத்துக்கொள்ள வேண்டும். காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் ஒரு டம்ளர் தண்ணீர் பருகிவிட்டு பின்பு ஊற வைத்த உலர்திராட்சையை மென்று சாப்பிடலாம். பனங்கற்கண்டும் அசிடிட்டியை போக்கும்தன்மை கொண்டது. இயற்கையாகவே உடலில் அமிலத்தன்மையை சமநிலையில் பராமரிப்பதற்கு பனங்கற்கண்டு உதவும்.

சிறுநீரகத்தை சுத்தம் செய்ய சில எளிய டிப்ஸ் உங்களுக்காக...

கைப்பிடி அளவு கொத்தமல்லி தழைகள், அரை ஸ்பூன் சீரகம், அரை டம்ளர் எலுமிச்சை பழம் சாறு மற்றும் ஒரு டம்ளர் தண்ணீர் ஆகியவற்றை ஒன்றாக கலந்து அடுப்பில் வைக்கவும். அது பாதியளவு சுண்டும் வரை கொதிக்க வைத்து ஆறிய பிறகு வடிகட்டி மூன்று நாட்கள் தொடர்ந்து காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் சிறுநீரகம் சுத்தமாகும். இதனை குழந்தைகளுக்கும் கொடுக்கலாம்.

அரிட்டாபட்டி குளமும் அங்கு உலவும் லகடு வல்லூறும்!

 


வரலாற்றில் மதுரைக்குப் பல பெயர்கள். அவற்றில் ஒன்று எண்பெருங்குன்றம். அதற்கு எட்டு பெரும் குன்றுகள் சூழ்ந்த ஊர் என்று பொருள். அதில் ஒரு குன்று அரிட்டாபட்டி. இதை திருப்பிணையன் மலை, கழிஞ்சமலை என்றும் சொல்கிறார்கள்.

மதுரையிலிருந்து 17 கி.மீ தொலைவில் யானைமலைக்கு வடக்கே, திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் நரசிங்கம்பட்டிக்கு வடமேற்கே அமைந்துள்ளது அழகிய அரிட்டாபட்டி மலைக்குன்று. இதை ஒட்டி அமைந்துள்ளது அரிட்டாபட்டி கிராமம்.

கரும்பு சாற்றில் எவ்வளவு நன்மைகள் இருக்கு தெரியுமா? நீங்களே பாருங்கள் ஆச்சர்யப்படுவீர்கள்!

ரோட்டு ஓரத்தில் இருக்கும் கடையில் #கரும்புஜூஸ் வாங்கி குடிப்பீர்களா?
 

நாம் அதிக பணம் கொடுத்து விலையுயர்ந்த கெமிக்கல் நிறைந்த உடலுக்கு தீங்கு செய்யக் கூடிய கார்பனேட்டட் பானங்களை வாங்கி சாப்பிடுகிறோம். அது தீமை என்று தெரிந்தும் நீ சாப்பிடு கிறோம் ஆனால் எளிதில் கிடைக்கக்கூடிய இந்த கரும்பு சாற்றில் எவ்வளவு நன்மைகள் இருக்கு தெரியுமா? நீங்களே பாருங்கள் ஆச்சர்யப்படுவீர்கள்.

கரும்பு சாரு அடிக்கடி சாப்பிடுவதால் உங்கள் உடலில் தீங்கு விளைவிக்கும் நச்சுகள் மற்றும் பிற தேவையில்லாத கூறுகளை நீக்கி உடலைத் தூய்மைப் படுத்துவதில் உதவுகிறது. மேலும் உடலில் உள்ள நச்சுத்தன்மை நீங்குவதால் படிப்படியாக உங்கள் உடல் எடை குறைய வழிவகுக்கிறது.

அதுமட்டுமல்ல கரும்புசாறு என்பதே நமது உடலுக்கு உடனடி ஆற்றலை தரும் சிறந்த ஒன்றாகும். உங்களுக்கு மிகவும் தாகமாக இருந்தால் கெமிக்கல் நிறைந்த பானங்களை தவிர்த்து கரும்பு சாற்றை சாப்பிட்டு பாருங்கள் அது உங்களுக்கு புத்துயிர் அளித்து உங்கள் மனநிலையை புதுப்பிக்கும் தன்மை உடையது. அதே போன்று விட்டமின் சி அதிகமாக கரும்புசாறுகளில் காணப்படுகிறது. இது தொண்டைப்புண் வயிற்றுப்புண் குணமாக உதவுகிறது. மேலும் கரும்பு சாறு என்பது வைரஸ்கள் மற்றும் பாக்டீரியா நோய்த் தொற்றுகளை தடுக்கக்கூடிய எதிர்ப்பொருட்களின் ஒரு வளமான மூலமாகவும்.

அதே போன்று உங்கள் தொண்டையில் அரிப்பு அல்லது எரிச்சல் இருப்பது போல் உணர்ந்தால் கரும்பு சாற்றை தொடர்ந்து குடித்து வரும்போது அவை மறைந்துவிடும்.

சிலருக்கு பருக்கள் வலிமை இழந்து பற்களின் ஈறுகள் மிகுந்த சேதமடைந்து இருக்கும் இவர்கள் கரும்பு சாறு தொடர்ந்து சாப்பிடுவதால் பற்களுக்கு வலிமை அளிக்கிறது. உடலில் உள்ள நீர்ச்சத்து குறையாமல் தடுக்கிறது. மேலும் இதனால் இதயம் மற்றும் நுரையீரலுக்கு பலம் அளிக்கிறது. வயிற்றுப் புண்களை சரிசெய்யும் மலச்சிக்கலைப் போக்குகிறது.

பொதுவாக உடல் எரிச்சல் என்பது மிகவும் கொடுமையான ஒன்றாகும் இதற்கு கரும்பு சாற்றுடன் தயிர் சேர்த்து சாப்பிடுவதன் மூலம் உடலில் ஏற்படும் எரிச்சலை சரி செய்யலாம். இது உடல் சூட்டை குறைக்கும் குணமுடையது. நமது உடலின் அனைத்து இயக்கங்களையும் மூளைதான் நிர்வாகம் செய்கிறது. அந்த வகையில் கரும்பு சாறு அருந்துவதன் மூலம் மூளையின் செயல்பாட்டை அதிகரித்து எப்போதும் சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ள இது உதவுகிறது. மேலும் கரும்பு சாற்றில் உள்ள பொட்டாசியம் உங்கள் வயிற்றின் அளவுகளை சமன் செய்ய உதவுகிறது. மற்றும் செரிமான சாருகள் சுரக்கவும் இது உதவுகிறது. பொதுவாக பெரும்பான்மையான செரிமான சிறப்புகள் சுரக்க கல்லீரலே முதல் காரணமாக இருக்கும். கல்லீரல் நன்கு செயல்புரியவும் செரிமான சிறப்புகள் நன்கு சிறக்கவும் கரும்பு பெரும் துணை புரிகிறது. சித்த மருத்துவத்தின் படி உடலில் அதிகரித்து பித்தத்தை கரும்பு சமநிலை படுத்தும்.

சிறுநீர் சீராக வெளியாவதில் சிக்கல் சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல் உள்ளிட்ட பிரச்சினைகள் உள்ளவர்களுக்கு இது நல்ல தீர்வாக இருக்கும். மேலும் கரும்பில் உள்ள பாலிஃபீனால் என்னும் இயற்கையான வேதிப்பொருள் ரத்த தட்டு அணுக்கள் ஒன்றுக்கொன்று இணைந்து ஏற்படக்கூடிய இரத்த உறைவை தடுப்பதுடன் ரத்தத்தில் உள்ள கொழுப்பை குறைக்கும் தன்மை கொண்டுள்ளது. முக்கியமாக மென் கரும்பு இனிப்பாக இருந்தாலும் இதில் இருக்கும் சுக்ரோஸ் எனும் கூட்டு சர்க்கரை உடலில் வளர்சிதை மாற்றம் நடக்கும் பொழுது செயல்புரியும் நொதிகள் காரணமாக இரத்தத்தின் சர்க்கரை அளவை எளிதில் அதிகரிக்காது. இது low glycemic index உணவு வகையிலேயே சேர்க்கப்பட்டுள்ளது. எனவே நீரிழிவு நோயாளிகள் வாரம் ஒருமுறை அளவாக அருந்தாலும் நல்ல பலனை தரும்.

எனவே உடலுக்கு பல நன்மைகள் செய்யக்கூடிய இந்த கருப்பு சாற்றை நீங்கள் தேடிப்பிடித்து சாப்பிட வேண்டிய அவசியமில்லை. போகின்ற இடமெல்லாம் கிடைக்கின்றது. எனவே கரும்பு சாற்றை இனி அடிக்கடி சாப்பிடுங்கள். ஒன்று மட்டும் ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள் சாப்பிடும் இடம் சுத்தமாக இருக்க வேண்டும்.

பாகற்காய் சிப்ஸ் | Bitter gourd chips in tamil | மொறுமொறுப்பான பாகற்காய் சிப்ஸ்

மொறுமொறுப்பான, சுவையான பாகற்காய் சிப்ஸ் ரெசிபி.

உருளைக்கிழங்கு சிப்ஸ் | Crispy potato chips in tamil | வீட்டிலேயே மொறுமொறுப்பான உருளைக்கிழங்கு சிப்ஸ் செய்வது எப்படி

சுலபமான முறையில் வீட்டிலேயே செய்யப்படும் சுவையான ,மொறுமொறுப்பான உருளைக்கிழங்கு சிப்ஸ்.

தேவையான பொருள்கள் (Ingredients)
  • உருளைக்கிழங்கு – 2
  • குளிர்ந்த தண்ணீர் – 4 கப்
  • உப்பு – ½ தேக்கரண்டி (உருளைக்கிழங்கை ஊற வைக்க)
  • உப்பு – தேவையான அளவு (சிப்ஸ் மேல் தூவ)
  • சிவப்பு மிளகாய் தூள் அல்லது மிளகுத்தூள் – தேவையான அளவு (சிப்ஸ் மேல் தூவ)

மைக்ரோவேவ்வில் மொறுமொறுப்பான உருளைக்கிழங்கு சிப்ஸ் செய்வது எப்படி | Microwave crispy potato chips in tamil

உருளைக்கிழங்கு சிப்ஸ் என்பது அனைவர்க்கும் பிடித்தமான ஒரு ரெசிபி. எண்ணெய்யில் பொறித்து செய்யப்படும் உருளைக்கிழங்கு சிப்ஸ் ஆனது அனைவராலும் எளிதில் செய்ய முடியாது. அத்துடன் அதில் எண்ணெய் அதிகம் சேர்ந்திருப்பதால் அதிகம் சாப்பிட முடியாது.

  மைக்ரோவேவ்வில் செய்யப்படும் இந்த சிப்ஸ் செய்வதற்கு மிகவும் எளிதாக இருக்கும். ஒரு மைக்ரோவேவ் தட்டு இருந்தால் இதை குறைந்த நிமிடத்தில் செய்து சாப்பிட முடியும். சமையல் தெரியாதவர்கள் கூட இதை எளிதில் செய்து விடுவார்கள்.

இட்லி பொடி செய்வது எப்படி | இட்லி மிளகாய் பொடி | Idly podi recipe in tamil

தென்னிந்தியாவின் காலை உணவான இட்லி தோசைக்கு இட்லி பொடி மிகவும் அருமையாக இருக்கும். சமைப்பதற்கு மிகவும் எளிதாகவும், சுவையாகவும் இருப்பதால் அனைவரும் இதை விரும்பி உண்பர். அவரவர் காரத்திற்கேற்ப வத்தல் சேர்த்து கொள்ளலாம்.

தென்னிந்தியாவில் இட்லி பொடி இல்லாத வீடே கிடையாது. வீட்டில் இட்லி பொடி இருந்தால் இட்லி தோசைக்கு சாம்பாரோ, சட்னியோ தேவை இல்லை.

தாமிர பானையில் இருந்து தண்ணீரை குடித்தால், உங்கள் உடலில் உள்ள இந்த தோஷங்கள் சமநிலையுடன் பராமரிக்கப்படும்

தாமிரம் அல்லது செம்பு பாத்திரத்தில் நிரப்பப்பட்ட தண்ணீரை குடித்தால் நாம் ஆரோக்கியமாக இருக்கலாம் என்பது பழங்காலமாக இந்தியாவில் நிலவி வரும் நம்பிக்கையாகும். பானை அல்லது குடம் வடிவத்தில் உள்ள தாமிர பாத்திரத்தில் நம் தாத்தா பாட்டி தண்ணீர் பருகுவதை நாம் கண்டிருப்போம். தாமிர பாத்திரத்தில் நிரப்பப்பட்ட தண்ணீரால் கிடைக்கும் உடல் நல பயன்களை பெறுவதற்கு பலரும் தண்ணீரை தாமிர கோப்பையில் நிரப்பி பருகுகின்றனர். ஆனால் இந்த நம்பிக்கையில் அறிவியல் சார்ந்த உண்மை ஏதேனும் உள்ளதா? வாங்க பார்க்கலாம்! 

குடும்பம் தாண்டிய உறவுகளுக்கு செல்போன் முக்கிய மான ஊடகமாக மாறும்போது குடும்பங்கள் நொறுங்கும். குடும்பம் எனும் அமைப்பு நொறுங்கும்போது அதில் மோசமாகப் பாதிக்கப்படுவது பெண்கள்தான்.

ஸ்
மார்ட்போன்களின் பெரும் சந்தையாக மாறிவருகிறது இந்தியா. சமீபத்தியக் கணக்கின்படி இந்தியாவில் 53 கோடிப் பேர் போன் பயன்படுத்துகிறார்கள். போன் வழியாக இணையதளத்தைப் பயன்படுத்துவதில் நம்முடைய தேசமே முன்னணியில் நிற்கிறது. போன் பயன்படுத்தும் நேரத்தில் 80% இணையதளத்தில்தான் செலவழிகிறது என்றும் சொல்கின்றன ஆய்வுகள். எந்த ஒரு கருவியும் அதன் பண்பை மக்களின் பயன்பாட்டி லிருந்தே பெறுகிறது. தகவல் தொடர்பைத் தாண்டி எந்த அளவுக்கு போன் பயன்படுகிறது என்ற கணக்கைப் பார்த்தால் கடல் அளவு பயம் கவ்வுகிறது. போன் நம்முடைய குழந்தைகளை, குடும்பங்களை, திறன்களை எப்படிச் சூறையாடிவருகிறது என்பதை எதிர்காலம் நமக்கு விரைவில் சொல்லிவிடும். படைப்பாளிகளில் தொடர்ந்து போன்களின் அபாயத்தைப் பேசியும் எழுதியும் வருகிறவர் இமையம்.
உங்கள் படைப்புகளிலும் பேச்சிலும் செல்போன்களை விளாசுகிறீர்கள். அப்படி என்னதான் கோபம்?
இன்று நம் வாழ்வில் தவிர்க்க முடியாதபடி, மனித உறுப்புபோலவே ஆகிவிட்டது செல்போன். ஆடு மாடு மேய்க்கிறவர்கள் வரைக்கும் செல்போன் கிடைத்திருக்கிறது. ஆபத்து கால உதவியில் தொடங்கி உறவுகளுடனான உரையாடல் வரை செல்போன் பெரிய உதவி யாக இருக்கிறது. தொலைத்தொடர்பில் நம் கற்பனைக்கு மிஞ்சி அது சாதனை செய்திருக்கிறது. உலக விஷயங்கள் அனைத்தையும் இருந்த இடத்தில் அறிந்துகொள்ளக்கூடிய வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது. இவையெல்லாம் எவ்வளவு உண்மையோ, அந்த அளவுக்கு மனிதத்தன்மையை அது அழித்துக்கொண்டும் இருக்கிறது என்பது உண்மை. கையில் செல்போன் இல்லாவிட்டால் ஒருவன் துடித்துப்போகிறான்.. ஏன்? அந்த அளவுக்கு நாம் அதைச் சார்ந்திருக்கிறோம், அடிமை யாக இருக்கிறோம். இன்றைக்கு இந்தியக் குடும்பங்களில் சராசரியாக நாள் ஒன்றுக்கு அரிசி, பருப்புக்குச் செலவுசெய்வதைக் காட்டிலும் செல்போனுக்கு செய்யப்படும் செலவு அதிகம். இப்படியான செலவின் பெரும் பகுதி மனிதர்கள் தங்களைத் தாங்களே, சீரழித்துக்கொள்ள உதவுகிறது என்பதால்தான் கோபப்படுகிறேன்.
மனிதத்தன்மை என்று இங்கே எதைக் குறிப்பிடுகிறீர்கள்?
சமீபத்தில் ரயில் பயணத்தில் நான் பார்த்த காட்சி. புதிதாக திருமணமான ஜோடி. பல மணி நேரப் பயணம் அது. பயணத்தில் அவர்கள் பேசிக்கொண்ட வார்த்தை கள் ஐந்து பத்துதான் இருக்கும். இருவர் கையிலும் போன். ஊர் வந்து இறங்கும்வரை முழுக் கவனத்துடன் போனையே நோண்டிக்கொண்டிருந்தார்கள். யோசித்துப்பாருங்கள், கணவன் - மனைவி என்ற தாம்பத்திய உலகுக்குள் இப்போதுதான் வந்திருக்கிறார்கள். ஆனால், இரண்டு பேரும் இரண்டு விதமான மாய உலகத்துக்குள் இருக்கிறார்கள். திருமணமான புதிதிலேயே இந்தக் கதி என்றால், பின்னாளில் இந்த உறவு என்ன ஆகும்? நீங்கள் கவனித்துப் பார்த்தால், பல தம்பதி யினரை இன்று இப்படிப் பார்க்க முடியும். விருந்தினராக ஒரு வீட்டுக்குச் சென்றால், ஆளுக்கு ஒரு போனுடன் உட்கார்ந்தபடி ‘ஹாய்’ சொல்லிவிட்டு, மீண்டும் போனுக்குள் மூழ்கிவிடும் மனிதர்களைப் பார்க்க முடியும். ஒவ்வொரு மனிதனையும் செல்போன்கள் தனித்தனித் தீவுகளாக மாற்றியிருக்கின்றன. ஒவ்வொரு செல்போனும் ஒரு கற்பனை உலகத்தை உருவாக்கிக்கொடுக்கிறது. ஒவ்வொரு மனிதனுமே ஒரு செய்தி நிறுவனமாக மாறுகிறான். நம்முடைய இரவுகளை செல்போன் எடுத்துக்கொண்டுவிட்டது.
செல்போன்களின் ஆக்கபூர்வமான அம்சங்களோடு ஒப்பிடுகையில் இத்தகைய விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டுமா?
இணையத்தின் மூலமாகப் படிக்கலாம், அறிவு பெறலாம் என்பதெல்லாம் உண்மைதான். மிகச் சிலர் தான் அதன் ஆக்கபூர்வமான அம்சங்களைப் பயன் படுத்துகிறார்கள். பெரும்பாலானவர்கள் அதைத் தவறாகத்தான் பயன்படுத்துகிறார்கள். குறிப்பாக இளைஞர்கள். ‘விபத்தில் சிலர் இறந்துவிடுகிறார்கள் என்பதற் காக வாகனப் பயணமே வேண்டாம் என்று சொல்லலாமா?’ என்று சிலர் கேட்கலாம். இரண்டின் தன்மையும் ஒன்றல்ல. காலையில் எழுந்து குளிக்கப்போவது தொடங்கி, இரவில் படுக்கப்போவது வரைக்கும் நீங்கள் செல்போனைப் போல வேறு ஒன்றைத் தேடுவதில்லை. பைத்தியமாகிக் கிடக்கவில்லை. சிறுநகரங்களில் பணம் வாங்கிக்கொண்டு மாணவர்களின், இளைஞர்களின் செல்போனுக்கு ப்ளூ டூத் வழியாக ஆபாசப் படங்களை அனுப்புவது ஒரு வியாபாரமாகவே மாறி யிருக்கிறது. ஒவ்வொரு செல்போனிலும் ஒரு ஆபாசத் திரையரங்கம் இருக்கிறது. மனித அந்தரங்கங்களை அது நொறுக்கிவிட்டது. சென்னையில் 5,000 பேரிடம் செல்போன்களை வாங்கிக்கொண்டு, அவர்களைத் தனியாக ஒரே ஒரு நாள் விட்டுவிடுவோம் என்று வைத்துக்கொள்ளுங்கள். அவர்களில் பலர் பைத்தியமாகிவிடுவதைப் பார்ப்பீர்கள். சிலர் தற்கொலை செய்துகொண்டாலும்கூட ஆச்சர்யம் இல்லை.
உங்களுடைய கதைகளில் செல்போன்களால் பெண்களின் வாழ்க்கை சீரழிவதாகத் தொடர்ந்து எழுதிவருகிறீர்கள். இத்தகைய விமர்சனம் பெண்களின் உரிமைகளில் தலையிடுவது ஆகாதா?
செல்போன் ஒருவகையான சுதந்திரத்தைப் பெண் களுக்குக் கொடுத்திருக்கிறது. அதை நான் வரவேற் கிறேன். ஆனால், அந்தச் சுதந்திரமே அவர்களைப் பலிவாங்கும் செய்திகளைப் படிக்கிறபோது பதறாமல் எப்படி இருக்க முடியும்? இந்தச் சமூகத்தில் பெண்கள் வெளியே வந்து எவ்வளவு காலம் ஆகியிருக்கும்? இப்போதுதானே வந்துகொண்டிருக்கிறார்கள். ஆனால், அதற்குள் அவர்களை வெளி உலகத்தைப் பார்க்காமல், மீண்டும் தலை குனிய இன்னொரு உலகத்துக்குள் புதைத்துவிடுகிறதே இந்த செல்போன்? ஒவ்வொரு செல்போனும் ஏதோ ஒரு வகையில் பெண்ணுடன் இணைக்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு செல்போனும் ஒரு ஆபாசத் திரையரங்கம் என்றேன். அதில் பிரதான பாலியல் பண்டம் பெண்தானே? இதில் மறைக்க ஒன்றும் இல்லை - இன்று திருமணத்துக்குப் பிந்தைய காதல்கள் அதிகரித்திருக்கின்றன.
இருபாலருக்கும்தான். ஆனால், குடும்பம் என்ற அமைப்பில் எவ்வளவோ பலவீனம் இருந்தாலும், அதுதான் நம்முடையதைப் போன்ற நாடுகளில் பெண்களுக்கு மிச்சமுள்ள பாதுகாப்பான ஒரே அமைப்பு. குடும்பம் தாண்டிய உறவுகளுக்கு செல்போன் முக்கிய மான ஊடகமாக மாறும்போது குடும்பங்கள் நொறுங்கும். குடும்பம் எனும் அமைப்பு நொறுங்கும்போது அதில் மோசமாகப் பாதிக்கப்படுவது பெண்கள்தான்.
நேற்று என் நண்பன் ‘டப்மாஷ்’ என்ற வேடிக்கையை அவனுடைய செல்போனில் காட்டினான். அம்மாவைப் பார்த்து, ‘நீ ஒரு சப்பை ஃபிகரு’ என்ற சினிமா வசனத்துக்கு வாயசைக்கிறான் ஒரு சிறுவன். இதுதான் செல்போன் நமக்குக் கொடுத்திருக்கும் வெகுமதி

மூட்டு வலியை தவிர்க்க இதை செய்யலாம்

மூப்பு வரும்போது மூட்டு வலியும் தானாக வந்து விடுகிறது. இளம், நடுத்தர வயதினரையும் இந்த பிரச்னை விட்டுவைப்பதில்லை. 

தனி மனித சாதனை!தி. வே. சுந்தரம் அய்யங்கார் T.V.S.

முழுவதும் படியுங்கள்...
தனி மனித சாதனை
தி. வே. சுந்தரம் அய்யங்கார்
T.V.S.
’எலே... தெரியுமா சேதி? புதுசா ஒரு வண்டி வந்திருக்காம். குதிரை, மாடு எதுவும் இழுக்கத் தேவையில்லையாம் தானாவே ஓடுமாம்’’ கிராமமெங்கும் பரவிய தகவலை யாருமே நம்பத்தயாராக இல்லை. ‘‘அதெப்படி எதுவுமே இழுக்காம ஒரு வண்டி ஓடும்?’’ என்று, செய்தி சொன்னவரை அனைவரும் கேலி செய்தார்கள்.
ஆனால், உண்மையிலேயே கண்ணெதிரே அந்த வாகனம் வந்தபோது ஆச்சர்யத்தில் திகைத்து நின்ற கிராம மக்கள், ‘இதென்ன ஸ்ரீ ராம பாணமோ? ஸ்ரீ கிருஷ்ண ரதமோ!’ என ஆச்சர்யத்தில் கண்கள் கலங்க, ஆனந்தக் கூத்தாடி அந்த வாகனத்தை விழுந்து வணங்கினார்கள்.
ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நடந்து நடந்து தேய்ந்து போயிருந்த தமிழர்களின் கால்களுக்கு ஓய்வுகொடுத்து, பேருந்துகளில் பயணிக்கவைத்த பெருமை டி.வி.சுந்தரம் ஐயங்காரையே சேரும். இன்றைக்கு 40-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கொண்ட மகா விருட்சமாய், ஆண்டுக்கு 13 ஆயிரம் கோடிக்கும் மேல் வியாபாரம் செய்யும் வர்த்தகக் குழுமமாய் பரந்து விரிந்திருக்கும் டிவிஎஸ் நிறுவனத்தைச் சேர்க்காமல் ஆசிய ஆட்டோமொபைல் வரலாற்றை எழுதமுடியாது.
1877 மார்ச் 22-ல் டி.வி. சுந்தரம் (சுருக்கமாக டிவிஎஸ்) பிறந்தார். திருச்சூரின் அரசு உயர்நிலைப் பள்ளியில் எட்டு ஆண்டுகளும், திருநெல்வேலி இந்துக் கல்லூரியிலும், கோயம்புத்தூர் போதனா பயிற்சிக் கல்லூரியிலும் படித்தார். அவரின் மனம் தொழில் தொடங்கவேண்டும் என்பதில் மையம் கொண்டு இருந்ததே தவிர, பெற்றோர் விரும்பியபடி படித்து வக்கீலாக வேண்டும் என்று நினைக்கவில்லை.
கல்லூரியில் இருந்து வெளியேறி, பிரம்பு, சவுக்கு போன்றவற்றை வர்த்தகர்களுக்கு மொத்த விற்பனை செய்யத் தொடங்கினார். பிறகு திருச்சியிலும் தஞ்சையிலும் ரயில்வே குமாஸ்தாவாக சில காலம் வேலை பார்த்தார்.தந்தையாரின் மறைவுக்குப் பிறகு, தனது பங்காகக் கிடைத்த பணத்தை மூலதனமாகக் கொண்டு, தேக்கு மரங்களை இறக்குமதி செய்து மர வியாபாரம் செய்யலானார்.
25 ஆயிரம் ரூபாய் முதலீடு செய்து நான்கு ஆண்டுகள் மர வியாபாரம் செய்ததில் 25 ஆயிரம் ரூபாய் லாபம் கிடைத்தது. அந்த 50 ஆயிரம் ரூபாயை முதலீடாகக் கொண்டு, கான்பகதூர் காதர் நவாஸ்கான் என்ற பிரமுகருடன் கூட்டாக 1912-ம் ஆண்டு தஞ்சாவூர்- புதுக்கோட்டை வழித்தடங்களில் பேருந்து சேவையை நடத்தத் தொடங்கினார். அதுதான் ஆரம்பம்!
அந்தக்கால பேருந்துகளில் ஆட்களுக்குத் தகுந்தாற்போல் பேரம் பேசித்தான் கட்டணம் வசூல் செய்யப்பட்டுவந்தது. மேலும், ஆட்கள் நிறையும் வரை பேருந்தை நிறுத்திக் காத்திருப்பது, கால வரையறை இல்லாமல் நினைத்த நேரத்துக்கு பேருந்தை இயக்குவது என்று ஒரு ஒழுங்கில்லாமல் இருந்த முறையை மாற்றியமைத்து, இன்றைக்கு இருக்கும் ‘இவ்வளவு தூரத்துக்கு இவ்வளவு கட்டணம்’ என்னும் நடைமுறையையும், பயணிகள் கொடுக்கும் காசுக்கு ‘ரசீது வழங்குவது’ என்னும் நடைமுறையையும் கொண்டுவந்தவர் டிவிஎஸ்.எல்லாவற்றுக்கும் மேலாக, பேருந்து எப்போது புறப்பட்டு, எப்போது போய்ச் சேரும் என்பதே தெரியாமல் இருந்ததை மாற்றி, ‘குறிப்பிட்ட நேரத்துக்கு இந்தப் பேருந்து புறப்படும்’ என்ற நடைமுறையை நாட்டுக்கே டிவிஎஸ்தான் அறிமுகப்படுத்தினார்.
வாகனங்களின் டயர்களும், பாகங்களும் விரைவில் தேய்ந்து போவதற்கும், எரிபொருள் அதிகமாகச் செலவாகி பொருளாதார இழப்பு ஏற்படுவதற்கும் குண்டும் குழியுமான சாலைகளே காரணம் என்பதை மிக தாமதமாகக் கண்டறிந்த அரசாங்கம், பிற்காலத்தில்தான் தரமான தார்ச் சாலையை அமைத்தது. இதனை அப்போதே உணர்ந்திருந்த டிவிஎஸ், பேருந்து செல்லும் சாலைகளைப் பராமரிக்கும் கான்ட்ராக்ட்டையும் தானே எடுத்துக் கொண்டார். இதன்மூலம் சாலைகளில் காணப்பட்ட குண்டு, குழிகள் விரைவில் மறைந்ததோடு பேருந்து டயர்களின் ஆயுட்காலமும் நீடித்தது.
சாலைகளில் கழன்று விழுந்து கிடக்கும் மாடு, குதிரைகளின் லாடங்களால் டயர் பஞ்சராகி பேருந்துகள் அடிக்கடி நின்றுபோயின. இதனைத் தடுக்க ஒரு காந்த வண்டியை டிவிஎஸ் அறிமுகப்படுத்தினார். ஏறத்தாழ நான்கு அடி நீளமுள்ள பெரிய காந்தம் பொருத்தப்பட்ட வண்டியை சாலையில் ஓட விட்டார். சாலையில் கிடந்த அனைத்து இரும்புகளும் காந்தத்தில் ஒட்டிக்கொண்டுவிட, டிவிஎஸ் பேருந்துகள் பஞ்சர் ஆகாமல் ஓடலாயின.
புதுக்கோட்டையில் பஸ் சர்வீஸ் நடத்தி வந்தபோதே, மேலைநாடுகளில் இருந்து மோட்டார் வாகனங்களையும், இயந்திரங்களின் உதிரிப்பாகங்களையும் சிறியஅளவில் இறக்குமதி செய்து மற்ற பேருந்து நிறுவனங்களுக்கு டிவிஎஸ் விற்பனை செய்துவந்தார். புதுக்கோட்டை பஸ் சர்வீஸ் ஒப்பந்த காலம் முடிவடைந்ததும் மதுரையில் சிறிய அளவில் ஒரு வியாபார நிறுவனத்தைத் தொடங்கினார். சைக்கிள்களையும், மோட்டார் வாகன உதிரி பாகங்களையும் விற்றுவந்த அந்த நிறுவனமே பலவிழுதுகள் பரப்பி விரிந்து நிற்கும் இன்றைய டிவிஎஸ் ஆலமரத்தின் விதையாகும்.
1929-ல் ஜெனரல் மோட்டார்ஸ் கம்பெனியின் வாகனங்களுக்கும், உதிரிப்பாகங்களுக்கும் டிவிஎஸ் நிறுவனம் நேரடி ஏஜென்ஸி உரிமை பெற்றது. டிவிஎஸ் நிறுவனத்தின் வரலாற்றில் புதியதொரு அத்தியாயம் ஆரம்பமானது.
முனிவருக்கே மணி சொன்ன டிவிஎஸ் பஸ்!
ஒருமுறை திருநெல்வேலி செல்லும் வழியில் தன் பரிவாரங்களுடன் புதுக்கோட்டையில் முகாமிட்டிருந்தார் காஞ்சி மகா பெரியவர். உறங்கச் செல்லும் முன் அதிகாலை மூன்றரை மணிக்குத் தன்னை எழுப்பிவிடுமாறு, சீடர் நாகராஜனிடம் சொல்லிச் சென்றார். முதல் மூன்று நாட்கள் கடிகாரத்தைப் பார்த்து சரியான நேரத்துக்கு ‘‘ஹர ஹர சங்கர...’’ என்று கோஷமிட்டு எழுப்பிய சீடர், நான்காம் நாள் மெய்மறந்து உறங்கிவிட்டார். ‘‘ஹர ஹர சங்கர...’’ என்ற குரல் கேட்டு சீடர் திடுக்கிட்டு விழித்தால், எதிரே மகா பெரியவர் நிற்கிறார். ‘‘கொழந்தே! மணி சரியா மூணரை ஆறதுடாப்பா...’’ என்று சொல்ல, சீடருக்கு மிகவும் வெட்கமாகப்போய்விட்டதாம். சோதனையாக மறுநாளும் சீடர் உறங்கிவிட, அன்றும் பெரியவாளே அவரை எழுப்பிவிட்டாராம். ‘அதெப்படி எந்தக் கடிகாரமும் இல்லாமல், சரியாக அதிகாலை மூன்றரை மணிக்கு எழுந்துவிடுகிறார்’ என்று சீடருக்கு எழுந்த சந்தேகத்தை பெரியவாளே தீர்த்து வைத்தாராம்.
‘‘முதல் நாள் நீ எழுப்பி விட்டபோது, மதுரைலேர்ந்து புதுக்கோட்டைக்கு வர்ற டிவிஎஸ் பஸ் நம்ம சத்திரத்தைக் கடந்து போறதைப் பார்த்தேன். ‘டிவிஎஸ் பஸ் ஒரு இடத்துக்கு வர்ற குறிப்பிட்ட டயத்தை வெச்சுண்டே, நம்ம கடிகாரத்தை கரெக்ட் பண்ணி டயம் வெச்சுக்கலாம்’னு சொல்லுவா. அது வாஸ்தவம்தான். சத்திரவாசலுக்கு அந்த பஸ் விடியக்காலம் சரியா மூணரை மணிக்கு வந்து தாண்டிப் போறது. இதை வெச்சு நாலாம் நாள்லேர்ந்து அந்த பஸ்ஸோட சத்தம் கேட்டவுடனேயே தானா எந்திருச்சுட்டேன்...’’ என்று ரகசியத்தை உடைத்தாராம் பெரியவாள். டிவிஎஸ் பேருந்துகளின் நேரம் தவறாமைக்கு இந்த ஒரு உதாரணம் போதாதா..!
இப்போது போலவே அப்போதும் கார்கள் தயாரிப்பில் ஜெனரல் மோட்டார்ஸ்தான் முன்னணியில் இருந்தது. 1929-ம் ஆண்டு ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தின் வாகனங்களுக்கும், உதிரிப் பாகங்களுக்கும் நேரடி ஏஜென்ஸி உரிமை பெற்றதுதான் டிவிஎஸ் வரலாற்றின் மிகப்பெரிய திருப்புமுனை!
முட்டைக்கோஸ் புதிதாக மார்க்கெட்டுக்கு வந்தபோது, அதன் சுவை எப்படி இருக்கும் என்று தெரியாததால் அதை யாருமே வாங்கவில்லையாம். காய்கறிக்கே இந்த நிலை என்றால், ஆயிரக்கணக்கான ரூபாய் விலைமதிப்புடைய காருக்கு..?
குதிரையிலும், மாட்டுவண்டியிலும் பவனி வந்து கொண்டு இருந்த ஜமீன்தார்களிடம் கார்களை விற்பனை செய்ய, டி.வி.சுந்தரம் ஐயங்காரின் குமாரர் துரைசாமி செய்த யோசனை ஆச்சர்யமானது.
புது காருடன் நேரடியாகச் செல்வந்தர் ஒருவரின் வீட்டுக்குப் போவாராம். டிரைவரையும் காரையும் அவர் வீட்டிலேயே விட்டுவிட்டு, அந்தச் செல்வந்தர் அதுவரை பயணித்து வந்த குதிரை வண்டியை எடுத்துக்கொண்டு கிளம்பி வந்துவிடுவாராம். மறுபடியும் ஒரு வாரம் கழித்து அவரது வீட்டுக்குச் செல்வாராம்.
இடைப்பட்ட நாட்களில் காரில் பயணித்து பயணித்து, அதன் சொகுசுக்கு அடிமையாகிவிட்டிருப்பார் அந்தச் செல்வந்தர். ஊராரையும் மற்ற ஜமீன்தார்களையும் வாய்பிளக்க வேடிக்கை பார்க்கவைக்கும் அந்த காரை, திருப்பித் தர மனம் இல்லாமல் தேவையான பணத்தைக் கொடுத்து, காரை வாங்கிவிடுவார் ஜமீன்தார். இப்படி மிக எளிதாக காரை விற்றுவிட்டு, வெற்றிகரமாக வீடு திரும்புவாராம் துரைசாமி.
குதிரை வண்டியை வாங்கிக்கொண்டு, காரை விற்ற அந்தத் திட்டமே, பழையதைக் கொடுத்து புதிய பொருட்களை வாங்கிச் செல்லும் ‘எக்ஸ்சேஞ்ச் ஆஃபர்’ திட்டங்களுக்கெல்லாம் முன்னோடி!
நானும் ஒரு தொழிலாளி!
ஆறேழு பேர் பணிபுரியும் மளிகைக் கடையிலேயே தொழிலாளர் பிரச்னை தலையைப் பிய்த்துக்கொள்ள வைக்கிறது. அப்படியானால் பல்லாயிரம் பேர் பணிபுரியும் நிறுவனத்தில்?தினம் தினம் பிரச்னையாகத்தானே விடியும் என்று நீங்கள் நினைத்தால், அது தவறு ‘தொழிலாளர் போராட்டம் என்று எதுவும் நடந்ததே இல்லை’ என்கிறார்கள் டிவிஎஸ் நிர்வாகிகள்.
தொழிலாளர்கள்தான் நிறுவனத்தை இயக்குகிறார்கள் என்பதை உணர்ந்த டிவிஎஸ், தொழிலாளர்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்தார். அலுவலகத்தில் கேன்டீன் முறையை அறிமுகப்படுத்திய பெருமையும் டிவிஎஸ் நிறுவனத்துக்குத்தான் உண்டு. காலையில் இலை போட்டுப் பரிமாறப்படும் இட்லி - சாம்பாரை சாப்பிட்டுவிட்டுத்தான் தொழிலாளர்கள் வேலைக்கே செல்வார்களாம்.
பணியாளர்களின் பசியைத் தீர்த்தது மட்டுமல்லாமல் வசிக்கக் குடியிருப்புகள், குழந்தைகளின் கல்விக்குப் பள்ளிக்கூடம், சிகிச்சை பெறுவதற்கு மருத்துவமனை என்று தொழிலாளர்களின் குடும்பத்துக்குத் தேவையான அனைத்து வசதிகளும் டிவிஎஸ் நிறுவனத்தில் செய்து கொடுக்கப்பட்டதாலேயே, தாத்தா-அப்பா-பேரன்-கொள்ளுபேரன் என்று நான்கு தலைமுறையாகத் தொடர்ந்து இதே நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிற பல குடும்பங்கள் உண்டு.
குளிர்சாதன அறைக்குள் இருந்துகொண்டு தொழிலாளர் பிரச்னையைப் புரிந்து கொள்ள முடியாது என்பதை நன்கு உணர்ந்திருந்த டிவிஎஸ், தம் வாரிசுகள் அனைவரையும் தொழிலாளர்களுடன் இணைந்து வேலை செய்யுமாறு செய்தார். அந்த நடைமுறை இன்றுவரை தொடர்கிறது.
டிவிஎஸ் நிறுவனத்தில் இன்றைக்கு இயக்குநர்களாகவும் பங்குதாரர்களாகவும் இருக்கும் அனைவரும், காக்கி யூனிஃபார்முடனும் கிரீஸ் கறையுடனும் தொழிலாளிகளோடு தொழிலாளியாக வேலை செய்தவர்கள்! அதனால்தான் தங்கள் தொழிலாளர்களின் பிரச்னைகளை எளிதாகத் தீர்க்கவும் அவர்களுக்குத் தெரிந்திருக்கிறது. டிவிஎஸ்-ஸில் ஐ.என்.டி.யு.சி எனும் ஒரே ஒரு தொழிற்சங்கம்தான் இருக்கிறது. தொழிற்சங்கத்தில் தீர்மானம் நிறைவேற்றும் முன்னரே அவர்களை அழைத்துப் பேசி குறைபாடுகளைத் தீர்த்து வைப்பார்களாம்!
ஒரு வேலையைச் செய்யும் தொழிலாளர்களால்தான் அந்த வேலையை எளிதாகச் செய்து முடிப்பதற்கான தீர்வையும் சொல்ல முடியும் என்பதை உணர்ந்த டிவிஎஸ், தொழிலாளர்களை நிர்வாக யோசனைகளிலும் பங்கேற்க வைத்தார். கம்பெனியில் ஓர் ‘ஆலோசனைப் பெட்டி’யை வைத்து, அதில் ஆலோசனைகளை எழுதிப்போடுமாறு கேட்டுக் கொண்டார்கள். வீண் செலவைக் குறைக்கவும், உற்பத்தியை மேம்படுத்தவும் பல்வேறு ஆலோசனைகளை, தொழிலாளர்கள் எழுதிப் போட்டனர். சிறந்த யோசனைகளைச் சொன்னவர்களுக்குப் பரிசுகளும் உண்டு.
‘இது நம் நிறுவனம். இதை முன்னேற்ற வேண்டியது நம் கடமை’ என்னும் உணர்வு முதலாளிக்கு ஏற்படுவது வியப்பானதல்ல. ஆனால், அது கீழ்மட்டத்தில் இருக்கும் தொழிலாளிக்கும் ஏற்பட வேண்டும். அதில்தான் அந்த நிறுவனத்தின் வெற்றியே அடங்கியிருக்கிறது. அந்த எண்ணத்தை தொழிலாளர்களுக்கு ஏற்படுத்தியதுதான் டிவிஎஸ் நிறுவனத்தின் வெற்றிக்கு அடித்தளம்!
ஐடியாவுக்குப் பரிசு!
‘‘தொழிலாளர்கள் ஸ்க்ரு டிரைவர், ஸ்பேனர் போன்றவற்றை பேன்ட் பாக்கெட்டில் இருந்து எடுக்கும்போது கையில் ஒட்டியிருக்கும் கிரீஸும், ஆயிலும் துணியில் பட்டு நீக்க முடியாத கறையாக மாறிவிடுகிறது. அதனால் சீருடையில் பாக்கெட்டே தேவையில்லை’’ என்று ஒரு தொழிலாளர் ஆலோசனை சொன்னாராம். பல மீட்டர் துணியையும், சலவைச் செலவையும் மிச்சமாக்கி, உடைகளின் தூய்மையையும் பாதுகாத்த அந்தத் தொழிலாளரின் யோசனைதான் இன்றளவும் டிவிஎஸ்-ஸிலும் மற்ற பெரும்பாலான கம்பெனிகளிலும் நடைமுறையில் இருக்கிறது.
எதுவும் முடியும்!
‘இது என் வேலை இல்லையே..!’ என்று சொல்லாமல், எந்த வேலையைக் கொடுத்தாலும் டிவிஎஸ் தொழிலாளர்கள் செய்வார்கள் என்பதற்குப் பல உதாரணங்களைச் சொல்ல முடியும். 1960-களில் அகில இந்திய காங்கிரஸ் மாநாடு மதுரையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. முதல் நாள் பெய்த மழையில், ஒருமாதம் செலவழித்துப் போடப்பட்டிருந்த, மிகப் பெரிய மாநாட்டுப் பந்தல் அப்படியே சரிந்து விழுந்துவிட்டது. மறுநாள் எப்படி மாநாட்டை நடத்துவது என்று தெரியாமல் ஏற்பாட்டாளர்கள் விழிக்க, டிவிஎஸ் குமாரர் கிருஷ்ணா உதவ முன்வந்தார். ஒரு மாதமாகப் போடப்பட்ட பந்தலை ஒரே இரவில் சரிசெய்து சாதனை படைத்தார்களாம்
டிவிஎஸ் தொழிலாளர்கள்.
மேலும் சம்பவம் ஒன்று... மதுரை ஏர்போர்ட்டில் இறங்கிய விமானத்தின் முன் சக்கரம் உள்பக்கமாக அழுந்திக் கொள்ள, விமான நிலையத்தின் இன்ஜினீயர்கள் காலை 8 மணிமுதல்மதியம் 2 மணி வரை போராடிப்பார்த்தும் சிக்கலைத் தீர்க்க முடியவில்லையாம். இந்தத் தகவல் டிவிஎஸ் நிறுவனத்துக்கு வர, ஊழியர்கள் புறப்பட்டுப் போனார்களாம். ‘நாள்தோறும் விமானத்தோடு புழங்கும் இன்ஜினீயர்களாலேயே முடியவில்லை. இவர்களால் என்ன செய்ய முடியும்’ என்று விமான நிலையத்தில் வேலை பார்க்கும் சிலர் இவர்கள் காதுபடவே கருத்துச் சொல்லிஇருக்கிறார்கள். அது மட்டுமல்ல, இவர்களை முதலில் விமான நிலையத்தின் உள்ளேயே விட மறுத்து விட்டார்களாம். ‘இது வரை விமானத்தை அருகில் சென்று பார்த்ததே இல்லை. ரிப்பேர் செய்யும் சாக்கிலாவது அருகில் சென்று பார்த்து விட்டு வருகிறோமே’ என்று டிவிஎஸ் ஊழியர்கள் சாதுர்யமாகப் பேசி விமானத்துக்கு அருகே சென்று, தங்களை அழைத்த அதிகாரிகளைப் பார்த்திருக்கிறார்கள். அந்த அதிகாரி விமானத்தைக் காட்டி பிரச்னையை இவர்களிடம் சொன்னார். பல மணி நேரம் முயன்றும் விமான நிலைய இன்ஜினீயர்களாலேயே சரி செய்ய முடியாத வேலையை விமானிகளே வியக்கும் வண்ணம் பத்தே நிமிடத்தில் சரிசெய்து விட்டார்களாம் டிவிஎஸ் தொழிலாளர்கள். எப்படி?
டிவிஎஸ்-ஸின் தங்குதடையில்லாத சேவைக்கு உதாரணமாக விளங்கக்கூடிய நிகழ்ச்சி ஒன்று உண்டு. உலகப் போர் முடிந்த சமயத்தில் கடுமையான பெட்ரோல்-டீசல் தட்டுப்பாடு நிலவியது. பொதுமக்களுக்கு ஒரு சொட்டு பெட்ரோல்கூட கிடைக்கவில்லை. இந்தச் சமயத்திலும் தனது பஸ் சர்வீஸை நிறுத்த விரும்பாத டிவிஎஸ், பேருந்துகளில் கரி இன்ஜினைப் பொருத்தி ஓட்டத் தொடங்கினார். இந்த இன்ஜினைத் தயார்படுத்தவே இரண்டு மணி நேரம் தேவையாம். கரியை எரிக்கும்போது வெளிப்படும் வெப்ப ஆவி சிலிண்டர்களில் சேகரிக்கப்பட்டு, அதன் மூலம் பேருந்து ஓட்டப்பட்டது. இதற்காகப் பேருந்து செல்லும் வழியில் ஆங்காங்கே கரி நிரப்பும் இடங்களும் நிறுவப்பட்டன!
சுந்தரம் அய்யங்கார் முற்போக்குச் சிந்தனை
கொண்டவர். இளம்வயதில் கைம்பெண்ணான
தன் மகள் தி. சு. சௌந்தரத்துக்கு மகாத்மா
காந்தியின் ஆசியுடன் மறுமணம் செய்து வைத்தார்
. தி. சு. சௌந்தரம் இந்திய விடுதலைப் போரில்
தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். இந்திய அரசு தி.
சு. சௌந்தரத்தின் அஞ்சல் தலையை வெளியிட்டு
அவரை பெருமைப்படுத்தியது .
வெற்றிகரமான தொழிலதிபராக விளங்கிய இவர்
கலைகளையும் ஆதரித்தார் . தான் ஓய்வு பெற்று
வணிகத்தை தன் மகன்களிடம் ஒப்படைத்ததைக்
கண்டு இராசகோபாலாச்சாரி இவரைப் பாராட்டினார்  .
ஏப்ரல் 28, 1955 இல் அதிகாலையில்
கொடைக்கானலில் உள்ள தன் வீட்டில் இறந்த
போது இவரது வயது 78. இவரைப்
பெருமைப்படுத்தும் விதத்தில் வெண்கலமும்
பளிங்கும் கொண்ட இவரின் மார்பளவு
உருவச்சிலை மதுரையில் ஆகஸ்டு 7, 1957 இல்
அந்நாள் மத்திய வணிக அமைச்சரால் திறந்து
வைக்கப்பட்டது.

உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கும் பழங்கள்

தர்பூசணி:
நிரிழிவு நோய், இதய நோய், ரத்தக் கொதிப்பு உள்ளவர்கள், உடல் பருமனாக உள்ளவர்கள் இந்த பழத்தை தாராளமாக சாப்பிடலாம். இந்த பழத்தில் இரும்பு சத்து அதிகமாக உள்ளது. தர்பூசணி பழசாறுடன் இளநீர் கலந்து அருந்த வெயிலால் ஏற்படும் வெம்மை குறையும். உடல் சூடு தணியும். தர்பூசணிப் பழத்துண்டுகளை பதநீரில் போட்டு, ஒரு துண்டு பனிகட்டி சேர்த்து சாப்பிட மிகவும் சுவையாக இருப்பது மட்டுமின்றி உடல் குளிர்ச்சி ஏற்படும். வயிற்று வலி தீரும்.

கல்செக்கு

பாரம்பர்ய முறையில் கல்செக்கு இயந்திரம் மூலம் உற்பத்தி செய்யப்படும் எள், கடலை, தேங்காய் எண்ணெய், சமையல் எண்ணெய் நுகர்வு குறித்த விழிப்பு உணர்வு மக்களிடம் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாகக் கல்செக்கு அமைத்து எண்ணெய் உற்பத்தி செய்யும் தொழில் அதிகரித்து வருகிறது.

ரசாயன உரம், பூச்சிக்கொல்லி மருந்து பயன்படுத்தி பயிர் செய்யப்படும் விவசாய உணவுப்பொருள்களில் நச்சுத்தன்மை உள்ளதாக இயற்கை ஆர்வலர்கள் பலரும் கூறிவருகிறார்கள். அதேபோல்,எண்ணெய் வித்துப் பயிர்களான எள், நிலக்கடலை, சூரியகாந்தி, தேங்காய் உள்ளிட்ட பயிர்சாகுபடியிலும் அதிக அளவு ரசாயனம் இடுபொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. எள், நிலக்கடலை, சூரியகாந்தி, தேங்காய் ஆகியவற்றை மூலப்பொருளாகக் கொண்டு உற்பத்தி செய்யப்படும் சமையல் எண்ணெய் வகையில் உடல்நலன் குன்றச்செய்யும் ரசாயனத்தின் கூறுகள் உள்ளது என்று உறுதியாக பலரும் நம்புவதால், இயற்கை விவசாயத்தில் விளைந்த எண்ணெய் வித்துக்களை பயன்படுத்தி, கல் மற்றும் மரச்செக்கு மூலம் பாரம்பர்ய முறையில் உற்பத்தி செய்யப்படும் சமையல் எண்ணெய் பெரும் வரவேற்பு பெற்றுவருகிறது. கிராமப்புறங்களில் இயங்கிவரும்  செக்கு ஆலைகளைத் தேடிப்போய் சுத்தமான எண்ணெய் வாங்கும் நகரவாசிகள் பலர் உண்டு.

அந்த வகையில் ஈரோடு மாவட்டம் கொடுமுடி பகுதியில் கல்செக்கு ஆலை அமைத்து சமையல் எண்ணெய் உற்பத்தி செய்துவரும் தங்கவேல் என்பரை சந்தித்து பேசினோம். “அந்தக் காலத்தில மாடுபூட்டிய செக்கு வெச்சு எண்ணெய் உற்பத்தி செஞ்சாங்க. விவசாயிகளே அவங்க நிலத்துல சாணம், குப்பை, பசுந்தாள் உரம் போட்டு இயற்கை விவசாயத்துல வௌஞ்ச நிலக்கடலை, எள், தேங்காய் கொப்பரை போன்ற எண்ணெய் வித்துக்களை மாட்டுவண்டியில ஏத்தி எங்ககிட்ட கொண்டுவந்து போட்டு அரைச்சு அதுல கிடைக்கிற எண்ணெய்யை வீட்டுக்கும் பிண்ணாக்கை மாட்டுக்கும் பயன்படுத்துவாங்க. அதனால, உழைக்கிற மாடுகளும் நோயில்லாமல் ஆரோக்கியமா இருந்திச்சு, கலப்பிடமில்லாத சமையல் எண்ணெய் குடும்ப ஆரோக்கியம் காத்திச்சு.

பசுமைப்புரட்சி நம்ம நாட்டு விவசாயிகளை ரசாயன விவசாயம் பக்கம் மடை திருப்பி விட்டுச்சு. மானாவாரியில வெளைஞ்ச நாட்டு ரக விதைகளை அழிச்சு, அதிக விளைச்சல் கொடுக்கற வீரிய விதைகளை விளம்பரம் செஞ்சதுல மண்ணின் ஆரோக்கியமும் மக்கள் ஆரோக்கியமும் கெட்டுப்போச்சு. நம்மாழ்வார் போன்ற இயற்கை ஆர்வலர்கள் பலர் ரசாயன விவசாயத்தின் பாதிப்புகளை மக்களுக்கு ஒரு பிரசாரமாகவே எடுத்துச் சென்று பல வருஷம் போராடினாங்க. அது வீண்போகல. இப்ப ஆடுமேய்க்கிறவன் தொடங்கி ஐ.ஏ.எஸ் அதிகாரி வரைக்கும் ஆர்கானிக் உணவு குறித்து பேசத் தொடங்கிட்டாங்க. பள்ளி, கல்லூரிகள்ல இயற்கை விவசாயக் கருத்தரங்குகள் நடக்குது, பத்திரிகைகளும் எழுத ஆரம்பிச்சிட்டாங்க.
இப்ப நஞ்சில்லா உணவு தேடி போகத்தொடங்கிட்டாங்க. பெருநகரங்கள், சிறுநகரங்கள் எல்லா இடத்திலும் ஆர்க்கானிக் ஷாப் எனப்படும் இயற்கை அங்காடிகள் திறந்தாச்சு. எங்களைப்போல செக்கு எண்ணெய் உற்பத்தி செய்யறவங்களைத் தேடி கார்ல வர கூட்டம் அதிகமா இருக்கு. ஆரம்பத்துல, நாள் ஒண்ணுக்கு 10 லிட்டர்கூட விற்பனையாகாத எங்க ஆலையில இப்ப 200 லிட்டர் செக்கு எண்ணெய் விற்பனையாகுது. செக்கு எண்ணெய்க்குத் தேவை அதிகம் இருப்பதால இன்னும் சில ஆண்டுகள்ல ஊருக்கு ஒரு செக்கு ஆலையும் வீதிக்கு ஓர் இயற்கை அங்காடியும் மக்கள் ஆதரவுடன் வெற்றி நடைபோடும் இது நிஜம்” என்றார் உறுதியுடன்.
Thanks...
https://www.vikatan.com/news/tamilnadu/109372-organic-oil-is-good-for-health.html

கல் செக்கு எண்ணெய்தான் உடலுக்கு ஆரோக்கியம்

பாரம்பர்ய முறையில் கல்செக்கு இயந்திரம் மூலம் உற்பத்தி செய்யப்படும் எள், கடலை, தேங்காய் எண்ணெய், சமையல் எண்ணெய் நுகர்வு குறித்த விழிப்பு உணர்வு மக்களிடம் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாகக் கல்செக்கு அமைத்து எண்ணெய் உற்பத்தி செய்யும் தொழில் அதிகரித்து வருகிறது.

ரசாயன உரம், பூச்சிக்கொல்லி மருந்து பயன்படுத்தி பயிர் செய்யப்படும் விவசாய உணவுப்பொருள்களில் நச்சுத்தன்மை உள்ளதாக இயற்கை ஆர்வலர்கள் பலரும் கூறிவருகிறார்கள். அதேபோல்,எண்ணெய் வித்துப் பயிர்களான எள், நிலக்கடலை, சூரியகாந்தி, தேங்காய் உள்ளிட்ட பயிர்சாகுபடியிலும் அதிக அளவு ரசாயனம் இடுபொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. எள், நிலக்கடலை, சூரியகாந்தி, தேங்காய் ஆகியவற்றை மூலப்பொருளாகக் கொண்டு உற்பத்தி செய்யப்படும் சமையல் எண்ணெய் வகையில் உடல்நலன் குன்றச்செய்யும் ரசாயனத்தின் கூறுகள் உள்ளது என்று உறுதியாக பலரும் நம்புவதால், இயற்கை விவசாயத்தில் விளைந்த எண்ணெய் வித்துக்களை பயன்படுத்தி, கல் மற்றும் மரச்செக்கு மூலம் பாரம்பர்ய முறையில் உற்பத்தி செய்யப்படும் சமையல் எண்ணெய் பெரும் வரவேற்பு பெற்றுவருகிறது. கிராமப்புறங்களில் இயங்கிவரும்  செக்கு ஆலைகளைத் தேடிப்போய் சுத்தமான எண்ணெய் வாங்கும் நகரவாசிகள் பலர் உண்டு.
அந்த வகையில் ஈரோடு மாவட்டம் கொடுமுடி பகுதியில் கல்செக்கு ஆலை அமைத்து சமையல் எண்ணெய் உற்பத்தி செய்துவரும் தங்கவேல் என்பரை சந்தித்து பேசினோம். “அந்தக் காலத்தில மாடுபூட்டிய செக்கு வெச்சு எண்ணெய் உற்பத்தி செஞ்சாங்க. விவசாயிகளே அவங்க நிலத்துல சாணம், குப்பை, பசுந்தாள் உரம் போட்டு இயற்கை விவசாயத்துல வௌஞ்ச நிலக்கடலை, எள், தேங்காய் கொப்பரை போன்ற எண்ணெய் வித்துக்களை மாட்டுவண்டியில ஏத்தி எங்ககிட்ட கொண்டுவந்து போட்டு அரைச்சு அதுல கிடைக்கிற எண்ணெய்யை வீட்டுக்கும் பிண்ணாக்கை மாட்டுக்கும் பயன்படுத்துவாங்க. அதனால, உழைக்கிற மாடுகளும் நோயில்லாமல் ஆரோக்கியமா இருந்திச்சு, கலப்பிடமில்லாத சமையல் எண்ணெய் குடும்ப ஆரோக்கியம் காத்திச்சு.
பசுமைப்புரட்சி நம்ம நாட்டு விவசாயிகளை ரசாயன விவசாயம் பக்கம் மடை திருப்பி விட்டுச்சு. மானாவாரியில வெளைஞ்ச நாட்டு ரக விதைகளை அழிச்சு, அதிக விளைச்சல் கொடுக்கற வீரிய விதைகளை விளம்பரம் செஞ்சதுல மண்ணின் ஆரோக்கியமும் மக்கள் ஆரோக்கியமும் கெட்டுப்போச்சு. நம்மாழ்வார் போன்ற இயற்கை ஆர்வலர்கள் பலர் ரசாயன விவசாயத்தின் பாதிப்புகளை மக்களுக்கு ஒரு பிரசாரமாகவே எடுத்துச் சென்று பல வருஷம் போராடினாங்க. அது வீண்போகல. இப்ப ஆடுமேய்க்கிறவன் தொடங்கி ஐ.ஏ.எஸ் அதிகாரி வரைக்கும் ஆர்கானிக் உணவு குறித்து பேசத் தொடங்கிட்டாங்க. பள்ளி, கல்லூரிகள்ல இயற்கை விவசாயக் கருத்தரங்குகள் நடக்குது, பத்திரிகைகளும் எழுத ஆரம்பிச்சிட்டாங்க.

இப்ப நஞ்சில்லா உணவு தேடி போகத்தொடங்கிட்டாங்க. பெருநகரங்கள், சிறுநகரங்கள் எல்லா இடத்திலும் ஆர்க்கானிக் ஷாப் எனப்படும் இயற்கை அங்காடிகள் திறந்தாச்சு. எங்களைப்போல செக்கு எண்ணெய் உற்பத்தி செய்யறவங்களைத் தேடி கார்ல வர கூட்டம் அதிகமா இருக்கு. ஆரம்பத்துல, நாள் ஒண்ணுக்கு 10 லிட்டர்கூட விற்பனையாகாத எங்க ஆலையில இப்ப 200 லிட்டர் செக்கு எண்ணெய் விற்பனையாகுது. செக்கு எண்ணெய்க்குத் தேவை அதிகம் இருப்பதால இன்னும் சில ஆண்டுகள்ல ஊருக்கு ஒரு செக்கு ஆலையும் வீதிக்கு ஓர் இயற்கை அங்காடியும் மக்கள் ஆதரவுடன் வெற்றி நடைபோடும் இது நிஜம்” என்றார் உறுதியுடன்.
Thanks...

https://www.vikatan.com/news/tamilnadu/109372-organic-oil-is-good-for-health.html

கொழுப்புள்ள உணவுப் பொருட்களை தொடக்கூடாது என்பதில்லை. நல்ல கொழுப்புள்ள உணவுப் பொருட்களை தேர்ந்தெடுத்து உணவில் சேர்த்து வரவேண்டும்

கெட்ட கொழுப்புக்கள் இரத்தக்குழாய்கள் மற்றும் இதர முக்கியமான உறுப்புக்களில் படிந்து, இரத்த அழுத்தத்தை அதிகரித்து, இறுதியில் மாரடைப்பை ஏற்படுத்தி, இளமையிலேயே இறப்புக்கு வழிவகுக்கின்றன. அதற்காக கொழுப்புள்ள உணவுப் பொருட்களை தொடக்கூடாது என்பதில்லை. நல்ல கொழுப்புள்ள உணவுப் பொருட்களை தேர்ந்தெடுத்து உணவில் சேர்த்து வந்தால், உடல் ஆரோக்கியமாக இருப்பதோடு, இதயமும் நன்கு செயல்படும்.

அவகேடோவில் கொழுப்புக்கள் அதிகமாக இருப்பதால், இது இதயத்திற்கு மிகவும் ஆபத்தான உணவுப் பொருள் என்று தான்  நினைத்திருக்கிறோம். ஆனால் உண்மையில், அவகேடோவில் மோனோ சாச்சுரேட்டட் கொழுப்புக்கள் அதிகம் உள்ளது. இது  உடலில் நல்ல கொலஸ்ட்ராலின் அளவை அதிகரித்து, கெட்ட கொலஸ்ட்ராலின் அளவை குறைக்கும் தன்மைக் கொண்டது.  

மிளகாய் வயிற்றிற்கு நல்லது இல்லாவிட்டாலும், இது உடலில் தங்கியுள்ள தேவையற்ற கெட்ட கொழுப்புக்களை கரைக்கும்  ஆற்றல் கொண்டவை.  

பீன்ஸில் நார்ச்சத்துடன், அதிக அளவில் ஸ்டார்ச் இருப்பதால், இதனை தண்ணீரில் வேக வைத்து, அந்த நீரை வடிகட்டிவிட்டு  சாப்பிட்டால் நல்லது. இல்லாவிட்டால், பீன்ஸானது கெட்ட கொழுப்புக்களின் அளவை அதிகரிக்கும்.  

ரெட் ஒயினானது அதிகப்படியாக நார்ச்சத்து நிறைந்த திராட்சைகளால் செய்யப்படுவதால், இதனை உட்கொண்டால், இது  உடலின் மெட்டபாலிசத்தை அதிகரித்து, கொழுப்புக்களை வேகமாக கரைக்கும். அதனால் தான் ரெட் ஒயினை அளவாக  சாப்பிட்டால், இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம் என்று சொல்கிறார்கள்.  

வெண்டைக்காய் கொலஸ்ட்ராலை குறைக்கும் தன்மை கொண்டது. அதிலும் இதில் மிகுந்த அளவில் நார்ச்சத்து மற்றும்  குறைந்த அளவில் கலோரிகள் இருப்பதால், உடல் எடையை குறைக்க நினைப்போர், இதனை உட்கொண்டால் நல்ல பலன்  கிடைக்கும். மேலும் நீரிழிவு நோயாளிகளும் இதனை உட்கொண்டால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்பாட்டுடன் வைக்கலாம்.  

பூண்டில் அல்லிசின் என்னும் இதயத்தை பாதுகாக்கும் பொருள் அதிகம் உள்ளது. மேலும் இதில் நோயெதிர்ப்பு அழற்சி தன்மை அதிகம் இருப்பதால், இது கொலஸ்ட்ரால் அளவை வேகமாக குறைக்க உதவும். அதிலும் தினமும் ஒரு பல் பூண்டை  பச்சையாக சாப்பிட்டால், இதன் பலன் நன்கு தெரியும்.  

பசலைக் கீரையில் லுடீன் மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இந்த சத்துக்கள் தமனிகளில் தங்கியிருக்கும் கொழுப்புக்களை  கரைக்கும் தன்மை கொண்டவை. ஆகவே பசலைக் கீரை வாரம் ஒரு முறை உணவில் சேர்த்து வந்தால், நிச்சயம் கொலஸ்ட்ராலின் அளவைக் குறைக்கலாம்.  

http://npapp.in/QELYRY/a2ga via @NP_App: http://npt.indiatimes.com

'கலைஞரின் சட்டப்பேரவை வைரவிழா ஓர் அரசு விழாவாக பரிமளித்திருக்கவேண்டும்'

சட்டப்பேரவைப் பணிகளில் கலைஞரின் வைரவிழாவை நிச்சயம் தமிழக அரசுதான் நடத்தியிருக்க வேண்டும். ஏனோ காலமும் சூழலும் அதற்கு இடம் கொடுக்காமல் போய்விட்டது.
அப்படி நடத்தாமல் போனது துரதிஷ்டவசமானது. இதற்கு ஆளும் ஈபிஎஸ் அணி அதிமுக காரணமா? அல்லது ஓபிஎஸ் அதிமுக காரணமா?