அமர்நாத் புனித யாத்திரை

இயற்கை எழில் ஏகாந்தமாய் இன்னிசை பாடும் இமயமலையில் பனிலிங்கமாய் உருவாகி பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் அமர்நாத் குகைக்கு சென்று ஈஸ்வரனை தரிசிக்கும் பெரும் பேறு அவ்வளவு சுலபமாய் எல்லோருக்கும் கிட்டிவிடுவதில்லை. அப்படி ஒரு பக்கியத்தை அவனருளாள் பெற்ற நான் அந்த அனுபவங்களை பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன்.
ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் தான் இப்பயணம் கைகூடும். 2010 ஆம் ஆண்டு ஜூலை மாதம் இருபது பேர் கொண்ட குழுவுடன்  அமர்நாத் பயணம் செய்யும் பக்கியம் எனக்கு கிடைத்தத.
டெல்லி சென்று அங்கிருந்து விமானம் மூலம் ஸ்ரீநகர் சென்றோம். டால் ஏரியில் மிதந்த போட் ஹவுஸில் தங்கினோம். மிதக்கும் மார்க்கெட், பூத்துக்குலுங்கும் ரோக்கள் என  டால் ஏரியின் அழகு மனதை மயக்கியது., படகில்  சுற்றி வந்த போது ஏரியின் ஒரு பகுதி நம்மூர் கூவத்தை ஞாபகப்படுத்தியது. ந;õங்கள் சென்ற சமயம் காஷ்மீரில் ஊரடங்கு சட்டம் அமலில் இருந்தது, சாலைகள் வெறிச்சோடி கிடந்தன. அசம்பாவிதங்கள் ஏதும் கண்ணில் படவில்லை.
மறுநாள் அதிகாலை சோனாமார்க் என்ற ஊருக்கு நான்கு ஸ்கார்ப்பியோ கார்களில் கிளம்பினோம். அங்கு கிளேசியர் என்ற ஹோட்டலுக்கு சென்று குளிர்காக்கும் உடைகளை அணிந்து காலில் சாக்ஸ், பூட்ஸ் சகிதம் 15 கிலோமீட்டர் தொலைவில் இருந்த பால்தால் என்ற இடத்திற்கு சென்றோம். அங்கிருந்து தான் ஹெலிகாப்டர்கள் இயக்கப்படுகின்றன.
ஹெலிகாப்டர் மூலம் பஞ்சதரணி எனும் இடத்தை அடைந்தோம். அங்கிருந்து 5கிலோமீட்டர் தூரம் நட்தோ, டோலி அல்லது குதிரை மூலமோ தான் செல்ல வேண்டும். ஒத்தையடிப்பாதை, ஒருபக்கம் அதலபாதாளம். கீழே சிந்து நதி அமைதியாய் அழகாய் ஓடிக்கொண்டிருந்தது. வழி முழுவதும் பனி மூடிய இமயமலையின் இயற்கை அழகும், சிந்துநதியின் சிங்காரமும் கண் குளிர கண்டோம். இருபுறம் பனி உறைந்து இருக்க, நடுவே பள்ளத்தில் உருகி ஓடும் தண்ணீர்.
அமர்நாத் குகை, 3888 அடி உயரத்தில் இமயமலைழில் உள்ளது. முகலாய மன்னர் அக்பர், ஷாஜகான் காலங்களிலும் அமர்நாத் யாத்திரை சிறப்புடன் நடந்துள்ளது என்பதை ஜகன்நாத பண்டிதராஜ் எ;“பவர் எழுதிய நூலான அசிப் விலாஹம் என்ற நூலில் தேவர்கள் தலைவர் இந்திரன் சிவபெருமானை வணங்க அமர்நாத் வருவதாக கூறப்படகிறது.
ஸ்ரீநகரிலிருந்து பகல்காம் எனும் இடம் வரை வாகனத்தில் சென்று 46 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அமர்நாத் குகைக்கு நடந்து  அல்லது குதிரை, டோலி மூலம் செல்லலாம். இடையிடையே டென்ட்டுகளில் தங்கி 3 நாள் யாத்திரையாக செல்ல வேண்டிய வழி அது. நாங்கள் சென்றது வேறு பாதை.
150 அடி உயரமும் அகலமும் கொண்டது. அமர்நாத் குகை. ஈஸ்வரனை காணும் படப்படப்புடன் குதிரை மூலம் பயணித்தோம்.  ஓரிருவர் டோலி மூலம் சென்றார்கள். குதிரைக்கு 350 ரூபாய் வாங்குகிறார்கள். கடுங்குளிரையும் பொருட்படுத்தாது சென்றோம். பம்பம் போலோ அமர்நாத் கீ ஜெய் எனும் பக்தர்களின் கோஷம் விண்ணைப் பிளந்தது.
குதிரைப் பயணம்  கோடாஸ் ஸ்டாண்டன் முடிந்தது. அங்கிருந்து பனிக்கட்டி மீது குச்சியை ஊன்றி நடந்து சென்றோம். சிரமமாக இருந்தது. பனியின் மீது நடக்க வழுக்கலும், சறுக்கலுமாக இருந்தது. அங்கிருந்து அரை கிலோ மீட்டர் தூரம் டோலிவாலாக்கள் 200 ரூபாய் வாடகை பேசி படிக்கட்டு வரை கொண்டு போய்  விட்டார்கள். அங்கிருந்து கொஞ்ச தூரம் பனிமூடிய படிக்கட்டுகள்  ஏறினோம். இவ்வளவு கடுமையான  பயணத்திலும் ஈசனை  தரிசிக்க தேனீக்கூட்டம் போல் பக்தர்கள் நிரம்பி வழிந்தனர்.
குகைக்கு அருகில் சென்றதும், அண்ணாந்து பார்த்தால் மலையில் ஒரு புறம் விநாயகர் உருவம், இன்னொரு இடத்தில் நந்தி உருவம் தெரிகிறது.  ஒரு வழியாக  குகைக்குள் சென்று கம்பிவேலிக்கு பின்னால் உருவாகியிருந்த பனி லிங்கத்தை பார்த்தபோது கண்கள் பனித்தன. அந்த இடம் முழுவதும் பனிக்கட்டியாக உறைந்துஅடைக்காமல் லிங்கமாக மட்டும்  பனி உறைவது இறையின் அற்புதம் தான். நாங்கள் பார்த்தபோது  பதினொரு அடி உயர பனிலிங்க தரிசனம் கிடைத்தது. இங்கு சில சமயம்  இரண்டடி உயர லிங்கம் தான் இருக்குமாம். எங்களுடன் தெனாலி எனும் ஊரிலிருந்து  வந்தவர், சென்ற வருடம் இவ்வளவு சிரமப்பட்டு வந்து தரிசனம் கிடைக்காமல்  (உருவாககமல் இருந்ததாக சொன்னார்) திரும்பிரானாராம். சிலசயம் உருவாகும் லிங்கம் சீக்கிரம் உருகி விடுகிறது என்றும் சொல்கிறார்கள். கேதார், பத்ரி போன்ற இடங்களுக்கு  சிரமப்பட்டு சென்றாலும் தரிசனம் நிச்சயம். அமர்நாத் அப்படியல்ல. அவனருள் இருந்தால் தான் அவனை தரிசிக்க முடியும் என்பது நிதர்சனம். ஹெலிகாப்டர்கள் இயற்கை சூழல் சரியாக இருந்தால் மட்டுமே இயக்கப்படுகின்றன. எல்லாவிதத்திலும் ஈஸ்வரனருளால் எங்களுகு“கு அவரை பிரமாண்டமான லிங்கமாக தரிசிக்கும் பாக்கியம் கிடைத்தது.
மனநிறைவுடன் திரும்பி டோலி, குதிரை மூலம் பஞ்சதரணியை அடைந்தோம். நாங்கள் மாலை அறரை மணியளவில் தான் திரும்ப முடிந்தது. 5 மணிக்கு மேல் ஹெலிகாப்டர்கள் இயங்காது. எனவே அங்கு ஒரு டென்டில் தங்கினோம். மறுநாள் காலை ஆறரை மணிக்கு ஹெலிகாப்டர் மூலம் பால்தால் வந்து பின்னர் காரில் சோனாமார்க் வந்து சேர்ந்து ஓய்வெடுத்தோம்.
ங்கள் குழுவில் டாக்டர் ஜெயக்குமார் அவர்களும், அவர் மனைவி ஆண்டாளும் பெங்களூரிவிலிருந்து வந்திருந்தார்களள். மூத்த குடிமக்கள் ஆண்டாள் அம்மாவுக்கு பல ஆபரேஷன்கள் நடந்திருந்தும் மன உறுதியுடன் வந்தார்கள். மற்றுமொரு வயதான அம்மாகாலில் சாக்ஸூடன் செருப்பு அணிந்து வந்து ஜில்லிப்பு தாங்காமல் அழுதார்கள்.  எங்கள் குழு காப்டன்  சுனில் அதிகாரிகளிடம் சிரமப்பட்டு அனுமதி வாங்கி அவர்களை டோலி மூலம் அழைத்து வந்து தரிசனம் செய்வித்தார்கள்.
கடுமையான பயணத்தை நினைத்து யாரும் பயப்பட வேண்டாம். எங்கும் ராணுவ வீரர்கள் காவலாகவும், உதவியாகவும் இருக்கிறார்கள். மறுநாள் ஸ்ரீநகர் திரும்பினோம். ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டிருந்தது. எனவே ஸ்ரீநகரில் புகழ்பெற்ற மொகல் கார்டன்களை பார்த்தோம்.  சாலிமார் கார்டன் மிக அழகு. பரிமகல் கார்டனில் மெடிகேட்டட் வாட்டர் வந்தது. நேருவுக்கு அந்த தண்ணீர்  அனுப்பப்பட்டதாக  சொன்னார்கள். துலீப்கார்டன் மிகப் பெரியது. துலீப் மலர்கள் ஒரு சீசனில் தான் பூக்குமாம்.
250 படிக்கட்டுகள் கொண்ட சங்கராச்சாரியார் கோயில் சென்றோம். ஆதிசங்கரர் அங்கு வந்து ஒரு குகையில் அமர்ந்து தியானம் செய்ததாக சொன்னார்கள்.
மறுநாள் குல்மார்க் சென்றோம். அங்கு மிக அதிக தூரம் உயர் செல்லும் கேபிள் கார்கள் மூலம் 2 பாயிண்டுகள் சென்று  பனி சூழ்ந்த மலைப்பாறை நடுவில் பனியில் அமர்ந்து சிறிது விளையாடினோம்.
இறைவனை தரிசித்த மனநிறைவோடு காஷ்மீரை காணும் பாக்கியமும்  சேர்ந்தது. உற்சாகமாகவும், உன்னதமாகவும் இருந்தது. மகிழ்வுடன் நெஞ்சம் நிறைவுடன் சென்னை திரும்பினோம்.
பனி லிங்க வடிவெடுத்து
பக்தர்களை உருக வைக்கும்
அமர்நாத் ஈஸ்வரன்
அற்புதத்தின் ஆனந்தம்
மூச்சிரைக்க நடந்தும்
குதிரை டோலி என குதித்தோடியும் வரும்
குவலயத்து பக்தர்களின்
குமுத மலர் நெஞ்சை அமுதமென
அள்ளிப் பருகும் ஆண்டவனவன்
பனிமலர் பாதம் வணங்குவோம்
-இந்திராணி  அண்ணாமலை, சென்னை.
நன்றி-குமுதம் பக்தி

No comments: