புத்திர பாக்கியம் அருளும் புத்திர காமேட்டீஸ்வரர்


என்னதான் ஒருவருக்கு அள்ள அள்ள செல்வம் வந்து கொண்டிருந்தாலும் குழந்தைச் செல்வம் என்று ஒன்று இல்லாவிட்டால் அவரது வாழ்க்கையில் மகிழ்ச்சியே இல்லாமல் போய்விடும்.
இதனால்தான், `குழலினிது யாழினிது என்பர் தம்மக்கள் மழலைச் சொல் கேளாதவர்' என்றார் வள்ளுவர்.    இப்படி, குழந்தை பாக்கியத்திற்காக ஏங்கும் தம்பதியரின் குறையை நீக்க ஈசன் குடிகொண்டிருக்கும் அவதார ஊர்தான் ஆரணி. இங்கு, குழந்தை இல்லாதோரின் தோஷம் நீக்கும் புத்திர காமேட்டீஸ்வரராக இறைவன் அருள் பாலிக்கிறார்.

குழந்தை வேண்டி புத்திர காமேட்டீஸ்வரரை வணங்குபவர்கள், ஏழு திங்கள்கிழமைகள் விரதமிருக்க வேண்டும். விரதம் துவங்கும் நாளன்று மதியம் ஒரு குழந்தைக்கு நெய்ச்சோறோ, தயிர்ச் சாதமோ, காய்கறி வகைகளுடன் கூடிய சாதமோ அவரவர் தகுதிக்கேற்ப கொடுக்க வேண்டும். பிறகு தாங்கள் சாப்பிட வேண்டும். இரண்டாம் வாரத்தில் 2 குழந்தைகள், மூன்றாம் வாரத்தில் 3 என்ற அடிப்படையில், ஆறாவது திங்களன்று ஆறு குழந்தைகளுக்கு அன்னம் பரிமாற வேண்டும்.
ஏழாவது திங்களில் புத்திர காமேட்டீஸ்வரருக்கு செவ்வரளி மற்றும் பவள மல்லி மாலை (கோவிலிலேயே இந்த மாலை தருகிறார்கள்) அணிவித்து, மிளகு சேர்த்த வெண்பொங்கல் நைவேத்யம் செய்து வணங்க வேண்டும். ஆனி பவுர்ணமி அன்று கோவில் சார்பில் நடக்கும் புத்திர காமேஷ்டி யாகத்திலும் கலந்து கொள்ளலாம்.
புத்திர தோஷம், நாக தோஷம் நீங்க கோயில் வளாகத்திலுள்ள வேம்பு, ஆலமரத்தடியில் தங்கள் நட்சத்திர நாளில் நாக பிரதிஷ்டை செய்து வேண்டி கொள்ளலாம்.

1 comment:

மதுரை சரவணன் said...

பகிர்வுக்கு நன்றி.வாழ்த்துக்கள்