காலையில் எழுந்து மோட்டாரை போட்டால் தண்ணீர் வராமல் பிரச்சினை. சிறிது நேரத்தில் கரண்ட் இல்லாமல் பிரச்சினை. இப்படி பிரச்சினைமேல் பிரச்சினை வந்தால், `ச்சே இந்த வாழ்க்கையே தொல்லையப்பா” என்று அலுத்துக் கொள்கிறோம்.
சிலர் பிரச்சினைக்கெல்லாம் கலங்க மாட்டேன் என்று டயலாக் பேசிவிட்டு தனிமையில் சென்று புலம்புவார்கள். உண்மையில் நமக்கு மட்டுமா பிரச்சினை, வீட்டுக்கு வீடு, நாட்டுக்கு நாடு உலகம் முழுவதும் பிரச்சினைதாங்க!
***
சீனாவின் ஒரு பகுதியாக இருந்தது ஹாங்காங். தொழிற்சாலைகள் நிறைந்த வர்த்தக நகரம். பிரிட்டன்- சீனா இடையே நடந்த ஓபியம் யுத்தத்தில் ஹாங்காங், பிரிட்டிஷ் வசமானது. ஒரு சமரச உடன்பாட்டில் ஹாங்காங் 99 ஆண்டுகளுக்கு பிரிட்டனிடம் குத்தகைக்கு விடப்பட்டது.
ஒப்பந்தம் முடிந்தவுடன் பிரச்சினை ஆரம்பம். சீனாவுடன் இணைந்தால் ஹாங்காங் பொதுவுடையாக்கபடுமோ என்ற அச்சம்தான் காரணம். சந்தை பொருளாதார நிலை அப்படியே நீடிக்கும் என்ற ஒப்பந்தத்துடன் தனிநாடாக (ஆனால் சீனாவின் கீழ்) இருக்கிறது ஹாங்காங்.
***
போஸ்னியா, முதலில் ஆஸ்திரியாவின் கட்டுபாட்டில் இருந்தது. இங்கு முஸ்லிம், செர்பு, க்ரோட் இன மக்கள் வசிக்கிறார்கள். ஒருமுறை ஆஸ்திரிய இளவரசரை ஒரு செர்பு கொன்று விட, அந்த இனத்தையே அழிக்க திட்டமிட்டது ஆஸ்திரியா.
செர்புக்கு ஆதரவாக ரஷ்யா களம் இறங்க, முதல் உலகபோர் மூண்டது. அமெரிக்கா, சமாதானம் பேசி ஒவ்வொரு இனத்திற்கும் தனி குடியாட்சி வழங்கிவிட்டாலும் இன்னும் இனபிரச்சினை நீடிக்கிறது.
***
வறுமை நாடு என வர்ணிக்கபடுவது எத்தியோபியா. மன்னர் செசாலி 1962-ல் என்ட்ரியா பகுதியை எத்தியோபியாவுடன் இணைத்தார். ஆனால் அவர்கள் தனி நாடு கேட்டு போராட்டம் தொடங்கினர். போராட்டக்காரர்களை ஒடுக்க, கர்னல் மெங்கிஸ்டு அதிரடி நடிவடிக்கை எடுத்தார்.
போராட்ட பகுதியில் இருந்து விவசாயிகளை இடம் மாற்றினார். போராட்டக்காரர்களுக்கு உணவு கிடைக்காமல் தடுத்தார். அத்துடன் வறட்சியும் தாக்க, தினமும் ஆயிரக்கணக்கானவர்கள் சுருண்டு விழுந்து செத்தனர். வறுமையின் தாயகமானது எத்தியோபியா.
***
ஜெருசலேம், இஸ்ரேலின் தலைநகரம். ஆனால் யூதர், கிறிஸ்தவர், முஸ்லிம் 3 சமயத்தினருக்கும் அது புனித ஸ்தலம். யூதர்கள், மரபுபடி பாலஸ்தீனம் தான் தங்கள் தாயகம் என்று அங்கே குடியேற துடித்தனர். ஆனால் அது முஸ்லிம்களின் கட்டுபாட்டில் இருந்ததால் போராட்டம் வெடித்தது.
இதில் ஐ.நா. தலையிட்டு பாலஸ்தீனத்தை இரண்டாக பிரித்து யூதர்களுக்கான பகுதியை தனிநாடாக (இஸ்ரேல்) அறிவித்தது. ஆனாலும் அவ்வப்போது இனபூதம் பிரச்சினையை கிளப்ப, இரு நாடுகளுக்கிடையில் 600 கி.மீ. நீளத்தில் சீனச்சுவர் போல ஒரு பெருஞ்சுவர் எழுப்பபட்டு வருகிறது, அமைதிக்காக.
***
இத்தாலி நாட்டுக்குள் இருக்கும் வாடிகன் நகரம் ஒரு தனி நாடாகும். இத்தாலியில் மதத்துக்கும், அரசியலுக்கும் போராட்டம் ஏற்பட்டது. அப்போது சர்வாதிகாரி முசோலினி, போப் ஆண்டவருடன் செய்த உடன்பாட்டின்படி வாடிகன் நகரம் தனிநாடாக அறிவிக்கபட்டது.
உலகின் குட்டிநாடான வாடிகனுக்கு வறுமை, அரசியல், எல்லை பாதுகாப்பு போன்றவை பிரச்சினையல்ல. இது மதத் தலைமையிடம் என்பதால் பாதிரியார்களின் கல்யாண அனுமதி, செக்ஸ் குற்றச்சாட்டுகள் என வினோத பிரச்சினைகளை எப்போதாவது சந்திக்கிறது, அந்த நாடு.
***
ஸ்பெயினிடம் இருந்து அமெரிக்கா வசமான நாடு கியூபா. சுதந்திரபோரில் உதவும் நரியாக வந்த அமெரிக்கா தங்களை ஆள்வதை கியூபா மக்கள் விரும்பவில்லை. போராட்டம் வெடிக்க, முடிவில் ஒப்பந்தத்துடன் கியூபாவுக்கு விடுதலை கிடைத்தது.
அமெரிக்க அனுதாபி படிஸ்டா அதிபரானார். இதற்கு எதிராக கிளர்ச்சி செய்து பிடல் காஸ்ட்ரோ அதிபரானார். கம்யூனிசவாதியான இவர் அமெரிக்க கரும்பு எஸ்டேட்களை பொதுவுடைமை ஆக்கினார். இதனால் அமெரிக்கா வியாபாரத் தடைவிதித்தது. .
***
இங்கிலாந்தின் காலணி நாடாக இருந்தது பர்மா. சுதந்திரபோர் மூண்டபோது ஜப்பான் பர்மாவுக்கு உதவியது. அடுத்து ஜப்பான் தங்கள் மீது ஆதிக்கம் செலுத்தவே, மீண்டும் இங்கிலாந்தின் உதவியைக் கேட்டது பர்மா. 1947-ல் சுதந்திரம் அறிவிக்கபட்டது. ஆனால் ஆட்சி அமைக்க இருந்த ஆங்சான் கொல்லபட்டார். அவரது 2 வயது மகள் சூகேயி நாடு கடத்தபட்டார். திருமணம் முடிந்தபிறகு சூகேயி நாடு திரும்பினார். அங்கு ராணுவ ஆட்சி நடந்ததால் கொதிப்படைந்த அவர், அகிம்சை போராட்டத்தை தொடங்கினார்.
அதனால் பல ஆண்டுகளாக வீட்டுச்சிறையில் இருக்கிறார். இதற்கிடையே அமைதிக்கான நோபல் பரிசை வென்றார் சூகேயி.
No comments:
Post a Comment